என்னின் சில ஹைக்கூ முயற்சிகள்.

இறப்பவனின் அவசரம் தெரியாமல்
சொட்டு சொட்டாய் இறங்கியது ,
பாட்டில் ரத்தம்.
------------------------------------------------------------------------------------------------

கோடை விடுமுறை
காலியாய் இருக்குது,
தாத்தா வீடு.

புகைப்படத்திலும் இல்லை
இறந்தே பிறந்த
தங்கச்சி பாப்பா.

வீட்டுக்கொரு மரம்
திடீரென முளைத்தது,
கிறிஸ்துமஸ் ட்ரீ.

வெகுநேரம் நின்று
இருக்கையில் அமர்ந்தேன் - தம்பி
என்றது ஒரு கிழவியின் குரல்.

என்னின் சில கிறுக்கல்கள்.....

பக்கம் பக்கமாய்
எழுதினாள்
அவள் எனக்கனுப்பிய
முதல் கடிதத்தில்.
ஒற்றை வரியில்
முடித்துக்கொண்டாள்
அவள் எனக்கனுப்பிய
கடைசி கடிதத்தில்.

அன்று.
நிலம் நோக்கி
கட்டை விரலால்
கோலம் வரைந்து
சிறு புன்னைகையுடன்
சொன்னாள்,
"உன்னை புடிச்சிருக்கு"
இன்று.
தலை குனிந்து
உள்ளங் கையால்
இதயத்தை கிழித்து
துளி கண்ணீருடன்
சொன்னாள்,
"என்னை மறந்துவிடு".

- இப்படிக்கு சிவன்.
இதற்கு முன் பதிவிட்ட ஹைக்கூக்களுக்கு இங்க க்ளிக்குங்க.
காதலைப்போலன்றி,
பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம்.
(உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்).

//இறப்பவனின் அவசரம் தெரியாமல்
ReplyDeleteசொட்டு சொட்டாய் இறங்கியது ,
பாட்டில் ரத்தம்.//
அற்புதம் நண்பா
//பக்கம் பக்கமாய்
எழுதினாள்
அவள் எனக்கனுப்பிய
முதல் கடிதத்தில்.
ஒற்றை வரியில்
முடித்துக்கொண்டாள்
அவள் எனக்கனுப்பிய
கடைசி கடிதத்தில்//
வலி உள்ள படைப்பு
@வெண்ணிற இரவுகள்....!- ரொம்ப நன்றி மச்சான்.
ReplyDeleteஅட்டகாசம். தூள். பட்டய கிளப்புறீங்க. ஹைக்கூ அதிகம் எழுதவும். தங்கச்சி கவிதை மிக மிக ரசித்தேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
விஜய்
@விஜய் - ரொம்ப நன்றி விஜய். இப்படிப்பட்ட பாராட்டை நான் எதிர் பார்க்கவேயில்லை. கண்டிப்பாக நிறைய ஹைக்கூக்கள் ( இவை ஹைக்கூக்கள் இல்லாவிடினும் இது போன்று) எழுத முயற்ச்சிக்கிறேன்.
ReplyDeleteசூப்பரா இருக்குங்க..அதுவும் அந்த தங்கச்சி பாப்பா ஹைக்கூ..கிளாஸ்..
ReplyDelete@பின்னோக்கி - இந்த தொகுப்பில் எனக்கும் ரொம்ப பிடித்தது அந்த வரிகள் தான்....நன்றி பின்னோக்கி....
ReplyDeleteமச்சான் அருமையாக உள்ளது உங்கள் பதிவுகள்.
ReplyDelete