Tuesday, December 29, 2009

அஜீத்துக்கும் விஜய்க்கும் டேஞ்சரஸ் நோய்.அஜீத்துக்கும் விஜய்க்கும் அப்படி என்ன பெரிய நோய்...? அத கடைசியா பார்ப்போம் மச்சான்ஸ், அதுக்கு முன்னாடி நோய்களுக்கும் சினிமாவுக்கும் இருக்குற தொடர்ப பத்தி ஒரு சின்ன Introduction.

பாலிவுட்ல இப்பெல்லாம் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகணும்ன அதுக்கு ஒரே வழிதான், அந்த படத்தோட ஹீரோவுக்கு ஒரு கொடூரமான நோய் இருக்கணும், இல்ல அவர் கூடவே இருக்குற வேற ஏதாவது கேரக்டருக்கு அந்த நோய் இருக்கணும். 

"நோய் இருந்துச்சுனா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு மச்சி..." - இல்லன்னா கொஞ்சம் டவுட்டுதான்...
இது வரைக்கும் இந்த கான்செப்ட அதிகமா யூஸ் பண்ண ஹீரோக்கள கொஞ்சம் பார்ப்போம்.

அமீர் கான்.
அமீர் கானுக்கு இந்த ஏரியாவுல கொஞ்சம் இஷ்டம் அதிகம்.
இந்த வகையறாவில் அவரோட முதல் படம்(??) தாரே சமீன் பர், இந்த படத்துல பிரதான பாத்திரத்துல வர்ற சிறுவனுக்கு "DYSLEXIA - டிஸ்லக்சியா"-னு ஒரு குறைபாடு. அதை மையமாக வைத்து நகரும் கதை. (ஆளாகப்பட்ட அத்வானியையே அழ வைத்த படம் இது).

படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டு...
போனஸா நேஷனல் அவார்ட் வேற.....

கஜினி அமீர் கான் தாரே ஜாமீன் பர் படத்துக்கு பிறகு நடித்த கஜினியும் இதே கான்செப்ட்தான். கஜினி படத்துக்கு நமக்கு அறிமுகமே தேவை இல்ல. இந்த படத்துல நாயகனுக்கு வித்தியாசமான Short Term Memory Loss-ங்கிற மறதி வியாதி.நம்ம கஜினி சூர்யா சூப்பராவே கலக்கி இருப்பார். ஆனாலும் மார்கெடிங் கிங் "ஆமீர்" ஒரு ரீமேக் படத்த வெச்சே பணத்த அள்ளு அள்ளுன்னு அள்ளிட்டார்...இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டு....

அமிதாப் பச்சன். அமிதாப் பச்சனோட சமீபத்திய படம் "பா". ப்ரோஜெரியா-ங்கற (PROGERIA) நோயால பாதிக்கப்படுற பதிமூன்று வயது சிறுவனா படத்துல வருவார். இந்த படத்துல ஒரு வித்தியாசம் படத்தோட டைரக்டர் நம்ம ஊர்க்காரர் பால்கி(எ) பாலகிருஷ்ணன். படம் வெளி வந்த பிறகு அமிதாபுக்கு ஏகப்பட்ட பாராட்டு, குறிப்பிட பட வேண்டய இன்னொரு விஷயம் மேக்-அப். இதுக்கு முன்னாடி இந்த கான்செப்ட யூஸ் பண்ணி ஹிட்டான இன்னொரு அமிதாப் படம், சஞ்சய் லீலா பன்சாலியோட 'ப்ளாக்'. ப்ளாக் படத்தின் பிரதான பாத்திரமா வரும் மிச்சேல் (ராணி முகர்ஜி) Alzheimer's disease (இத தமிழ்ல எப்படி எழுதுறதுன்னு தெரியலையே...) - ஆல் பாதிக்கப்பட்டவர். இந்த படத்துலயும் நம்ம(தமிழர்) பங்கு கொஞ்சம் இருக்குங்க. கேமரா மேன் ரவி கே சந்திரன் (ரொம்ப அருமையா காட்சிகள அமைத்து இருப்பார்) & சின்ன வயது ராணி முகர்ஜியாக வரும் ஆயிஷா (பாண்டிச்சேரி). இந்த படம் பயங்கரமான ஹிட் ஆகலைன்னாலும் இந்திய அளவுல இந்த படம் வாங்காத அவார்டே இல்லன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா அவார்டையும் வாங்கி குவிச்சிட்டாங்க.
இனி இந்த கான்செப்ட்ட யூஸ் பண்ணி பாலிவுட்ல வரப்போற படங்கள பார்ப்போம்.

மை நேம் இஸ் கான். 


