Wednesday, May 5, 2010

தமிழின் டாப் 5 பேய் படங்கள்.


தமிழில் வெளியான சிறந்த (திகிலூட்டிய, அடிவயிற்றை கலங்கடித்த, பயமுறுத்திய, கால்சட்டையை ஈரமாக்கிய ) ஐந்து பேய் படங்களை வரிசைப்படுத்ததான் இந்த பதிவு.



இப்படி ஒரு பதிவு எழுதலாம்னு தேட ஆரம்பிச்ச பிறகுதான் நம்ம மர-மண்டைக்கு ஒரு உண்மை எட்டியது. தமிழ்ல வந்த நல்ல பேய் படங்களின் மொத்த எண்ணிக்கையே ஒரு பத்துதான் என்று. திரில்லர் படங்களை இந்த ஆட்டத்துக்கு நாங்க சேர்த்துக்கலை. ஒன் அண்ட் ஒன்லி பிசாசு படங்கள்.  :)

டாப் - 5 படங்களை பார்க்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட தவறவிட்ட மத்த படங்களை பார்ப்போம்.

ஷாக் - பிரசாந்த், மீனா நடிப்பில் வெளி வந்த படம், பூட்(BHOOT) என்ற ஹிந்தி படத்தின் ஈயடிச்சான் காப்பி. சில காட்சிகள் லைட்டா (??) பயமுறுத்தினாலும், மொத்தமா பார்க்கும்போது படம் கொஞ்சம் சுமார் தான்.

ஷாக் - கரண்ட் கட்.


அது - நம்ம ஹோம்லி நாயகி சினேகா நடித்து -வெளிவந்த திரைப்படம். (இப்படியெல்லாம் படம் வந்ததான்னு கேக்கப்புடாது). இதுவும் தி ஐ(THE EYE) என்ற திரைப்படத்தின் தழுவல் (இங்க பேய் படங்களுக்கு ஐடியா பஞ்சமோ?).



சிவி - இந்த படத்தில் பயமுறுத்தும் பேய் காட்சிகள் ரொம்ப கிடையாது, ஆனா பேய் பழி வாங்கும் கதை. இந்த படமும் ஷட்டர் என்கிற திரைப்படத்தின் தழுவல்.


நெஞ்சம் மறப்பதில்லை - கொஞ்சம், இல்ல இல்ல ரொம்ப பழைய படம். ப்ளாக் அண்ட் வொய்ட் பிலிம். பேய், ஆவி, பூர்வ ஜென்மம் என்று கலந்தடித்து பார்ப்பவர்களின் இதயத்தை

கலங்கடித்த திகில் திரைப்படம். கொடூர ஒப்பனை கிடையாது, பயமுறுத்தும் அசிங்கமான பேய்கள் கிடையாது, இருந்தாலும் அந்த ஜாமீன் பங்களாவை  காட்டும் ஒவ்வொரு

நிமிடமும் திக் திக் பகீர் பகீர். நம்பியார் ஒரு பாதியில் பேசி மிரட்டுவார், இன்னொரு பாதியில் பேசாமலேயே மிரட்டி இருப்பார்.

இந்த சூப்பர் படத்தை நம்ம லிஸ்ட்டுல சேர்ப்பதா இல்லையா என்று ஒரு குழப்பம்...அதனால இந்த படத்துக்கு சிறப்பு பரிசு (நம்ம வாழ்நாள் சாதனையாளர் விருது மாதிரி) – SPECIAL MENTION.

இந்த படங்களை தவிர்த்து வா அருகில் வா, அந்தி வரும் நேரம், அமாவாசை இரவு, ராசாத்தி (சம்திங்), யார் (இந்த படம் நல்லா இருக்கும் , அனால் சாமிக்கும் பேய்க்கும் சண்டை என்பதுபோல் தடம் maarividum, மற்றபடி இதுவும் ஒரு சூப்பர் படம்)...etc போன்ற நல்ல பேய் படங்களும் உண்டு, என்ன டாப் ஐந்தில் இடம் பெறவில்லை.

