Monday, November 30, 2009

தி அன்இன்வைடட் - THE UNINVITED 2009.A TALE OF TWO SISTERS(Janghwa, Hongryeon)-ன்னு (KOREAN) வெளிவந்த திரைப்படத்தோட ஆங்கில ரீமேக்தான் தி அன்இன்வைடட் (THE UNINVITED).
படம் ஹாரர் வகையறா மச்சான்ஸ். ரெண்டு அழகான பொண்ணுங்க, தனிமையான குடும்பம், சில திகிலூட்டும் காட்சிகள், ஆங்காங்கே ரத்தம், நல்ல ட்விஸ்ட்டுள்ள முடிவு...இவ்வளவுதான் THE UNINVITED.

ஒரு குடும்பத்தை மையமாக வைத்து நடக்கும் திரைக்கதை. ஆன்னா, அலெக்ஸ் இரண்டு சகோதரிகள்(வயசு பொண்ணுங்க – Note this point your honour). ஸ்டீவன் அப்பா. ராச்சேல் அப்பாவின் புது மனைவி. ஆன்னாவின் மம்மி தீ விபத்தில் இறந்து விட, அந்த அதிர்ச்சியில் ஆன்னா மனநிலை பாதிக்கப்படுகிறார். தற்கொலை முயற்சி மேற்கொள்வதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவமனையிலிருந்து குணமடைந்து ஆன்னா வீடு திரும்புவதில் இருந்து தொடங்குது படம். அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் நல்ல பிகரு
மச்சான்ஸ். அதிலயும்  அக்காவாக வரும் அலெக்ஸ் ஒரு ஒரிஜினல் பீஸ் !!!  ராச்சேல், ஆயா வேலை செய்ய வந்து வூட்டு ஐயாவ மடக்கி வூட்டம்மா ஆகுற காரெக்டர். (மம்மியின் மறைவுக்கு பிறகு தான்). அதனாலேயே அலெக்சுக்கு ராச்செல்லை பிடிக்காமல் போய் விடுகிறது. ஆரம்பம் முதல் அவரை வெறுக்கிறார். ஆன்னா குணமாகி வந்தவுடன் அவளும் அக்கா அலெக்சுடன் சேர்ந்து கொள்கிறாள்.

என்னதான் ஆன்னா குணமாகி வந்தாலும், அவளுக்கு சில வினோத கனவுகள் வருகின்றன. மம்மி இறந்த கதை, அதை தவிர யாரோ இரண்டு சிறுவர்களுடன் வரும் ஒரு சிறுமி என வெவ்வேறு சிதறல்களாய் கனவு. கனவில் வரும் இந்த சிறுவர்களை பற்றி ஆராயும்போது ஆன்னாவும் அலெக்சும் ராச்செல்லை பற்றி சில உண்மைகளை தெரிந்து கொள்கின்றனர். 
ராச்சேல் ஏற்கனவே நர்ஸாக வேலை பார்த்த வீட்டில் இருந்த குழந்தைகள் தான் அவை. அவர்களுக்கு என்ன ஆனது, ராச்சல் இங்கு வந்தது ஏன், உண்மையை தெரிந்து கொண்ட ஆன்னாவும் அலெக்சும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் மீதி கதை.

அதுவும் அந்த கிளைமாக்ஸ் திருப்பம், பலே !!!
ஒரு நொடியில், டக்கென்று தடம் மாறிவிடும்..!!!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் எல்லாம் இல்லை மச்சான்ஸ், ஒன்னரை மணி நேரம் போரடிக்காமல் போகும் ஜஸ்ட் அனதர் ஹாரர் பிலிம். BUT WORTH SEEING. 
இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான A TALE OF TWO SISTERS இன்றளவும் அதிக வசூலை ஈட்டிய கொரிய திகில் திரைப்படங்களில் முதன்மையானது... முடிந்தால் அதையும் பார்த்து விடுங்கள்.

இந்த படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.
அப்புறம் திஸ் இஸ் டிரைலர் மச்சான்ஸ்...!!!

10 comments:

சந்தோஷ் தமிழன் said...

hi friend thanks for ur comment on my kavidhai

சந்தோஷ் தமிழன் said...

trailer நல்லா இருக்கு, படம் எப்ப ரிலீஸ் ஆச்சு பாஸ்?

சிவன். said...

இதுக்கெல்லாம் எதுக்கு பாஸ் தேங்க்ஸ்...
படம் ஜனவரி மாசம் ரிலீஸ் ஆச்சு.... பாத்துட்டு சொல்லுங்க..

பின்னோக்கி said...

இவ்வளவு சொல்றீங்க. அப்பன்னா படம் நல்லாத்தான் இருக்கும் பார்த்துடுவோம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நல்ல விமர்சனம் சீக்கிரம் பாத்துடுவோம்

srirammadhan said...

மச்சான் நல்ல விமர்சனம் படம் பாத்திடுலாம் அது என்ன நல்ல பிகர்ங்க நடிக்கிற படத்துக்கு மட்டும் விமர்சனம் எழுதுறீங்க பாருங்க இது பேய் படம் இதுலயம் பிகர் இருக்குற படமா பாத்து விமர்சனம் எழுதுறீங்க எல்லாம் திறமை தான் கலக்குங்க மச்சான் வாழ்த்துகள்!!!!!

சிவன். said...

@ பின்னோக்கி - உங்களுக்கு நம்ம FREQUENCY என்னன்னு நல்லா தெரியும்னு நெனக்கிறேன்... தைரியமா பாக்கலாம் மச்சான்..

சிவன். said...

நன்றி கார்த்திகேயன்...

சிவன். said...

@srirammadhan - ஹா..ஹா... இப்படி கம்பெனி சீக்ரெட்ட எல்லாம் பப்ளிக்குல சொல்ல புடாது... அதான் மச்சான் எனக்கும் தெரியல...நான் பேய் படம்னுதான் பார்த்தேன், அவங்களா வர்றாங்க... : )

ஜோதிக்குமார் said...

காலையில ஆரம்பிச்சு நேரம் கிடைக்கும் போதெல்லாம் (அப்பப்போ வேலையும் பார்க்னும்ல.. இல்லனா ஆபிஸ்ல திட்டிங்ஸ்..)உங்க ப்ளாக்க தான் படிச்சிட்டிருக்கேன். இங்கிலீபீஸ் தெரியாத நம்மள மாதிரி ஆட்களுக்கு இந்த படங்களோட இன்ட்ரோ ரொம்ப யூஸ்புல் யூ நோ..

நானும் 2 Blog சமீபத்துல ஆரம்பிச்சு எழுதிட்டு வர்றேன்.. டைம் கிடைக்கிறப்போ பாருங்க..
http://naadodii.blogspot.com/

http://frames4you.blogspot.com/

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...