Sunday, November 1, 2009

கனவில்... யார் இவர் ???

இந்த போட்டோவுல இருக்குற ஆள நீங்க எங்கயாவது பார்த்து இருக்கீங்களா...???(MIND-ல ஒரு சின்ன search Engine-அ ஓட விட்டு பாருங்க).
அதுக்குள்ளே நான் ஒரு சின்ன கதை சுருக்கம் சொல்லிடுறேன்,,,,
2006-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துல ஒரு பிரபல மனநல மருத்துவரோட பேஷண்ட் ஒருவர் தன் கனவில் யாரோ ஒரு மனிதர் அடிக்கடி வருவதாக சொல்லி, அந்த நபர மருத்துவர் கிட்ட வரஞ்சு காட்டி இருக்காங்க. ஆனா கனவில் வரும் அந்த நபரை இவர் நேரில் பார்த்ததே இல்லை.
அந்த படம் தான் மேல இருக்க படம். இதுல என்ன விசேஷம்னா அந்த படத்த மருத்துவர் தன்னோட மேஜைலே மறந்து வச்சிடுறார். சில நாட்கள் கழித்து வேற ஒரு பேஷண்ட் தன் கனவிலும் இந்த நபர் தோன்றுகிறார்-னு டாக்டர்கிட்ட சொல்லி இருக்காங்க. என்ன இவரும் அந்த நபரை நேரில் கண்டதே இல்லை.
உடனே தனக்கு தெரிந்த எல்லா டாக்டர்களுக்கும் இந்த படத்தையும் விவரத்தையும் அந்த மனநல மருத்துவர் அனுப்பி வைக்கிறார். சில மாதங்கள்ல ஒரு நாலஞ்சு பேர் இவர பார்த்ததா (கனவில்தான்) தகவல் கிடைக்குது.
2006 ஜனவரி மாதத்தில தொடங்கின இந்த தேடுதல் வேட்டைல, இதுவரை சுமார் இரண்டாயிரம் பேர், இந்த நபரை தன கனவில் பார்த்துள்ளதாக சொல்லி இருக்காங்க... ஏதோ ஒரு குறிப்பிட்ட ஊர் நாடுன்னு இல்லாம மாஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சவோ பாலோ, தெஹ்ரான், ஸ்டாக்ஹோம், பாரிஸ், பார்சிலோனா மற்றும் டெல்லின்னு எல்லா ஊர்லயும் இந்த கனவுகள் தோன்றியிருக்கு....
என்ன மச்சான்ஸ், நீங்க யாராவது உங்க கனவுல இவர பார்த்து இருக்கீங்களா ? அவருடைய வெவ்வேறு ஓவியங்கள்..கனவில் பார்த்தாக கூறியவர்கள் வரைந்தது...

என்ன என் கனவுல இவர் வந்ததே இல்ல.....இவங்க மட்டும்தான் டெய்லி வர்றாங்க..!!!

'

'

'

'

'

'

'



- அன்புடன் மச்சான்ஸ்....!!!
(கொச்சி நயன்தாரா ரசிகர் மன்றம் - எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது).

5 comments:

  1. இந்த கனவு மனிதனைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிஞ்சுக்க,
    இந்த வலைத்தளத்துக்கு போங்க...

    WWW.THISMAN.ORG

    ReplyDelete
  2. ஏங்க இவங்க ரொம்ப பிசி. எதுக்கு தொந்தரவு பண்றீங்க. இந்த தமன்னா, பாவனா மாதிரி இருக்குறவங்க கனவுல வந்தா வேண்டாமா ?

    ReplyDelete
  3. கடைசி படத்துல இருக்குறது உங்க தங்கச்சியா மச்சான்!

    ReplyDelete
  4. யார்ரா அது வால் பையன் மச்சான்....? அண்ணன் கேக்குறார் இல்ல ?

    ReplyDelete
  5. @பின்னோக்கி - அய்யோ நானா கேக்க மட்டேங்குறேன், மொத்த கால் சீட்டையும் என்னக்கே குடுக்குறேங்குறாங்க ....நான் என்ன மச்சான் பண்றது ???

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...