இனி நம்ம டாப் -5 படங்கள்.



இந்த படங்களுக்கு எல்லாம் அறிமுகமே தேவை இல்லை. இருந்தாலும் ஆங்காங்கே சில கொசுறு செய்திகள் .

இந்த படங்களை எல்லாம் வரிசைப் படுத்தவில்லை மச்சான்ஸ், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் வெளிவந்து கலக்கிய (வயிற்றைத்தான்) திரைப்படங்கள்.

யாவரும் நலம்(2009).




ஒரே நேரத்தில் ஹிந்தி (13B), தமிழ் என்று இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற திரைப்படம். பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். மனுஷன் மிக்ஸிக்குள்ள  எல்லாம் கேமாராவ வச்சு எடுத்திருப்பார்.
இன்னொரு விஷயம், நெக்ஸ்ட் பார்ட் எடுக்க பிளான் பண்ணிட்டு இருக்காங்கலாம்.

டைரக்டர் விக்ரம் குமார் இயக்கம்.வழக்கமான பேய்  படங்கள் போல் அல்லாமல் கடைசி வரை மர்மத்தின் முடிச்சை அவிழ்க்காமல் காட்சிகளை வைத்தே பயமுறுத்திய படம். அதனாலநம்ம லிஸ்ட்டுல இந்த படத்துக்கு ஒரு இடம்.ஷங்கர் எஹ்சான் லாய்-இன் பின்னணி இசை,பக்கபலம்.

பதிமூனாம் நம்பர் வீடு(1990).



டைரக்டர் : பேபி
நடிகர்கள் : நிழல்கள் ரவி, ஜெய்ஷங்கர், ஸ்ரீப்ரியா,

இந்த படத்த நான் நாலாவது படிக்கும்போது பார்த்ததா ஞாபகம். ரொம்ப கஷ்டப்பட்டு ஒளிஞ்சிக்குட்டே பார்த்தேன் (அவமானம்). படம் நார்மலா போயிட்டு இருக்கும் திடீர் திடீர்னு ஒரு அதி பயங்கரமான பேய் முகத்த காண்பிச்சு டரியல் ஆக்கிடுவாங்க. ஆரம்பத்தில ஒரு பெய்ண்டிங் சீன் வருமே அது சீனு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த படத்த பார்க்கும்போது நாங்க தங்கியிருந்த வீட்டோட நம்பரும் பதிமூனுதான்.


மை டியர் லிசா. (1987)








டைரக்டர் : பேபி
இசை : கங்கை அமரன்.
நடிகர்கள் : நிழல்கள் ரவி, சாதனா.
ஒளிப்பதிவு : நிவாஸ்.

இந்த படத்திற்கும் அறிமுகமே தேவை இல்லை, பார்த்தவங்கள் கேளுங்க, பயந்த கதையை பக்கம் பக்கமா சொல்வாங்க.


ஜென்ம நட்சத்திரம் (1980s).


நடிகர்கள் : பிரமோத், சிந்துஜா, நாசர்.
டைரக்டர் : தக்காளி ஸ்ரீனிவாசன்.


ஆங்கிலத்தில் வந்த ஓமன் படத்தின் தமிழாக்கம், இங்கயும் சும்மா மெரட்டி இருப்பாங்க.  அதுவும் அந்த ஆயா ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே போதும், எதுக்கு கீழயோ சூன்யம் வச்சா மாதிரியே இருக்கும். அந்த குட்டி பையனும் செம டெரரு. ம்யூசிக்கும் பயங்கரமாஇருக்கும்.


உருவம் (1991)


டைரக்டர் : ஜி.எம்.குமார்.
நடிகர்கள் : மோகன், விஸ்வம், பல்லவி.

