Wednesday, January 20, 2010

நெக்ஸ்ட் NEXT - மைக்கேல் க்ரைடென் MICHAEL CRICHTON.






(இது நிக்கோலஸ் நடித்து வெளி வந்த நெக்ஸ்ட் திரைப்படம் இல்லை). 



நம்ம மச்சான்ஸ் வலைப்பதிவில் முதல் முறையா ஒரு புத்தக அறிமுக பதிவு. (புத்தகம்ன உடனே போயிடாதீங்க, எதுக்கும் ஒரு தடவை என்னன்னு படிச்சிட்டு போங்க மச்சான்ஸ்..)
மனிதனின் ஒவ்வொரு செல்லிலும்(CELL) உள்ள மூலப்பொருளான ஜீனை(GENE) மையப்பொருளாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

ஜீன் - மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் ஒரு ஜீன் என்கிறது அறிவியல்.
அதாவது நாம் பேசுவதற் கு காரணம் ஒரு ஜீன், நாம் அடிக்கடி கோபப்பட காரணம் ஒரு ஜீன், சின்ன சின்ன திருட்டுகளில் ஆர்வம் இருந்தால் அதற்க்கு காரணம் ஒரு ஜீன்.....இது போன்று எக்கச்சக்க ஜீன்கள் இருக்கிறது... மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு ஜீன் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மனிதன் ஜீனும் சிம்பான்சியின் ஜீனும் 98 சதவீதம் ஒன்றே...
நம்மையும் குரங்கையும் வித்தியாசப்படுத்துவது வெறும் ஐம்பது ஜீன்கள் தான்.
அந்த வேற்றுமையை போக்கும் பொருட்டு மனிதனின் ஜீனை சிம்பின் ஜீனுடன் புணர வைத்தால்..?? அவ்வாறு மனிதனின்(ஆண்) ஜீனையும் சிம்பான்சியின் ஜீனையும் வைத்து உருவாக்கப்படும் அந்த ட்ரான்ஸ்ஜெனிக்(TRANSGENIC) உயிரினம் எப்படி இருக்கும்...??

-----------------------------

அடுத்து....
போதைக்கு அடிமையான ஒரு மனிதனை திருத்த வேண்டும் என்றால் ரொம்ப சிம்பிள். மனிதனை நல வழியில் ஈடுபடுத்தும் ஒரே ஒரு ஜீனை அவனுக்கு செலுத்தினால் போதும், மறு நிமிடமே அவன் திருந்தி விடுவான்.
சாத்தியம் என்கிறது நாவல்.

------------------------------

அடுத்து....
மனிதனுக்கு பேச உதவும் ஜீனை எடுத்து வேறு ஒரு உயிரினத்துக்கு செலுத்தினால் போதும் , அந்த உயிரினம் பேச ஆரம்பித்து விடும்.
சாத்தியம் என்கிறது நாவல்.

-----------------------------------------

இப்படி சில ஆபத்தான அறிவியலை மையலாய் கொண்டதுதான் இந்த நெக்ஸ்ட் புத்தகம்.

எல்லாம் சரி இதெல்லாம் உண்மையில் சாத்தியமா ???
அதற்க்கு நாவலின் ஆசிரியர் மைக்கல் கிரைடென் சொல்லும் பதில்...






"This novel is fiction, except for the parts that aren't".
ஜுராசிக் பார்க் எழுதிய அதே மைக்கல் க்ரைடன்தான்.


ஜீனை உபயோகித்து இந்த மாற்றங்களை எல்லாம் செய்ய முடியும் என்றால்.... நமக்கு பிறக்க போகும் குழந்தை எப்படி வேண்டுமோ அதற்க்கு தேவையான ஜீனை எல்லாம் கருவில் சேத்துவிட்டால் ரெடிமேட் சூப்பர் குழந்தை ரெடி...!!!
இது சாத்தியமா ???

-----------------------------------------
நாவலில் வரும் சில சுவாரஸ்யங்கள்...

நம்மூரில் ரத்ததானம் பரவலாக உள்ளது போல், அயல் நாடுகளில் விந்து தானமும் உண்டு. இது குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு பயன்படும் வகையில் உபயோகப்படுத்தி கொள்வர். என்ன வழக்கமாக தானம் செய்தவரின் அடையாளங்கள் மறைக்கப்படும். அறிவியலின் அசாத்திய வளர்ச்சியால் (?) இப்ப அதிலும் ஒரு தடை.

தானம் செய்பவருக்கு இதய நோய் ஏற்படுத்தும் ஜீன் இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள், அவர் தானம் செய்யும் விந்து மூலம் பிறக்கும் குழந்தைக்கும் அந்த ஜீன் இருக்கும். இப்போது அந்த குழந்தைக்கும் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு.
ஒரு வேலை அந்த குழந்தை பெரிதாகியபின் எப்படியோ இந்த சொ(வி)ந்த தந்தையை கண்டுபிடித்து, அவரிடம் தன வாழ்க்கையை பாதித்ததர்க்காக நஷ்ட ஈடு கேட்டால்...???

