Monday, November 30, 2009

தி அன்இன்வைடட் - THE UNINVITED 2009.A TALE OF TWO SISTERS(Janghwa, Hongryeon)-ன்னு (KOREAN) வெளிவந்த திரைப்படத்தோட ஆங்கில ரீமேக்தான் தி அன்இன்வைடட் (THE UNINVITED).
படம் ஹாரர் வகையறா மச்சான்ஸ். ரெண்டு அழகான பொண்ணுங்க, தனிமையான குடும்பம், சில திகிலூட்டும் காட்சிகள், ஆங்காங்கே ரத்தம், நல்ல ட்விஸ்ட்டுள்ள முடிவு...இவ்வளவுதான் THE UNINVITED.

ஒரு குடும்பத்தை மையமாக வைத்து நடக்கும் திரைக்கதை. ஆன்னா, அலெக்ஸ் இரண்டு சகோதரிகள்(வயசு பொண்ணுங்க – Note this point your honour). ஸ்டீவன் அப்பா. ராச்சேல் அப்பாவின் புது மனைவி. ஆன்னாவின் மம்மி தீ விபத்தில் இறந்து விட, அந்த அதிர்ச்சியில் ஆன்னா மனநிலை பாதிக்கப்படுகிறார். தற்கொலை முயற்சி மேற்கொள்வதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவமனையிலிருந்து குணமடைந்து ஆன்னா வீடு திரும்புவதில் இருந்து தொடங்குது படம். அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் நல்ல பிகரு
மச்சான்ஸ். அதிலயும்  அக்காவாக வரும் அலெக்ஸ் ஒரு ஒரிஜினல் பீஸ் !!!  ராச்சேல், ஆயா வேலை செய்ய வந்து வூட்டு ஐயாவ மடக்கி வூட்டம்மா ஆகுற காரெக்டர். (மம்மியின் மறைவுக்கு பிறகு தான்). அதனாலேயே அலெக்சுக்கு ராச்செல்லை பிடிக்காமல் போய் விடுகிறது. ஆரம்பம் முதல் அவரை வெறுக்கிறார். ஆன்னா குணமாகி வந்தவுடன் அவளும் அக்கா அலெக்சுடன் சேர்ந்து கொள்கிறாள்.

என்னதான் ஆன்னா குணமாகி வந்தாலும், அவளுக்கு சில வினோத கனவுகள் வருகின்றன. மம்மி இறந்த கதை, அதை தவிர யாரோ இரண்டு சிறுவர்களுடன் வரும் ஒரு சிறுமி என வெவ்வேறு சிதறல்களாய் கனவு. கனவில் வரும் இந்த சிறுவர்களை பற்றி ஆராயும்போது ஆன்னாவும் அலெக்சும் ராச்செல்லை பற்றி சில உண்மைகளை தெரிந்து கொள்கின்றனர். 
ராச்சேல் ஏற்கனவே நர்ஸாக வேலை பார்த்த வீட்டில் இருந்த குழந்தைகள் தான் அவை. அவர்களுக்கு என்ன ஆனது, ராச்சல் இங்கு வந்தது ஏன், உண்மையை தெரிந்து கொண்ட ஆன்னாவும் அலெக்சும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் மீதி கதை.

அதுவும் அந்த கிளைமாக்ஸ் திருப்பம், பலே !!!
ஒரு நொடியில், டக்கென்று தடம் மாறிவிடும்..!!!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் எல்லாம் இல்லை மச்சான்ஸ், ஒன்னரை மணி நேரம் போரடிக்காமல் போகும் ஜஸ்ட் அனதர் ஹாரர் பிலிம். BUT WORTH SEEING. 
இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான A TALE OF TWO SISTERS இன்றளவும் அதிக வசூலை ஈட்டிய கொரிய திகில் திரைப்படங்களில் முதன்மையானது... முடிந்தால் அதையும் பார்த்து விடுங்கள்.

இந்த படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.
அப்புறம் திஸ் இஸ் டிரைலர் மச்சான்ஸ்...!!!

Thursday, November 26, 2009

பப்புவின் அட்ராசிட்டி - 2.....!!!!


மீண்டும் ஜொள்ளன் பப்பு.டீச்சர் : ஆறுல அஞ்சு போனா என்ன கெடைக்கும்...?

பப்பு : அஞ்சுவோட பாடி கெடைக்கும் மிஸ்...!!!

