Wednesday, November 4, 2009

ஆஸ்திரேலியா Australia - 20082008 ஆம் ஆண்டு ஆஸ்த்ரேலிய சரித்திரத்தின் பின்னணியில் காதலை மையாமாக கொண்டு ஹ்யூஜ் ஜாக்மேன், நிகோல் கிட்மேன் நடித்து வெளிவந்து ஆஸ்த்ரேலிய நாட்டில் சக்கை போடு போட்ட படம்தான் ஆஸ்த்ரேலியா !!!

1940களின் ஆரம்பத்தில் நடப்பதாய் தொடங்குகிறது கதை. 1940-களில் இருந்த ஆஸ்திரேலியாவை அப்படியே கண்முன் நிறுத்துகின்றனர் (நமக்கென்ன தெரியும், ஆனா பாக்கும்போது இப்படித்தான் இருந்திருக்குமோன்னு தோணுது).

இங்கிலாந்து பெண்மணி சாரா ஆஷ்லியாக நிகோல் கிட்மேன். அவரின் கணவர் ஆஸ்த்ரேலிய நாட்டில் FARAWAY DOWNS என்ற இடத்தில் கால்நடை பண்ணை நடத்துபவர். பண்ணை சரியாக போகாததால் அதை விற்க சொல்வதற்காக சாரா ஆஸ்த்ரேலியா வருகிறார். டார்வின் துறைமுகத்திலிருந்து அவரை FARAWAY DOWNS அழைத்து வர ட்ரோவர் (ஹ்யூஜ் ஜாக்மேன்) என்பவரை அனுப்பி வைக்கிறார் சாராவின் கணவர்.


ஜாக்மேனின் அறிமுகமே பாரில் நடக்கும் ஒரு அடிதடி சண்டை காட்சியில்தான் - நம்மூர் ஹீரோக்கள் பாணியில் ஒரு இன்ட்ரொடக்ஷன். நல்ல வேலை ஜாக்மேன் அதுக்குன்னு தாவணியில மூஞ்சிய மூடிட்டு பறந்து வரல.

நெடுதூர பயணத்துக்கு பிறகு டார்வின் துறைமுகத்திலிருந்து இருவரும் FAIRAWAY DOWNS வந்தடைகிறார்கள். சாராவின் துரதிர்ஷ்டம் அதே நேரம் அவளின் கணவர் கொல்லப்படுகிறார். கிங் ஜார்ஜ்(ஒரு பழங்குடியின தலைவர்) தான் தன் கணவரை கொன்றது, என்று மானேஜர் நீல் பிளச்சர் மூலம் தெரிந்துகொள்கிறார். அதே வீட்டில் ஒரு பழங்குடியின பெண்ணும், அவளின் மகன் நல்லாவும் பணியில் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில், நல்லா சாராவிடம் பிளெச்சர் பற்றிய சில உண்மைகளை தெரிவிக்கிறான். அதாவது பிளெச்சர் அந்த பண்ணையை சாராவின் கணவரிடமிருந்து ஏற்கனவே அபகரித்து வந்ததையும், அது தெரிந்ததும் சாராவின் கணவரை கொன்றதும், அந்த பழியை கிங் ஜார்ஜ் மீது சுமத்தியது உட்பட. இதை தெரிந்து கொள்ளும் பிளெச்சர் நல்லாவையும் அவனது தாயையும் அடிக்க, சாரா உடனே மனேஜரை வேலையை விட்டு நீக்குகிறார். பண்ணையையும் தானே கவனிக்க முற்ப்படுகிறார்.

நல்லா பண்ணையில் இருப்பதை மானேஜர் பிளெச்சர் போலீசிடம் போட்டு கொடுத்து விடுகுறார். (ABORIGINES எனப்படும் இச்சிறுவர்களை அன்றைய ஆஸ்த்ரேலிய அரசு தனியாக கூட்டி சென்று ஒரு தீவில் வைக்கின்றனர்.) அன்றைய தினங்களில் ஆஸ்த்ரேலிய பழங்குடியினருக்கு இந்த வெள்ளைக்கார இடியட்ஸ் செஞ்ச கொடுமைகள் எக்கச்சக்கம், அதுல ஒண்ணுதான் சிறுவர்களை பெற்றோரிடமிருந்து பிரிப்பது.


