Wednesday, April 28, 2010

"பொய்"யெனப் பெய்யும் மழை !!

மழை பெய்ஞ்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு ...
ரொம்ப நேரம் மழை பெய்த பிறகு, தட் தட் னு எங்கயாவது மிச்சமா இருக்கிற தண்ணி சொட்டி கிட்டு இருக்கும்.. அந்த மாதிரி இருக்கிற சில நினைவுகள் இங்க தெளிக்கப்படுகிறது  ...

அவளுக்கு இன்னும் நாலு நாள், இல்ல இன்னும் சரியா 93 மணி நேரத்துல சுப முகுர்த்தம்! 
என்னடா கிளைமாக்ஸ் சொல்லிட்டு கதை ஸ்டார்ட் பண்றான்..?? இரு, மச்சி ட்விஸ்ட் எங்க வேணும்னாலும் இருக்கலாம். 

ஸ்டார்ட் ..கேமரா ..1..2..3..
சின்ன வயசில கணக்கு நல்லா படிப்பேன், வளர வளர ரொம்ப சுமார் ரகம் தான் . சக மாணவர்கள் எல்லோரும் maths tuition போய் தீவிரமா படிச்சிட்ருந்தாங்க ..அப்படி ஒருத்தன் தான் ராகவன்  ..நம்ம நெருங்கின தோஸ்து ! இந்த கதைல ரொம்ப முக்கியமான கேரக்டரு. பதினோராம் வகுப்பு, ஒரு சாயங்காலம் , நான், தமிழரசன்ராகவன்  எல்லாம் மொக்கை போட்டுட்டு இருந்தோம். அப்போ ராகவன் , "மச்சி இன்னைக்கு ஒரு பொண்ணு வீட்டுக்கு போறேன் , மேக்ஸ் நோட்டு வாங்க, நீங்க ரெண்டு பெரும் வாங்கடா  என்னோட ". நான் , " மச்சி என்னடா சொல்ற ?!? LKG லேர்ந்து பாய்ஸ் ஸ்கூல் தானடா இருக்கோம் ..எப்படா பிகரு பழக்கம் வந்துச்சி ?",  ராகவன் , "அதான் சொன்னேன்ல  மச்சி, கிளாஸ் டீச்சர்  கிட்ட tuition போறேன், அங்க தெரியும், Cluny பொண்ணு மச்சி , செம கட்டை ".
தமிழரசன், "மாமா  scenu டா , என்னடா சொல்றே, நெசமா அவ வீட்டுக்கு போறியா? " ராகவன், " டேய் முட்டை ,நானும் இது வரைக்கும் பிகரு வீட்டுக்கு போனதில்லை , அதான் வாங்கடா , மூணு பேரும் போவலாம் .." , நான் அபசகுனமாய் ." டேய் விளையாடாதடா, நாங்க வரலை , நீ வேணும் நா போயிட்டு வா ..
என் வாழ்க்கையோட மிக முக்கியமான தருணம் அது ! ஆனா சின்ன வயசிலேர்ந்து பொண்ணுங்க கூட பேசாமலே வளர்ந்துட்ட எனக்கு , அப்போ, போக வேணாம் , என்ற எண்ணமே அதிகமா இருந்துச்சி ..
ஒரு வழியா மூணு பேரும், போய் அவளைப் பார்த்தோம்..நல்லா இருந்தா ! அப்புறம் தமிழரசன்  , அவசர வேலைனு கிளம்பி போய்ட்டான். நாங்களும் கிளம்பினோம், ராகவன் பைக் ஸ்டார்ட் பண்றப்போ , அவ வந்து , நீ இனியா  வீட்டுக்கு போகலை ? என்றாள். நாங்க முழிச்சோம். அவ பக்கத்துக்கு  வீடு தான் என்று கை காட்டினாள்.   "அப்படியா ? அவ tuition ல சொன்னதே இல்ல..", சரி நான் பார்த்துட்டு போறேன் என்றான். 
நான், அவனை பார்த்து , மாப்ளே நீ பெரிய ஆளு தான், ஒத்துகிறேன் ...
ஆனா நேரமாச்சு மழை வேற வர்ற மாதிரி இருக்கு ,இந்த நேரத்துல இன்னொரு பொண்ணு வீட்டுக்கு போறது சரில்லை, வா கிளம்பலாம், என்றேன். அவன் மச்சான் , 5 நிமிஷம் , "Hi" சொல்லிட்டு உடனே கிளம்பிடலாம்.  
அவளைப்பார்த்த முதல் நாள் :   
இரவு 8.30; அக்டோபர் ,2002 ; அவள் வீட்டுச்சந்து;  
நான் அவ  வீடு எதிரில் பைக்கிட்ட நின்னுட்டு இருந்தேன். முதல் தடவை, வீட்டுக்கு பையன் ,அதுவும் ராத்திரி நேரம் வந்திருக்கான். சற்றே பதற்றமாய் இருந்த இனியாவிடம்  , வீட்டு வாசலில் நின்று ராகவன் பேசிக் 
கிட்டு இருந்தான்.அவங்க குடும்பமே பக்கத்துல நின்னுகிட்டு இருந்துச்சி. அப்போ தான் அவளைப்பார்த்தேன், சட்டென நெஞ்சு வலி ..இல்ல அட ஏதோ சொல்லுவாங்களே ..ஆங் இதயத்துல ஏதோ நெருடல்..நெஞ்சுல கை வச்சேன்,சட்டை ஈரமா இருந்துச்சி ..கடவுளே! அவ்ளோ வழிஞ்சிட்டேனா ?!? அடடா மழை ..! ( உடனே பையா சாங் வேணாம், சின்ன கிறுக்கல் போதும்)
 " நான் உன்னை 
முதன்முதலாய் 
பார்த்த 
மழைக்கோர்த்த
அந்த இரவு! 
என்னுள் இன்னும் விடியவே இல்லை ..