----------------------------------------------------------------------------------

தாத்தா : டே பப்பு, உங்க மிஸ் வர்றாங்க...ஓடி போய் ஒளிஞ்சுக்கோ....

பப்பு : அய்யோ தாத்தா..நீ போய் ஒளிஞ்சுக்கோ....நீ செத்துட்டேன்னு சொல்லித்தான் ஒரு வாரமா லீவு போட்டு வீட்டுல இருக்கேன்...

----------------------------------------------------------------------------------

பப்பு (எல்.கே.ஜி) : டே மச்சான், நேத்து என்ன ஒரு சப்ப பிகரு அடிச்சுட்டாடா....

ப்ரெண்டு : வாடா நம்ம போய் மிஸ்கிட்ட சொல்லிட்டு வரலாம்...

பப்பு (எல்.கே.ஜி) : அடிச்சதே அவதாண்டா....

----------------------------------------------------------------------------------

டீச்சர் : நான் இப்ப உனக்கு மூணு முயலும், நாளைக்கு ரெண்டு முயலும் கொடுத்தா, மொத்தம் உங்க வீட்ல எத்தன முயல் இருக்கும்...?

பப்பு : ( மூணு...ரெண்டு...mind calculation)

மொத்தம் ஆறு மிஸ்....

டீச்சர் : டே முட்டாள்...எப்படிடா ஆறு ? மூணும் ரெண்டும் அஞ்சு இல்ல...?

பப்பு : மூணும் ரெண்டும் அஞ்சுதான்..ஆனா எங்க வீட்லதான் ஏற்கனவே ஒரு முயல் இருக்கே...???

----------------------------------------------------------------------------------

பப்பு டபுள் ஆக்ஷன் :

பப்பு 1 : இந்த பாக்ஸ் உள்ள என்ன இருக்குன்னு கரெக்டா சொன்னீனா இதுல இருக்குற எல்லா லட்டும் உனக்கே தந்துடுவேன்...

பப்பு 2 : ஐய்யா........ஜிலேபிதான இருக்கு ???

----------------------------------------------------------------------------------

இங்கிலீஷ் GRAMMAR கிளாசில்..

பப்பு : “I am sleep with dad yesterday…”

டீச்சர் (அவன் தப்பை திருத்தும் பொருட்டு) : No..No..”I slept with dad yesterday”

பப்பு : ஓ...அப்ப நான் தூங்கிட்ட பிறகு நீங்க வந்தீங்களா மிஸ்...?

----------------------------------------------------------------------------------

பப்பு : அப்பா, நாளைக்கு ஒரு சின்ன பேரண்ட் டீச்சர் மீட்டிங் இருக்கு, ஸ்கூலுக்கு வந்திடுங்க.

அப்பா : அதென்னடா, சின்ன பேரண்ட் டீச்சர் மீட்டிங் ?

பப்பு : ஆமா, நீங்களும் ஹெட் மாஸ்டரும் மட்டும்தான்..!!!

----------------------------------------------------------------------------------

பப்பு (காலேஜில்)....

ப்ரொபசர் : “what is the prototype of alluvial in organic xenia ?”

பப்பு : ஜிம்பலக்கடி பம்பா...

ப்ரொபசர் : i don’t understand anything”

பப்பு : எனக்கும்தான்...!!!

----------------------------------------------------------------------------------

ஆன்ட்டி : ஐயோ....டி.வி. போச்சு, மிக்ஸி போச்சு, ஏ.சி போச்சு, எல்லாம் போச்சு....

பப்பு : உங்க வீட்ல வி.கார்ட் ஸ்டெபிலைசர் இல்லையா ?

ஆன்ட்டி : இல்லை..

பப்பு : நல்லவேளை இல்லை...இருந்திருந்தா அதுவும் போயிருக்கும்....


அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்......

                              - ஜொள்ளன் பப்பு.

Friday, November 20, 2009

பப்புவின் அட்ராசிட்டி...!!!!டீச்சர் : இந்த SENTANCE-அ தமிழ்ல TRANSLATE பண்ணு.. " I SAW A FILM YESTERDAY"
பப்பு : நான் நேத்து 'ஏ' படம் பார்த்தேன்.

----------------------------------------------------------------------------------------
டீச்சர் : What is the Chemical formula for Water ?
பப்பு : H2MgClNaClHNO3CaCO3Ca(OH)2SnTnHg NiHCl(COOH)O
டீச்சர் : என்னடா இது ?
பப்பு : இது கார்ப்பரேஷன் வாட்டர் மிஸ்.