எனவே நல்லாவை தேடிக்கொண்டு வரும் போலீசிடம் இருந்து அவனை காப்பாற்றும் பொருட்டு அவன் தாய் உயிர் இழக்கிறாள்.இந்நிலையில் நல்லா மீது பாசம் கொள்ளும் சாரா, நல்லாவை தன் மகனாக பாவிக்கிறார்.

சாரா ட்ரோவர்கிட்ட அங்கு உள்ள அனைத்து கால்நடைகளையும் (சுமார் 1500) டார்வின் கொண்டு சேர்க்க வேண்டுகிறாள். அனால் அதற்க்கு போதுமான ஆட்கள் இல்லாததால், சாரா, நல்லா, இன்னொரு பழங்குடியினப் பெண் என அவர்களையும் ட்ரோவர் தயார் படுத்துகிறான். இதை தடுக்க பிளெச்சர் போகும் வழியெல்லாம் அவர்களுக்கு தடங்கல் ஏற்படுத்துகிறான். அதோடு இல்லாமல் பிளெச்சர் மீண்டும் நல்லாவை தனி தீவுக்கு அனுப்பவும் ஏற்ப்பாடு செய்கிறான். இடையில் மாடுகளை ஒட்டி செல்லும் வழியில் சாராவுக்கும் ட்ரோவருக்கும் மலரும் காதல். பாலைவனத்தில் ஒரு LOVE STORY (BONUS TRACK).

கால்நடைகள் டார்வினுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதா ? (இதுவரை படத்தின் முதற் பாதி). பிற்பாதியில் இந்த மூவரையும் (சாரா , நல்லா, ட்ரோவர்) சில சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பிரித்து விட இந்த மூவரும் ஒன்று சேர்கிறார்களா என்பது மீதி கதை.
பிற்ப்பாதியில் டார்வினை புரட்டி போடும் ஜப்பானிய குண்டு வீச்சு (இது உண்மையாக நடந்த ஒரு சம்பவம்), சாரா பணிபுரியும் வானொலி மையம் தாக்கப்படுதல் என்று பல அசம்பாவங்களையும் தாண்டி பயணிக்கிறது இந்த சரித்திர படம்.

படத்துல பல இடங்களில் அப்ஒரிஜின்ஸ் (ABORIJINES) எனப்படும் அந்த ஆஸ்த்ரேலிய நாட்டின் பூர்வீக குடி மக்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்துவதை ஆங்காங்கே தெரியப்படுத்துகிறார் டைரக்டர் (Baz Luhrmann - மோலின் ரோக் படத்தின் இயக்குனர்). ட்ரோவரின் கறுப்பின நண்பரை தன் பாரில் (BAR) நுழைய அனுமதி மறுப்பது, ஒரு கறுப்பின பெண்ணை மணந்ததற்காக ட்ரோவேரையும் சில வெள்ளையர்கள் தாழ்வாக கருதுவது, கருப்பர்களை படம் நெடுகிலும் அடிமைகளாய் காட்டியிருப்பது, கறுப்பின பெண்களையும் இச்சைக்கு வெள்ளையர்கள் பயன்படுத்தி இருப்பது (நல்லாவின் பிறப்பும் இப்படியே) - என்று படம் நெடுக ஏராளம்.


இதே அப்ஒரிஜின்ஸ் மக்களுக்கு எதிராக வெள்ளையர்கள் இழைத்த அனைத்து கொடுமையையும் முழு விவரத்தோடு 'ஹாய் மதன்" அவருடைய மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் புத்தகத்தில் எழுதியிருப்பார். அதை படித்துவிட்டு இதை பார்த்தால், படத்தில் காட்டியிருப்பது மிக சொற்பமே.
படத்தில் முக்கியமா குறிப்பிடப்பட வேண்டிய சில விஷயங்கள், படம் நெடுக நம்மை கட்டிபோடும் கேமரா. ஒவ்வொரு ப்ரேமும் சூப்பர். நல்லாவாக வரும் சிறுவன், அதிசய சக்திகள் கொண்ட கிங் ஜார்ஜாக வரும் கிழவர் ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். இறுதியில் வரும் போர் காட்சிகளால் சீர்குலைந்த டார்வின்-ஐ காட்டுவதில் ஆகட்டும், 1500 கால்நடைகளை மேய்ப்பதில் ஆகட்டும் காட்சியமைப்பு கேமரா ஆர்ட் டைரெக்ஷன் அனைத்தும் அருமை.

