Monday, November 2, 2009

ட்ரிக் ஆர் ட்ரீட்- TRICK or TREAT (2009)


ஹாலோவீன் அன்று முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விதிகள் :

1. எப்பவுமே முட்டாய் சாப்பிடும்போது செக் பண்ணிட்டு சாப்பிடணும்.
2. பரங்கிக்காய் விளக்க அணைக்கவோ உடைக்கவோ கூடாது.
3. ஏதாவது டிரஸ் போட்டு இருக்கணும் (அட மாறுவேஷம்-ங்க).
4. ட்ரிக் ஆர் ட்ரீட் கேட்டு வர்றவங்களுக்கு கண்டிப்பா முட்டாய் குடுக்கணும்.

இப்படி சொல்லிக்கிட்டுதான் ஆரம்பிக்கிறாங்க இந்த படத்தை.TRICK or TREAT ட்ரிக் ஆர் ட்ரீட் - ஹாலோவீனை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் ஒரு திகில் படம்.

சரி இந்த 4 விதிமுறைகளை கடைபிடிக்கலனா ?
அதுதான் மீதி படம். படத்துல கதை கிடையாது. ஆஹா ஓஹோ நடிப்பு காட்சி எல்லாம் கிடையாது, சென்டிமன்ட் சுத்தமா கிடையாது. ஜாலியா வாங்க பயமுருத்துறோம் கான்செப்ட் தான். நான்கு விதிகளையும் வைத்து நான்கு கிளைக் கதைகள். நான்கு கதையிலும் ரத்தம், சதை, கொடூரம் மற்றும் கொஞ்சமா திகில்..

அதென்ன TRICK or TREAT கலாச்சாரம்னு நீங்க கேக்கலாம். அது ஒண்ணும் இல்லேங்கனா, நம்மூர்ல எப்படி மார்கழி மாசத்துல ஊர்ல இருக்க பொடிசு எல்லாம் ஒரு மஞ்சா துணிய கட்டிக்கிட்டு "கோய்ந்தா கோய்ந்தா" - னு வீடு வீடா போய் காசு கேப்பாங்களோ, அதே மாதிரிதான் ஹாலோவீன் கொண்டாடும்போது அந்த ஊர்ல இருக்குற பொடிசு எல்லாம் பேய் டிரஸ் மாட்டிக்கிட்டு வீடு வீடா போய் "TRICK or TREAT"-னு சொல்லி முட்டாய் கேக்குறாங்க. இடமும் ட்ரெஸ்சும் தான் வேற வேற, மத்தபடி மேட்டரெல்லாம் ஒண்ணுதான்.சரி படத்துக்கு வருவோம். படத்தோட முதல் காட்சியில் ஹாலோவீன் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு வீடு திரும்புது ஒரு ஜோடி.வீடு வந்து சேர்ந்தவுடன் தலைவருக்கு குஜால்ஸ் மூடு வந்து விட, தலைவியை கெஞ்சுகிறார் (எல்லாம் அகநாநூறுதான்). வாசலில் இருக்கும் பரங்கிக்காய் விளக்குகளை எல்லாம் எடுத்து வருவதாக செல்கிறார் தலைவி. ஒவ்வொரு விளக்காக அவர் அணைக்க....ரூல் நம்பர் 2 அவுட் !!!

மீதி மூணு கதைகள சுருக்கமா சொல்லணும்னா, ஊருக்குள்ள வர்ற ஒரு அழகான கன்னி பெண்கள் கூட்டம். ஒரு சிறுமியை பயமுறுத்த நினைக்கும் மற்ற நான்கு வாண்டுகள். கல் குவாரியில ஸ்கூல் பஸ்ஸோடு மூழ்கி செத்துப்போன மன நலம் குன்றிய 8 சிறுவர்கள். TRICK or TREAT-னு வீட்டுக்கு யார் வந்தாலும், தன்னோட நாய விட்டு தொரத்துற ஒரு BAD OLD MAN. ராத்திரியானா சீரியல் கில்லரா மாறும் ஒரு வாத்தியார். (என்னடா மூணு கதை மாதிரி தெரியலயேன்னு நீங்க யோசிக்கலாம், அதாவது மச்சான்ஸ் இவங்க எல்லாரையும் சம்பந்தப்படுத்தி மூணு கதைய ஓட்டுறாங்க).


படத்துல குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், படம் நெடுகிலும் சாம் (SAM) என்ற கேரக்டரில் வரும் ஒரு குட்டி சாத்தான் (மேல படத்துல இருக்க அதே குட்டி சத்தான்தான்.). முகத்த சாக்குதுணி வச்சு மூடியிருக்கும்.ரொம்ப அழகா தத்தா புத்தானு நடக்கும். ஆனா கடைசி ஒரு பதினஞ்சு நிமிஷம் கெட்ட ஆட்டம் போடும். நோட் பண்ண வேண்டிய கேரக்டர். அப்புறம் அந்த வாத்தியார் மவனா வர்ற ஒரு நாலு வயசுப் பையன்.. படத்த பார்த்தீங்கனா புரியும்.

படத்துல ஒரு ரெண்டு எடத்துல மட்டும் அக்கடா துக்கடான்னு சில காட்சிகள் (இரண்டொரு நொடிகள் மட்டும்) இருக்கும் அதனால குட்டீஸோட பாக்கும்போது "BE CAREFUL". மத்தபடி நோ AGE லிமிட்..!!! கடைசியா சொல்லணும்னா TRICK or TREAT ஒரு நல்ல டைம் பாஸ் படம்(வெறும் ஒன்னேகால் மணி நேரம் தான்). நைட்ல தனியா இருக்கும்போது போட்டு பாருங்க
படத்த தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.

படத்தோட டிரைலர் இதோ.

6 comments:

பின்னோக்கி said...

பயந்து வருதுங்க

pappu said...

ஜால்ஸ் மூடு வந்து விட, தலைவியை கெஞ்சுகிறார் (எல்லாம் அகநாநூறுதான்)./////

ஹா.. ஹா நல்லாருக்கு!

சென்ஷி said...

:))

டவுன்லோடு செஞ்சுக்கறேன்!

சிவன். said...

@பின்னோக்கி - பயப்படாதீங்க மச்சான், நம்மக்கிட்ட ஜகன் மோகினி படத்தில நமீதா யூஸ் பண்ண தாயத்து இருக்கு. ... அத உங்களுக்கு தர்றேன்...!!! :)

சிவன். said...

என்ன பண்றது பப்பு, பள்ளிக்கூடத்துல படிச்சத(?%%$?) எல்லாம் இப்படியாவது உபயோகப் படுத்திக்கிவோம்.

சிவன். said...

ம்ம்....அப்படியே ஒரு ஓரமா இத டவுன்லோட் போட்டு வையுங்க....என்னக்கி ரொம்ப மொக்கையா இருக்கோ அன்னக்கி பாக்கலாம்... :)

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...