----------------------------------------------------------------------------------------

டீச்சர் : பப்பு, முட்டை போடுற நாலு ஜீவனோட பேரு சொல்லு ?
பப்பு : SCIENCE மிஸ்,
          MATHS மிஸ், 
          ENGLISH மிஸ், 
          SOCIAL மிஸ்.

----------------------------------------------------------------------------------------

பஸ்ஸில்....

கண்டக்டர் : ஏண்டா படியில நிக்கிறியே, உங்க அப்பன் என்ன வாட்ச்மேனா?
பப்பு : நீ கூடத்தான் எப்ப பார்த்தாலும் சில்லறை கொடுன்னு கேக்குற, உங்க அப்பன் என்ன பிச்சைக்காரனா ?

----------------------------------------------------------------------------------------

பப்புவும் அவனோட ப்ரெண்டும் காட்டுக்கு போறாங்க...திடீர்னு அவங்க முன்னாடி ஒரு புலி வந்துடுது....
உடனே ப்ரெண்டு புலியோட கண்ணுல மண்ணை தூவிடுறான்.

ப்ரெண்டு : பப்பு ஓடிடு...

பப்பு : அஸ்கு புஸ்கு, நான் ஏன் ஓடணும் ? நீதான கண்ணுல மண்ணு போட்ட..

----------------------------------------------------------------------------------------

பப்பு : டாக்டர் இந்த காயத்துக்கு STITCHES போட எவ்வளவு ஆகும் ?
டாக்டர் : 1200 ருபீஸ்.
பப்பு : டாக்டர் எம்ப்ராய்டரி எல்லாம் போட வேணாம், வெறும் தையல் மட்டும் போதும்.

----------------------------------------------------------------------------------------

பப்பு அவனோட எக்ஸாம் பேப்பர்ல...
||||||||||||| ||||||| |||||
|||||| ||||||||||||||| ||||
|||||||||||||||| ||||||||||||||

இந்த மாதிரி கோடு வரஞ்சு வச்சி, கீழ எழுதினான்...
" SCRATCH THE BAR CODE GENTLY TO READ THE ANSWER"

----------------------------------------------------------------------------------------

பப்புவோட வீட்டுக்கு விருந்தாளியா ஒரு அழகான பொண்ணு வருது.
மறுநாள் அந்த பொண்ணு குளிக்கும்போது பப்பு ஒளிஞ்சு நின்னு பாக்குறத பப்புவோட அம்மா பாத்துடுறாங்க...

பப்பு அம்மா: டே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா....?

பப்பு : அடப்போமா, நான் அந்த பொண்ணு நம்ம சோப்ப யூஸ் பண்றாளான்னு பாத்துட்டு இருக்கேன்....


இது சும்மா....FIRST பார்ட் தான் மச்சிஸ் ... இனி அடிக்கடி பார்ப்போம்...
- இப்படிக்கு ஜொள்ளன் பப்பு.


Wednesday, November 18, 2009

ஹைக்கூக்கள் - பகுதி 5


BACHELORS சமையல்.


தனியாய் சமைக்கும் போது
நினைவுக்கு வந்து  செல்லும்,
கூட்டாஞ் சோறு.
------------------------------------------------------------------------------------------------------------மெய்ன் ரோட்டில் விபத்து,
விரைந்து சென்றது ஆம்புலான்சு,
சைக்கிள்காரனை இடித்து விட்டு !!!
 ------------------------------------------------------------------------------------------------------------விரலை வைத்தவுடன் 
வேகவேகமாய் சூப்பியது,
பசியில் குழந்தை.
------------------------------------------------------------------------------------------------------------மங்களூர் மெயில்தான் 
இவர்களின் சேவல்,
தண்டவாள கிராமங்கள். 

------------------------------------------------------------------------------------------------------------


டிவியில் கணிப்பொறி, 
உபயம் - உள்ளூர்
கேபிள் சானல்.
------------------------------------------------------------------------------------------------------------


ஆதரவற்றோர் இல்லத்தில் 
காக்கா கரைகிறது - பாவம்
இன்று யார் வருகையோ? 

------------------------------------------------------------------------------------------------------------
(இது சும்மாங்காட்டி காமெடிக்கு மட்டும்...)


வெளிநாட்டு கணவர்
திரும்பி வந்தார் - குழந்தை,
ஐ......., சிங்கப்பூர் அப்பா...!!!