எல்லாரும் யூஸ் பண்ணிட்டாங்க நம்ம மட்டும் ஏன் விட்டு வைக்கனும்னு நம்ம ஷாருக் காணும் களத்துல எறங்கிட்டார். இந்த படத்துல அவரோட வியாதிக்கு பெயர் ஆஸ்பெர்ஜர் சின்ட்ரோம் (Aspergers Syndrome). ஷாருக் படம்-ங்கிறதால இப்பவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

ஹ்ரிதிக் ரோஷன் மட்டும் இதுக்கு விதி விலக்கா என்ன...அவரோட அடுத்த படமான குஜ்ஜாரிஷ்-ல அவர் பாரப்லேஜியாவால் (Paraplegia) பாதிக்கப்பட்ட நபராக வருகிறார். இந்த படமும் சஞ்சய் லீலா பன்சாலி டைரக்ஷன்.

சரி பாலிவுட்ட விடுங்க...நம்மளோட கோலிவுட்ட பார்ப்போம்...

ஹீரோயிசத்துக்கு அதிக முக்கியத்துவம் குடுக்கிற இந்த கால கட்டத்தில ஹீரோவுக்கு நோய் இருக்குன்னு சொன்னா கண்டிப்பா படம் ஊத்திக்குங்க.... அதையும் மீறி வந்து வெற்றி பெற்ற ஒரே சமீபத்திய படம் கஜினி தான். காரணம் எடுக்கப்பட்ட விதம், நடிப்பு மற்றும் வித்தியாசமான கதையம்சம்.

என்னதான் இதுக்கு முன்னாடி வசந்த மாளிகை, வாழ்வே மாயம் போல சில படங்கள் வெற்றி பெற்றாலும் அதுல அப்போதைக்கு எல்லாருக்கும் பரவலா தெரிஞ்சுருந்த ப்ளட் கான்சர் நோயத்தான் படத்துல காண்பிச்சு இருப்பாங்க. அதனால அந்த படங்கள் ரிஜக்டட். ஆனாலும் படங்கள் சூப்பரோ சூப்பர் ஹிட்டு... 


கேளடி கண்மணி, இந்த படத்துல ஹீரோயினுக்கு ஒரு புது வித நோய் (Bilateral Renal Artery Stenosis) இருப்பது போல் காமிச்சு இருப்பார் டைரக்டர் வசந்த். படம் ஹிட்டு..
இந்த படங்களை தவிர வேற எதுவும் நினைவுக்கு வரலை மச்சான்ஸ். தமிழில் இது போன்ற படங்கள் மிகவும் கம்மி.

சரி இந்த கான்சப்டை நம்ம பெரிய(?) முன்னணி ஹீரோக்கள் செஞ்சா, படங்கள் ஓடுமா?
அஜீத்துக்கும், விஜய்க்கும் இது போன்று வித்தியாசமான நோய்கள் இருப்பது போல் காண்பித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ? படங்கள் ஓடுமா..? (அவர்கள் முதலில் நடிப்பார்களா என்பது வேற விஷயம்).பாலிவுட்டில் போட்டி போட்டு கொண்டு நோயாளியாக நடிக்கின்றார்களே ....?அஜீத்தும் விஜய்யும் ஒரு வேலை இந்த மாதிரி படங்கள் நடிக்க ஒத்துக்கிட்டா, என்ன கதை தேர்ந்து எடுப்பாங்க, என்ன நோய், என்ன பேர் வைப்பாங்க-னு ஒரு பெரிய தொடர் காமெடி பதிவே போடலாம்....
யாராவது எழுதுனீங்கனா நானும் சேர்ந்து சிரிப்பேன் மச்சான்ஸ்...!!!

வாழ்க சினிமா...
வாழ்க கோலிவுட்...
வாழ்க DISEASES....

Monday, December 21, 2009

க்யூப் CUBE (1997) - Canada
க்யூப் - 1997 ஆம் ஆண்டு வெளி வந்த கனடா நாட்டு த்ரில்லர் திரைப்படம்.

படத்தின் அறிமுக காட்சி.

க்யூப் வடிவில் ஒரு அறை. அந்த அறையின் ஆறு பக்கங்களிலும் சரியாக மத்தியில் ஆறு கதவுகள். நான்கு சுவர், உத்திரம் மற்றும் தரையில்.
ஒரு நபர், முதல் அறையிலிருந்து கதவை திறந்து இரண்டாவது அறைக்கு செல்கிறார்.
இரண்டாவது அறையில் அவர் இறங்கியவுடன், ஒளிக்கதிர்கள் அவரை ஊடுருவிச் செல்ல, உடல் முழுவதும் சதுர துண்டங்களாக உடைந்து விழுந்து இறக்கிறார்.

