Monday, July 26, 2010

மை லிட்டில் ப்ரைட் 어린 신부 My Little Bride - 2004




பெரியவர்களின் வற்புறுத்தலாலும், மரணப் படுக்கையில் இருக்கும் தாத்தாவின் ஆசைக்காகவும் சிறுவயதில் இருந்து அண்ணன் தங்கை போல் பழகி வந்த இருவருக்கு கல்யாணம் செய்ய நேரிடுகிறது.....ச்சே...இதே கதையை எத்தன படத்தில் பார்த்திருப்போம் என்பவர்கள், நிற்க....!!! இதே கதையை கண்டிப்பாக நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த திரைக்கதையும், கதை பாத்திரங்களும், காட்சிகளும் உங்களை சிரிக்க வைக்கும், உற்சாக படுத்தும், ஏக்கப்படவும் வைக்கும்....கண்டிப்பாக மச்சான்ஸ்...


மை லிட்டில் ப்ரைட் 2004 -ல் கொரிய மொழியில் வெளிவந்த ஒரு ரொமாண்டிக் நகைச்சுவை திரைப்படம்.



சங்க்மின், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக தன்னை தயார் படுத்திகொண்டு இருக்கும் ஒரு இளைஞன். படிப்பை வெளிநாட்டில் முடித்துவிட்டு வெகு நாள் கழித்து வீட்டுக்கு வர, வீட்டுக்கு வந்தவுடன் தாத்தா ஒரு குண்டை போடுகிறார் (ஒரு சின்ன பிளாஷ்பேக் எல்லாம் சொல்லுவார்). அதே வீட்டில் இருக்கும் தனது பேத்தி புவ்னா-வை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார். இதுல என்ன ஸ்பெஷல் மேட்டருன்னா புவ்னா இன்னும் பள்ளி படிப்பை கூட முடிக்காத பதினைந்தே வயது நிரம்பிய குட்டி பெண்.

சங்க்மின், புவ்னா இருவருமே எதிர்ப்பு தெரிவிக்க, தாத்தா (வில்லங்கமான) ஒரு சின்ன ஆசுபத்திரி நாடகத்தை அரங்கேற்றி வேலையை முடிக்கிறார். கல்யாணத்திற்கு பிறகும் புவ்னா தன படிப்பை தொடர்வாள் என்றும், அதுவரை காச் மூச் கஸமுஸா கூடாது என்ற சில கட்டுபாடுகளுடன் அவர்களின் பெற்றோர் இந்த திருமணத்தை நடத்துகின்றனர்.



இந்த இடத்தில் புவ்னாவை பத்தி கொஞ்சம் பார்ப்போம், இந்த படத்தோட உயிர் நாடியே இந்த புவ்னா கேரக்டர் தான். மூன் யங் என்கிற குட்டி பெண்தான் இந்த படத்தின் புவ்னா.படம் முழுக்க தன குழந்தைத்தனமான நடிப்பாலும், குறும்புகளாலும், அந்த கொரிய மொழிக்கே உரித்தமான ஸ்லாங்கில் இவர் இழுத்து இழுத்து பேசும்போது நம்மை கவர்ந்து விடுகிறார். புவ்னா கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக வயது இருந்தாலும், இன்னொரு காரணமும் உண்டு. அந்த காரணத்தின் பெயர் ஜங்க்வூ. ஜங்க்வூ அவர்கள் பள்ளியின் பேஸ்பால் வீரன். புவ்னாவிற்கு ஜங்க்வூ மீது ஒரு ஈர்ப்பு மற்றும் ஒருதலையாய் காதல். இவை அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே , அனைத்தையும் மீறி புவ்னாவிற்கு சங்க்மினுடன் திருமணம் முடிந்துவிடுகிறது.


புவ்னாவின் திருமணம் அவள் பள்ளியில் தெரிந்தால், படிப்பு பாழ் ஆகிவிடும் என்பதால், தலைமை ஆசிரியர் தவிர மற்ற அனைவரிடமிரிந்தும் மறைக்கப்படுகிறது. இது புவ்னாவிற்கு வசதியாய் போய்விட, ஜங்க்வூ உடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு, இருவரும் உல்லாசமாய் ஊர் சுற்றுகின்றனர். அதே நேரம் சங்க்மின்னும், புவ்னாவும் தனி வீட்டிற்கு குடி பெயர்கின்றனர்.


