இப்ப வெளிவரும் நிறைய ஆங்கில திரைப்படங்கள் போலவே இந்த படமும் ஒரு சின்ன FLASHBACK-ஓட ஆரம்பிக்குது. அதாவது தற்காலத்திலிருந்து ஒரு அம்பது வருடங்களுக்கு முன்னாடி மசாக்குசெட்ஸ் மாகாணத்துல இருக்குற ஒரு எலிமெண்டரி ஸ்கூல்ல இருந்து கதை ஆரம்பிக்குது. அந்த பள்ளியின் ஒரு விழாவை குறிக்கும் வகையில், "TIME CAPSULE"- னு ஒரு விஷயத்தை செயல் படுத்துறாங்க.
அதாவது அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் எல்லாரும் அம்பது வருடங்களுக்கு அப்புறம் உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து படமாக வரைய வேண்டும். அந்த படங்கள் எல்லாம் இந்த "TIME CAPSULE"-ல (ஒரு ஸ்டீல் குடுவை) போட்டு மண்ணுல புதைச்சு வச்சிடுவாங்க. இந்த குடுவைய அம்பது வருடங்களுக்கு பிறகு எடுத்து பார்க்க வேண்டும்.
இதுக்காக எல்லா மாணவர்களும் படம் வரைஞ்சு தர்றாங்க. ஆனால் லூசிண்டா எம்ப்ரி என்ற மாணவி மட்டும் தனக்கு குடுக்கப்பட்ட பேப்பரில் வெறும் எண்களாக (நம்பர்) எழுதுகிறாள். ஆனாள் அவள் அதை எழுதி முடிக்கும் முன்னரே அவளின் ஆசிரியை அதை வாங்கி விடுகிறார். அன்று இரவே அவளை காணாமல் பள்ளி முழுவதும் தேடுகின்றனர். வெகு நேரம் கழித்து ஒரு அலமாரியின் பின்னர் அவள் ஒளிந்து இருப்பதை அவளின் ஆசிரியர் கண்டுபிடித்து விடுகுறார். அவர் அலமாரியின் அருகில் சென்று கதவை திறக்க, சிறுமி லூசிண்டா கைகளில் ரத்தம் மற்றும் மிரட்சியான பார்வையுடன் "அவங்கள பேச வேண்டாம்னு சொல்லுங்க, அவங்கள பேச வேண்டாம்னு சொல்லுங்க " என்று கத்திக்கொண்டே அழுகிறாள்.
அம்பது வருடங்களுக்கு பின்னர்.
ஒரு விழா எடுக்கப்பட்டு அந்த TIME CAPSULE-ஐ திறக்கிறாங்க. பின்னர் அதில் இருக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாணவருக்கு கொடுக்கப்படுகிறது. லூசிண்டா எம்ப்ரியுடைய பேப்பர் கேலப்-ங்கற சிறுவனிடம் வந்து சேருது. (ஒரு சின்ன INTRO கேலப் வேற யாருமில்ல நம்ம ஹீரோ நிகோலஸ் கேஜின் மகன், நிகோலஸ் எம்.ஐ.டி-ல வான்வெளி ஆராய்ச்சியாளர்).
நிகோலஸ் அன்று இரவு கேலப்புடைய பையில் இருக்கும் அந்த பேப்பரை பார்க்க நேரிடுது. அதில் இருக்கும் ஏகப்பட்ட நம்பர்களை பார்த்து ஒரு நிமிடம் குழப்பமடையும் அவர், பின்னர் அதில் ஏதாவது ஒரு பொருள் அடங்கியிருக்க வேண்டும் என்று தீவிரமாக ஆராய்கிறார். பின்னர் ஒரு வழியாக அந்த நம்பர்களை ஆறு ஆறாக பிரிக்கிறார் (இடை இடையிடையே சில நம்பர்கள் விடு பட்டிருக்கவும் செய்கிறது), அவை தேதிகளை குறிக்கின்றன என்றும் கண்டறிகிறார். ஒவ்வொரு தேதிக்கு பின்னரும் மேலும் ஒரு நம்பரும் இருக்கிறது.
ஒவ்வொரு தேதியாக ஆராயும் நிகோலஸ், அந்த பேப்பரில் குறிப்பிட பாட்டிருக்கு ஒவ்வொரு தேதியிலும் ஒரு விபத்தோ, பேரழிவோ நடந்திருப்பதை அறிகிறார். அது மட்டுமின்றி ஒவ்வொரு தேதிக்கு பின்னர் இருக்கும் நம்பர்கள் அந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறிக்கிறது.
