Monday, October 26, 2009

செவென் SE7EN (1995)

பைபிள் குறிப்பிடும் ஏழு பாவங்களை மையமாக வைத்து ஒரு கிரைம் த்ரில்லர். விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்டு இன்றளவும் நிறைவாய் பேசப்படும் ஒரு திரைப்படம். திரையில் வராத இரண்டு முடிவுகள் பதிவின் இறுதியில். வில்லியம் சோமர்செட் (மார்கன் ப்ரீமேன்), இன்னும் ஏழு நாட்களில் ரிட்டயர் ஆக இருக்கும் ஒரு காவல் துறை டிடக்டிவ். டேவிட் மில்ஸ் (பிராட் பிட்), அவருக்கு பின் அந்த இடத்திற்கு வரவிருப்பவர். இந்த சமயத்தில் இருவரும் சேர்ந்து ஒரு கொலையை விசாரிக்க நேரிடுகிறது. பிரேதத்தை இருவரும் நேரில் பார்வை இடுகின்றனர். கொலை செய்யப்பட்டது ஒரு மெகா சைஸ் ஆசாமி. இறந்தவன் வயிறு வெடித்து இறந்திருக்கிறான், கொன்றவன் இவனை சாப்பிட வைத்தே கொன்றிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றனர் இருவரும். அதோடு பிரேதத்தின் அருகிலே "GLUTTONY" என்று எழுதப்பட்டிருக்கிரத்தையும் கவனிக்கிறார் மார்கன். GLUTTONY என்பது பைபிள் குறிப்பிடும் ஏழு பாவங்களில் ஒன்று என்பதை அறிவிக்கும் மார்கன், தனது மேலதிகாரியிடம் தன்னால் இந்த கேஸை எடுத்து கொள்ள முடியாது (இன்னும் சில தினங்களில் ரிட்டயர் ஆகா இருப்பதால்) என்று மறுக்கிறார். அதே நேரம் பிராட் பிட், இதை எடுத்து நடத்த முழு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். மறு நாளே, அதே ஊரில் உள்ள ஒரு பிரபலமான வழக்கறிஞர் கொலை செய்யப்படுகிறார். இங்கேயும் ஒரு வித்தியாசமான கொலை முறை. பிரேதத்துக்கு அருகில் இங்கும் 'GREED' என்று எழுதப்பட்டு இருக்கிறது. இதை பிராட் பிட் தனியாக விசாரிக்கிறார். அன்றைய இரவு பிராட் பிட்டின் மனைவி மார்கனை இரவு டின்னருக்கு அழைக்கிறார். (பிராட் பிட்டுக்கும் மார்கனுக்குமான உறவை பலப்படுத்தும் பொருட்டு) இரவு டின்னரை முடித்த பிறகு, மார்கன் இந்த புதிய கேஸை பத்தி விசாரிக்க, உடனே பிராட் பிட், இரண்டாவது கொலையையும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மார்கனுக்கு கொடுக்கிறார். 'GREED' என்று எழுதியிருப்பதை காணும் மார்கன், இதுவும் பைபிளில் குறிப்பிடப்படும் ஒரு பாவம் என்றும், எனவே கொலைகாரன் மீதமுள்ள ஐந்து பாவங்களையும் குறிக்கும் வகையில், இன்னும் ஐந்து கொலைகளை செய்யப்படலாம் என்கிறார். இதனால் மார்கனுக்கும் இந்த கேசில் ஆர்வம் வந்துவிட ஏதேனும் தடயம் கிடைக்கலாம் என்று இரண்டாவது கொலை நடந்த இடத்துக்கு விரைகின்றனர், வெகு நேரம் தேடி பின்னர் அங்கே சில கைரேகைகள் கிடைக்கின்றது. இதுக்கு மேல சொன்னா SPOILER மாதிரி ஆகிடும். ஏழு கொலைகளும் நடந்ததா, தடுக்கப்பட்டதா, கொலையாளி யார், ஏன் என்பதுதான் மீதி கதை. அற்புதமான திரைக்கதை, மார்கன் ப்ரீமேனுக்க்காகவே எழுதியது போன்ற சோமர்செட் கதாப்பாத்திரம். மனிதர் காட்சிக்கு காட்சி அசத்துகிறார். பிராட் பிட்டும் சற்றும் குறையில்லை. அவர் கதாப்பாத்திரம் என்ன செய்யுமே அதையே கச்சிதமாக செய்திருக்கிறார். அதுவும் கொலைகாரனை தவறவிட்டு பின்னர் கோபத்தில் வெடிக்கும் காசிகளில் இருவரின் நடிப்பும் பலே...!! படம் பார்க்காதவர்கள் இதற்க்கு மேல் படிக்க வேண்டாம்.... இது படம் பார்த்தவர்களுக்கு மட்டும், இயக்குனர் இந்த முடிவு மட்டுமல்லாமல் இன்னும் ஒரு முடிவையும் படம் பிடித்து உள்ளனர் : இந்த முடிவில், ஜான் டோ (நம்ம வில்லன்தான்) மில்சோட மனைவிய (ட்ரேசி) கொள்ள மாட்டார். ரெண்டு ப்ரேதங்கள காட்டுவதாக சொல்லி ஒரு பழைய தொழிற்சாலைக்கு கூட்டி போகும் ஜான், அங்கிருக்கும் ஒரு பாதாள சாக்கடை வழியாக தப்பிக்கிறார். அவர துரத்திட்டு போற பிராட் பிட்ட, ஒரு சர்ச்சுல வைச்சு சண்ட போட்டு கொன்னுடறார் ஜான். அதுக்கு அப்புறம் அங்க வர்ற சோமர்செட் ஜான சுடுகிறார். இதுக்கப்புறம் மில்சுக்கு போலீஸ் வீர அஞ்சலி செலுத்துது, அவரோட மனைவி திரும்ப பிளாடெல்பியா-வுக்கு போறாங்க, சோமர்செட் மீண்டும் தன வேலைக்கே திரும்புவதாக படம் முடிகிறது. ஏனோ இந்த முடிவு வெளியிடப்படவில்லை. இது மட்டுமின்றி, இன்னொரு முடிவையும் டைரக்டர் பிளான் பண்ணியிருக்கார், அனால் அதுவும் படமாக்கப்படவில்லை. அந்த முடிவுல, ட்ரேசி கொல்லப்படுறாங்க, இதனால ஆத்திரமடயுற பிராட் பிட், ஜான கொள்ள முற்ப்படும் போது, மார்கன் அவரோட துப்பாக்கிய கேக்குறார். பிராட் பிட்கிட்ட பேசிட்டு இருக்கும்போதே மார்கன் ஜான சுட்டு கொள்கிறார், ஏன்னு பிராட் பிறட் கேக்கும்போது, "I'm Retiring " -னு சோமர்செட் பதில் சொல்வதொட முடியுது கதை. இவ்வளவு சொல்லிட்டு டைரக்டரா பத்தி சொல்லனா எப்படி, FIGHT CLUB, CURIOUS CASE OF BENJAMIN BUTTON போன்ற மிக வித்தியாசமான படங்கள குடுத்த DAVID FINCHER தான் இந்த படத்தின் டைரக்டர். படத்த தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க. படத்தோட டிரைலர் இதோ.

