Tuesday, October 13, 2009

ரோபோ பட கிளைமாக்ஸ்.

ரகசியமாய் கசிந்த ரோபோ பட கிளைமாக்ஸ் காட்சி.

மீண்டும் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டாரின் ரோபோ படம் பத்திய ஒரு சூடான பதிவு. இந்த தடவை நம்ம டைரக்டர் ஷங்கரோட செக்யூரிட்டி மன்னர்களின் கட்டுக்கடங்கா காவல்முறையையும் மீறி ரோபோ பட க்ளைமாக்ஸ் மட்டும் கசிந்து விட்டது.

இதுக்கு மேலயும் சஸ்பென்ஸ் வேண்டாம் படிச்சு தெரிஞ்சுக்கங்க......

தலைவரோட கடைசி சீன்ல மொத்தம் ரெண்டு வில்லன்கள் நேரடியா மோதுறாங்க....அந்த ரெண்டு வில்லனையும் சமாளிக்க ஒரு பக்கம் ரோபோ ரஜினி இன்னொரு பக்கம் நம்ம விஞ்ஞானி ரஜினி சண்ட போடுறாங்க....

காட்சியமைப்பின் படி மொதல்ல ரோபோ ரஜினிய காட்டுறாங்க...ஆயுதமெல்லாம் பொருத்தப்படாத நல்லவர் , நம்மவர். வெறும் கையாலேயே இயந்திரத்தனமான சண்டை...இதுல தலைவர் ஸ்டைலுக்கு கேக்கவே வேண்டாம்...அப்படி முதல் வில்லன்கிட்ட ரோபோ ரஜினி சண்டை போட்டுட்டு இருக்கும்போது, ரெண்டு பேரும் இடித்து தள்ளிக்கொண்டு கொஞ்ச தூரம் தள்ளி தள்ளி விழுறாங்க. ரெண்டு பேருக்கும் அவங்கவங்க விழுற எடத்துல ஒரு துப்பாக்கி கிடைக்குது.

டக்குன்னு ரோபோ ரஜினி துப்பாக்கிய வில்லனுக்கு குறி வச்சு சுடுது, ஆனா விதி துப்பாக்கில குண்டு இல்லை....இத பயன்படுத்திக்கிற வில்லன், உடனே தன் கையில இருக்குற துப்பாக்கியால ரோபோ ரஜினிய நோக்கி சுடுறான்.

அப்படியே ஸ்லோ மோஷன்ல 360 டிகிரி காமரா வச்சு TIME SLICE TECHNIQUE-ல புல்லட் ரோபோ ரஜினிய நோக்கி வர்றதா காமிக்கிறாங்க. இதை சற்றும் எதிர்பார்க்காத ரோபோ ரஜினி மின்னல் வேகத்துல யோசிக்கிறார் புல்லட், ரோபோ ரஜினி, புல்லட், ரோபோ ரஜினின்னு மாத்தி மாத்தி காமிக்கிறாங்க...

டக்குனு இப்ப ரோபோ ரஜினி தன் கையில இருக்குற துப்பாக்கிய பாக்குறார். புல்லட் கிட்ட வந்துக்கிட்டே இருக்கு...ரோபோ ரஜினி சற்றும் தாமதிக்காம கையில இருக்கிற துப்பாக்கியோட புல்லட் பேரள (புல்லட் சொருகும் அந்த ஆறு துளைகள்) கலட்டி புல்லட் வர்ற எடத்துக்கு நேரா புடிச்சு லாவகமா புல்லட்ட தன்னோட துப்பாக்கிக்குள்ள போக வைக்கிறார்....இப்ப புல்லட் தலைவர் கையில....(மீதியை சொல்லவே தேவையில்ல....)

இப்ப ரோபோ ரஜினி கிட்ட இருந்து ஒரு பஞ்ச் டயலாக்...

"கண்ணா உனக்கு புல்லட்ட சுட மட்டும்தான் தெரியும்....எனக்கு மட்டும்தான் அதே புல்லட்ல ரிவீட் அடிக்கிறது எப்படின்னு தெரியும்...."சொல்லிக்கொண்டே வில்லனை சுட, அவன் செத்து மடிகிறான்.