முதல் காட்சி.

அதே க்யூப் வடிவ அறைக்குள் இப்போது தொடர்பேயல்லாத ஏழு நபர்கள்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக மயக்கத்தில்/தூக்கத்தில் இருந்து எழுந்து ஒன்று கூடுகின்றனர். யாருக்கும் எப்போது இங்கே வந்தோம், எப்படி இங்கே வந்தோம் என்று நினைவில்லை.
ஒவ்வொருவரும் பேசி பார்த்து ஞாபகப் படுத்தி பார்த்தும் பயன் இல்லை.


சரி, எப்படியாவது வெளியே செல்ல வேண்டும் என்று ஏழு பேரும் ஒவ்வொரு, கதவாக திறந்து பயணிக்க,அப்பத்தான் அங்க ஒரு டுவிஸ்ட்டு வக்கிறாங்க...

எல்லா அறையும் நல்ல அறைகள் அல்ல (FLASHBACK : படத்தின் அறிமுக காட்சி), ஒரு சில அறைகள் மிகவும் ஆபத்தானவை.

ஒரு அறையில் உடலை கூறு போடும் லேசர் கதிர் வீச்சு, இன்னொரு அறையில் மனிதனனின் உடற் சூடை உணர்ந்து அமிலம் அடிக்கும் சென்சார், மற்றோர் அறையில் வெல்டிங் பைப்புகள்....என்று பலப் பல....

ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கிறது. அதோடு ஒவ்வொரு அறையின் கதவிலும் ஒரு ஒன்பது இலக்க எண்ணும் இருக்கிறது. நிறங்களின் கோட்பாடு என்ன, அந்த எண்கள் எதனை குறிக்கிறது என்று அனைத்தையும் கண்டறிந்து அந்த ஏழு பேர் வெளியேறி தப்பிகின்றனரா என்பதுதான் கதை.


படம் படு வித்தியாசமான முயற்சி. தொடக்கம் முதல் இறுதி வரை மொத்த படமும் அந்த க்யூபிர்க்குள்ளேயே தொடங்கி முடிந்து விடுகிறது. பிளாட்டும் நன்றாக இருக்கிறது. தப்பிக்க ஒவ்வொரு வழியாக கண்டுபிடிக்க அதற்க்கு தரும் லாஜிக்கான விளக்கங்களும், ஓகே !!!ஒரு முறை கண்டிப்பாக பார்க்ககூடிய வித்தியாசமான படம்.
அடுத்து இந்த படத்தின் அடுத்த பகுதி, அதாவது SEQUEL மச்சான்ஸ், அந்த படத்தின் பெயர் ஹைபர்க்யூப் (HYPERCUBE). இந்த படத்திலும் கிட்டத்தட்ட அதே கதை. அறிமுகமில்லாத சில நபர்கள், இந்த முறை கொஞ்சம் ஹைட்டெக்கான அதிக வெளிச்சமுள்ள அறைகள்.
முந்தைய படத்தை விட கொஞ்சம் காம்ப்ளெக்சான கதை. PARALLEL UNIVERSE  கான்செப்ட உள்ள புகுத்துறாங்க. நமக்குதான் புரிய கொஞ்சம் கஷ்டம்.
இந்த படமும் ஒரு வித்தியாசமான முயற்சி, ஆனால் க்யூப்- ஐ விட விறுவிறுப்பு மற்றவை எல்லாம் கொஞ்சம் கம்மி.


ஓகே மச்சான்ஸ், க்யூப் படத்த தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.
படத்தின் டிரைலர் இதோ.

Tuesday, December 15, 2009

தி அன்பார்ன் THE UNBORN (2009)
அழகா ஒரு பொண்ணு கீது மச்சான்.
(அது இன்னானே தெரியலப்பா, நான் பாக்குற படத்துல ஹீரோயின் எப்பவுமே டாப்.)
 பேரு இன்னாமே ??
ஆங்,  கேஸி.

கேஸிக்கு  ஒரு பிராப்ளம்.
அது இன்னாடா பிராப்ளம்.
டிபுக்கு டிபுக்குன்னு ஒரு ஆவி.
அது உள்ளார போறதுக்கு பாடியே கெடக்கலியாம்...
கேஸி பாடி ப்ரீயாதான கீதுன்னு டிபுக்கு கேஸியாண்ட டிரை பண்ண,
கேஸி உடனே உஷாராகி அந்த ஊரு சாமியாரு ஒருத்தர்க்கிட்ட போரார்பா...
சாமியார் பேய் ஓட்ட கெளம்புறார்...