என் 
உயிர் நண்பனுடன் 
நீ பேசிக்கொண்டிருந்தாய் ..
ஓரமாய் 
உன்னை ரசித்தபடியே 
நான்! 
அன்று முதல் அவன்
'நண்பன்' ஆகிவிட்டான்..
உயிர் 
நீயாகி விட்டாய் !"

கடைசி சந்திப்பு :
********************
இரவு 8.30; டிசம்பர், 2009; வித்யா வீடு;

"என்ன வித்யா , அவ எப்போ வருவா ?"
நீ வந்து 10 நிமிஷம் தான் ஆச்சு, 7 தடவை கேட்டுட்டே; அப்போ நீ என்னைப் பார்க்க வரலை ? 
ஹ ஹ ஆஹா ..சரி பீல் பண்ணாத விடு , நண்பன் பார்த்திபன் என்னை பார்க்க பெங்களூர் லேர்ந்து வந்திருக்கான், அவனை பீச்ல விட்டுட்டு வந்திருக்கேன் ..எதுக்காக ? உனக்காகவும் , இனியாவுக்கும்  தான்..

படிக்கட்டில் அவள் பேச்சு சத்தம், காதில் தேனாகப் பாய்ந்தது. 
வந்துட்டா  , உன் ஆளு ,என்று நக்கல் சிரிப்புடன் எழுந்தாள் வித்யா 

"ஹாய்", என்று அகன்ற சிரிப்புடன், தாவிச்சென்று கட்டி கொண்டாள், என்னை இல்ல , வித்யாவின் அண்ணி குழந்தையை!
அதனைக் கொஞ்சியபடியே வந்து , எப்படி இருக்கே ? என்று கண் சிமிட்டினாள். 
இடையே வித்யா , குழந்தையிடம் , இனியாவை காமித்து , "அக்கா சொல்லு , அக்கா சொல்லு" என்றாள்..அதுவும் மழலையாய் தடுமாறி , "அழ்கா" எனச்சிரித்தது.
நான், அதன் சிறு விரல்களைப்பிடித்து , என்னை காண்பித்து "மாமா சொல்லு , மாமா சொல்லு " என்றேன்..படு சுலபமாய் சொல்லி குதூகலித்தது! 