------------------------------------------------------------------------------------------------------------

இது மச்சான்ஸ் கமெண்ட்...!!!ரிசஷன்(Recession) நேரத்தில் நண்பர் ஒருவரிடம். 

"என்ன மச்சான் வேலை எல்லாம் எப்படி போகுது" 

"அதை ஏன்டா கேக்குற, டெய்லி காலேல ஷூவும் டையும் மாட்டிக்கிட்டு ப்ரௌஸிங் செண்டர்க்கு போயிட்டு வர்றா மாதிரியே இருக்கு..."


            - இப்படிக்கு சிவன்.
இதற்கு முன் பதிவிட்ட ஹைக்கூக்களுக்கு இங்க க்ளிக்குங்க.
காதலைப்போலன்றி,
பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம்.
(உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்)

Monday, November 16, 2009

தி அதர்ஸ் - The Others (2001)


நாம் வாழும் வீட்டில், நம் கண்ணுக்கு தெரியாமல் அமானுஷ்யமாக மற்றொரு குடும்பமும்வாழ்ந்து வந்தால்,,,,? அதுவும் அவர்கள் அனைவரும் இறந்தவராக இருப்பின்....? பதில் ...? - THE OTHERS.

ரத்தம், கொலை, கொடூரமான மேக்கப், அபத்தமான நியூடிட்டி, துரத்தும் மர்மப்பேய், பெருத்த*** பெண்கள் இது எதுவுமே இல்லாமல் நம்மை மிரட்டும் த்ரில்லர் திரைப்படம் தான், அதர்ஸ்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்குவதாய் கதை. வழக்கமான பேய்ப்படங்கள் போல் அல்லாமல், வெறும் அமைதியை வைத்தே மிரட்டுகிறார் டைரக்டர் Alejandro Amenábar. முழுப்படமும் ஒரே வீட்டுக்குள் நடந்து முடிகிறது. மொத்தமே ஆறு கேரக்டர்ஸ் தான். 
பிரதான கேரக்டர் கிரேசாக, நிகோல் கிட்மேன். போருக்கு சென்று திரும்பாத கணவன் சார்லஸ்.
நிகோலஸ், ஆன்னா என்று இரு குழந்தைகள். இவர்கள் வசிக்க ஐம்பது அறைகள் கொண்ட பெரிய வீடு.

தன் வீட்டில் வேலை செய்து வந்த பணியாட்கள் அனைவரும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போக, புதிதாக வரும் மூன்று பணியாட்களுக்கு வீட்டை சுத்தி காண்பிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது படம். ஒவ்வொரு அறைக்கும் செல்லும் முன் முன்னிருந்த அறையை பூட்டிவிடுகிறார் கிரேஸ். காரணம் அவளின் இரு குழந்தைகள்...!!!

கிரேசின் குழந்தைகளுக்கு ஒளி (வெளிச்சம்) என்றால் அலர்ஜி, எனவே பகல் வேளைகளில் அவர்கள் இருக்கும் அறைகளின் திரைகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். அறைகள் அனைத்தும் பூட்டபட்டே இருக்க வேண்டும்.  இதனாலேயே படம் முழுவதும் விளக்கு வெளிச்சத்திலேயே நகர்கிறது. ஆரம்பம் முதலே கிரேசின் காரக்டர் சற்று வித்தியாசத்துடனே கையாளப்படுகிறது. அதே போல் அந்த மூன்று பணியாட்கள், சற்று மர்மத்துடனே நடமாடும் ஆட்கள்.
முதல் இருவது நிமிடங்கள் படம் வெகு அமைதி. ஆன்னா கிரேஸிடம் இந்த வீட்டில் நம்மை தவிர இன்னும் சிலர் இருப்பதாக கூறும்போதுதான் படம் சற்று விறுவிறுப்புடன் தொடங்குகிறது. விக்டர் என்ற சிறுவனை தான் அடிக்கடி பார்ப்பதாகவும் அவனுடன் பேசுவதாகவும் சொல்லும் ஆன்னாவை நம்ப மறுக்கிறாள் கிரேஸ். (என்ன இந்த காட்சிகள் சிக்ஸ்த் சென்ஸ் படத்தை நினைவூட்டுக்கிறது). பொய் சொல்வதாக தண்டிக்கவும் படுகிறாள் ஆன்னா. விக்டர் அவ்வப்போது ஆன்னாவின் கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கிறான். இது அவனுடைய வீடு, நீங்கள் இந்த வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் தெரியப்படுத்துகிறான்.