-------------------------------------

மேலே குறிப்பிட்டது போல் ஒரு ஆய்வுக்கூடத்தில் தனக்கும் ஒரு சிம்ப்புக்கும் பிறந்த(?) ஒரு ட்ரான்ஸ்ஜீனிக் குரங்கை (கிட்டத்தட்ட மனிதன் போல் இருக்கும், செயல்படும்) வீட்டுக்கு கொண்டு வருவதால் அந்த விஞ்ஞானிக்கு ஏற்ப்படும் நிகழ்வுகள், வெகு சுவாரஸ்யம்.

அதே போல் ஆங்காங்கே வரும் பேசும் (மிம்க்ரி செய்யும்) கிரே பாரட் சிரிப்புக்கு உத்தரவாதம்.

இன்னும் நாவலில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள். ஒன்றோடொன்று சம்பந்தமேயல்லாத பல கிளைக்கதைகளாக தொடங்கும் கதை முடிவுறும்போது ஒரே மையத்தை நோக்கி நகர்த்தும்போது அட போட வைக்கிறார் மைக்கல். நாவலை படித்து முடிக்கும் போது கிட்டத்தட்ட ஜீன்-களை பற்றிய ஒரு என்சைக்ளோபீடியாவை படித்த உணர்வு. அவ்வளவு விஷயங்கள் புத்தகத்தில்.

பல விஷயங்கள் வியப்பின் உச்ச்சத்திர்க்கே அழைத்து செல்வது உறுதி. சில விஷயங்களை படிக்கும்போது இப்படியும் நடக்க சாத்தியமா என்று தீவிர யோசனையில் ஆழ்த்தி விடுகிறது. மைக்கல் க்ரைடன் எவ்வளவு நாள் இந்த புத்தகத்திற்காக செலவு செய்தார் என்பது தெரியவில்லை, அவ்வளவு புதிய விஷயங்கள் .வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். நமக்கு அறிமுகமே அல்லாத ஒரு விஷயத்தை கதையோடு புகுத்தி அழகாக எழுதி இருக்கிறார்.

மொத்தத்தில் NEXT - ஒரு உபயோகமுள்ள FANTASTIC PAGE TURNER



மத்த டீடைல்ஸ்.


Author Michael Crichton

Country United States
Language English
Genre(s) Science fiction,
techno-thriller,
dystopian novel
Publisher HarperCollins
Publication date November 28, 2006
Media type Print (Hardcover)
Pages 528(plus author pages)
ISBN ISBN 0060872985
(Source : Wikipedia)
---------------------------------------------------
விலை - ரூ.250 .(கடைக்குள்ள)
விலை - ரூ.100. (கடைக்கு வெளியில்)

---------------------------------------------------


Monday, January 18, 2010

கிராமத்து பொங்கல்






பிறந்ததில் இருந்து நகரத்திலேயே இருந்து, கிராமத்து பொங்கல் விழா எப்படி இருக்கும் என்றே தெரியாத மச்சான்ஸ்-களுக்காக இந்த பொங்கல் பதிவு.
(நமக்கு பொங்கல்னாலே ஒரு புதுப்படம், சக்கரை பொங்கல், கரும்பு மற்றும் டி.வி நிகழ்ச்சிகள் இவ்வளவுதான் தெரியும்).

தஞ்சாவூர் மாவட்டத்தில இருக்குற பேராவூரணி வட்டத்தில் கொண்டாடப்படும் பொங்கலை பார்ப்போம்.
பொங்கல் அன்று ஒவ்வொரு வீட்டுலயும் வாசலில் அடுப்பு வெட்டி பானைல பொங்கல் வைப்பாங்க, இதை அந்த ஊர் வட்டார வழக்குப்படி "கோடு கிழித்து பொங்கல் வைத்தல்" ன்னு சொல்றாங்க. படத்த பார்த்தீங்கனா ஏன் இந்த பெயர் அப்படின்னு உங்களுக்கே புரியும். பானைங்குறது இந்த ஏரியாவுல காலப்போக்கில் வெண்கல பாத்திரமா மாறிடுச்சு.








அடுப்பின் ஒவ்வொரு முனையிலும் ஒரு வெண்கல பானை. ஒன்னு வெண் பொங்கலுக்கு இன்னோன்னு சக்கரை பொங்கலுக்கு. அடுப்பு வெட்டுவதிலும் ஒரு சம்பிரதாயம் உண்டு, முன் வாசலில் இருந்து கிழக்கு பக்கம் ஒரு இரண்டு தூரத்தில் அடுப்பை வெட்ட வேண்டும். சூடனை கொழுத்தி அடுப்பை பற்ற வைத்துவிட்டு, விறகு சுள்ளி தென்னை மட்டை அப்புறம் இன்ன பிற ஐட்டங்களை எல்லாம் போட்டு அடுப்பை நன்றாக எரிக்கணும்.

முதலில் பொங்க பானையில் தண்ணி மட்டும்தான், தண்ணி நல்லா சூடு ஏறின பிறகுதான் ரெண்டு பாணியிலும் அரிசியை போட வேண்டும். அப்படியே ரெண்டு பொங்கலுக்கும் வேணுங்கிற பொருள் எல்லாம் சேர்த்து அடுப்பை நன்றாக எரியவிட்டால், பொங்க பொங்க பொங்கல் ரெடி. ரெண்டு பானையையும் அடுப்பில் இருந்து இறக்கி, கரி எல்லாம் கழுவி சுத்தம் செய்து, விபூதி குங்குமம் பூ எல்லாம் வைத்து அலங்கரிக்கணும்.