அவள் முறைத்தாள்! செல்லமா ? கோபமா ? அது தெரிய இன்னும் எட்டு வருஷம் பழகணும். 
செல்லமாய் முடியை கலைத்து, போடா என்றாள், (அப்டியே ஓபன் பண்ணா சுவிஸ் ல டூயட் !) 
"நீ 
நான் 
காதல்
இவற்றை ச் சுற்றியே 
சுழல்கிறது 
என் உலகம் ! "

இடைப்பட்ட எட்டு வருடங்கள் :
************************************
இடம் : சென்னை;கேரளா;புதுவை;பெங்களூர்;ஐரோப்பா;

1) முதல் சந்திப்பு - அடுத்த நாளே கணித வகுப்பு சேர்தல்! 
" அன்று கணித வகுப்பு 
புரிந்தும் புரியாதது 
போல் நடிக்கிறேன் 
உன்னிடம் ..
நீ கற்று கொடுத்த கணிதம் 
மூளையில் ஏறவில்லை..
நீ கற்று கொடுக்காமலே 
காதல் இதயத்தில் 
ஏறி விட்டது !"
2) காதல் தெரிவித்தல் - அவள் மறுத்தல் 
3) சோகம் - வகுப்பு செல்லா நோன்பு! 
4)  பனிரெண்டாம் பொதுத்தேர்வு - பொறி கலங்குதல் ;
" என் தமிழச்சியே !
கணித வகுப்பில் 
ஆங்கிலம் பேசி 
தாவரவியல் தேவதையாய்,
எனக்குள் 
வேதியல் மாற்றம் செய்து 
என் இதய பூகோளத்தில் 
உன் காதல் வரலாறு செதுக்கி,
இப்போது ,என்னை 
அறிவியல் அறியாத 
விலங்கியல் உயிரினமாய்  
உருமாற்றி விட்டாயே ..? " 
5)கல்லூரி : நான் பொறியியல் ; அவள் ஆங்கில இலக்கியம்;
6) நட்பும் , நட்பு சார்ந்த காலம். உபயம் : திரு . நோக்கியா 
7) அட ! அவள் காதல் தெரிவித்தல் - நான் வழிதல்.

மூன்று வார்த்தைகளைச் 
சொல்ல மூன்றரை வருடம் 
ஹ்ம்ம் ...
"காத்திருத்தல் " என்பதன் 
சுருக்கம் தான் 
"காதல்"
ஆனதோ ?
8) லட்சக்கணக்கான வார்த்தை ப்பரிமாற்றங்கள் - நன்றி ! குறுஞ்செய்திகளும் , குறைவான தொலைதூர அழைப்பு கட்டணங்களும்.
புது நண்பர்கள் :(
9) பணிச் சேர்தல் - அவள் மருத்துவமனை ; நான் கணிப்பொறி குப்பை கொட்டல் .. ( எவனோ ஒருவன்;அலைபாயுதே  ?? )
10) சந்திப்பு விகிதம் கவலைக்கிடம் - "அவள் பயம் + 1000 km"  இடைவெளியில் இரு மனங்கள்!
" காதலித்து பார்த்து 
கவலைகள் தெரியும் " என்பார் !
ஆனால்  எனக்கு 
காதலியை பார்ப்பதே 
கவலையாக உள்ளது.."
11) சிறு உரசல்கள்... 
12) கவிதை பதிவுப்பக்கம் உருவாக்கல் - பரிசளித்தல் - டம்மில் படிக்க தயக்கம் - ஐடியா தரைமட்டம்;
13) குறுஞ்செய்தி - " உனக்கு என்னை விட சிறந்த பெண் கிடைப்பாள்; எனது ஒரே குறிக்கோள் என் வீட்டாரை நலமுடன் வைத்தல்". 
14)நான்  மனசொடிதல் - அவள் பார்க்க மறுத்தல்; நான் காரணம் தெரியாமல் தவித்தல் 
15) மறுபடியும் நட்புக்காலம் ; உபயம் : திரு. ஜிமெயில்.
16) நான் அயல் நாடு செல்லல்; அவள் அப்படியே.