அப்புறமா ?
டிபுக்குக்கும் சாமிக்கும் பைட்டோ பைட்டு...
அப்புறம் ?
......அதான் சொன்னனே பைட்டு, அப்புறம் படம் முடிஞ்சிடுது.
.
.
படம் முடிஞ்ச பின்னாடி கேஸி டார்லிங் கண்ணுலே நிக்குதுப்பா...(இன்னா பிகரு....இன்னா பிகரு...!!!!)
படம் பாருங்கோ உங்களுக்கும் கண்ணுலே நிக்கும்...

டிபுக்கு ஏன் கேஸிய தேர்ந்தேடுச்சு ?
அதுக்கு ஒரு சின்ன கிளைக்கதை..
அது இன்னாடா ?
தோடா.... எல்லாத்தையும் இங்கயே சொல்லிட்டா, அப்பறம் படத்துல என்னத்த பாக்குறது ?
அது கொஞ்சம் இன்டரஸ்டிங்கான பார்ட்டுப்பா...!!!

சின்ன பசங்க இத(அன்பார்ன்) பாக்க கூடாது...
ஏன் நைனா?
கேஸி கண்ணு, அப்பப்போ குஜால் டிரெஸ்-ல வருதுப்பா...அதுக்குதான்...!!!

சில ஸீன் நல்லா பயமுருத்தலாவும், டரியலாவும் இருக்குதுப்பா...
நடுவுல ஒரு தாத்தா நாலு காலுல வருவார் பாரு...அல்லு உட்ருச்சு..
ஒரு தபா பாக்கலாம்...(பாக்கும்போது நாலஞ்சு பேரு கூட இருந்தா இன்னும் நல்லது)...

பி.கு : இன்னாடா படத்தோட கதை, மொத்தத்தையும் சொல்லிட்டானேன்னு FEEL பண்ணாதீங்க...இது வெறும் அவுட்லைன்தான் படத்துல இன்னும் நெறைய நல்ல மேட்டர் கீது ...


இந்த படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.

அப்புறம் திஸ் இஸ் டிரைலர் மச்சான்ஸ்...!!!பார்த்துட்டு சொல்லுங்க மச்சான்ஸ்.


Thursday, December 10, 2009

ஹைக்கூக்கள் - பகுதி 6
விடிந்ததும் எரிந்தது 
இரவெல்லாம் கண்ணடித்த 
தெரு விளக்கு.
------------------------------------------------------------------------------------------------------------

தலையில் ஒரு குடம், 
இடையில் ஒரு குடம், 
அறுந்தது இரவல் செருப்பு.
 

------------------------------------------------------------------------------------------------------------
சூரியன் மறைந்ததும் 
கருப்பாய் விடிந்தது 
அவளின் விடியல் பொழுது.
------------------------------------------------------------------------------------------------------------இரவின் எச்சம், 
உதிர்ந்த மல்லிகைபூவும் 
கசங்கிய உடம்பும்.

------------------------------------------------------------------------------------------------------------


"சில்லறையா கொடு சார்" 
செய்வதறியாமல் திரும்பினேன், 
கட்டணக் கழிப்பறை. 
------------------------------------------------------------------------------------------------------------ 

வலைச்சரம் பதிவுல "மச்சான்ஸ்-அ" BEST NEWCOMER (ஜனரஞ்சகம்)- னு அறிமுகப்படுத்தி இருக்குற வசந்த் மச்சானுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நன்றி. 
-----------------------------------------------------------------------------------------------------------

           - இப்படிக்கு சிவன்.
இதற்கு முன் பதிவிட்ட ஹைக்கூக்களுக்கு இங்க க்ளிக்குங்க.
காதலைப்போலன்றி,
பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம்.
(உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்)

Monday, November 30, 2009

தி அன்இன்வைடட் - THE UNINVITED 2009.A TALE OF TWO SISTERS(Janghwa, Hongryeon)-ன்னு (KOREAN) வெளிவந்த திரைப்படத்தோட ஆங்கில ரீமேக்தான் தி அன்இன்வைடட் (THE UNINVITED).
படம் ஹாரர் வகையறா மச்சான்ஸ். ரெண்டு அழகான பொண்ணுங்க, தனிமையான குடும்பம், சில திகிலூட்டும் காட்சிகள், ஆங்காங்கே ரத்தம், நல்ல ட்விஸ்ட்டுள்ள முடிவு...இவ்வளவுதான் THE UNINVITED.