முதலில் ஆன்னா சொல்லும் கதைகளை நம்ப மறுக்கிறார் கிரேஸ், ஆனால் அதற்க்கு பிறகு வரும் நிகழ்வுகளால், கிரேசும் ஆன்னா சொல்வது உண்மை தானோ என நம்ப தொடங்குகிறாள். ( குழந்தையின் அழுகுரல், பியானோ வாசிப்பது இந்த இரு காட்சிகளும், அற்புதம்). காமெரா படத்தின் உயிர் நாடி என்றே சொல்லலாம்.

ஆன்னா தான் இவர்களை தினமும் இந்த வீட்டுக்குள் பார்ப்பதாக நான்கு உருவங்களை ஒரு தாளில் வரைந்து காண்பிக்கிறாள். ஒரு அப்பா,அம்மா மற்றும் சிறுவன் விக்டர். இவர்களுடன் சூநியிக்காரி போல் இருக்கும் ஒரு கிழவி. யார் அவர்கள் என்ற ஆராய்ச்சியிலும் சிறிது நேரம் இறங்குகிறார் கிரேஸ்.
யார் இந்த நான்கு பேர் ? மூன்று பணியாகளின் மர்மங்கள் ? கிரசின் வித்தியாசமான கேரக்டரிசம் எதனால்...? - இவைதான் மீதிப் படம்.


படம் நகர நகர, எப்படி முடியுமோ என்று எதிர்பார்ப்பு கடைசி நிமிடங்கள் வரை கூடிக்கொண்டே தான் போகிறது. கடைசியில் படத்தின் முடிவு படு வித்தியாசம். குறிப்பிட பட வேண்டிய விஷயங்கள் அந்த தனி வீடு, அது அமைந்துள்ள பனி மூட்ட லொகேஷன், குட்டி சிறுவன் நிகொலசின் அற்புதமான நடிப்பு etc etc.

அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்...!!!

படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.படத்தின் டிரைலர் இதோ.


Friday, November 13, 2009

லிப்பாலஜி....அவளின் இரு வரிகளில் ஒரு ஆய்வுக் கட்டுரை.


எனக்கும் உனக்கும்
ஊடே இருக்கும்
கலவிக் காதலின்
அசல் நிறம் - உன்
உதட்டுச் சாயம்.

நீ சிணுங்கி
சிரிக்கும் பொழுதெல்லாம்
உதட்டோரம் மெலிதாய்
வெட்கம் கசியும்...
அந்த வெட்க வெள்ளத்தில்
மூழ்கித் திளைக்குது
உள் மனம்.

மன்மத தேசத்தின்
மதன பானம்
உன் மேலுதட்டின்
வியர்வைத் துளிகள்.
- -
நம் ஊடல் கதையின்
காதல் பாகம்
உன் உதட்டு வரிகளில்.

- சிவன் (இன்று மட்டும் மன்மத தேசத்தில்).


Wednesday, November 11, 2009

அனுமாரும் நானும்.

மை டியர் மச்சான்ஸ்,

பதிவுக்கு போறதுக்கு முன்னாடி எல்லாரும் அவங்க அவங்க MIND VOICE- "என் சோக கதைய கேளு தாய்க்குலமே" - பாட்டை ஒடவிட்டீங்கனா கரெக்டாஇருக்கும்.

உங்களுக்கெல்லாம் லார்ட் ஆஞ்சநேயா எபெக்ட்-னா என்னனு தெரியுமா?? (ஐய்யயோ இது அஜீத் நடிச்ச ஆஞ்சநேயா இல்லை..)

.கே நானே சொல்றேன் மச்சான்ஸ். ஒரு சின்ன FLASHBACK- இருந்து என் கதைய ஆரம்பிக்கிறேன்.

எனக்கு சின்ன வயசுல இருந்து, ஆஞ்சநேயர் மேல மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பக்தி. என்னடா விஷயம்னா, அவர்தாங்க அப்ப எனக்கு சாமிகள்லேயேஸ்ட்ராங்கான சாமியா தெரிஞ்சாரு. அதனால ஆஞ்சநேயர கும்பிட்டா நெறையா சக்தி கெடைக்கும், பலம் வரும்னு எப்பவுமே ஆஞ்சநேயர மட்டும்தான்கும்பிடுவேன்.

