Monday, October 18, 2010

பேட்டில் ராயேல் Battle Royale (バトル・ロワイアル Batoru Rowaiaru - 2000
குடும்பம் குட்டி குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டிய ஒரு உன்னத காவியம், இந்த ஜப்பானிய திரைப்படம். உங்களுக்கு தக்காளி சாஸ் பிடிக்குமா? இந்த படத்தில் பல காட்சிகள் அப்ப உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்..

ஓகே ஓகே கொஞ்சம் சீரியஸா பேசலாம். :)

பேட்டில் ராயேல்(Battle Royale) 2000-ம் வருடம் ஜப்பானில் வெளிவந்த ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். படத்தோட கதையை பாக்குறதுக்கு முன்னாடி, இந்த படத்த பத்தின பிரபல விமர்ச்சகர்களோட கருத்தை பார்ப்போம்.

"This is a heart-stopping action film, teaching us the worthy lessons of discipline, teamwork, and determination, but wrapping them up in a deliberately provocative, shockingly violent package. ""

படத்த பத்தி ஒரு போர்த்துகீசிய விமர்சகர் இன்னா சொல்றார்னா,

"Os intertítulos e o excesso de flashbacks comprometem um pouco o ritmo do filme, mas, de modo geral, a ação é muito bem conduzida e os personagens, satisfatoriamente desenvolvidos" - (ஒன்னும் புரியலனா free வுட்ருங்க, ஏன்னா எனக்கும் ஒன்னும் புரியல..)ரத்தத்திற்கு பயப்படுபவர்கள், வீக் பாடிஸ், இளகிய நெஞ்சம் படைத்தவர்கள், குழந்தைகளை விரும்புவர்கள் - மச்சான்ஸ், இந்த படமும் பதிவும் உங்களுக்கானது அல்ல, நம்ம அடுத்த பதிவுல பாப்போம், வருகைக்கு நன்றி.
மத்த மச்சான்ஸ் பாலோ மீ..

ஒரு நூற்றாண்டின் விடியலில் ஜப்பான் தேசத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படுகிறது, பெரியவர்களுக்கு வருங்கால சங்கதியினரின் மீதான நம்பிக்கையே போய்விட, அவர்களை ஒழுங்கு படுத்தும் பொருட்டு புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுகின்றனர். அதுதான் Millenium Education Reform (அ) B .R ACT - Battle Royale Act.


அது என்ன அப்படி ஸ்பெஷல் சட்டம் என்றால், ஏதோ ஒரு பள்ளியின், ஏதோ ஒரு வகுப்பு மாணவர்களை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும், அவர்கள் அனைவரும் ஆள் அரவம் இல்லாத ஒரு தனி தீவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கே அவர்கள் ஒரு கேம் விளையாட வேண்டும். "ப்பூ அவ்வளவுதானா..." என்பவர்கள் பின் வரும் விளையாட்டின் விதிகளை படிக்கவும்.

--இந்த விளையாட்டு மூன்று நாட்கள் நடைபெறும், தீவுக்குள் எங்கு வேண்டுமென்றாலும் போகலாம்.
--இந்த விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் மற்றவர்களை கொல்ல வேண்டும், நீங்கள் படித்தது சரிதான், மற்ற அனைவரையும் கொல்ல வேண்டும்.கடைசியில் இருக்கும் ஒருவரே வெற்றி பெற்றவர், அவர் மட்டும் வீட்டுக்கு போகலாம்.
--ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மீதம் இருந்தால் அனைவரும் கொல்லப்படுவர்.
--ஒவ்வொருவர் கழுத்திலும் ஒரு உலோக பட்டை உண்டு, அதை வைத்து அவரை ரிமோட் மூலம் கொல்ல முடியும்.
--முழு தீவும் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது, அவ்வப்போது ஒரு பகுதி டேஞ்சர் ஜோன் என்று அறிவிக்கப்படும், அப்போது அந்த பகுதிகளில் இருப்பவரின் காலர் பட்டைமூலம்  அவர் கொல்லப்படுவார்.
--ஒவ்வொருவருக்கும் ஒரு பை கொடுக்கப்படும். அதில் கொஞ்சம் உணவு, கொஞ்சம் தண்ணீர், தீவின் வரைபடம் மற்றும் ஏதேனும் ஒரு ஆயுதம் இருக்கும்.ஷுயா நானாஹரா நண்பர்களுடன் (ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ) பள்ளி மூலம், சுற்றுலா செல்ல, அனைவருக்கும் மயக்க வாயு செலுத்தி, அரசாங்கம் அவர்களை அந்த தனி தீவில் சேர்க்கிறது. அனைவரும் மயக்கம் தெளிந்து எந்திரிக்க, அனைவரின் கழுத்திலும் உலோக பட்டை அணிவிக்கப்படிருக்கிறது. ஒருவருக்கும் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவர்களின் பழைய ஆசிரியர் ஒருவர் உள்ளே நுழைகிறார். இவர்தான் இந்த கேம்ஷோவை நடத்த போகிறவர்.