ஒரு குடும்பத்தை மையமாக வைத்து நடக்கும் திரைக்கதை. ஆன்னா, அலெக்ஸ் இரண்டு சகோதரிகள்(வயசு பொண்ணுங்க – Note this point your honour). ஸ்டீவன் அப்பா. ராச்சேல் அப்பாவின் புது மனைவி. ஆன்னாவின் மம்மி தீ விபத்தில் இறந்து விட, அந்த அதிர்ச்சியில் ஆன்னா மனநிலை பாதிக்கப்படுகிறார். தற்கொலை முயற்சி மேற்கொள்வதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவமனையிலிருந்து குணமடைந்து ஆன்னா வீடு திரும்புவதில் இருந்து தொடங்குது படம். அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் நல்ல பிகரு
மச்சான்ஸ். அதிலயும்  அக்காவாக வரும் அலெக்ஸ் ஒரு ஒரிஜினல் பீஸ் !!!  ராச்சேல், ஆயா வேலை செய்ய வந்து வூட்டு ஐயாவ மடக்கி வூட்டம்மா ஆகுற காரெக்டர். (மம்மியின் மறைவுக்கு பிறகு தான்). அதனாலேயே அலெக்சுக்கு ராச்செல்லை பிடிக்காமல் போய் விடுகிறது. ஆரம்பம் முதல் அவரை வெறுக்கிறார். ஆன்னா குணமாகி வந்தவுடன் அவளும் அக்கா அலெக்சுடன் சேர்ந்து கொள்கிறாள்.

என்னதான் ஆன்னா குணமாகி வந்தாலும், அவளுக்கு சில வினோத கனவுகள் வருகின்றன. மம்மி இறந்த கதை, அதை தவிர யாரோ இரண்டு சிறுவர்களுடன் வரும் ஒரு சிறுமி என வெவ்வேறு சிதறல்களாய் கனவு. கனவில் வரும் இந்த சிறுவர்களை பற்றி ஆராயும்போது ஆன்னாவும் அலெக்சும் ராச்செல்லை பற்றி சில உண்மைகளை தெரிந்து கொள்கின்றனர். 
ராச்சேல் ஏற்கனவே நர்ஸாக வேலை பார்த்த வீட்டில் இருந்த குழந்தைகள் தான் அவை. அவர்களுக்கு என்ன ஆனது, ராச்சல் இங்கு வந்தது ஏன், உண்மையை தெரிந்து கொண்ட ஆன்னாவும் அலெக்சும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் மீதி கதை.

அதுவும் அந்த கிளைமாக்ஸ் திருப்பம், பலே !!!
ஒரு நொடியில், டக்கென்று தடம் மாறிவிடும்..!!!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் எல்லாம் இல்லை மச்சான்ஸ், ஒன்னரை மணி நேரம் போரடிக்காமல் போகும் ஜஸ்ட் அனதர் ஹாரர் பிலிம். BUT WORTH SEEING. 
இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான A TALE OF TWO SISTERS இன்றளவும் அதிக வசூலை ஈட்டிய கொரிய திகில் திரைப்படங்களில் முதன்மையானது... முடிந்தால் அதையும் பார்த்து விடுங்கள்.

இந்த படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.
அப்புறம் திஸ் இஸ் டிரைலர் மச்சான்ஸ்...!!!

Thursday, November 26, 2009

பப்புவின் அட்ராசிட்டி - 2.....!!!!


மீண்டும் ஜொள்ளன் பப்பு.டீச்சர் : ஆறுல அஞ்சு போனா என்ன கெடைக்கும்...?

பப்பு : அஞ்சுவோட பாடி கெடைக்கும் மிஸ்...!!!

----------------------------------------------------------------------------------

தாத்தா : டே பப்பு, உங்க மிஸ் வர்றாங்க...ஓடி போய் ஒளிஞ்சுக்கோ....

பப்பு : அய்யோ தாத்தா..நீ போய் ஒளிஞ்சுக்கோ....நீ செத்துட்டேன்னு சொல்லித்தான் ஒரு வாரமா லீவு போட்டு வீட்டுல இருக்கேன்...

----------------------------------------------------------------------------------

பப்பு (எல்.கே.ஜி) : டே மச்சான், நேத்து என்ன ஒரு சப்ப பிகரு அடிச்சுட்டாடா....

ப்ரெண்டு : வாடா நம்ம போய் மிஸ்கிட்ட சொல்லிட்டு வரலாம்...

பப்பு (எல்.கே.ஜி) : அடிச்சதே அவதாண்டா....

----------------------------------------------------------------------------------

டீச்சர் : நான் இப்ப உனக்கு மூணு முயலும், நாளைக்கு ரெண்டு முயலும் கொடுத்தா, மொத்தம் உங்க வீட்ல எத்தன முயல் இருக்கும்...?

பப்பு : ( மூணு...ரெண்டு...mind calculation)

மொத்தம் ஆறு மிஸ்....

டீச்சர் : டே முட்டாள்...எப்படிடா ஆறு ? மூணும் ரெண்டும் அஞ்சு இல்ல...?