கரெக்டா அந்த நேரம்னு பார்த்து எங்க அப்பாக்கு வேற சோளிங்கர்-ன்ற ஊருக்கு மாறுதல் கிடைச்சது. சோளிங்கர்- என்னடா விஷேசம்னா அங்கஆஞ்சநேயர்க்குன்னு சின்ன மலை கோவிலே இருக்கு. ஏற்கனவே நமக்கு ஈடுபாடு அதிகம், இதுல மலைக்கோவில் வேற கேக்கணுமா, அப்ப அப்ப பிக்னிக்போறா மாதிரி மலைக்கோவிலுக்கு கெளம்பிடுவோம்.

எனக்கு அப்பெல்லாம் வடைல ரொம்ப ஆர்வம் இருந்ததே இல்ல... (வடையா ??? மேல படிங்க மச்சான் புரியும்).

லைட்டா நமக்கு வயசு ஏற ஏற இந்த ஈடுபாடு கொஞ்சம் கொறஞ்சது.... பசங்களோட நெறையா சேந்து வடை கெடக்குற எடத்துக்கெல்லாம் போவோம்...அப்பத்தான் அப்பாக்கு இன்னொரு மாறுதல் வந்து வேற ஊருக்கு போனோம். அங்க ஒரு ஸ்கூல்ல பதினோராவதுல சேர்ந்தேன். நமக்கு இப்ப ஆஞ்சநேயர்மேல இருந்து ஈடுபாடு ரொம்ப கொறஞ்சு போயிருந்துச்சு...முருகனும் முக்கியமா கிருஷ்ணரும் தான் இப்ப நம்ம இஷ்ட தெய்வமா தெரிஞ்சாங்க.

ஆனாலும் சின்ன வயசுல இருந்து நான் ஒரு தீவிர ஆஞ்சநேய பக்தரா இருந்ததால, அவருக்கும்(ஆஞ்சநேயர்) என்ன ரொம்ப புடிச்சு போச்சு போல. அவரோடஎபெக்ட் நம்மள அப்ப அப்ப கிராஸ் பண்ணும். இங்கதான் மச்சான்ஸ் லார்ட் ஆஞ்சநேயர் எபெக்ட் பயங்கரமா வொர்க் அவுட் ஆக ஆரம்பிச்சுது.

பதினோராவதுல சேரும் போது நம்ம ஆர்வமெல்லாம், இந்த ஸ்கூல்ல எத்தன வடை இருக்கு, நம்ம க்ளாஸ்ல எத்தன வடை இருக்கும்னு தான். மொத நாள்எல்லாரையும் ஒண்ணா ஒக்கார வைச்சு வெல்கம் ஸ்பீச் கொடுத்திட்டு இருந்தாங்க. அப்பத்தான் சொன்னாங்க என் க்ளாஸ்ல மொத்தம் தொண்ணூறு பேர்,இதுல நாப்பது மட்டும்தான் பசங்கன்னு.

டக்குன்னு நம்ம மைண்டுக்குள்ள ஏகப்பட்ட கால்குலேஷன், அம்பது வடா, you mean FIFTY VADA, அப்படின்னு என்ன என்னவோ நானே தனியா பேசிட்டுஇருந்தேன். லார்ட் முருகா, லார்ட் கிருஷ்ணா உங்க கருணையே கருணை, உங்கள கும்பிட ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே இப்படி ஒரு எபெக்டா....???

இவ்வளவு தாங்க அவங்கள புகழ்ந்து சொன்னேன், இது ஆஞ்சநேயர் காதுல விழுந்திடுச்சு போல, நம்மதான் அவரோட தீவிர பக்தர் ஆச்சே அதெப்படி நம்மளஇப்படி அம்பது பேருக்கு நடுவுல விடுவாரு.

இதெயெல்லாம் சொன்ன அதே வாத்தியாரு, பயாலஜி க்ரூப்புல தொண்ணூறு பேரு இருக்குறதால, அந்த க்ளாஸ மட்டும் ரெண்டா பிரிக்குறோம், பசங்கஎல்லாம் '' செக்ஷன், பொண்ணுங்க எல்லாம் 'பி' செக்ஷன்-னு சொன்னாரு.

"ஆஞ்சநேயர் எபெக்ட்" - வடை போச்சே !!!!

வேற என்ன செய்யுறது, மீதி ரெண்டு வருஷத்தையும் அந்த ஸ்கூல்ல நாப்பது பசங்களோட குப்ப கொட்டிட்டு வந்தேன்.

