Friday, August 28, 2009

டூயல் (DUEL) -1971 ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

டூயல் (DUEL), இதுதான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கோட முதல் திரைப்படம்(1971). ஒரு பிளைமௌத் கார், ஒரு டேங்கர் லாரி, நம்ம ஹீரோ அப்புறம் ஒரு முகம் தெரியாத வில்லன்.இவ்வளுவதாங்க படத்துல வர்ற முக்கிய பாத்திரங்கள் இந்த ஒன்றரை மணி நேர திரைப்படம் முழுதும் இந்த நாலு கதாப்பாத்திரங்களுக்கு நடுவுல நடந்து முடிஞ்சிடுது.

சில வருஷங்களுக்கு முன்னாடி சன் டிவி-ல வந்த மர்ம தேசம் நாடகம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அந்த நாடகத்துல இப்படிதான் ஒரு டேங்கர் லாரி எல்லா கதாப்பாத்திரத்தையும் திடீர்னு வந்து கொன்னுட்டு மறைஞ்சு போயிடும்.

இந்த படத்த அந்த லாரி கான்செப்டோட முன்னோடின்னே சொல்லலாம்.என்ன வித்தியாசம் இதுல லாரி கடைசிவரை ஒரே ஆள கொள்ள போராடுது.

இதுதான் கதைக்களம்.

ஒரு சந்திப்புக்காக ஹீரோ தன்னோட பிளைமௌத் கார்ல வெளியூர்க்கு கிளம்புகிறார். டப்பிங் பட ஸ்டைல்ல சொல்லனும்னா, 1971ம் வருடம், காளிபோர்னியா மாகானத்துல டேவிட் பயணம் செஞ்சிட்டு இருக்கும் போது ,அவருக்கு முன்னாடி புகைய கக்கிக்கிட்டு ரொம்ப மெதுவா போற ஒரு டேங்கர் லாரிய சைடு வாங்கிட்டு முன்னாடி போயிடுறார். கொஞ்சம் நேர கழிச்சு அதே டேங்கர் லாரி இவரு கார ஓரம் கட்டிட்டு அது முன்னாடி எஸ் ஆகுது.

முன்னாடி ஜகா வாங்குன லாரிக்காரன் வேகமா போகாம திரும்ப மெதுவாவே போறான். அதனால பேஜார் ஆகுற ஹீரோ வேற வழி இல்லாம திரும்ப சைடு வாங்கிட்டு முன்னாடி வர்றார்.

இந்த எடத்துலதான் படம் வேகம் புடிக்குது.மாத்தி மாத்தி லாரியும் காரும் கொஞ்ச நேரம் இந்த மாதிரி விளையாடுறாங்க.ஒரு சந்தர்ப்பத்துல முன்னாடி போற லாரி வேணும்னே மெதுவா போறது மட்டும் இல்லாம ஹீரோவுக்கு சைடும் குடுக்காம அவருக்கு தண்ணி காட்டுது. சில நிமிஷத்துல வெறுப்பின் உச்சத்துக்கு போற ஹீரோ, ரோட்ட விட்டு இறங்கி ஓவர் டேக் பண்ணி அளவுக்கு மீறிய ஸ்பீட்ல போய் ஆபத்துல மாட்டிகுறார். இதுதான் படத்தோட முதல் சில காட்சிகள். விபத்துல சிக்குற ஹீரோ-வ லாரி விடுதா, தொடருதாங்குறது மீதி படம்.

இந்த படத்தோட முக்கியமான ஹைலைட் என்னன்னா, கடைசி காட்சி வரைக்கும் லாரி டிரைவரின் அடையாளம் மறைக்கப்படுகிறது. (நம்ம அஞ்சாதே படத்துல வர்ற மொட்ட கேரக்டர் மாதிரி). காமிராவ படத்துல பயங்கரமா யூஸ் பண்ணி இருக்காங்க, பல சீன்-ல காமிரா கோணம் நம்ம பிரம்மிக்க வைக்குது.

கதைக்களம் கடைசி வரைக்கும் ஒன்னு தான் அப்படினாலும் ஸ்பீல்பெர்க் அவரோட இயக்கம் படத்த ரசிக்க வைக்குது.அந்த லாரி-ய எங்க புடிச்சாங்கன்னு தெரியல, நிஜமாகவே அது சீன்-ல வருவதே மிரட்டலாக உள்ளது.படத்துல முகம் தெரியும் ஒரே ஒரு பாத்திரம், ரெண்டே மணி நேரத்துல நடந்து முடியுற திரைக்கதை, இது எல்லாத்துக்கும் மேல இயக்குனர் ஸ்பீல்பெர்க் இவைதான் இந்த படத்த பார்க்க தூண்டும் விஷயங்கள்.

இந்த படத்த நீங்க U-Torrent ல பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இங்க கிளிக்குங்க

பாத்துட்டு உங்க கருத்துகளையும் போட்டுட்டு போங்க மச்சான்ஸ்...

படத்தின் டிரைலர் இதோ.....

4 comments:

  1. ரொம்ப நன்றி தலைவா... நீங்க கொடுத்த இணைப்பை உபயோகப்படுத்தி அந்த படத்தை தரவிறக்கி பார்த்துவிட்டேன். ரொம்ப நாளா பாக்க நினைச்ச படம்.

    அருமையா இருந்தது. அதே போல் ஹேங்க் ஓவரும் தரவிறக்கி ஆச்சு. அதையும் இன்று இரவு பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன்.

    நன்றிகள் பலப்பல!

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி சென்ஷி....படத்த பாத்துட்டு சொல்லுங்க...அப்படியே சூசைட் கிளப்பும் பாருங்க வித்தியாசமான திரைப்படம்`.....

    ReplyDelete
  3. joy ride (2001) படமும் நல்லா இருக்கும் பாருங்க.

    ReplyDelete
  4. நன்றி பின்னோக்கி.... JOY RIDE சீக்கிரமே டவுன்லோட் பண்ணிட வேண்டியது தான்....

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...