நோட் பண்ணிக்கங்க : இந்த புது வீட்டில் வரும் "ஜட்டி" சீனும், பென்சில் சீனும் செம காமெடி...!!! இரண்டிலுமே புவ்னாவின் அந்த முக பாவனைகள் கலக்கல்.

இருவரின் வாழ்க்கையும் தொடர்ந்து இப்படியே போய்க்கொண்டிருக்க, இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்டு, சங்க்மின்னுக்கு புவ்னா படிக்கும் அதே பள்ளியில், ஓவிய ஆசிரியராக வேலை கிடைக்கிறது. முன்னறிவிப்பின்றி திடீரென பள்ளியில் தோன்றும் சங்க்மின், பின்னர் புவ்னாவுடன், நம் உறவு யாருக்கும் தெரியக்கூடாது என்ற ஒப்பந்த்தத்துடன் பள்ளியில் தொடர்கின்றனர்.




பள்ளியில் ஒரு இளம் வாத்தியாராக சங்க்மின் வளம் வர, பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் அவர் மேல் ஒரு தனி அட்டென்ஷன் வந்துவிடுகிறது. அட, வயசு பொண்ணுங்களுக்கு வந்தா பரவாயில்லை, அதே ஸ்கூல்ல வேலை பார்க்குற, கிம் அப்படிங்குற ஒரு டீச்சருக்கும் ஈர்ப்பு வந்துடுது. கிம் வேணும்னே வந்து வந்து சங்க்மின் கிட்ட வழியும் காட்சிகள், ரவுசு காமெடி.

சில பல, ட்விஸ்ட்டுகளுடன் சங்க்மின்னும் புவ்னாவும் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சேர்கின்றனர் என்பதுதான் மீதி கதை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. கண்டிப்பாய் பார்த்து என்ஜாய் செய்ய வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ். படம் முடிந்தவுடம் ஐயோ படம் முடிந்து விட்டதே என்று தான் தோன்றியது :)


நோட் பண்ணிக்கங்க : இடையில் ஒரு பெரிய்ய்ய்ய சுவற்றில் புவ்னா படம் வரைய வேண்டி வரும், அந்த சுவற்றை பார்த்தவுடன் இந்த பொண்ணு செம க்யூட்ட ஒரு ரியாக்ஷன் விடும் பாருங்க...ப்ச்...பார்த்துட்டு வாங்க பேசுவோம்...!!!

"MY WIFE IS 18 " என்ற ஹாங் காங் நாட்டு திரைப்படத்தின் தழுவல் தான் இந்த படம். கொரிய படங்கள் என்றாலே ரியாலிட்டி, உலகத் தரம், கொடூரம், ரத்தம், சதை என்ற என் நினைப்புகளை (ஏன்னா நம்ம பார்த்த படங்கள் எல்லாமே அப்படிதான்) லேசாய் மாற்றியது "MY SASSY GIRL" படம். இந்த படம் அந்த நினைப்பை தகர்த்து விட்டது. பார்த்து என்ஜாய் பண்ணுங்க மச்சான்.


24 comments:

  1. நல்ல ஜாலியான படம் மாதிரி இருக்கே. பகிர்தலுக்கு நன்றி. பார்க்கவேண்டும்

    ReplyDelete
  2. நல்ல படம்.. நல்ல விமர்சனம் மச்சான்... நானும் சமீபத்துல வேர்ல்ட் மூவீஸ் டிவிலதான் பார்த்தேன்...

    இன்னும் நிறைய படங்களை அறிமுகப்படுத்துங்க...

    ReplyDelete
  3. சங்க்மின்க்கும் அதே பள்ளியில் வேலைகிடைப்பது சுவாரஸ்யமான திருப்பம்...நல்ல விமர்சனம் மச்சான்...வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. என்னோட ஆல்டைம் ப்வெரைட் படம்ங்க இது.....
    முதல் முதலா பாத்த கொரியன் படம் இதுதான் ....