நானாஹரா- வின் வகுப்பு தோழர்கள் நாற்பது பேர், அத்துடன் மாற்றம் ஆகி வந்த வேறு பள்ளி மாணவர்கள் இருவர் என்று மொத்தம் நாற்பத்தி இரண்டு பேர் இந்த கேம் ஷோவிற்கு வருகின்றனர். அனைவருக்கும் விதிகள்
சொல்லப்பட்டு, ஆளுக்கு ஒரு பை கொடுத்து அனுப்பி வைக்கிறார் ஆசிரியர். விதிகள் சொல்லும்போதே ஒரு பெண் எதிர்த்து பேச, அவள் அங்கேயே கொல்லப்படுகிறாள். அதே போல் கழுத்து பட்டையின் செயல்பாட்டினை
விளக்க, ஒரு மாணவனின் தலையையும் வெடிக்க வைக்கிறார் ஆசிரியர்.

மீதம் உள்ள நாற்பது பெரும் , வெளியே செல்ல, மூன்று நாட்கள் என்ன நடக்கிறது, எத்தனை பேர் கொல்லப்படுகின்றனர், கடைசியில் யார் ஜெயித்தார் என்பதே கதை.ஒரு சிலர் மற்றவர் அனைவரையும் கொன்று விட வேண்டும் என துடிக்க, ஒரு சிலர் யாரையும் கொல்லாமல் மூன்று நாட்களை உயிருடன் கடக்க முயற்ச்சி செய்கின்றனர், படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை,ஸ்பெஷல் எபக்ட்ஸ் மற்றும் இயக்குனர். படத்தில் வரும் லைட் ஹவுஸ் காட்சி ஒன்றே இதற்கு போதும். மனுஷன் அந்த சீன்ல பூந்து விளையாடி இருப்பார். ஒருவரை மட்டுமே கதை மையம் கொல்லாமல் நாற்பது பேரையும், அவர்களின் செயல்களையும் காண்பிக்க திரைக்கதை முயற்சி செய்திருக்கிறது.

ஒரு அல்டிமேட் த்ரில்லர் படம் வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

படத்தின் ட்ரைலர் இதோ.


19 comments:

Chitra said...

good review.

asker said...

நான் சென்னையில் உலக சினிமா dvd கடை வைத்துள்ளேன்.
என்னிடம் உள்ள திரைப்படங்களின் தொகுப்பு . dvdworld65.

எஸ்.கே said...

கிட்டதட்ட condemned மாதிரியா? நல்லாயிருக்குங்க விமர்சனம்!

கருந்தேள் கண்ணாயிரம் said...

என்னாது ரத்தமா? அய்ய்யா !! அப்ப புடிக்குறேன் இந்தப் படத்தை :-)

அருண். இரா said...

நல்லா இருக்கு சிவன் !
அந்த போர்த்துகீசிய விமர்சகர் சொன்னது சரி தான் ...ஹ ஆஹா அஹ
ஆனாலும் இவ்ளோ வில்லத்தனம் கூடாது மாப்ளே !

தியாவின் பேனா said...

ம்...
நல்ல பதிவு

சீமான்கனி said...

பயங்கர விமர்சனம் மச்சான் படிக்கும்போதே ரத்தம் உறையுது...சப் டைட்டில் வருதா???..லிங்க்...ப்ளீஸ்...

Anonymous said...

dai mama kalakitta po.. i am waiting foe samy kan kutthings

Prem said...

The Condemned - இந்த ஜப்பான் படத்தோட காப்பியா?... அப்பா தலை சுத்துது... நம்ம ஊர்ல மட்டும் தான் இப்டி-னு நெனைச்சிட்டு இருந்தேன் :)

சிவன். said...

@Chitra _ Thanks Chitra Madam...

சிவன். said...

@எஸ்.கே - ஆமாங்க கிட்டத்தட்ட CONDEMNED மாதிரிதான்...என்ன அங்க கிரிமினல்ஸ் இங்க பள்ளி மாணவர்கள்..இந்த படத்துல ஆக்ஷனும் கம்மிதான்...

சிவன். said...

@ராஜேஷ் - அவரா நீங்க...???? அப்படியே நீங்க suicide club படத்தையும் பாருங்க, அதுல முதல் காட்சியிலேயே ரத்த ஆறு ஓடும்..

சிவன். said...

வாங்க மழை காதலரே...ஓட்டுனது போதும்...உங்க அடுத்த பதிவதான் ஆவலோடு எதிர் பார்க்குறோம்...

சிவன். said...

நன்றி தியா.....

சிவன். said...

மாப்பி இந்த லின்க்ல டவுன்லோட் பண்ணிக்கங்க, சப்-டைட்டில் அதிலேயே உண்டு...

http://thepiratebay.org/torrent/3586044

சிவன். said...

@பிரேம் - இந்த கொடுமை எல்லா ஊர்லயும் இருக்குங்க.. :)

வெடிகுண்டு வெங்கட் said...

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

சசிகுமார் said...

NICE

Prasanna Rajan said...

ஒரு நடு இராத்திரி இந்த படம் ட்ரெய்லரை என் நண்பன் காட்டுனான். மொத்த தூக்கமும் போச்சு. மத்தபடி நல்ல பதிவு பாஸ். என்னை மாதிரி இளகுன மனசு உள்ள ஆட்கள் கண்ணை பொத்திகிட்டு பார்க்க வேண்டிய படம்...

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...