சரி ஆனது ஆச்சு, நம்ம காலேஜ்ல பாத்துக்கலாம்னு மனச தேத்திக்கிட்டேன்.... எத்தன படத்துல காலேஜ பாத்திருப்பேன்... எல்லாம் அந்த நெனப்புதான்....

இன்ஜினியரிங் காலேஜ் உள்ள போன பொறவு தான் தெரிஞ்சது, எல்லாமே கப்சானு. சரி மெகானிகல் எடுத்தா வேலைக்கு ஆகாது, கம்ப்யூட்டர் போலாம்னா நமக்கு சுவிட்ச் போடறத தவிர அதுல வேற எதுவுமே தெரியாது அப்படின்னு எல்லாம்யோசிச்சு எலெக்ட்ரானிக்ஸ் எடுத்தேன். க்ளாஸ்ல அறுவது பேருன்னு சொன்னாக, கொஞ்சம் ஆறுதலா இருந்திச்சு.

சரின்னு அங்க போய் பார்த்தா, நமக்கு முன்னாடியே நம்ம லார்ட் ஆஞ்சநேயர் வந்து வொர்க் அவுட் பண்ணிடாருங்க. க்ளாஸ்ல அறுவது பேருல மூணே மூணுமட்டும் தான் வடை மச்சான்ஸ். WHAT TO DOOO????? அதுவும் இங்க போனஸா நம்ம சேர்ந்த கொஞ்ச நாள்லயே அவங்களுக்கு நம்மள புடிக்காம போச்சு...(நம்மோட லந்து அப்படி...) அப்புறம் DISCO போயிட்டு வந்ததெல்லாம் வேற கதை...ஐய்யயோ தப்ப நெனச்சுக்காதீங்க, இது டிஸ்கோ சாந்தி ஆடுவாங்களே அந்தேடிஸ்கோ இல்ல, இது DIS-CO, அதாவது DISCILPLINARY COMMITTEE.

என்ன பண்றது, எல்லாம் - "ஆஞ்சநேயர் எபெக்ட்" - வடை போச்சே !!!!

காலேஜ்ல அப்படியே நாலு வருஷமும் போச்சு....எல்லாமே போச்சேன்னு நெனச்சிட்டு இருக்கும்போதுதான், பட்டினியா இருக்குறவனுக்கு சாப்பிட தலப்பாகட்டு பிரியாணி கெடக்குறா மாதிரி நமக்கு சாப்ட்வேர் கம்பனியில வேல கெடச்சிது.

எல்ல கஷ்டமும் இன்னையோட போச்சுடான்னு நெனச்சேன். ஒரு வழியா நம்ம மேல ஆஞ்சநேயர் எபெக்ட் கொஞ்ச கொஞ்சமா கொறஞ்சு வந்திச்சு.

வேலைல சேர்ந்த உடனே எல்லாரையும் ஹைதராபாதுக்கு டிரைனிங் அனுப்பிச்சாங்க. போன ஒரு மொத நாலஞ்சு நாள்லயே எனக்கு அது சொர்கமாதெரிஞ்சிச்சு.

"ஆஹா, திரும்பிய திசையெல்லாம் வடை, வண்ண வண்ண வடை, ஏகப்பட்ட வெரைட்டீஸ் " - ஒரு வாரம் இப்படி சந்தோசமா போயிட்டு இருந்திச்சு.

மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன் , அப்பாடா, " நோ ஆஞ்சநேயர் எபெக்ட்" - அவரு வெக்கேஷன்ல போய்ட்டார் போல அப்படின்னு.

ஆனா அடுத்த நாப்பது நாளும், கம்பனியில தாளிச்சுட்டாங்க !!!

ஒவ்வொரு வாரமும் டெஸ்ட்டு, டெஸ்ட்டுன்னு டார்ச்சர் பண்ணி, காலைல இருந்து நைட்டு வரைக்கும் ப்ரோக்ராம் எழுத சொல்லியே கொன்னுட்டாங்கமச்சான்ஸ், டெஸ்ட்டுல பெயில் ஆனா நோ வேலை. (வீட்டுக்கு திரும்ப வேண்டியது தான் )

வேலையா வடையானு வந்தபோது, இப்போதைக்கு வேலைதான் முக்கியம்னு நாங்களும் கொஞ்ச நாளைக்கி வடைக்கு லீவ் கொடுக்க வேண்டியது ஆச்சு...!!! (இப்பதான் தெரிஞ்சது ஆஞ்சநேயர் ஏன் வெக்கேஷன்ல போனாருன்னு !!!)

இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு போஸ்டிங்குக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு கேரளாவுல கொச்சின் போட்டிருக்கறதாசொன்னாங்க...!!!

ஆஹா ஆஹா என்ன ஒரு அற்புதமான தகவல்....!!!

இவ்வளவு நாளா வெளியில இருந்தே வடையை பார்த்துட்டு இருந்து எனக்கு, அந்த வடையை சுடுற கடைலயே ஒரு வேலை போட்டு கொடுத்தா? , அப்படிதான்இருந்திச்சு எனக்கு இந்த சேதியை கேட்டவுடனே.

சரி இனிதான் நமக்கு நல்ல காலம் போலன்னு நெனச்சுக்கொட்டு கொச்சி வந்து சேர்ந்தேன். கொஞ்ச நாளைக்கு வேல எதுவுமே குடுக்காம, பெஞ்சு தேக்கவிட்டாங்க. அப்பவெல்லாம் முழு நேரமும் கேன்டீன்லதான் இருப்போம், வேறென்ன அங்க ஏதாவது கெடக்குமானுதான்.

ஆனா அங்க எல்லாம் ரொம்ப உஷாரு மச்சான்ஸ், எல்லாரும் வரும்போதே அவன் அவன் வடையை கையிலே பத்திரமா புடிச்சிக்கிட்டுதான் வருவான்.ஒன்னும் வேலைக்கு ஆகலை. சரி நம்மளும் ப்ராஜெக்டுக்குல போன இப்படிதான் இருப்போம் போலன்னு திரும்பவும் மனசுக்குள்ளயே சந்தோஷபட்டுக்கிட்டேன்.

ப்ராஜெக்டும் வந்திச்சு, என்னோட மானேஜர் வா டீம்ல உன்ன அறிமுகப்படுத்துறேன்னு கூட்டிட்டு போனார். நானும் உள்ள தைரியமா போனேன், ஆனா அங்க....

.

.

"எதிர்ல சுவத்துல ஒரு படம் மாட்டி இருந்தாங்க, என்னடான்னு உத்து பார்த்தேன்... ஒரு நிமிஷம் என் கண்ணு கலங்கி தண்ணி வர ஆரம்பிச்சிடிச்சு......வேற யார்MY LORD ஆஞ்சநேயர்தான்..!!!! "வேறன்ன இங்கயும் டீம்ல பதினஞ்சும் பசங்க. ....வடையே இல்ல....

எல்லாம் - "ஆஞ்சநேயர் எபெக்ட்" - வடை போச்சே !!!!

கடைசியா ஒரே ஒரு விஷயம்.... என்னடா இது வரைக்கும், ஒரு வடை கூட உன்னை கிராஸ் பண்ணலையான்னு நீங்க கேக்கலாம்...?பண்ணுச்சு மச்சான் பண்ணுச்சு...ஒரே ஒரு தரம்...காலேஜ்லபடிக்கும் போது...எங்க தெருவுக்கு புதுசா வந்தவ(டை)...

(மச்சான்ஸ் அப்படியே கொஞ்சம் உங்க MIND VOICE பாட்ட கொஞ்சம் மாத்திக்கங்க...” அது ஒரு அழகிய நிலாக்காலம்”.

இந்த விஷயத்துல ஆரம்பமே அமர்க்களமா போயிட்டு இருந்திச்சு, வழக்கமா எனக்கு மட்டும்தான் வடைய பிடிக்கும், இந்த தடவை வடைக்கும் என்னைபிடிச்சிருந்ததுன்ன பாத்துக்கங்க....ஜெட் வேகத்துல எங்க காதல் வண்டிய ஓட்டிக்கிட்டு இருந்தேன்....

ஆஞ்சநேயர் இங்க வேற ரூபத்துல வந்தாரு..., "அவ அண்ணன் ஒரு கொரங்கு பய சார் .....! "

எங்க விசயத்த கேள்வி பட்டு, சண்டை போட்டு, கைய கடிச்சு வச்சிட்டான்... !!!

எல்லாம் - "ஆஞ்சநேயர் எபெக்ட்" - வடை போச்சே !!!!

...

பி.கு. இவ்வளவையும் படிச்சிட்டு வடைனா என்னன்னு கேட்டீங்கனா, நான் அழுதிடுவேன்....!!!

-
Related Posts Plugin for WordPress, Blogger...