    நானும் இந்த படத்த பத்தி கொஞ்சமே கொஞ்சம் எழுதிருக்கேன்...
    முடிஞ்ச டைம் கெடைச்ச அதையும் பாருங்க...


    http://enathurasanai.blogspot.com/2009/08/my-litte-bride.html

    ReplyDelete
  5. trailer ஏ களை கட்டுதே.... ஹா,ஹா,ஹா,ஹா.... Good review

    ReplyDelete
  6. Thanks for your review.. where should i get these movie DVD can you help pls.. My Contact no: 9841046246

    ReplyDelete
  7. நல்ல நடை.நகைச்சுவை மிளிர.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நண்பா... இப்ப தான் உங்க பதிவ படிச்சேன்.. கடுமையான வேலை.. என்னோட பதிவுலயே இன்னமும் கமெண்டுகளுக்கு பதில் போட முடியல.. இப்புடி நான் லேட்டா வந்தா ஃப்ரீயா உட்ருங்க ;-)

    இத லிஸ்ட்ல ஆட் பண்ணிக்குறேன்.. கட்டாயம் பார்ப்பேன்

    ReplyDelete
  9. நண்பா ! கொரியா படங்கள்ல romance உம் உண்டு,அதகளமான படங்களும் உண்டு.
    இவை சில நல்ல படங்கள்..
    100 days with mr.arrogant,
    seducing mr.perfect,
    too beautiful to lie,
    the classic,
    old boy,
    la belle,
    2 faces of my girlfriend,
    tale of 2 sisters,
    200 pounds of beauty,
    a moment to remember.

    அப்புறம்,கொரியா பட ரசிகர் சங்கம் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.நானு கூட சில படங்களுக்கு விமர்சனம் எழுதுறேன்னு மொக்க போட்டு இருக்கேன்.இதுக்கு கூட.. :)

    ReplyDelete
  10. சந்தேகமே வேண்டாம் பின்னோக்கி...ரொம்ப ஜாலியான படம்...

    ReplyDelete
  11. இன்னாதிது தாங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கின்னு... அப்பாலிக்கா கமெண்டுக்கு தாங்க்ஸ்பா ... :)

    ReplyDelete
  12. கண்டிப்பா மச்சான், பார்க்கும் நல்ல படங்கள் எல்லாத்தையும் எழுதவேண்டியதுதான்..(அப்படிதான் ரொம்ப நாளா இந்த ப்ளாக ஓட்டிட்டு இருக்கேன்..) அந்த உலக மூவீஸ் சேனல் தான் இங்க கொச்சின்ல மிஸ்ஸிங்...

    ReplyDelete
  13. @சீமாங்கனி - நன்றி மாப்பு...

    ReplyDelete
  14. நன்றி ரசிக்கும் சீமாட்டி.. இதோ உங்க ப்ளாகுக்கும் ஒரு விசிட்டு போட்டாச்சு... உங்க பி.கு கலக்கல்...

    ReplyDelete
  15. வாங்க சித்ரா மேடம்...உங்கள் வருகைதான், ஒரு பதிவை பூர்த்தி செய்கிறது...(கொஞ்சம் ஐஸ் எக்ஸ்ட்ரா போயிடிச்சோ....) நன்றி..

    ReplyDelete
  16. Hi Maria, Thanks for the visit and your CoMmeNt..!!! Sure will join the site :)

    ReplyDelete
  17. நன்றி ஸ்வேதா...ஒ.கே இதுலயும் இணைச்சிடுவோம்...

    ReplyDelete
  18. @ஜீவபாலன் - கொரியன் படத்துக்கெல்லாம் டி.வி.டி கிடைப்பது கொஞ்சம் கஷ்ட்டம்ங்க ..இணையத்துல தரவிறக்கம் பண்றது ரொம்ப சுலபம்... PIRATEBAY.ORG, BTJUNKIE.comபோன்ற சைட்டுகள்ள இந்த படங்களை டவுன்லோட் செஞ்சுக்கலாம்.

    ReplyDelete
  19. நன்றி சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete
  20. வாங்க ராஜேஷ்...இங்கயும் ஒரே ஆணி- தான், பு - முடியலை :)
    பதிவுகள் எல்லாமே அப்பப்ப தான் படிக்க முடியுது...படம் பாருங்க, நல்ல Entertainer & Feel good மூவி..

    ReplyDelete
  21. Illuminatti மச்சான் கலக்கிட்டிங்க, இந்த படத்த எல்லாம் பார்த்து முடிக்கவே எனக்கு இன்னும் ஒரு மாதம் ஆகும்-னு நெனக்கிறேன்..... ஒன்னு ஒண்ணா டவுன்லோட் போடுவோம்.. நன்றி மச்சான்...

    ReplyDelete
  22. அருமையான அலசல்..! கலக்குங்க..

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...