Tuesday, February 2, 2010

டாப் 5 - போலீஸ் படங்கள்.

வணக்கம் மச்சான்ஸ்…மச்சான்ஸ் ப்ளாகுக்கு நடுவுல ஒரு சின்ன ப்ரேக்கு விழுந்து போச்சு… கொஞ்சம் வேலை அதிகம்ஆயிடுச்சு  (அப்படின்னு சொன்னா நம்பவா  போறீங்க…) சரி அத விடுங்க மேட்டருக்கு வருவோம்…நமக்கு பிடிச்ச சில நல்ல திரைப்படங்கள வரிசைப்படுத்தினா என்னன்னு தோணிச்சு (இதுவல்லவா ஐடியா ???)…
எதில இருந்து ஆரம்பிக்கலாம்னு யோசிச்ச உடனே மொதல்ல நெனப்புக்கு வந்தது போலீஸ் படங்கள்தான்…நம்ம தமிழ் திரை உலகத்துல இது வரைக்கும் எத்தனையோ திரைப்படங்கள் கதாநாயகனை போலீஸ் ஆப்பிசராக  வைத்து வெளி வந்திருக்கு… சில படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டு… கொஞ்சம் சில சுமார் …மற்றவை சூப்பர் சொதப்பல்ஸ்....

படம் எப்படி இருந்தாலும் சரி, படத்துல நம்ம ஹீரோவுக்கு செம கெத்து கொடுத்து இருப்பாங்க..அப்படியே கொஞ்சம் ஸ்டைல், கம்பீரம், ஒரு லவ்வு  etc etc..
இப்படிப்பட்ட அற்புத திரைப்படங்களில் இருந்து சிறந்த ஐந்தை தேர்ந்து எடுப்பதுதான் இந்த பதிவின் முயற்சி...

(மச்சான்ஸ் இது என் சொந்த கருத்து தான்...தைரியமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம்….)

இந்த படங்களுக்கு எல்லாம் அறிமுகமே தேவை இல்லை...அதனால படங்களோட பேர் மட்டும்.  :)

5. சாமி :
மச்சான்ஸ் பதிவுல மசாலா படத்துக்கு எடமில்லனா எப்பூடி...???
அதனால அஞ்சாவது எடத்துல நம்ம பொரிக்கி போலீஸ் "சாமி".
நடிகர்கள் : விக்ரம்,த்ரிஷா ,விவேக் ,கோட்டா சீனிவாசராவ்.
டைரக்ஷன் : ஹரி.

குறிப்பிடப்பட வேண்டிய வசனம் : “நான் போலிஸ் இல்லடா பொரிக்கி”

4. மூன்று முகம் :

நாலாவது எடத்துல நம்ம பெரிய தலையோட படம்....எத்தனையோ போலீஸ் படம் வந்தாலும் இன்னொரு அலெக்ஸ் பாண்டிய யாராலையும் ஸ்க்ரீன்ல கொண்டு வர முடியாதுங்க.
நடிகர்கள் : ரஜினி, ரஜினி, ரஜினி, செந்தாமரை, ராதிகா.
டைரக்ஷன் : ஜகன்னாதன்.
வசனம் : சுஜாதா.

குறிப்பிடப்பட வேண்டிய வசனம் :
ஏகாம்பரம்: "ஏகாம்பரம்னு சொன்னா, வயித்துல இருக்கிற குழந்தை கூட வாயை மூடும்"
அலெக்ஸ் பாண்டியன்: "அதே குழந்தைகிட்டே அலெக்ஸ் பாண்டியன்னு சொன்னா, இன்னொரு கையாலே அவங்க அம்மா வாயையும் சேர்த்து மூடும்"

அலெக்ஸ் பாண்டியனுக்கு 1982-ம் வருடம் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

3. காக்க காக்க :


ரொம்ப நாள் கழிச்சு படு ஸ்டைலிஷா வந்த ஒரு போலீஸ் படம். கொஞ்சம் டார்க் தீம், வில்லனுக்கும் ஒரு கெத்து-ன்னு வந்து பட்டைய கெளப்புன படம்.
நடிகர்கள் : சூர்யா, ஜோதிகா, ஜீவன்.
டைரக்ஷன் : கெளதம்.

குறிப்பிடப்பட வேண்டிய வசனம் : “நாங்க மொத்தம் நாலு பேர் , எங்களுக்கு பயமே கிடையாது “

2. சத்ரியன் :


நம்ம லிஸ்ட்டுல ரெண்டாவது இடம், புரட்சி கலைஞரின் சத்ரியன்.
இது என்னோடFavourite  படம் மச்சான்ஸ்...ரமணாவின் முன்னோடி...முதல் பாதி வெகு அமைதி...அதே ப்ளாஸ்பேக்குல விஜயகாந்த் வரும்போது பொறி பறக்கும்....
பன்னீர் செல்வமும் சரி அருமை நாயகமும் சரி, ரெண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சுருப்பாங்க...இது படம்.

நடிகர்கள் : விஜயகாந்த், ரேவதி, பானுப்ரியா, திலகன்.
டைரக்ஷன் : கே.சுபாஷ்.
தயாரிப்பு, கதை, திரைக்கதை : மணிரத்னம்.
குறிப்பிடப்பட வேண்டிய வசனம் : “ சத்ரியனுக்கு சாவே இல்லடா …”

1. குருதிப் புனல் :


முதல் இடம், உலக நாயகனின் குருதிப் புனல்.
நம்ம போலீஸ் நாயகன் அர்ஜுனும் இணைந்த திரைப்படம்.
போலீஸ் மேல ஒரு தனி மரியாதையை எற்ப்படுத்துன படம்.
அதுவும் அந்த இறுதி காட்சிகள் வாய்ப்பே இல்லை.

நடிகர்கள் : கமலஹாசன், அர்ஜுன், நாசர், கௌதமி, கீதா.
டைரக்ஷன் : பி.சி.ஸ்ரீராம்.

குறிப்பிடப்பட வேண்டிய வசனம் : ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ப்ரேக்கிங் பாய்ண்ட் இருக்கும்'
(கொசுறு : துரோகால் என்ற இந்தி படத்தின் ரீமேக்தான் குருதிப்புனல் )

------------------------------------------------------------------------
இன்னும் நிறைய நல்ல போலீஸ் திரைப்படங்கள் இருக்கு...
சரி நம்ம லிஸ்ட்டுல ஜஸ்ட்ட தவறவிட்ட படங்கள் ….
வால்டர் வெற்றிவேல், கேப்டன் பிரபாகரன், வேட்டையாடு விளையாடு, மாநகர காவல், புலன் விசாரணை, அஞ்சாதே, etc.
ஏதாவது விட்டு இருந்தன்னா சொல்லுங்க மச்சான்ஸ்...

மேல சொன்ன அஞ்சு படத்துல ஏதாவது பார்க்காம இருந்தீங்கனா உடனே வேலை வெட்டிய விட்டுட்டு போய் பாருங்க :)Related Posts Plugin for WordPress, Blogger...