அப்புறம் வீட்டு வாசல்ல நல்லா ஒரு கலர் கோலம் போட்டு, நடுவுல பூ வச்ச சான பிள்ளையாரையும் செஞ்சு வைச்சிடணும். அப்படியே ஒரு கரும்பு, அப்புறம் மற்ற பூஜை ஐட்டம்ஸ் எல்லாத்தையும் வச்சு சாமி கும்புடுவாங்க. இதுதான் முதல் நாள் பொங்கல் விழா. 





பொங்கல் அன்று பகல் முழுவதும் சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடக்கும், அப்படியே பெரியவர்களுக்கும் கைப்பந்து, கபடி, சுருட்டு பிடித்தல் போன்ற போட்டிகளும் நடக்கும். அன்று இரவு ஊர் போது மேடையில் சிறுவர்களுக்கு பாட்டு போட்டி, கவிதை போட்டி, மாறுவேட போட்டி, நடன போட்டி ஆகியவையும் நடைபெறும். அப்படியே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே போது அறிவு போட்டியும் நடத்தப்படும். நம்ம ஊர்ல அன்னக்கி ராத்திரி ஹைலைட்டே இந்த நடன போட்டிதான் (நண்டு சிண்டு எல்லாம் போட்டி போட்டு ஆடும்). இந்த போட்டிகள் பரிசுகள் அனைத்தையும் ஊர் இளைஞர் மன்றம் பார்த்துக்குவாங்க...
(கொசுறு : இதே நேரத்தில் சுற்று வட்டாரத்துல உள்ள சில ஊர்களில் கரகாட்டம் நடத்தப்படுவதும் உண்டு...)


இரண்டாம் நாள் - மாட்டு பொங்கல்.

இன்னக்கி கொஞ்சம் கூடுதல் விஷேசம் மச்சான்ஸ். முதல் நாளில் தனி தனியா பொங்கல் வச்ச நம்ம மக்கள்ஸ், இன்னக்கி எல்லாரும் பொதுவா ஒரு எடத்தில கூடி மாட்டு பொங்கல் வைப்பாங்க.

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் அவங்களுட மாடுகளை குளிப்பாட்டி அலங்காரம் செஞ்சு ஊருக்கு பொதுவான ஒரு இடத்துக்கு (அநேக இடங்களில் மைதானம்) கொண்டு வந்துடுவாங்க. அப்படியே மீண்டும் ஒரு பொங்கல் மாடுகளுக்காக. மாடுகளை எல்லாம் ஒரு பக்கம் கட்டி வைத்து விட்டு, எல்லாருக்கும் பொதுவாய் ஒரு அடுப்பை வெட்டி பொங்கல்(இன்று வெண்பொங்கல் மட்டும்தான்) வைக்க ஆரமபிச்சுடுவாங்க.

பெண்கள் எல்லாம் ஒரு பக்கம் இந்த வேலைகள பார்க்க இன்னொரு பக்கம் ஆண்கள் பொங்கல் தயார் செய்வதற்கான மற்ற ஐட்டங்கள ரெடி பண்ணுவாங்க. (தேங்காய் துருவுதல், பழங்கள் நறுக்குவது, பேரீச்சை, வெல்லம்). அதே நேரத்தில் மைதானத்தின் நடுவில் மண்ணால் தயார் செய்யப்பட்ட ஒரு சாமியும் உருவாக்கப்படும்.

பொங்கல் எல்லாம் தயார் ஆனாவுடன், எல்லாரும் அவர் அவர் பானைகளை அலங்கரித்து சாமி முன்னால் படைத்து விடுவர். பின்னர் பூஜை ஆரம்பிக்கும். முதலில் படையல். சாமியின் முன்னாள் நிறைய வாழை இலைகள் போட்டு ஒரு மேடை போல் அமைக்கப்படும். ஒவ்வொரு பானையில் இருந்தும் பொங்கல் எடுத்து இலையில் போடப்படும். அப்படியே பானையில் இருந்து எடுக்கும்போது இடையிடையே தேங்காய் துருவல், வெல்லம், வாழைப்பழம், நெய், பால், தயிர், தேன் ஆகியவையும் சேர்க்கப்படும். இறுதியில் எல்லாம் கலக்கப்பட்டு கலவையாய் மாட்டு பொங்கல் ரெடி. சாமிக்கு படைத்தவுடன், கொஞ்சம் சாதம் எடுத்து அனைவரும் அவர் அவர் மாடுகளுக்கு ஊட்டிவிடுவர். 







அப்புறம் பூஜை. ஒரு மண்சட்டியில் நெருப்பு, இன்னொன்றில் தண்ணி எடுத்து இருவர் மைதானத்தை "பொங்கலோ பொங்கல்" என்று கூவிய படியே மூன்று சுற்று வருவர். சுற்றி முடித்தவுடன் அப்படியே சிறார்களுடன் ஊரின் எல்லைக்கு ஊர்வலமாய் சென்று இரண்டு சட்டிகளையும் போட்டு உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். அவர்கள் வந்து சேர்ந்ததும் பொங்கல் அனைவருக்கும் பங்களித்து தரப்படும். இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் ஓவர்.
மூன்றாம் நாள் மாடுகளை அலங்கரித்து, மாடு விடுதல் நடத்தப்படும்.

