லோன் குடுக்காத பேங்க் ஆபிஸர என்ன செய்யலாம் ?
அ . சாபம் விடலாம்.
ஆ. சூனியம் வைக்கலாம்.
இ. சாத்தான ஏவி விடலாம்.
ஈ. இது எல்லாமே !!!!
இதுதான் இந்த படத்தோட மூலக்கதை.
மொதல்ல படத்த பார்க்க தூண்டும் விஷயங்கள் என்னென்ன ??
இந்த படத்தோட டைரக்டர் EVIL DEAD புகழ் SAM RIAMI . பல வருடங்கள் கழித்து SAM RIAMI-விடமிருந்து மீண்டும் ஒரு திகில் படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு.( ஈவில் டெட் 1981-இல் வெளிவந்தது). ஸ்பைடெர் மேன் படங்களை இயக்கிவரும் இவரே.அதனால் இந்த படத்துக்கு கொஞ்சம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது,ஈவில் டெட்டை போல் கொடூரமான பேய்கள் என்று இல்லாமல் இதில் கொஞ்சம் வித்தியாசமாய் மந்திரம், சூனியம், சாத்தான் என்று போகிறது படம்.
படத்தின் முதல் காட்சியில் 1969-ல் ஒரு மெக்ஸிகன் ஜோடி அவர்களுடைய மகனை தூக்கிக்கொண்டு மீடியம்(பேய்களுடன் பேசுபவர் - நம்மூர் ஆவி அமுதா அவர்களை போல) என்று சொல்லப்படும் ஒரு பெண்ணிடம் வருகின்றனர். ஒரு நாடோடி கூட்டத்திடமிருந்து தன் மகன் ஒரு நகையை திருடிவிட்டதாகவும், அன்றிலிருந்து இவன் நலமாக இல்லை என்றும் தெரிவிக்கிறார் அந்த அப்பா. இதற்க்கெல்லாம் காரணம் இந்த நகையை தொலைத்தவரின் சாபம் தான் என்கிறாள் அந்த மந்திரவாதி பெண் (மீடியம்). அவள் அந்த சிறுவனுக்கு உதவ முற்படும் போது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தியால் தாக்கப்பட்டு அந்த சிறுவனும் கொல்லப்படுகிறான்.
அப்படியே படம் மீண்டும் 2009-ல தொடருது.வங்கியில பதவி உயர்வுக்காக காத்திருக்கிறார் நம்ம ஹீரோயின் கிறிஸ்டின். ஆனா அங்க அவருக்கு போட்டியா ஒரு மொட்ட மண்டையன். அதனால தன் வீட்டை காப்பாத்தும் படி வரும் ஒரு கிழவியிடம் ரொம்ப கறாரா நடந்து தன்னோட மேலாளர் கிட்ட நல்ல பேர் வாங்க வாங்க முயற்சி பண்றார் கிறிஸ்டின். ஆனா அந்த வயதான பெண்மணியோ கிறிஸ்டின் கால்ல விழுந்தும் கெஞ்சி கேட்டுகுறார், ஆனாலும் வேற வழியே இல்லாததால கிறிஸ்டின் அந்த லோன நிராகரிக்குறாங்க. அதோடு இல்லாம வங்கி காவலாளிகள விட்டு அந்த வயதான பெண்மணியும் வெளில அனுப்ப சொல்றாங்க. இதனால தான் அவமானப்பட்டதா நினைக்கிற அந்த கிழவி உடனே கிறிஸ்டின் -அ பாத்து கத்திக்கிட்டே சாபம் விட்டுட்டு அழுதுட்டு போறாங்க.
இங்கதான் படம் மீண்டும் விருவிருப்படையுது. அன்று இரவே கார் பார்கிங்க்ல கிறிஸ்டின் அந்த கிழவியால மீண்டும் பயங்கரமா தாக்கபடுறார். இதனால மன உளைச்சலுக்கு ஆளாகுற கிறிஸ்டின்-கு மட்டும் அப்பப்ப சில வினோத ஒலிகள் கேட்கிறது. கிறிஸ்டின் என்ன செய்யுறதுன்னு தெரியாம ஒரு ஜோசியர அணுகுறாங்க (ஒரு இந்தியர் இந்த கதாப்பாதிரத்த செஞ்சிருக்கார்),, அவர் கிறிஸ்டின் கிட்ட உன்னை யாரோ சாபம் விட்டுருக்காங்க அதனால்தான் இப்படி எல்லாம் நடக்குதுன்னும் சொல்றார்.இது லாமியா(குழந்தைகளை திண்ணும் ஒரு கிரேக்க பெண் சாத்தான்) அப்படிங்கிற சாத்தானோட வேலை அப்படிங்கருதும் கண்டு பிடிக்கிறார்.
கடைசியில லாமியா கிட்டயிருந்து கிறிஸ்டின் தப்பிக்கிறாங்களா இல்லையா அப்படிங்கறதுதான் மீதி கதை. அங்க அங்க சில பயமுறுத்தும் திகில் காட்சிகள், கடைசியில் U turn அடிக்கும் ஒரு ட்விஸ்ட், அமைதியாக நகர்ந்து பயமுறுத்தும் திரைக்கதை ரசிக்க வைக்குது.
படத்தை ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் வைத்து இருட்டு எபெக்டோட பாத்தா இன்னும் நல்ல இருக்கும்.
படத்த TORRENT-ல தரவிறக்கம் செய்ய இங்க கிளிக்குங்க.
படைத்திட டிரைலர் இதோ.
Drag Me To Hell - Film Trailer
சுருக்கமாக சஸ்பன்சைக் கெடுக்காமல் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.
ReplyDeleteகையில் இருக்கிறது விரைவில் பார்க்க வேண்டும்.
:-)
ReplyDeleteஇந்தப் படத்த பார்த்தாச்சு தலைவரே.. முக்கியமா சாம் ரெய்மி படங்கறதால மாத்திரம்தான் பார்க்க ஆசை வந்தது.
கிழவி கொஞ்ச நேரம் வந்தாலும் செம்மயா பயமுறுத்திட்டு போயிடுவாங்க.. அதே போல அந்த இறுதிகாட்சியும் செம திக் திக்..!
link கொடுத்தற்க்கு நன்றி.
ReplyDeleteமுருகானந்தன்: நன்றி முருகானந்தன்... எல்லாத்தையும் நம்மலே சொல்லிட்டா எப்படி....அதான் கொஞ்சத்த சஸ்பென்சா விட்டாச்சு...
ReplyDelete@ சென்ஷி : சாம் ரெய்மிதாங்க என்னையும் பாக்க வச்சாரு...நான் இன்னொரு ஈவில் டெட் எதிர் பார்த்தேன்... :(
ReplyDeleteவாங்க தாமஸ் ரூபன்....படத்த பத்தி சொல்லிட்டு லிங்க் கொடுக்கலைனா எப்படி...
ReplyDeleteஅதான் படத்துக்கான லிங்க், டிரைலர் எல்லாத்தையும் பதிவுலே குடுத்துடுறோம்...