கடைசி கடுதாசி.. இல்ல லெட்டர்..இல்ல ஈமெயில் :
***********************************************************
மார்ச்; 2010;

"அயல்நாட்டில் நீ நலமாய் இருப்பாய் என்று தெரியும் (?!!?)
எனக்கு திருமணம் ..கேரளாவை சேர்ந்த சாப்ட்வேர் மாப்பிள்ளை ( நாங்கள்ளும் அதே ஆணிய த்தான்  புடுங்கிட்டு  இருந்தோம்?) 
அப்பாவுக்கு தெரிஞ்ச குடும்பம் ..அப்பாவுக்கு புடிச்சிருக்கு , எனக்கும் தான் ."
 நாள் :மே 2,  இடம் : கேரளா கோவில்."
  இப்படிக்கு 
  இனியா.

ஆங் ....சொல்ல மறந்துட்டேன் ..அவ மலையாளி , அடியேன் சுத்த தமிழன்.

இந்த மெயில் படிக்கும் போது, இங்க வகுப்பில யாரோ ஒரு வயசான இத்தாலி நாட்டு வாத்தியார் கத்திகிட்டு இருந்தார், "சர்வதேச கலாச்சாரம்" பாடம் நடந்து கிட்டு இருந்துச்சி.."யோவ், இன்னும் எங்க நாட்டுலே  இருக்கிற கலாச்சாரமே , எழவு புரியல ..நீ வேற ".. 
கண்ணெல்லாம் கலங்கி, சன்னல் வழியா பார்த்தேன் ..வெளியில சொட்டு சொட்டாய்..அது பேர் என்ன சொல்லுவாங்க..? "மழை " தானே ? 

சரி கதை முடிஞ்சிருச்சி ...
ட்விஸ்ட் ??  இன்னும் 91 மணி நேரம் இருக்கு,   9300 km; நடுவுல 3 பனிமலை, 1 எரிமலை இருக்கு . 
என்ன சொல்றீங்க ?? எனக்கு "விண்ணைத் தாண்டி வருவாயா" மேல நம்பிக்கை இருக்கு... :(
 "பொய்"யெனப் பெய்யும் மழை !!! 
டிஸ்கி :
இது என் சொந்த கதை இல்ல ..அப்படினு சொன்னா நம்பவா  போறீங்க..

----இன்னமும் மழைக்காதலன் ..அருண் !                                 












18 comments:

  1. கவிதை மழையில், அருமையாக நனைய வைத்து விட்டீர்கள். :-)

    ReplyDelete
  2. நன்றி சித்ரா ! எப்போவோ எழுதப்பட்டது சிலது ..என்னமோ தோணிச்சு, பதிவு செஞ்சாச்சு !

    ReplyDelete
  3. காதல் மட்டுமே வாழ்க்கையில்லையே தல,
    இந்த பொண்னு இருந்தா நல்லாயிருக்கும்னு நினைக்கிறிங்க, இல்லாட்டியும் நல்லாதான் இருக்கும்னு நம்புங்க! கல்யாணம் பண்னவன்லாம் ஏண்டா பண்ணோம் அழுதுகிட்டி இருக்கோம்!, சந்தேகமா இருந்தா சித்ரா வீட்டுகாரர்கிட்ட கேட்டு பாருங்க!, ஜாலியா இரு மேன், உனக்கான தேவதை ஏற்கனவே பிறந்துவிட்டாள்!

    ReplyDelete
  4. சந்திப்பு.நட்ப்பு.கவிதை.காதல்.தவிப்பு.காத்திருப்பு.நிதர்சனம்.புரிதல்.கவிதை.காதல்....அழக இருக்கு மச்சான்...VTV-லாம் நம்பாத மச்சான்...எங்கிருந்தாலும் வாழ்க....பாட்டு மனப்பாடம் பண்ணு...

    ReplyDelete
  5. @ வால் தல
    வந்ததுக்கு நன்றி ..நச்னு அட்வைஸ் சொல்லிட்டீங்க!
    அனுபவம் ..அனுபவம் தான் ..
    சைடு ல சித்ரா வை வாரிட்டீங்களே தல ..:)

    ReplyDelete
  6. @ சீமான்
    உங்க கமெண்டே கவிதை தான் !!
    கத்துக்கிறோம் !

