Saturday, October 31, 2009

மரணத்தின் புனைப்பெயர் !!!


நீ முன்னே செல்ல
யாவரும் அறியாமல்
பின்னால் வந்த என்னை
காதலுடன் பார்த்தாய்,
அன்று தான் - எனக்கு
நிலவை பிடித்தது.

ஓரடி இடைவெளியில்
இருவரும் அமர்ந்திருக்க
உன் சுண்டுவிரலால்,
என் விரலை - பிரியத்துடன்
தொட்டு பார்த்தாய்
அன்று தான் - எனக்கு
பூக்கள் பிடித்தது.

நான் திரும்பிய
திசையெல்லாம் - உன்
முகம் மட்டும்
நிறைந்திருக்க – நீயோ
யாதும் அறியாததுபோல்
கண்ணாலே பேசினாய்
அன்று தான் - எனக்கு
தனிமை பிடித்தது.

முன்னொரு நாள்
வைகறை நிலவைப்போல்
அதிகாலைப் பொழுதில்
உன் தலைமுடி நீரால்
என் துயில் கலைத்தாய்
அன்று தான் - எனக்கு
மழையை பிடித்தது

இன்னும் எவ்வளவோ
ரகசியம் நமக்குள்ளே
இன்று தனியாய்
என்னிடம் புதைந்துள்ளது.....

இதயம் அறுத்து
இறுதி ஊர்வலத்திலும்
உன் பின்னேயே வந்தேன்
நீ கடைசிவரை திரும்பவில்லை...
அன்று தான் - எனக்கு
மரணத்தை பிடித்தது.

------------------------------------------------------------------------


நெஞ்சில் உட்புகுந்து
இதயத்தை புடுங்கி
எடுத்து - நெருப்பில்
வாட்டி, துண்டங்களாக
குதறி , தூர எறிந்தால்
ஒழிய உன்னால்
என்னை - உன்
நினைவை, என்
மனதில் இருந்து
நீக்க இயலா !!!!
துச்சா ,இதயத்திற்கு
அழிவு உண்டு,
நினைவுகளுக்கு ?
உடல் அழிந்தாலும்
உயிர் அழிந்தாலும்
உன் காதலும்
என் காதலும்
இங்கேயேதான்...!!!
உனக்கு பதில் அவள்,
எனக்கு பதில் அவன்,
காதல் அதேதான்.
------------------------------------------------------------------------
நேற்றுவரை நான்
பொய் சொன்னதில்லை
இன்று முதல்
உன்னைப் பற்றி
கவிதை எழுதுகிறேன்.
- இப்படிக்கு சிவன்.
------------------------------------------------------------------------

5 comments:

  1. ///நான் திரும்பிய
    திசையெல்லாம் - உன்
    முகம் மட்டும்
    நிறைந்திருக்க – நீயோ
    யாதும் அறியாததுபோல்
    கண்ணாலே பேசினாய்
    அன்று தான் - எனக்கு
    தனிமை பிடித்தது.////

    உளறல் என்று சொல்லலாம் ...
    அருமை
    நல்லா இருக்குது

    ///இதயம் அறுத்து
    இறுதி ஊர்வலத்திலும்
    உன் பின்னேயே வந்தேன்
    நீ கடைசிவரை திரும்பவில்லை...
    அன்று தான் - எனக்கு
    மரணத்தை பிடித்தது.////

    காதலின் ஏழாம் நிலை

    ReplyDelete
  2. "உனக்கு பதில் அவள், எனக்கு பதில் அவன்,"
    அருமை அருமை !
    வித்தியாசமான வந்திருக்கு !
    மகிழ்ச்சி !

    ReplyDelete
  3. காதலின் ஏழாம் நிலை - அருமையா சொன்னிங்க ரமேஷ்.
    "உளறல் என்று சொல்லலாம் ..." - இதுவும் அழகாய் இருக்குது மச்சான்....!!!

    ReplyDelete
  4. எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் மழைக் காதலரே....!!!

    ReplyDelete
  5. பிரவீன் குமார் - ரொம்ப நன்றி , ஆனா நீங்க சொல்லி இருந்தது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர்.... :)

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...