இதுதான் மச்சான்ஸ் தரவரிசையில் டாப் ரேட்டட் படம். கடைசியில் மோகன் வரும் காட்சிகள் எல்லாம் செம க்ரிப்பிங். மோகன் சொந்த குரலில் பேசிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று. கடற்கரையில் பட்ட பகலில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கூட மிரட்டியிருக்கும். இது கண்டிப்பா பார்க்கவேண்டிய படம். நாலஞ்சு பேர துணைக்கு வச்சுக்கிட்டு இந்த படங்களை எல்லாம் பாருங்க மச்சான்ஸ்.

----------------------------------------------------------------------------------------
எங்க ஜகன்மோகினி படத்த லிஸ்ட்டுல காணும்னு கேக்குற மச்சான்ஸ் எல்லாருக்கும், மச்சான்ஸ் விமர்சன குழு சார்பாக ஒரு சுறா பட டிக்கட் பரிசு.
----------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாள் முன்னாடி போடப்பட்ட டாப்-5 போலீஸ் படங்களின் லிங்க் இங்கே.

                     - இப்படிக்கு மச்சான்ஸ் விமர்சன குழு
                                       (விகடன் விமர்சன குழுவின் கஸின் பிரதர்ஸ்.)


29 comments:

  1. சரியான தொகுப்பு மச்சான்...உருவம் எனக்கு மறக்கமுடியாத பலநாள் தூக்கத்தை பறித்த படம்...

    ReplyDelete
  2. ஜெகன் மோகினி படத்துக்கும் சுறாவுக்கும் இப்படி ஒரு connection இருக்குனு சொல்லி பயம் காட்டுறதை விட என்ன உண்டு?

    ReplyDelete
  3. ஆமாம் ஆமாம்,நான் பார்த்து பயந்து போன படம்-மை டியர் லிசா

    பொம்மை-2 விரைவில் இந்த லிஸ்டில் வருமா மச்சான்ஸ்

    ReplyDelete
  4. நல்ல பதிவு.. சுறா டிக்கெட்டா..?? விடு ஜூட்..

    ReplyDelete
  5. யாவரும் நலம் தவிர எதுவுமே பாத்ததில்லை!

    ReplyDelete
  6. Sema review! Adhuvum 13aam number veedu - naan 3rd standard padikarappo parthen...2 naalu fever vandhuduchu! Uruvam...bedsheet ah porthi chinna opening vechu parthen..avlo bayam! 100% justified thara varisai idhu!

    ReplyDelete
  7. நன்றி வினையூக்கி மச்சான் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  8. நன்றி மாப்பு...உருவம் மறக்கக்கூடிய படமா அது...அந்த காலத்திலேயே நம்ம மைக் மோகன் மிரட்டியிருப்பார்....

    ReplyDelete
  9. சித்ரா மேடம்...ரெண்டு படமுமே டெர்ரர் பிலிமு...(ரெண்டரை மணி நேரம் அந்த கொடுமைய அனுபவிச்சாதான் புரியும்...)

    ReplyDelete
  10. நன்றி ஜில்தண்ணி மச்சான்...நான் பொம்மை முதல் பாகம் தான் பார்த்தேன் (பாஸ்ட் பார்ட்டு செம மொக்கை, நம்ம தமிழ் படங்கள் எவ்வளவோ மேல்...)அந்த பயத்திலேயே ரெண்டாம் பாகம் இன்னும் பார்க்கவில்லை...

    ReplyDelete
  11. ஜெய் , அட்ரஸ குடுத்திட்டு போங்க, டிக்கட்ட கொரியர்ல அனுப்பி வைக்கிறோம்...

    ReplyDelete
  12. பப்பு மச்சான், வாய்ப்பு கிடைத்தால் டாப் - படங்களை கண்டிப்பாக பார்க்கவும்... இந்த படங்கள் எண்பதுகளில் வந்தவை என்பதை மறந்துடக்கூடாது ...

