
ஒரு விழாவிற்காக கப்பற்படை அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பும் கப்பல்,ஹட்சன் ஆற்றின் நடு வழியிலேயே வெடித்து சிதறுகிறது. முழு கப்பலும் வெடித்து சிதற அதில் இருந்த 543 பேர் இறக்கின்றனர்.இந்த விபத்தை பார்வையிடும் ஒரு அதிகாரியாக வருகிறார் டென்சல். டென்சலின் நண்பரும் (போலீஸ் பார்ட்னர்) இதில் இறந்துவிட, இந்த வெடி விபத்தை விசாரிக்கும் குழுவுடன் இணைகிறார் டென்சல்.

விபத்தை விசாரிக்கும் குழு, டென்சலை ஒரு ரகசிய ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே சரியாக நாலு நாட்களுக்கு முன்னர், வெடித்த கப்பலை ஒரு வீடியோ மூலம் கண்காணிக்கின்றனர். அது என்னவென்று டென்சல் விசாரிக்க, செயற்கை கோளின் மூலம் பூமியில் உள்ள அனைத்தையும் படம் பிடிப்பதாகவும் அதை வைத்து தற்போது கப்பலின் நடமாட்டத்தை கவனிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோ படம் நான்கு நாட்கள் தாமதமாகவே கிடைக்கபெறும், அதனால் இன்று நடைபெற்ற விபத்து நான்கு நாட்கள் பிறகே பார்வையிட முடியும் என்றும் அறிகிறார் டென்சல். ஆனாலும் அந்த குழுவினர் அவரிடம் எதையோ மறைப்பதாக உணரும் டென்சல், அதை அவர்களிடமே கேட்க, மற்றவர்கள் ஒன்றுமில்லை என்று மறுக்கின்றனர். சரியென்று அந்த குழுவினரிடம் இறந்த பெண்ணை பற்றியும், அவளை கண்கானித்தால் உண்மையை கண்டுபிடிக்க முடியும் என்று டென்சல் தெரிவிக்க, உடனே அந்த வீடியோ மூலம் இறந்த பெண்ணின் (இவர்தாங்க படத்தோட கதாநாயகி) வீட்டையும் அவரையும் கண்காணிக்க ஆரம்பிக்கின்றனர்.
இதற்கு பிறகு ராக்கட் வேகத்தில் திரைக்கதை பறக்கிறது. நம்ப முடியாத TIME MACHINE கான்சப்டை படத்தில் திணித்து, அந்த விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க நினைக்கின்றனர். இடையே நமக்கு தோன்றும் பல கேள்விகளுக்கு படத்தின் விறுவிறுப்பான இறுதி காட்சிகள் பதில் தருகிறது. படத்தின் முடிவு அதற்க்கு முன் எழுந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் தந்தாலும், முடிவே பல கேள்விகளை எழுப்புகிறது .....!!!
இதையெல்லாம்(சில லாஜிக் மீறல்கள்) ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் டெஜா வூ கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.
படத்த தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க
படத்தின் டிரைலர் இதோ ....
நல்ல டைம் பாஸ் படம். நான் பார்த்துருக்கேன். டென்சில் வாஷிங்டன் காக இந்த படத்தை கண்டிப்ப பார்க்கலாம். மனுஷன் நடிப்புல பட்டைய கிளப்புவாரு. அவரோட எல்லா படமும் நல்லா இருக்கும். Training Days பார்த்திருக்கீங்களா ? அதுவும் நல்ல படம்.
ReplyDeleteடென்சில் டென்சில் தான்.. என்னா நடிப்பு...
ReplyDelete@பின்னோக்கி - நன்றி பின்னோக்கி....TRAINING DAYS இன்னும் பாக்கல...கூடிய சீக்கிரம் பாத்துடலாம்....!!!
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்கள்ல டென்சலும் ஒருத்தர்...!!!!
@அமுதா கிருஷ்ணா - நல்ல நடிகர்...இந்த மாதிரி நிறைய படங்கள் இருக்கு...ஒன்னு ஒண்ணா பதிவுல போடணும்...
ReplyDeleteYes. Denzel is a great actor. Did you watch the bone collector. Fantastic movie. Denzel acts in this movie lying in the bed only. Also Angelino also is in this thiriller. Must watch. Another very interesting movie is INSIDE MAN.
ReplyDelete