அப்படியே கூட்டம் கூடி பூஜைக்கு ஆனா செலவுகள் பற்றியும் விவாதித்துவிட்டு கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்பட்டு எழுதப்படும்.

இனி அடுத்த வருஷம் கொண்டாட காசு எப்படி திரட்டுவாங்கன்னு பார்ப்போம்.

இந்த வருஷ செலவுகள் போக மூவாயிரம் ரூபாய் மிச்சம் இருக்குதுன்னு வச்சுக்கங்க, அந்த காசு பத்து முன்னூறு ரூபாய்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்படும். ஏலத்திற்கு வரும் ஒவ்வொரு தொகையும்(300) ஒரு கணிசமான அமௌன்ட்டுக்கு ஏலம் போகும். (300 ரூபாய் காசு, 600-800 வரை ஏலம் போகும்). ஏலம் எடுத்த ஒவ்வொருவருக்கும் 300 ரூபாய் வழங்கப்படும்.

அடுத்த வருஷம் பூஜையின் போது இந்த முன்னூறுக்கு பதில் ஏலம் எடுத்த தொகையை செலுத்தி விட வேண்டும். ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை, அனைவரும் ஒரு முறையாவது ஏலம் எடுத்திருக்க வேண்டும். அதே போல் சில வருடங்களுக்கு ஒரு முறை கையிருப்பு பணம் கூடும்போது, அவர் அவர் ஏலம் எடுத்த தொகையை பொருத்து கூடுதல் பணம் பங்களித்து தரப்படும். இப்ப அடுத்த பொங்கல் பூஜைக்கு பொங்கல் பணம் தயார் !!!


Friday, January 8, 2010

மீண்டும் பப்பு....!!!




(பப்பு வீட்டில் கரண்ட் கட்) 
பப்பு : அப்பா உங்களுக்கு இருட்டுல கண்ணு தெரியுமா.. 
அப்பா : நல்ல தெரியுமே... 
பப்பு : அப்படின்னா, இந்த ரிப்போர்ட் கார்டுல கையெழுத்து போட்டு தாங்க... 
அப்பா : ??? 

--------------------------------------------------------------------------------------

வீட்டுக்குள் திருடன் இருப்பதை பப்பு பார்த்துவிடுகிறான்... 


பப்பு : ஒழுங்கா...என் ஸ்லேட்டு, பல்பம், நோட்டை- யும் சேர்த்து எடுத்துட்டு போ, 
இல்லாட்டி சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பிடுவேன்... 
திருடன் - ??? 

--------------------------------------------------------------------------------------

பப்பு : அப்பா...உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்... 
அப்பா : சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. 


(சிறிது நேரம் கழித்து) 


அப்பா : இப்ப சொல்லு... 
பப்பு : உங்க தட்டுல ஒரு பல்லி செத்து கெடந்துச்சு...அதத்தான் சொல்ல வந்தேன்... 
அப்பா : ??? 

--------------------------------------------------------------------------------------

பப்பு, பப்பு அப்பா, அப்பா நண்பர் மூணு பெரும் ஹோட்டலுக்கு போறாங்க. 
அப்பா : (சர்வரிடம்) ரெண்டு பீர், ஒரு ஐஸ் க்ரீம். 
பப்பு : ஏம்பா, உங்க FRIEND பீர் சாப்பிட மாட்டாரா ? 
அப்பா : ??? 

--------------------------------------------------------------------------------------

அம்மா : என்னடா இன்னக்கி ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே...? 
பப்பு : எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க...நான் மட்டும்தான் பதில் சொன்னேன்.. 
அம்மா : (சந்தோசத்துடன்) என்ன கேள்வி கேட்டாங்க...? 
பப்பு : "யார்றா அது மிஸ் மேல சாக் பீஸ் அடிச்சது...?" - ன்னு கேட்டாங்க.. 

--------------------------------------------------------------------------------------

பப்பு : அம்மா....டீச்சர்க்கு ஞாபக மறதி ரொம்ப அதிகம் ஆயிடுச்சு... 
அம்மா : ஏன்டா...? 
பப்பு : டீச்சர் போர்ட்ல மகாபாரதம்னு எழுதிட்டு, எங்கள பார்த்து "யார் மகாபாரதத்த எழுதினதுன்னு கேக்குறாங்க...." 

--------------------------------------------------------------------------------------

பப்பு : அப்பா....உங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்... 
அப்பா : என்னடா ? 
பப்பு : நான் பரிட்சையில பாஸ் ஆனா கம்ப்யூட்டர் வாங்கி தர்றேன்னு சொன்னிங்கள்ள... 
அப்பா : ஆமா.... 
பப்பு : உங்களுக்கு கம்ப்யூட்டர் செலவு மிச்சம்.... 

