Thursday, October 15, 2009

ஹைக்கூக்கள் - பகுதி 4.

என்னின் சில ஹைக்கூ முயற்சிகள்.
கொஞ்ச கொஞ்சமாய் சுவாசமின்றி, மெலிந்து இறந்தது - சிவப்பு பலூன். ------------------------------------------------------------------------------------------------------------
நடமாடும் மெழுகு சிலைகள் கொண்ட மேடம் டூசாட் மியூசியும் - பெண்கள் கல்லூரி. ------------------------------------------------------------------------------------------------------------
13 ராமன், 11 சீதை. கணக்கு இடிக்கிறதே...? டெலிபோன் டைரக்டரி. ------------------------------------------------------------------------------------------------------------
தூக்கத்திலே சிரித்தது, அழுது கொண்டே தூங்கிய குழந்தை. ------------------------------------------------------------------------------------------------------------
ரோட்டோரத்தில் அனுமார் படத்தை வரைந்து முடித்தான் - ஊனமுற்ற கிழவன். மழை வந்தது. ------------------------------------------------------------------------------------------------------------
கொட்டித் தீர்த்தது பேய்மழை - விட்டும் தொடர்ந்தது மரங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
பின்னே ஒரு கிறுக்கலும்...
உனக்காகவே பயந்து என் இதயத்தை கயிற்றில் கட்டி வைத்திருக்கிறேன். பின்னே, உன்னை பார்த்தாலே இறக்கை முளைத்து பறந்து விடுகிறதே...!!!! இறுக்கி கட்டவும் பயமாயிருக்கிறது, உள்ளிருக்கும் உனக்கு மூச்சடைத்து விடுமே....!!!

- இப்படிக்கு சிவன்.

இதற்கு முன் பதிவிட்ட ஹைக்கூக்களுக்கு இங்க க்ளிக்குங்க.

காதலைப்போலன்றி, பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம். (உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்).

14 comments:

பின்னோக்கி said...

அனைத்தும் அருமை. படங்களும் மிக பொருத்தமாய் அழகாய்.

//13 ராமன், 11 சீதை.
//கணக்கு இடிக்கிறதே...?
//டெலிபோன் டைரக்டரி.

வித்தியாசமான சிந்தனை. ஒரு வேளை நீங்கள் உண்மையாகவே தோடுகிறீர்களோ ? :)

மழைத்துளியும் அருமை.

எதற்காக உனமுற்ற கிழவன் ? அதுமட்டும் புரியவில்லை (என் அறிவுக்கு)

பிரியமுடன்...வசந்த் said...

//13 ராமன், 11 சீதை//

இதுல லாட் ஆஃப் விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன...

படம் பேசவைக்குது ....கீப் ராக்கிங்...

ஓவியா said...

"13 ராமன், 11 சீதை.
கணக்கு இடிக்கிறதே...?
டெலிபோன் டைரக்டரி."

மறுக்கிறேன்
டெலிபோன் டைரக்டரியில்
மட்டுமல்ல

சிவன். said...

ரொம்ப நன்றி பின்னோக்கி....,
தேடலெல்லாம் ஏதுமில்லை மச்சான்...!!! : )

ஊனமுற்ற கிழவன் நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம் மச்சான்....
1. வரையப்படுவது அனுமார் (வலிமைக்கு பெயர் போனவர்), ஆனால் அவரை வரைவது ஒரு ஊனமுற்ற கிழவன்.
2.'ஊனமுற்ற' என்னும்போது அந்த கிழவன் மேல் இன்னும் கொஞ்சம் அனுதாபம் கூடும்.
3. ஊனமுற்ற கிழவனும் " தன்னாலான ஒரு வேலையே செய்து பிழைக்கிறான் "
என்று ஒரு கொசுறு செய்தி.
அதனால்தான் இந்த இடத்தில கிழவன் என்பதை விட ஊனமுற்ற கிழவன்னு சொன்ன இன்னும் பொருத்தமா இருக்குமேன்னு தோணுச்சு...!!! மத்தபடி வேற எதுவும் உள்குத்து இல்ல... : )

சிவன். said...

@ வாங்க வசந்த் மச்சான் - எழுதும் நேரத்தை விட அதற்கான படங்கள் தேடத்தான் எனக்கு அதிக நேரம் ஆகுது....நல்ல வேலை அது வீண் போகலை....

//13 ராமன், 11 சீதை//
ஏதோ நம்பால ஆனா ஒரு சின்ன மெஸ்சேஜ்....!!! சமூகத்தில் சீதைகள் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கின்றன...!!!!
மத்தவங்களுக்கு எப்படி தெரியும் ? 'BACHELORS' நமக்குதானே இந்த கவலை எல்லாம் !!! : )

சிவன். said...

@ஓவியா -
தாராளமா மறுப்பு தெரிவிங்க, உண்மை அதுதான்.
ஒதுக்கீடு கிடக்கட்டும், எண்ணிக்கையாவது சமமாக இருக்கட்டும்.

ramesh said...

மழைத்துளி அருமை..
நீங்க சொன்ன பிட்பாடு தான் அனுமார் கிழவன் விளங்கிட்டு.
தொடருங்கள்
வாழ்த்துக்கள்

அருண். இரா said...

எப்படி மச்சி உமக்கு மட்டும் இப்படி டபுகு டபுகு னு கவித தோணுது?!?..நம்ம சிற்றறிவுக்கு த்தான் ஒன்றும் புரியவில்லை .. கலக்குங்க :)

வேந்தன் said...

எல்லாம் அருமையான ஹைக்கூக்கள். வாழ்த்துக்கள்.

கவிதை(கள்) said...

நான் ஏற்கனவே கூறியது போல அனைத்து ஹைக்கூக்களும் சூப்பர்

வாழ்த்துக்கள்

விஜய்

Sivaji Sankar said...

All hikoos are super machaan..

சிவன். said...

ரமேஷ், அருண், வேந்தன் , விஜய், சிவாஜி ஷங்கர் - ரொம்ப நன்றி மச்சான்ஸ்...!!!!

Raj said...

அருமை!

பா.ராஜாராம் said...

சூப்பர் மச்சான்!

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...