என்ன படம் கொஞ்சம் நீளம் அதிகம். இரண்டே முக்கால் மணி நேரம். இரு பாதிகளும் இரு தனி கதைகள் போலவே. இன்னொரு விஷயம், இப்படம் எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்தும் என்று கூற இயலாது. படத்தின் நீளம் ஒரு குறையே. படத்தின் பிற்பாதி வேகமாகவே செல்லும்.

படத்த பார்க்கும்போது நமக்கு (எனக்கு) ஏற்ப்படும் ஒரு கஷ்டம், அவுங்க பேசுற இங்க்லிபிசு, இது பேரு தான் ஆஸ்த்ரேலிய இங்கிலீசான்னே ? , மொத கால் மணி நேரம் ஒண்ணுமே புரியல....(அட சப் டைட்டில் வச்சுதாங்க படம் பார்த்தேன்)...அப்புறம் போக போக செட் ஆயிடிச்சு...!!!.வித்தியாசமான படங்களை விரும்புவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்.

படத்த தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.

படத்தோட டிரைலர் இதோ.


5 comments:

pappu said...

ஜாக்மென் ஃபேன் நான். படத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம், ஜாக்மென், கிட்மென் இருவருமே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள்!

சிவன். said...

@Pappu - எனக்கு ஹூஜ் ஜேக்மேன் ஆஸ்த்ரேலியானு தெரியும்.... நிகோல் கிட்மேன் நீங்க சொல்லித்தான் தெரிஞ்சது... நன்றி பப்பு.

பிரசன்னா இராசன் said...

இந்த படத்தை அனேகமாக நான் மொக்கை பட லிஸ்டில் எப்போதோ சேர்த்து விட்டேன். காரணம் திரைக்கதை. ப்ரமேகளில் உயிரோட்டமாக காட்டி விட்டு படத்தை மொக்கையாக எடுத்திருப்பார். ஜாக்மனை நம்பி தான் திரை அரங்கிற்கு சென்றேன். எப்போது படம் முடியும் என்று ஆகி விட்டு இருந்தது. மேலும் படத்தில் ஆஸ்த்ரேலிய பழங்குடிகள் காட்டப் பட்ட விதம் பற்றி பலமான கண்டனக் குரல்கள் எழுந்தன. காரணம் அந்த பழங்குடியினரை பற்றி திரித்து கூறப் பட்ட தகவல்கள். ஆக மொத்தம் இது ஒன்றும் உலகப் படம் அல்ல. பத்தோடு பதினொன்று.

சிவன். said...

@ பிரசன்னா இராசன் - //இன்னொரு விஷயம், இப்படம் எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்தும் என்று கூற இயலாது.// - இதை நான் ஏற்கனவே மேல எழுதியிருக்கேன் பிரசன்னா....நீங்க மதனோட புத்தகத்த படிச்சா படத்துல பழங்குடியினரை பத்தி சொல்லியிருப்பது கம்மின்னு நீங்களே சொல்வீங்க...!!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

என்ன ஒரு ப்ரம்மாண்டமான படம் ?.
உண்மையிலேயே படு அமர்களமான ஒளிப்பதிவும்,பீரியட் செட்டும் மிக அற்புதமாயிருக்கும், நல்லா அந்த மந்திரவாதி தாத்தாவின் உதவியால் தன்னை நோக்கி பள்ளத்தாக்கில் விழஓடிவரும் பசுக்களை மந்திரம் போட்டு நிறுத்தும் காட்சி ஒன்றே போதும்,படம் ஒர்த் தான்.
நல்ல காதலையும் நகைச்சுவையுடன் சொன்ன படம்.
ஒரே சிட்டிங்கில் பார்க்கணும்க, அப்போ அவசியம் பிடிக்கும்.
ஓட்டுக்கள் போட்டாச்சு

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...