பப்பு : மூணும் ரெண்டும் அஞ்சுதான்..ஆனா எங்க வீட்லதான் ஏற்கனவே ஒரு முயல் இருக்கே...???

----------------------------------------------------------------------------------

பப்பு டபுள் ஆக்ஷன் :

பப்பு 1 : இந்த பாக்ஸ் உள்ள என்ன இருக்குன்னு கரெக்டா சொன்னீனா இதுல இருக்குற எல்லா லட்டும் உனக்கே தந்துடுவேன்...

பப்பு 2 : ஐய்யா........ஜிலேபிதான இருக்கு ???

----------------------------------------------------------------------------------

இங்கிலீஷ் GRAMMAR கிளாசில்..

பப்பு : “I am sleep with dad yesterday…”

டீச்சர் (அவன் தப்பை திருத்தும் பொருட்டு) : No..No..”I slept with dad yesterday”

பப்பு : ஓ...அப்ப நான் தூங்கிட்ட பிறகு நீங்க வந்தீங்களா மிஸ்...?

----------------------------------------------------------------------------------

பப்பு : அப்பா, நாளைக்கு ஒரு சின்ன பேரண்ட் டீச்சர் மீட்டிங் இருக்கு, ஸ்கூலுக்கு வந்திடுங்க.

அப்பா : அதென்னடா, சின்ன பேரண்ட் டீச்சர் மீட்டிங் ?

பப்பு : ஆமா, நீங்களும் ஹெட் மாஸ்டரும் மட்டும்தான்..!!!

----------------------------------------------------------------------------------

பப்பு (காலேஜில்)....

ப்ரொபசர் : “what is the prototype of alluvial in organic xenia ?”

பப்பு : ஜிம்பலக்கடி பம்பா...

ப்ரொபசர் : i don’t understand anything”

பப்பு : எனக்கும்தான்...!!!

----------------------------------------------------------------------------------

ஆன்ட்டி : ஐயோ....டி.வி. போச்சு, மிக்ஸி போச்சு, ஏ.சி போச்சு, எல்லாம் போச்சு....

பப்பு : உங்க வீட்ல வி.கார்ட் ஸ்டெபிலைசர் இல்லையா ?

ஆன்ட்டி : இல்லை..

பப்பு : நல்லவேளை இல்லை...இருந்திருந்தா அதுவும் போயிருக்கும்....


அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்......

                              - ஜொள்ளன் பப்பு.

Friday, November 20, 2009

பப்புவின் அட்ராசிட்டி...!!!!டீச்சர் : இந்த SENTANCE-அ தமிழ்ல TRANSLATE பண்ணு.. " I SAW A FILM YESTERDAY"
பப்பு : நான் நேத்து 'ஏ' படம் பார்த்தேன்.

----------------------------------------------------------------------------------------
டீச்சர் : What is the Chemical formula for Water ?
பப்பு : H2MgClNaClHNO3CaCO3Ca(OH)2SnTnHg NiHCl(COOH)O
டீச்சர் : என்னடா இது ?
பப்பு : இது கார்ப்பரேஷன் வாட்டர் மிஸ்.

----------------------------------------------------------------------------------------

டீச்சர் : பப்பு, முட்டை போடுற நாலு ஜீவனோட பேரு சொல்லு ?
பப்பு : SCIENCE மிஸ்,
          MATHS மிஸ், 
          ENGLISH மிஸ், 
          SOCIAL மிஸ்.

----------------------------------------------------------------------------------------

பஸ்ஸில்....

கண்டக்டர் : ஏண்டா படியில நிக்கிறியே, உங்க அப்பன் என்ன வாட்ச்மேனா?
பப்பு : நீ கூடத்தான் எப்ப பார்த்தாலும் சில்லறை கொடுன்னு கேக்குற, உங்க அப்பன் என்ன பிச்சைக்காரனா ?

----------------------------------------------------------------------------------------

பப்புவும் அவனோட ப்ரெண்டும் காட்டுக்கு போறாங்க...திடீர்னு அவங்க முன்னாடி ஒரு புலி வந்துடுது....
உடனே ப்ரெண்டு புலியோட கண்ணுல மண்ணை தூவிடுறான்.

ப்ரெண்டு : பப்பு ஓடிடு...

பப்பு : அஸ்கு புஸ்கு, நான் ஏன் ஓடணும் ? நீதான கண்ணுல மண்ணு போட்ட..

----------------------------------------------------------------------------------------

பப்பு : டாக்டர் இந்த காயத்துக்கு STITCHES போட எவ்வளவு ஆகும் ?
டாக்டர் : 1200 ருபீஸ்.
பப்பு : டாக்டர் எம்ப்ராய்டரி எல்லாம் போட வேணாம், வெறும் தையல் மட்டும் போதும்.