இதை பார்த்து வியப்படையுற நம்ம ஹீரோ அதுல இருக்கும் ஒரு தேதி விடாமல் விடிய விடிய உக்காந்து அனைத்தையும் சரி பார்க்கிறார். அவருக்கு மேலும் ஆச்சரியம். அனைத்துமே சரியாக இருக்கிறது. இதை விட கொடுமையாக வரவிருக்கும் தேதிகளிலும் 3 பெரும் விபத்துகள் நடக்கும் என்று அந்த பேப்பரில் குறிப்பிட பட்டிருக்கிறது. தேதி மற்றும் இறப்பவரின் எண்ணிக்கையை தவிர மேலும் சில எண்கள் அந்த பேப்பரில் இருக்கிறது, ஆனால் நிகோலசால் அவை என்ன என்று அறிய முடியவில்லை.
அதே நேரத்தில் கேலபை சில அறிமுகமில்லாத நபர்கள் தேடி வருகின்றனர். இதை தனது தந்தை நிகொலசிடம் தெரிவிக்கும் கேலப் அவர்கள் அவனை தேடி வருவது மட்டுமின்றி அவனிடம் சில விஷயங்களை (அவனுக்கு மட்டும் கேட்கும்படி) தெரியப்படித்துவதாகவும் சொல்கிறான்.
கேலபை துரத்தும் அறிமுகமில்லாத மனிதர்கள் யார் , அவர்கள் அவனுக்கு தெரியப்படுத்தும் அந்த விஷயம் என்ன, தேதிக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் இருக்கும் அந்த இன்னொரு நம்பர் எதை குறிக்கிறது, அந்த நடக்கவிருக்கும் மூன்று விபத்துகளை நிகோலஸ் தடுத்தாரா , அந்த சிறுமி லூசிண்டா அதற்கப்புறம் என்ன ஆனாள் , அவள் கடையிசில் பேப்பரில் எழுத முடியாமல் போனது என்ன ?
- என்ற பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையுடன் படத்தின் பிற்பாதி பதில் சொல்கிறது.
சில காட்சிகளில் கிராபிக்ஸ் மிரட்டல் என்றே சொல்லலாம். ஹாலிவுட்டுக்கே முரணான ஒரு முடிவு படத்திற்கு. ஒரு தடவை தாராளமாய் பார்க்ககூடிய படம் (மத்தபடி ஆஹா ஓஹோ படமெல்லாம் கிடையாது ITS JUST AN ENTERTAINER ) . மச்சான்ஸ் பார்த்துட்டு சொல்லுங்க. படத்தை பார்த்தவர்கள் உங்கள் கருத்தை பின்னோட்டமா போடுங்க.
படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.
படத்தின் டிரைலர் இதோ.
நான் இந்தப் படத்த பார்த்துட்டேன் மச்சான்.. பட் செம்ம மொக்கை ஃபீல்!
ReplyDeleteஹாலி பாலின்னு செல்லமா கூப்பிடப்படற ஹாலிவுட் பாலா இதுக்கு விமர்சனம் எழுதினதை படிச்சீங்களா.. செம்மயா எழுதியிருந்தார்!
@சென்ஷி - பாலா அவர்களுடைய விமர்சனத்தை நான் எழுதி முடித்த பிறகுதான் படித்தேன்...தாக்கு தாக்குன்னு தாக்கியிருந்தார்...ஒரு எதிர் பார்ப்போட போகும்போது (அதுவும் தியேட்டர்ல காசு கொடுத்து பார்த்த பிறகு) அந்த படம் நம்ம எதிர் பார்ப்பை சிறிதளவேணும் தகர்த்தாலும், அந்த படம் சுத்தமா பிடிக்காம போகலாம்....நானும் அப்படி பார்த்திருந்தா ஒருவேளை ரொம்ப மொக்கையா பீல் பண்ணியிருக்கலாம்...(நாங்கதான் நோகாம டவுன்லோடுல செஞ்சு பார்த்தோம்...) நீங்க ஒரு ரேஞ்சா எதிர்பார்த்துருப்பீங்க சென்ஷி, எனக்கு முடிவ தவிர வேறெங்கும் மொக்கையா தோணல....
ReplyDeleteஅப்படி என்ன தான் முடிவு....:)
ReplyDelete