    ஆமா , இது என் சொந்த கதை இல்லைன்னு சொன்ன ஏன் இந்த உலகம் நம்ப மாட்டேங்குது ?

    ReplyDelete
  7. அருமையா இருக்கு
    "நான் உன்னை
    முதன்முதலாய்
    பார்த்த
    மழைக்கோர்த்த
    அந்த இரவு!
    என்னுள் இன்னும் விடியவே இல்லை .."

    "நாங்கள்ளும் அதே ஆணிய த்தான் புடுங்கிட்டு இருந்தோம்?) "
    வரிகள் மிக மிக அருமை.

    cross cultural communication class ல "யோவ், இன்னும் எங்க நாட்டுலே இருக்கிற கலாச்சாரமே , எழவு புரியல ..நீ வேற" எனக்கும் பல தடவ தோணி இருக்கு. ஆனா உங்கள மாதிரி ஓபன் ஆ சொல்லிகிட்டது தான் இல்ல.

    மொத்ததுல கலக்கிடீங்க மச்சான்

    ReplyDelete
  8. இப்படியும் கதை சொல்ல முடியுமா என்று வியக்க வைத்தது. நல்ல பதிவு அருண்!

    அப்படியே ஒரு தத்துவம்: இதுவும் கடந்து போகும். வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கு பார்க்க :)

    ReplyDelete
  9. ஒரு பின்னூட்டம் போட்டேன். அது எங்க போச்சு? எந்த பின்னூட்டமும் தெரியலையே... சொக்கா! என்ன இது சோதனை?

    ReplyDelete
  10. Dear Arun,

    It is a beautiful writing da.There is a unique style in your writing which is very rare...

    It was comic and the same time sad tooo...

    Keep writing
    Love
    Ramesh V

    ReplyDelete
  11. மழையில் (கவிதை, காதல்)நனைந்தே போனேன் ....
    "அன்று முதல் அவன்
    'நண்பன்' ஆகிவிட்டான்..
    உயிர்
    நீயாகி விட்டாய் !"
    இந்த இடம் மிக ஆமையாக இருந்தது

    ReplyDelete
  12. @பிரேம்
    ரொம்ப நன்றி..
    அப்படியே ஒரு திக்கு திசை இல்லாமல் எப்படியோ ஆரம்பிச்சு எப்படியோ முடிச்சிட்டேன் ..:)

    ReplyDelete
  13. @ரமேஷ் அண்ணா
    தேங்க்ஸ் :) :)
    @கயல்
    கொஞ்சம் பெருசு தான் ஒத்துக்கிறோம்; அதுக்காக கட்டுரை ஆஹ்?
    @ராம்
    நன்றி மச்சான்..
    ஆமையா அருமையா ?
    எதோ ஒன்னு ..முயல் ஆகிருவோம்..
    @தலைவன்
    தலைவா ..ரைட்டு விடு

    ReplyDelete
  14. அன்பின் அருண்

    மழை - கவிதை - காதல் அத்தனையும் அருமை

    அவன் நண்பனாக அவள் உயிரானாளா - பாவம் அவன்

    ந்ன்று நன்று
    நல்வாழ்த்துகள் அருண்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  15. Dear Arun,

    I am very sorry. Ungal varikalai padikkum podhu en kankalil kaviri oduvadhai thavirkka mudiyavillai. Ennai poruththavarai Iniya virku koduththu vaikka villai enrudhan solven eppadi oru mazhaikkadhalanai kanavanaga adaya.

    ReplyDelete
  16. அருமை அருமை நண்பா! ரொம்ப ரொம்ப பிரக்டிகல் ஆ சொல்லிருகீங்க !!
    கடைசில மழை காதல் மழையே !!
    அற்புதம்

    ReplyDelete
  17. math tuition :-PSLEMath is the only Math programme that offers an integrated approach in a child’s math learning journey from 4 to 12 years old. PSLEMath Method teaches Math in a revolutionary way to children. It is developed with the notion that children are able to learn more efficiently on any subject that they have strong interest in. By teaching mathematics in a refreshing, systematic and visual manner, children will look forward to classes. They subconsciously absorb new concepts through these lessons, and in turn develop a positive attitude towards learning.

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...