Friday, November 13, 2009

லிப்பாலஜி....அவளின் இரு வரிகளில் ஒரு ஆய்வுக் கட்டுரை.






எனக்கும் உனக்கும்
ஊடே இருக்கும்
கலவிக் காதலின்
அசல் நிறம் - உன்
உதட்டுச் சாயம்.

நீ சிணுங்கி
சிரிக்கும் பொழுதெல்லாம்
உதட்டோரம் மெலிதாய்
வெட்கம் கசியும்...
அந்த வெட்க வெள்ளத்தில்
மூழ்கித் திளைக்குது
உள் மனம்.

மன்மத தேசத்தின்
மதன பானம்
உன் மேலுதட்டின்
வியர்வைத் துளிகள்.
- -
நம் ஊடல் கதையின்
காதல் பாகம்
உன் உதட்டு வரிகளில்.

- சிவன் (இன்று மட்டும் மன்மத தேசத்தில்).


4 comments:

  1. ரெம்ப அருமையா இருக்கு...மச்சான்ஸ்
    நெறைய தொடர்ந்து இது போல் எழுதவும்,,,,,

    ReplyDelete
  2. ramesh-றமேஸ், seemangani - ரொம்ப நன்றி மச்சான்ஸ்..!!!

    ReplyDelete
  3. கடைசி மூன்று வரிகளின் கற்பனை.. அட டா இது புதுசால இருக்கு..

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...