----------------------------------------------------------------------------------------

பப்பு அவனோட எக்ஸாம் பேப்பர்ல...
||||||||||||| ||||||| |||||
|||||| ||||||||||||||| ||||
|||||||||||||||| ||||||||||||||

இந்த மாதிரி கோடு வரஞ்சு வச்சி, கீழ எழுதினான்...
" SCRATCH THE BAR CODE GENTLY TO READ THE ANSWER"

----------------------------------------------------------------------------------------

பப்புவோட வீட்டுக்கு விருந்தாளியா ஒரு அழகான பொண்ணு வருது.
மறுநாள் அந்த பொண்ணு குளிக்கும்போது பப்பு ஒளிஞ்சு நின்னு பாக்குறத பப்புவோட அம்மா பாத்துடுறாங்க...

பப்பு அம்மா: டே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா....?

பப்பு : அடப்போமா, நான் அந்த பொண்ணு நம்ம சோப்ப யூஸ் பண்றாளான்னு பாத்துட்டு இருக்கேன்....


இது சும்மா....FIRST பார்ட் தான் மச்சிஸ் ... இனி அடிக்கடி பார்ப்போம்...
- இப்படிக்கு ஜொள்ளன் பப்பு.


Wednesday, November 18, 2009

ஹைக்கூக்கள் - பகுதி 5


BACHELORS சமையல்.


தனியாய் சமைக்கும் போது
நினைவுக்கு வந்து  செல்லும்,
கூட்டாஞ் சோறு.
------------------------------------------------------------------------------------------------------------மெய்ன் ரோட்டில் விபத்து,
விரைந்து சென்றது ஆம்புலான்சு,
சைக்கிள்காரனை இடித்து விட்டு !!!
 ------------------------------------------------------------------------------------------------------------விரலை வைத்தவுடன் 
வேகவேகமாய் சூப்பியது,
பசியில் குழந்தை.
------------------------------------------------------------------------------------------------------------மங்களூர் மெயில்தான் 
இவர்களின் சேவல்,
தண்டவாள கிராமங்கள். 

------------------------------------------------------------------------------------------------------------


டிவியில் கணிப்பொறி, 
உபயம் - உள்ளூர்
கேபிள் சானல்.
------------------------------------------------------------------------------------------------------------


ஆதரவற்றோர் இல்லத்தில் 
காக்கா கரைகிறது - பாவம்
இன்று யார் வருகையோ? 

------------------------------------------------------------------------------------------------------------
(இது சும்மாங்காட்டி காமெடிக்கு மட்டும்...)


வெளிநாட்டு கணவர்
திரும்பி வந்தார் - குழந்தை,
ஐ......., சிங்கப்பூர் அப்பா...!!!

------------------------------------------------------------------------------------------------------------

இது மச்சான்ஸ் கமெண்ட்...!!!ரிசஷன்(Recession) நேரத்தில் நண்பர் ஒருவரிடம். 

"என்ன மச்சான் வேலை எல்லாம் எப்படி போகுது" 

"அதை ஏன்டா கேக்குற, டெய்லி காலேல ஷூவும் டையும் மாட்டிக்கிட்டு ப்ரௌஸிங் செண்டர்க்கு போயிட்டு வர்றா மாதிரியே இருக்கு..."


            - இப்படிக்கு சிவன்.
இதற்கு முன் பதிவிட்ட ஹைக்கூக்களுக்கு இங்க க்ளிக்குங்க.
காதலைப்போலன்றி,
பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம்.
(உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்)

Monday, November 16, 2009

தி அதர்ஸ் - The Others (2001)


நாம் வாழும் வீட்டில், நம் கண்ணுக்கு தெரியாமல் அமானுஷ்யமாக மற்றொரு குடும்பமும்வாழ்ந்து வந்தால்,,,,? அதுவும் அவர்கள் அனைவரும் இறந்தவராக இருப்பின்....? பதில் ...? - THE OTHERS.

ரத்தம், கொலை, கொடூரமான மேக்கப், அபத்தமான நியூடிட்டி, துரத்தும் மர்மப்பேய், பெருத்த*** பெண்கள் இது எதுவுமே இல்லாமல் நம்மை மிரட்டும் த்ரில்லர் திரைப்படம் தான், அதர்ஸ்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்குவதாய் கதை. வழக்கமான பேய்ப்படங்கள் போல் அல்லாமல், வெறும் அமைதியை வைத்தே மிரட்டுகிறார் டைரக்டர் Alejandro Amenábar. முழுப்படமும் ஒரே வீட்டுக்குள் நடந்து முடிகிறது. மொத்தமே ஆறு கேரக்டர்ஸ் தான். 
பிரதான கேரக்டர் கிரேசாக, நிகோல் கிட்மேன். போருக்கு சென்று திரும்பாத கணவன் சார்லஸ்.
நிகோலஸ், ஆன்னா என்று இரு குழந்தைகள். இவர்கள் வசிக்க ஐம்பது அறைகள் கொண்ட பெரிய வீடு.