--------------------------------------------------------------------------------------

பப்பு (எல்.கே.ஜி) : புஜ்ஜி...ஐ லவ் யூ....!!! 
புஜ்ஜி (யூ.கே.ஜி) : போடா லூசு... 
பப்பு : அக்கா அக்கா ப்ளீஸ்க்கா லவ் பண்ணுங்க .....ப்ளீஸ்..ப்ளீஸ் 

--------------------------------------------------------------------------------------

ஹிஸ்டரி வகுப்பில் பப்பு ப்ரெயர்(PRAYER) செய்வதை பார்த்த டீச்சர்... 





டீச்சர் : ப்ரெயர் செய்யுறது ரொம்ப நல்ல பழக்கம்., பப்பு நீ எதுக்கு ப்ரே செஞ்ச... 
பப்பு : எங்க அம்மாதான் தூங்குறதுக்கு முன்னாடி ப்ரெயர் பண்ண சொன்னங்க.
டீச்சர் : ???


--------------------------------------------------------------------------------------
அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்......
                              - ஜொள்ளன் பப்பு.

Wednesday, January 6, 2010

தி பாய் இன் தி ஸ்ட்ரைப்ட் பைஜாமாஸ் The Boy in the Striped Pyjamas (2008)


கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்த கால திரைப்படம். 


இரண்டாம் உலகப்போரின் போது நடப்பதாய் கதை. நாஜிக்களின் "யூத வேட்டை" உச்சத்தில் இருந்த காலம். இந்த காலக்கட்டத்தில் தான் ஜெர்மானிய படை வீரர்கள்(?) ஊரில் உள்ள அனைத்து யூத மதத்தினரையும் கூட்டம் கூட்டமாக சிறைப்பிடித்தனர். அவ்வாறு பிடிக்கப்படும் யூதர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் கான்சென்ட்ரேஷன் கேம்புகளில் தங்க வைக்கப்படுவர். அங்கு தினம் தினம் கொடுமை படுத்தப்பட்டு பின்னர் ஒரு சுப யோக தினத்தில் சிறு சிறு கூட்டங்களாக ஆடைகளை களைத்து "கேஸ் சேம்பெருக்குள்" அனுப்பி வைக்கப்படுவர். பின்னர் அந்த சேம்பருக்குள் விஷ வாயுவை பாய்ச்சி அனைவரையும் கொன்று அங்கேயே எரித்தும் விடுவர். இந்த கேம்புகளில் இது போன்று முப்பது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாய் ஒரு குறிப்பு சொல்கிறது.

அப்படிப்பட்ட ஒரு கான்சென்ட்ரேஷன் கேம்பில் இருக்கும் ஒரு சிறுவனுக்கும் ஒரு ஜெர்மானிய நாஜி படை தளபதியின் மகனுக்கும் மலரும் நட்பை பற்றியதுதான் கதை.



ப்ரூனோ நம் படத்தின் ஒன்பது வயது கதா(குட்டி)நாயகன். ப்ரூனோவின் தந்தைக்கு பதவி உயர்வு கிடைப்பதால் தன் நண்பர்களை விட்டு பிரிய மனமில்லாமல் பெர்லினை விட்டு பிரிந்து செல்கிறான் ப்ரூனோ. ஆளில்லாத காட்டுக்குள் தனியாக இருக்கும் ஒரு வீட்டில் குடியேறுகிறது ப்ரூனோவின் குடும்பம். வீட்டை சுற்றி ராணுவப் படைகளின் பாதுகாப்பு. விளையாட யாரும் இல்லாததால் ப்ரூனோவின் பொழுதுகள் அனைத்தும் தனிமையில் கழிய, அப்படித்தான் அவனுக்கு அவன் அறையில் முன்றொரு நாள் ஜன்னலில் பார்த்த "வீடு போன்ற அமைப்புகள்" நினைவுக்கு வருகிறது. அங்கே தன்னுடன் விளையாட யாரேனும் சிறுவர்கள் இருக்க கூடும் என்று நினைத்து தன் வீட்டின் பின் வாசல் வழியாக போக எத்தனிக்கும்போது, அவன் அம்மாவால் தடுக்க படுகிறான்.

பின்னர் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பின் வாசல் வழியாக தப்பிக்கும் ப்ரூனோ அந்த வீடு போன்ற அமைப்புகளின் முள் வேலியை வந்தடைகிறான். மறுபக்கம் அழுக்கு உடைகளுடன் இன்னொரு சிறுவன். இங்குதான் நம் படத்தின் இரண்டாம் நாயகனான ஷ்மூயெல் அறிமுகம். அழுக்கு உடைகளுடன் வித்தியாசமாய் காட்சியளிக்கும் ஷ்மூயெல்லுடன் நட்பு கொள்ளும் பொருட்டு ப்ரூனோ அவுனுடன் பேச ஆரம்பிக்க அவர்களுக்குள் அறிமுகம் ஏற்படுகிறது. 



