நீ
இல்லாத போது,
“இனி உன்னைக்
காதலிக்கக்கூடாது”
என்று சத்தியம்
போடுகிறது
இந்த மனம்..
பாவம் அதற்கு
தெரியாது போலும்..
உன் ஒற்றைப்புன்னகை
ஒராயிரம் சத்தியங்களை
தகர்த்து விடும் என்று!!
****************************************
போக்குவரத்துத்
துறையிலிருந்து
உனக்கு அபராதம்
விதித்தால், என்னை
மன்னித்து விடு..
என் இதயத்தை
மாசுபடுத்தியதாக
உன் மீது புகார்
கொடுத்து விட்டேன்...
****************************************
நீர்
புகாத கடிகாரம்
போல்
காதல் புகாத இதயம்,
விற்பனைக்குக்
கிடைத்தால் சொல்..
வாங்கிக்கொள்கிறேன்..
பழைய இதயத்தை
முழுவதும்
ஆக்கிரமித்து விட்டாய்
நீ!!!
*************************************
வேகமாய் வரும்
தும்மலை அடக்கினால்
இரத்தக்குழாய்
வெடித்து விடுமாம்..
என்
மேல் வரும்
காதலை நீ அடக்கினால்,
எனக்கு இதயமே
வெடித்து விடும்.
*************************************
என் இனியா..!
மூன்றாம் உலக யுத்தம்
நடக்க வேண்டும்..
அதில் நீயும் நானும்
மட்டும்
பிழைக்க வேண்டும்..
புதிதாய் நாம்
ஒரு காதல் உலகை
படைக்க வேண்டும்!
ஆமாம்,
நான் ஒரு காதல் ஹிட்லரடி
நீதான் எந்தன் ஜெர்மனி!!!
****************************************
அன்பு மழையுடன்,
அருண் !!
//
ReplyDeleteஎன் இனியா..!
மூன்றாம் உலக யுத்தம்
நடக்க வேண்டும்..
அதில் நீயும் நானும்
மட்டும்
பிழைக்க வேண்டும்..
புதிதாய் நாம்
ஒரு காதல் உலகை
படைக்க வேண்டும்!
ஆமாம்,
நான் ஒரு காதல் ஹிட்லரடி
நீதான் எந்தன் ஜெர்மனி!!!
//
:-)) ம்... நான் என்ன பாவம் செய்தேன். ஒரு புறம் நானும் பிழைத்து விடுகிறேன்.
அருமை.. சிந்தனையும் வார்த்தை பிரயோகமும்
என்
ReplyDeleteமேல் வரும்
காதலை நீ அடக்கினால்,
எனக்கு இதயமே
வெடித்து விடும்./////
உன்மேல் இல்ல?
நல்லாருக்கு!
கடைசி கவிதை கொஞ்சம் காமெடியா இருந்தது,,,, தப்பா நெனச்சுக்காதீங்க :)
@ U.P.Tharsan
ReplyDeleteநன்றி ..கவலை படாதீங்க நிலவுல தான் தண்ணி வருதே இப்போ ..உங்களை அங்கே தங்க வைக்கிறோம்
:) சிந்தனை னு என்னமோ பெரிய பாராட்டு லாம் கிடைக்குது ..கைப்புள்ள நெசமா டா இது !
நன்றி மச்சான்..
@ pappu
ReplyDeleteயாருப்பா அது
"பிரபல பதிவர் பப்பு" வா ? அதிசயம் .. உண்மையிலே "மச்சான்ஸ் " பதிவு கலக்குததா ? !
தேங்க்ஸ் மச்சி !! ரொம்ப பீலிங்க்ஸ் ல எழுதினா காமெடி னு ஒரே வார்த்தைல கலாயிக்கிறியே மாப்பு :)
ரசிக்கிறேன் உங்கள் ரசனைகளை, அடிக்கடி வருகிறேன், தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteநீங்களும் வாருங்கள்.
சந்திப்போம்
@rajan
ReplyDeleteநன்றி மச்சான் ! உங்க படமும் , கருத்துகளும் அருமை!
அடிக்கடி சந்திப்போம் !