தன் வீட்டில் வேலை செய்து வந்த பணியாட்கள் அனைவரும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போக, புதிதாக வரும் மூன்று பணியாட்களுக்கு வீட்டை சுத்தி காண்பிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது படம். ஒவ்வொரு அறைக்கும் செல்லும் முன் முன்னிருந்த அறையை பூட்டிவிடுகிறார் கிரேஸ். காரணம் அவளின் இரு குழந்தைகள்...!!!

கிரேசின் குழந்தைகளுக்கு ஒளி (வெளிச்சம்) என்றால் அலர்ஜி, எனவே பகல் வேளைகளில் அவர்கள் இருக்கும் அறைகளின் திரைகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். அறைகள் அனைத்தும் பூட்டபட்டே இருக்க வேண்டும்.  இதனாலேயே படம் முழுவதும் விளக்கு வெளிச்சத்திலேயே நகர்கிறது. ஆரம்பம் முதலே கிரேசின் காரக்டர் சற்று வித்தியாசத்துடனே கையாளப்படுகிறது. அதே போல் அந்த மூன்று பணியாட்கள், சற்று மர்மத்துடனே நடமாடும் ஆட்கள்.
முதல் இருவது நிமிடங்கள் படம் வெகு அமைதி. ஆன்னா கிரேஸிடம் இந்த வீட்டில் நம்மை தவிர இன்னும் சிலர் இருப்பதாக கூறும்போதுதான் படம் சற்று விறுவிறுப்புடன் தொடங்குகிறது. விக்டர் என்ற சிறுவனை தான் அடிக்கடி பார்ப்பதாகவும் அவனுடன் பேசுவதாகவும் சொல்லும் ஆன்னாவை நம்ப மறுக்கிறாள் கிரேஸ். (என்ன இந்த காட்சிகள் சிக்ஸ்த் சென்ஸ் படத்தை நினைவூட்டுக்கிறது). பொய் சொல்வதாக தண்டிக்கவும் படுகிறாள் ஆன்னா. விக்டர் அவ்வப்போது ஆன்னாவின் கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கிறான். இது அவனுடைய வீடு, நீங்கள் இந்த வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் தெரியப்படுத்துகிறான்.

முதலில் ஆன்னா சொல்லும் கதைகளை நம்ப மறுக்கிறார் கிரேஸ், ஆனால் அதற்க்கு பிறகு வரும் நிகழ்வுகளால், கிரேசும் ஆன்னா சொல்வது உண்மை தானோ என நம்ப தொடங்குகிறாள். ( குழந்தையின் அழுகுரல், பியானோ வாசிப்பது இந்த இரு காட்சிகளும், அற்புதம்). காமெரா படத்தின் உயிர் நாடி என்றே சொல்லலாம்.

ஆன்னா தான் இவர்களை தினமும் இந்த வீட்டுக்குள் பார்ப்பதாக நான்கு உருவங்களை ஒரு தாளில் வரைந்து காண்பிக்கிறாள். ஒரு அப்பா,அம்மா மற்றும் சிறுவன் விக்டர். இவர்களுடன் சூநியிக்காரி போல் இருக்கும் ஒரு கிழவி. யார் அவர்கள் என்ற ஆராய்ச்சியிலும் சிறிது நேரம் இறங்குகிறார் கிரேஸ்.
யார் இந்த நான்கு பேர் ? மூன்று பணியாகளின் மர்மங்கள் ? கிரசின் வித்தியாசமான கேரக்டரிசம் எதனால்...? - இவைதான் மீதிப் படம்.


படம் நகர நகர, எப்படி முடியுமோ என்று எதிர்பார்ப்பு கடைசி நிமிடங்கள் வரை கூடிக்கொண்டே தான் போகிறது. கடைசியில் படத்தின் முடிவு படு வித்தியாசம். குறிப்பிட பட வேண்டிய விஷயங்கள் அந்த தனி வீடு, அது அமைந்துள்ள பனி மூட்ட லொகேஷன், குட்டி சிறுவன் நிகொலசின் அற்புதமான நடிப்பு etc etc.

அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்...!!!

படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.படத்தின் டிரைலர் இதோ.


Related Posts Plugin for WordPress, Blogger...