இப்படியே யாருக்கும் தெரியாமல் ப்ரூனோ இங்கு நிதமும் வந்து ஷ்மூயெல்- உடன் பேசி செல்கிறான். அவ்வப்போது ஷ்மூயெல்லின் பசிக்கு உணவும் கொண்டு வந்து கொடுக்கிறான்.இந்த நேரத்தில் ப்ரூனோவின் அம்மாவுக்கு கான்சென்ட்ரேஷன் காம்புகளின் உண்மை நிலவரமும் அங்கு நடக்கும் கொடுமைகளும் தெரியவர தன குழந்தைகள் இது போன்று ஒரு சூழலில் வளர கூடாது என்று தன கணவனுடன் சண்டை கொள்கிறாள். வேறு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்கிறாள். கடமையே கண்ணான நம் கமாண்டர் அதற்க்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார்.

திடீரென்று ஒரு நாள் ஷ்மூயெல்லை தன் வீட்டில் பார்க்கிறான் ப்ரூனோ. இங்கு உள்ள வைன் கிளாஸ்களை துடைப்பதற்காக ஒரு சிறுவன் வேண்டும் என்றதால் தன்னை அனுப்பி வைத்ததாக கூறுகிறான். ஷ்மூயெல் அங்கு வைக்கப்பட்டு இருந்த கேக்குகளை பார்க்க, அவை உனக்கு வேண்டுமா என்று ப்ரூனோ கேட்கிறான். ஆமாம் என்று ஷ்மூயெல் வேக வேகமாய் தலையை ஆட்ட ஒரு துண்டை ஷ்மூயெலுக்கு கொடுக்கிறான் ப்ரூனோ. அந்த நேரம் பார்த்து ப்ரூனோவின் வீட்டில் பாதுகாப்புக்கு இருக்கும் ஒரு படை வீரன் உள்ளே நுழைய ஷ்மூயெல் கையும் கேக்குமாய் பிடி படுகிறான், கேக்கை திருடினாயா என்று அந்த பாதுகாவலன் கேட்க இல்லை ப்ரூனோ தன் நண்பன் அவன்தான் கொடுத்தான் என்கிறான் ஷ்மூயெல். ஏதோ ஒரு பயத்தில் ப்ரூனோ அதை மறுத்துவிடுகிறான். கோபம் கொள்ளும் பாதுகாவலன் ஷ்மூயெல்லை பின்னர் கவனிப்பதாக சொல்லி சென்றுவிடுகிறான். 




இந்த கோழையான நடப்பால் தான் மீதே கோபம் கொள்ளும் ப்ரூனோ, மறு நாள் ஷ்மூயெல்லை பார்க்க அந்த முள் வெளிக்கு செல்கிறான். ஏனோ ஷ்மூயெல் அன்று வந்திருக்கவில்லை. இப்படியே சில தினங்கள் கழிய ப்ரூனோ தினமும் வந்து செல்கிறான், பின்னர் ஒரு நாள் ஷ்மூயெல் கண்ணில் காயங்களுடன் வந்து சேர்கிறான், ப்ரூனோ அவனிடம் மனிப்பு கோர மீண்டும் நட்பு தொடர்கிறது.ப்ரூனோவின் அம்மா மீண்டும் அந்த விஷயத்தை பூதாகரமாக்க இம்முறை குழந்தைகளுடன் வெளியேற அனுமதிக்க படுகிறாள்.

அன்று ஷ்மூயெல்லை சந்திக்கும் ப்ரூனோ தான் நாளையுடன் கிளம்ப போவதாக சொல்கிறான். அதே நேரம் ஷ்மூயெல் நேற்று முதல் தன் தந்தையை காணவில்லை என்று சொல்ல, ப்ரூனோ தான் உள்ளே வந்தால் உனக்கு உன் தந்தையை தேட உதவி செய்வதாக கூறுகிறான்,

மறுநாள்.

வீட்டை காலி செய்து புறப்பட அம்மா ஆயத்தமாகி கொண்டிருக்கிறாள்.
ஷ்மூயெல்லுக்கு ஒரு சான்டுவிச் தயார் செய்து புறப்படுகிறான் ப்ரூனோ.
அவன் வெளியில் செல்வதை கவனிக்கும் அம்மா எங்கே என்று கேக்க ....
ஊஞ்சல் ஆடிவிட்டு வருவதாக சொல்லி கிளம்புகிறான்.
யாரும் பார்க்காத நேரத்தில் வீட்டில் இருந்து தப்பித்து முள் வேலியை வந்தடைகிறான்.
சொன்னதை போலவே ப்ரூனோ வேலிக்கு கீழே பள்ளம் வெட்டி தானும் கேம்புக்கு உள்ளே நுழைந்து விடுகிறான்.
தான் கொண்டு வந்த அகதிகளின் சட்டையை ஷ்மூயெல் ப்ரூனோவுக்கு தருகிறான்.
ப்ரூனோவை காணாமல் ப்ரூனோவின் அம்மா வீடு முழுவதும் தேடுகிறாள்.
ப்ரூனோ சட்டை மாட்டியவுடன் இருவரும் ஷ்மூயெல்லின் தந்தையை தேடி புறப்படுகின்றனர்.
ப்ரூனோவின் அப்பாவிற்கும் விஷயம் தெயரயவர அவரும் காவலாளிகளுடன் சேர்ந்து தேடுகிறார்.
ஒவ்வொரு இடமாக சென்று ப்ரூனோவும் ஷ்மூயெல்லும் அவனின் தந்தையை தேடுகின்றனர்.
மோப்ப நாய் உதவியுடன் ப்ரூனோ கேம்பிற்குள் சென்றிருப்பது தெரியவர...
ஒரு அறைக்குள் சென்று ஷ்மூயெல்லின் தந்தையை தேடும்போது அந்த அறையில் உள்ளவர்கள் அனைவரையும் ராணுவம் வெளியேற்றுகிறது.
ப்ரூனோவின் தந்தை கேஸ் சேம்பரை நோக்கி ஓடி வர....
ஒவ்வொருவரும் துணி களையப்பட்டு....
..................
அடுத்த பத்து நிமிடம் பர பர....