8 comments:

சிவன். said...

முன்னொரு காலத்தில் கிறித்தவ மதத்தில கிரிகோரி-ங்கற போப் ஏழு பாவங்கள பட்டியிலிட்டார்.

அந்த ஏழு பாவங்கள்,

1.பெருமை PRIDE
2.பொறாமை ENVY
3.பெருந்தீனி GLUTTONY
4.இச்சை LUST
5.கோபம் WRATH
6.பேராசை GREED
7.சோம்பேறித்தனம் SLOTH.

pappu said...

படம் பார்த்தேன். எனக்கு ஃபைட் க்ளப் பிடிக்கும். இதுவும் பிடிச்சது. பட் நான் பாத்த நேரம் சரியில்லையோ என்னவோ படம் பெரிய பாதிப்பு ஏற்படுத்தல. ஒருவேளை அந்நியன் வந்தது கூட காரணமா இருக்கலாம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ரொம்ப நல்ல படம்
மார்கனும் ப்ராட் பிட்டும் மிரட்டியிருப்பார்கள்.

கெவின் ஸ்பேஸி மிக அருமையான வில்லனாக வந்திருப்பார்,
காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த் மனைவி தேவதர்ஷினியின் தலையை பெட்டியில் டெலிவரி செய்யும் காட்சிகள் இதிலிருந்து எடுத்தவையே, இந்த படம் தான்
அந்நியனுக்கும் இன்ஸ்பிரேஷன்.

நல்ல விமர்சனம்.
அழகாக இருவகையாக பிரித்து சொல்லியிருந்தீர்கள்.பின்பற்ற வேண்டிய ஒன்று!ஓட்டு போட்டாச்சு!

ஓவியா said...

கொஞ்ச நேரம் மட்டுமே திரையில் தோன்றினாலும் Kevin Spaceyஇன் நடிப்பு அட்டகாசம்...

மச்சி நீங்கள் இங்கே குறிப்பிட்ட மூன்று முடிவுகளில், படத்தில் பதிவிடப்பட்ட முடிவே "WRATH" என்னும் பாவத்தின் சரியான விளக்கமாக தோன்றுகிறது..

சிவன். said...

ஃபைட் க்ளப் எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் பப்பு...அது ஒரு வித்தியாசமான திரைப்படம்...BRADD PITT, DAVID FINCHER கூட்டணியில எல்லா படமுமே வித்தியாசம்தான்...ஒருவேளை அந்நியனுக்கு இந்த படமும் ஒரு இன்ஸ்பிரேசன் ஆகா இருந்திருக்கலாம் (?).

சிவன். said...

ரொம்ப நன்றி கார்த்திகேயன்...ஆமாம் பல தமிழ் படங்களுக்கு இந்த படம் இன்ஸ்பிரேசன் ஆகா அமைந்துள்ளது....என்ன படத்தை முழுதாய் சுடாமல் ஒவ்வொரு காட்சியாய் லபக்கியுள்ளனர்...ஓட்டுக்கும் நன்றி....அடிக்கடி வந்துட்டு போங்க....!!!

சிவன். said...

@ஓவியா - நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சி, என்ன மற்றொரு முடிவுல அந்த CHAIN- அ பிரேக் பண்ணனும்னு தான் மார்கன் அவரே வில்லன கொள்ளுவார்....

sampath kumar said...

என்னுடைய கேள்வி எந்த வித காரணமும் இன்றி அவன் ஏன் மில்ஸ் மனைவியை கொல்ல வேண்டும்?!? அப்போது அவன் அந்த பாவங்களின் மூலம் என்ன சொல்ல விழைகிறான்?

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...