NO MANS LAND – 2001-ல் சிறந்த வேற்று மொழி படத்திற்கான ஆஸ்கரை வென்ற திரைப்படம்.போஸ்னியா செர்பியா நாடுகளுக்கு இடையேயான போரை மையமாக கொண்டு புனையப்பட்ட திரைக்கதை.இரு நாடுகளுக்கிடையே யாருக்கும் சொந்தமில்லாமல் அனாமத்தாய் கிடக்கும் நிலத்தை "நோ மேன்'ஸ் லேன்ட்" என்று சொல்லுவார்கள்.நம்ப சென்னை பாசையில இதத்தான் பொறம்போக்கு நிலம் னு சொல்வாங்க.
இந்த நோ மேன்'ஸ் லேன்ட்-ல சிக்கிக்கொள்ளும் மூன்று ராணுவ வீரர்களை (ஒரு செர்பியா மற்றும் இரண்டு போஸ்னியா வீரர்கள்) மையமாகக்கொண்டு 2001-இல், முன்னாள் போஸ்னிய ராணுவ வீரரான டானிஸ் டனோவிக் (Danis Tanovic) இயக்கிய திரைப்படம் தான் "நோ மேன்'ஸ் லேன்ட்".
அடர்ந்த பனி படர்ந்த இரவில் தொடங்கி மறுநாள் அந்தி வரை கதை நீடிக்கிறது.போஸ்னிய மீட்பு வீரர்கள் தங்கள் ராணுவ தளத்திற்கு மீண்டும் திரும்பும் வழியில் பனியின் தாக்கம் அதிகமாய் இருந்ததால் சிறிது நேரம் பணியின் தாக்கம் குறையும்வரை நோ மேன்'ஸ் லேன்ட்டிலேயே காத்திருப்போம் என முடிவு செய்து, பின்னர் அசதியில் அனைவரும் தூங்கிவிடுகிறார்கள்.
மறுநாள் விடிந்ததும் உறங்கிக்கொண்டிருந்த அனைவரையும் நோக்கி செர்பியன் துப்பாக்கிகள் பெரும் சத்தத்தோடு சுட ஆரம்பிக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் எல்லோரும் மடிய, சிகி (ciki) என்ற நபர் மட்டும் காயத்தோடு தப்பி அருகில் இருக்கும் அகழியில்(trench) பதுங்கிக்கொள்கிறார்.
சிறுது நேரம் கழித்து ஆள் நடமாட்டத்தை கண்காணிக்க அந்த அகழிக்கு இரண்டு செர்பிய வீரர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் தான் தயாரித்த கண்ணிவெடியின் பெருமையை விளக்கி காண்பிப்பதற்காக இறந்த போஸ்னிய வீரரின் சடலத்தின் கீழ் புதைக்கிறார்.
அதே குழியில் பதுங்கி இருந்த சிகி, உடனே அந்த இரண்டு செர்பிய வீரர்களையும் நோக்கி சரமாரியாய் சுடுகிறார். அதில் கண்ணிவெடியை புதைத்த செர்பிய வீரன் இறக்க நேரிடுகிறது, நினோ என்ற உடன் வந்த மற்றொரு செர்பிய வீரன் சில குண்டடிகளோடு உயிர் தப்பிக்கிறான்.
இப்ப நினோ மற்றும் சிகி மட்டும் பதுங்கு குழியில் உயிருடன். "உன் நாடுதான் முதலில் போர் தொடங்கியது, இல்லை உன் நாடுதான் முதலில் போர் தொடங்கியது" என இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போக, அதே நேரம் புதைக்கப்பட்ட கண்ணிவெடியின் மேல் கிடந்த ஆசாமி முனக ஆரம்பிக்கிறான்.
தன சக நாட்டு வீரன் உயிருடன் இருப்பதை காணும் சிகி, அவனை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறான்.
பிறகு சிகியும் நினோவும் அகழியின் மேல்புறம் சென்று அவரவர் நாட்டு எல்லைகளை நோக்கி வெள்ளை கொடிகளை அசைத்து உதவி கேட்கிறார்கள். இதை கவனித்த இரண்டு நாடுகளும் UNPROFORன் (United Nations Protection Force -எல்லாம் ஐ.நா தாங்க) உதவியை நாடுகிறது. முதலில் உதவி செய்ய மறுக்கும் ஐ.நா, ஒரு ஆங்கில செய்தி தொடர்பாளர் ஊடகத்தின் மூலம் கொடுக்கும் அச்சுறுத்தலின் காரணமாக உதவி செய்ய ஒப்புக்கொள்கிறது.
ஒப்புக்கொண்டபடிஐ.நா, அவர்களை (மூவரையும்) காப்பாற்றுகிறதா, கண்ணிவெடி செயலிழக்கப் படுகிறதா, என்பது மீதிக் கதை.என்னதான் முழுக்கதையையும் தெரிந்துகொண்டு நீங்கள்பார்த்தாலும், சில படங்கள் திரையில் காணும்போது வேறு பரிமாணத்தில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்.
இத்திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு காரணம், இதுவரை சொல்லப்படாத கதை (என்னதான் நாம் ஏகப்பட்ட போர்ப்படங்கள் பார்த்திருந்தாலும் இந்த கதை புதிதே), மற்றும் ஆழ்ந்த திரைக்கதை. இதுவரை ஆஸ்கர் உட்பட இப்படம் 42 சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியஸ் ஆன கதையில் அதன் பாரத்தை குறைக்கும் விதமாக இடையிடையே கொஞ்சம் காமெடியை புகுத்தி (இதைத்தான் ப்ளாக் காமெடி BLACK COMEDY என்பார்கள்) நகர்த்தும் டைரெக்டர், இப்படத்தின் மூலமாக போரின் எதிர்ப்பை அப்பட்டமாக வெளியிடுகிறார்.
நகைச்சுவை கலந்த இந்த வரலாற்றுப் படத்தை நிச்சயமாய் ஒருமுறைக்கு மேல் பார்க்கலாம். படத்த பார்த்தவங்க மறக்காம உங்க கருத்துகளையும் இங்க பதிவு செயுங்க.
படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க
படத்தின் டிரைலர் இதோ...
//சென்னை பாசையில இதத்தான் பொறம்போக்கு நிலம் னு சொல்வாங்க.
ReplyDelete:))
பார்த்திருக்கேன் மச்சி ..மறக்க முடியுமா "லகான் " படத்த ஆஸ்கார் ல அடிச்சப் படமாச்சே ..
ReplyDeleteபடிச்ச உடனே இன்னொரு தபா பார்க்கும் போல இருக்கு .. நல்ல எழுத்து !!
@பின்னோக்கி
ReplyDeleteநான் ரசித்த அதே வரிகள்..
நன்றி உங்கள் அழகான சிரிப்புக்கு
@அருண்.இரா
நீங்க சொன்ன செய்தி தான் மச்சி என்னை இந்த படம் பார்க்க துண்டிய முதல் காரணம்..
என்ன இருந்தாலும் நம்ப லகானுக்கு ஆஸ்கார் கிடைத்திருக்கலாம்..
un peace keeping general table மேல அந்த பொண்ணு கால்மேல கால்போடு
ReplyDeleteஎன்ன புரில்ல.