படத்தில் இந்த மெய்ன் ட்ராக்கை தவிர ஆங்காங்கே சில முக்கிய பதிவுகள் உண்டு. ப்ரூனோவின் அக்கா ஜெர்மானிய வரலாற்றாலும், ஆசிரியரின் அறிவுருத்தலாலும் கவரப்பட்டு ஒரு போர் வீரனை போல் பரிணாம மாற்றம் அடைவது. ப்ரூனோவின் வீட்டில் வேலை செய்யும் யூத அகிதியின் அறிமுகம். வீட்டு பாதுகாவலில் இருக்கும் ஒரு ஜெர்மானிய வீரனின் (கேக்கை சாப்பிட்டதற்காக ஷ்மூயெல்லை தண்டித்தவன்) குடும்பத்தை கேலி செய்யும் டைனிங் டேபிள் காட்சி....

படத்தின் மிகப்பெரிய பலம் ப்ரூனோ மற்றும் ஷ்மூயெல்லாக வரும் இரண்டு சிறுவர்கள். அதுவும் ஷ்மூயெல்லின் நடிப்பு சான்ஸே இல்லை... படத்தின் வசனங்கள் மிக எளிமை ஆனால் பக்கா ஷார்ப். மிக மிக நேர்த்தியான திரைக்கதை. படம் முடியும்போது கண்டிப்பாய் மனம் சலனப்பட்டுவிடும்....
பார்த்துட்டு சொல்லுங்க மச்சான்ஸ்....கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்

தரவிறக்க லிங்க்குக்கு உங்க மெயில் முகவரிய கமெண்ட்ஸ்ல போட்டுடுங்க (இல்லைனா -deepanadhi@gmail.com-க்கு அனுப்பி வச்சாலும் ஒ.கே ) மச்சான்ஸின் மெயில் சேவை உங்களை வந்தடையும்...

Saturday, January 2, 2010

மல்ஹோலாண்ட் டிரைவ் Mulholland Drive (2001)

என் இனிய அன்பு மச்சான்களுக்கு, உங்கள் பாசத்துக்குரிய மச்சான்ஸின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!!!
(ரெண்டு நாள் ஆச்சு, இப்பவாவதும் தெளிஞ்சுதா?)

ஓ.கே ஓ.கே மேட்டருக்கு வருவோம்...


மல்ஹோலாண்ட் டிரைவ்.


வருடம் : 2001
டைரக்டர் : டேவிட் லின்ச்
நடிகர்கள் : நவோமி வாட்ஸ் (கிங் காங் நாயகி), லாரா ஹாரிங்.




நடிகை ரீட்டா(லாரா ஹாரிங்) காரில் பார்ட்டி ஒன்றுக்கு போய்க்கொண்டிருக்கிறார்.
வழக்கத்திற்கு மாறாய் நடுவழியில் நிறுத்தும் அவரது பாதுகாவலர்கள் அவரை மிரட்டி காரில் இருந்து இறங்க சொல்கின்றனர்.


அப்போது அதே ரோட்டில் படு வேகமாக ரேஸ் வைத்து ஒட்டி கொண்டு வரும் இரு கார்களில் ஒன்று ரீட்டாவின் காரில் மோத ஒரு பெரும் விபத்து நேர்கிறது.


அதில் காயங்களுடன் உயிர் பிழைக்கும் ரீட்டா, பாதுகாவலர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து விரைகிறார். மயக்க நிலையிலேயே வீதிகளில் திரியும் ரீட்டா யாருக்கும் அறியாமல் ஒரு வீட்டின் உள்ளே நுழையவும் அந்த வீட்டில் உள்ள வயதான பெண்மணி வெளியூர் கிளம்பவும் சரியாக இருக்கிறது.






பெட்டி(BETTY - கேரக்டர் பேரு மச்சான்ஸ்) இந்த படத்தின் இன்னொரு நாயகி ஹாலிவுட் கனவுடன் அந்த ஊருக்கு வந்து சேர்கிறார்.சில மணி நேரங்கள் கழித்து அதே வீட்டிற்கு பெட்டி வந்து சேர்கிறார். பெட்டி அப்போதுதான் முதல் முதலாக தன் அத்தை வீட்டிற்கு வருகிறார், உள்ளே பெட்டி ரீட்டாவை பார்த்ததும், அவரை தன் அத்தையின் நண்பர் என தவறாக புரிந்து கொள்கிறார். பின்னர் தன அத்தையுடன் தொலைபேசியில் பேசும் போது உண்மை வெளிப்பட, ரீட்டா தான் இங்கு வந்து சேர்ந்ததன் உண்மையை சொல்கிறாள்.