ரோபோ ரஜினிக்கே கண் கலங்கிட்டா எப்படி...இருங்க இன்னும் மெய்ன் தலைவர் இருக்கார்....!!!

தலைவர் கைல இப்ப ரெண்டு துப்பாக்கி இருக்கு, வில்லன்கிட்ட ஒண்ணுமே இல்ல.... அதனால அவன் பயந்து ஓடி ஒரு பெரிய செவத்த(WALL) கயிற புடிச்சு ஏறி தாண்டி ஒளிஞ்சிக்குறான்....கயத்தயும் கையோட அறுத்துடுறான் வில்லன்....

அவன துரத்திக்குட்டே வர்ற தலைவர், அவன் தாண்டின உடனே செவத்தை வந்து அடையுறார். செவரோ ரொம்ப உயரம், முடிஞ்ச வர முயற்சி பண்றார்...ஆனாலும் தலைவரால செவத்து மேல ஏற முடியல....

இதை எதிர்பார்த்த வில்லன்....செவத்துக்கு அந்த சைட்ல இருந்து தலைவர கிண்டல் பண்றான்....டக்குனு தலைவருக்கு ஒரு பொறி தட்டுது...அப்படியே இங்க ஒரு க்ளோஸ்-அப் ஷாட்.... தலைவர் முகத்த மட்டும் காமிக்கிறோம்...லேசா சிரிச்சுக்கிட்டே...

"ஆண்டவன் கொடுக்கிறதா யாராலையும் தடுக்க முடியாது" - னு சொல்லிக்கிட்டே தன்னோட ஒரு துப்பாக்கிய அப்படியே மேல தூக்கி போடுறார், அந்த துப்பாக்கி அப்படியே செவத்தோட உச்சிக்கு போனதும் இன்னொரு துப்பாக்கியால மொதல் துப்பாக்கியோட TRIGGER-அ நோக்கி சுடரார்...புல்லட் வேகமா போய் துப்பாக்கியோட TRIGGER-ல பட.....பறக்குற துப்பாக்கி அங்கேயே வெடிக்குது...அதில இருந்து வெளி வர்ற புல்லட் நேரா வில்லன பதம் பாக்குது....ரெண்டாவது வில்லனும் செத்து விழுகிறான்....

அதெப்படி மேல பறக்குற துப்பாக்கில தலைவர் கரெக்டா குறி வெச்சார்-னு உங்க எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வரலாம்....அங்கதான் வேல செய்யுது நம்ம விஞ்ஞானி ரஜினியோட மூளை....

அத படத்த க்ளிக் பண்ணி தெரிஞ்சுக்கங்க...நாள பின்ன தலைவர் படத்துல லாஜிக்கே இல்லன்னு யாரும் சொல்லிட கூடாதில்ல....

என்னடா கிளைமாக்ஸ்ல ஷங்கரோட பிரம்மாண்டமே இல்லையேன்னு நீங்க யோசிக்கலாம்...இங்கதான் ஒரு ட்விஸ்ட்டு...இது எல்லாம் நடக்குறது இங்க இல்ல...செவ்வாய் கிரகத்துல...!!!

மறக்காம உங்க கருத்த பின்னோட்டமா போட்டுடுங்க...திட்டணும்னு நினைக்கிறவங்க எனக்கு தனியா மெயில் அனுப்பிடுங்க...(பப்ளிக்கா மானம் போகக்கூடாது இல்ல...)

தலைவருக்காக இதக்கோட செய்யலைனா எப்புடி.....???

6 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இதப் படிச்சிட்டீங்களா அண்ணாச்சி

Srinivas said...

PERARASU Padam paathuttu eludhineengala???? But Sema Time pass....Thalaivar epdi nadichaalum paappomla:)

rajan said...

ha ha ha nice!

சிவன். said...

@SURESH - இதோ வந்துட்டேன்....

சிவன். said...

என்ன ஸ்ரீநிவாஸ், இப்படி சொல்லிட்டிங்க.....பேரரசு படமா இருந்தா எபக்டே வேற....!!!

சிவன். said...

நன்றி ராஜன், ஸ்ரீநிவாஸ் அடிக்கடி வந்திட்டு போங்க...

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...