    ReplyDelete
  13. THANKS சிந்து... ஹா ஹா..நம்மளுக்கு காய்ச்சலெல்லாம் வரலை, ஆனா நானும் பார்க்கும்போது போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டுதான் பார்த்தேன்...பதிமூணாம் நம்பர் வீடு பார்க்கும்போதெல்லாம் ஒரு ரெண்டு மூணு தடவை பயத்துல கண்ண மூடிக்குட்டுதான் பார்த்தேன் (??)...!!! :)

    ReplyDelete
  14. நான் பார்த்த முதல் பேய்ப் படம் கதைத் தட்டிய மோகினிப் பேய்...அப்புறம் லிசா..சீமா நடிச்ச மலையாளப் படம்...

    ReplyDelete
  15. superrrr :)

    ராசாத்தி ராசாத்தி வரும் நாள்.

    ReplyDelete
  16. நன்றி ஸ்ரீராம் மச்சான்...வருகைக்கும் கருத்துக்கும்....அங்கயும் ஒரு லிசா இருக்கா...????

    ராஜ் மச்சான் நன்றி , கரெக்ட்டுங்க ராசாத்தி வரும் நாள் கஸ்தூரி நடிச்ச படம், பதிவு எழுதும்போது பேரு நினைவுக்கு வரலை...

    ReplyDelete
  17. இதெல்லாம் நானும் ஸ்கூல் படிக்கும் போதே பார்த்து பயந்த படங்கள் . சில நாட்கள் தனியா இருக்கவே பயம்.

    :-)))

    ReplyDelete
  18. ஆயிரம் ஜென்மங்கள் படம் விட்டு விட்டீர்களே? ரஜனிகாந்த், லதா & விஜயகுமார் நடித்தது. இயக்குனர் ஸ்ரீதர் என நினைக்கிறேன். நிஜமான பேய் படம் அது தான்.

    ReplyDelete
  19. நன்றி ஜெய்லானி மச்சான் - வருகைக்கும் கருத்துக்கும்...

    ReplyDelete
  20. நான் நெனச்ச மாதிரியே அதே ரேட்டிங் போட்ருக்கீங்க... 13 ஆம் நம்பர் வீடு பாத்த அடுத்த நாள் எனக்கு காய்ச்சலே வந்திருச்சு.... (இப்போ வராது அது வேற விஷயம் !) அதே மாதிரி உருவம் சூப்பர் படம்.... நல்ல ரேட்டிங் போட்ருக்கீங்க. அப்புறம் சொல்ல மறந்துட்டேன் நீங்க ராசாத்தி (something ) னு போட்டுருக்கீங்களே அந்த படம் பேரு “ராசாத்தி வரும் நாள் ” ... ok மச்சான் carry on

    ReplyDelete
  21. ஓஹோ எல்லாம் கமெண்ட் அடிச்சுருக்கீங்களா சாரி மச்சீஸ் நான் இப்ப தான் கமெண்ட்ஸ் எல்லாம் பாத்தேன்.... மிஸ் சிந்துக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை நானும் 13 ஆம் நம்பர் வீடு 3rd std படிக்கும் போது தான் பாத்தேன்.... (ஆனால் நான் சிந்ந்து மேடம் அளவுக்கு வயசு இல்லீங்க... படம் 1991 ல வந்ததா கேள்விபட்டேன் ஆனா நான் 1996 ல தான் பாத்தேன் so i am YOUTH ma :) )

    ReplyDelete
  22. 13 number vidu I c it in my second std.ela pasangalum payanthukte pathom....

    ReplyDelete
  23. Evil dead part 1 payangaramana pei padam...

    ReplyDelete
  24. உருவம் படம் நல்ல படம் உண்மையில பேய் படம் பார்த்தது போல ஒரு உணர்வை தரும் என்பதில் எந்த ஐயம் இல்லை

    ReplyDelete
  25. சூப்பர் மச்சி......

    ReplyDelete
  26. இதில் எனக்கு பிடித்தது என்னவென்றால்,
    உருவம் படத்தில்.....
    தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே, ஒருவனுக்குள் புகுந்திருக்கும் பேய்யை விரட்டுவதை 15 - 20 நிமிடங்கள் வரை காட்டுவது
    ஆச்சரியத்தை ஏற்ப்படுத்துகிறது.

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...