இப்பதான் படத்துல சுவாரஸ்யம்... ரீட்டாவுக்கு விபத்தில் தான் யார் என்பதையே மறந்து விடுகிறார். அவரின் கைப்பையை பார்க்குன்போது கட்டு கட்டாக பணமும் ஒரு சாவியும் கிடைக்கிறது.




 அதே நேரம் நகரின் இன்னொரு மூலையில்...

முதல் காட்சியின் விபத்தில் தப்பித்த மற்றொரு ரேஸ் வண்டியின் ஓட்டுனர் அவர் நண்பருடன் முதல் நாள் விபத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறார். அப்போது எதிர் பாரா வகையில் அவர் நண்பர் ஓட்டுனரை கொன்று விட்டு தப்பிக்க முற்படும் பொது இன்னும் ரெண்டு பேரை கொள்ள நேரிடுகிறது.


ரீட்டாவை காணாததால் அவருக்கு பதில் வேறொரு நாயகியை முடிவு செய்ய திரைப்பட குழுவும் தயாரிப்பாளரும் கூடுகின்றனர். அந்த சந்த்திப்பு கசப்பாக முடிவடைகிறது. படத்தின் டைரக்டர் கோபமாகவெளியேறுகிறார்.




மீண்டும் ரீட்டா & பெட்டி.


ரீட்டாவுக்கு ஏதோ ஒரு நினைவில் டயான் செல்வின் என்ற பெயர் நியாபகத்துக்கு வர அந்த பெண்ணை தேடி இருவரும் செல்கின்றனர். ஆனால் அதே பெண் அவளுடைய அறையிலேயே பிணமாக கிடப்பதை கண்டு இருவரும் திரும்பி விடுகின்றனர்...


மீண்டும் டைரக்டர்.


கோபமாக வெளியேறும் டைரக்டர், அவர் வீட்டுக்கு செல்ல, அங்கே அவரது மனைவி அவரது க.காதலனுடன் சேர்ந்து அவரை அடித்து வெளியே துரத்துகிறார். ரத்த காயங்களுடன் தப்பிக்கும் டைரக்டர் ஒரு லாட்ஜில் வந்து ஒளிந்து கொள்கிறார்.


ஒரு ஹோட்டலில்.
ஒரு நபர் தான் கண்ட கனவை பத்தி தன் நண்பரிடம் விவரித்து கொண்டிருக்கிறார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இதுக்கப்புறம் படத்த பார்த்துக்கங்க மச்சான்ஸ். ரீட்டாவின் நிலை என்ன ? பெட்டி நாயகி ஆனாரா ? அந்த மூணு கொலைகள் ? இன்னும் படத்தில் ஏகப்பட்ட கேள்விகள் டிவிஸ்ட்டுகள். எல்லாத்துக்கும் பதில் பெட்டியதான்(BETTY) கேக்கணும் ????


ஒன்னு உறுதி மச்சான்ஸ்... படம் பார்த்து முடிச்ச உடனே ராவா குவாட்டர் அடிச்ச எபக்ட் கெடைக்கும்...இன்னொரு விஷயம் படத்தின் எல்லா ட்விஸ்ட்டுகளுக்கும் படத்தில் பதில் இல்லை. சில விஷயங்களை நம் கற்பனைக்கே விட்டுவிடுகிறார் டைரக்டர்.


மிக மிக வித்தியாசமான திரைப்படம்....டயலாக் விஷயத்தில டைரக்டர் டேவிட் லின்ச் நம்ம மணிரத்னத்தோட பெரியப்பா மாதிரி, படத்தின் பல சீன்களில் வசனமே கிடையாது...இருக்கும் இடங்களிலும் ரொம்ப கம்மி....




படம் ஒன் அண்ட் ஒன்லி பார் 18+.
படம் பார்த்துட்டு புரியலனா சொல்லுங்க அதுக்கு ஒரு தனி பதிவே போட்டுடலாம். அவ்வளவு விஷயங்கள் படத்துல இருக்கு. படம் பார்க்குறதுக்கு முன்னாடி கீழ குடுத்திருக்குற விஷயங்கள நோட் பண்ணிக்கங்க.


படத்துல நமக்கு புரியாத விஷயங்களை புரிஞ்சுக்குறதுக்காக டைரக்டர் லின்ச் டி.வி.டி.யில் கொடுத்த பத்து கேள்விகள் தான் இவை.


படத்த பார்த்துட்டு தெளிவா இருந்த பின்னூட்டங்கள் போடுங்க மச்சான்ஸ்.


அந்த பத்து மேட்டர்.

1. Pay particular attention in the beginning of the film: At least two clues are revealed before the credits.
2. Notice appearances of the red lampshade.
3. Can you hear the title of the film that Adam Kesher is auditioning actresses for? Is it mentioned again?
4. An accident is a terrible event — notice the location of the accident.
5. Who gives a key, and why?
6. Notice the robe, the ashtray, the coffee cup.
7. What is felt, realized, and gathered at the Club Silencio?
8. Did talent alone help Camilla?
9. Note the occurrences surrounding the man behind Winkie's.
10. Where is Aunt Ruth?


படத்தின் டிரைலர் இதோ...



Related Posts Plugin for WordPress, Blogger...