Thursday, December 10, 2009

ஹைக்கூக்கள் - பகுதி 6




விடிந்ததும் எரிந்தது 
இரவெல்லாம் கண்ணடித்த 
தெரு விளக்கு.
------------------------------------------------------------------------------------------------------------

தலையில் ஒரு குடம், 
இடையில் ஒரு குடம், 
அறுந்தது இரவல் செருப்பு.
 

------------------------------------------------------------------------------------------------------------




சூரியன் மறைந்ததும் 
கருப்பாய் விடிந்தது 
அவளின் விடியல் பொழுது.
------------------------------------------------------------------------------------------------------------



இரவின் எச்சம், 
உதிர்ந்த மல்லிகைபூவும் 
கசங்கிய உடம்பும்.

------------------------------------------------------------------------------------------------------------






"சில்லறையா கொடு சார்" 
செய்வதறியாமல் திரும்பினேன், 
கட்டணக் கழிப்பறை. 
------------------------------------------------------------------------------------------------------------ 

வலைச்சரம் பதிவுல "மச்சான்ஸ்-அ" BEST NEWCOMER (ஜனரஞ்சகம்)- னு அறிமுகப்படுத்தி இருக்குற வசந்த் மச்சானுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நன்றி. 
-----------------------------------------------------------------------------------------------------------

           - இப்படிக்கு சிவன்.
இதற்கு முன் பதிவிட்ட ஹைக்கூக்களுக்கு இங்க க்ளிக்குங்க.
காதலைப்போலன்றி,
பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம்.
(உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்)

14 comments:

  1. //இரவின் எச்சம்,
    உதிர்ந்த மல்லிகைபூவும்
    கசங்கிய உடம்பும்.//

    கலக்கல் மச்சான்...ரெம்ப நாளைக்கு அப்றம் நல்ல ஹைகூ படிச்ச திருப்தி...ஐந்தும் அருமை...கலக்கல்ஸ்...

    ReplyDelete
  2. //சூரியன் மறைந்ததும்
    கருப்பாய் விடிந்தது
    அவளின் விடியல் பொழுது.///

    இரவின் எச்சம்,
    உதிர்ந்த மல்லிகைபூவும்
    கசங்கிய உடம்பும்.///

    மயங்கிய வரிகள்...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஜனரஞ்சகமான புது கவிஞரே:
    "விடிந்ததும் எரிந்தது
    இரவெல்லாம் கண்ணடித்த
    தெரு விளக்கு. " ............... சூப்பர்!
    வாழ்த்துக்கள் - கவிதைகளுக்கும், வலைச்சர best அறிமுகத்துக்கும்.

    ReplyDelete
  4. //சூரியன் மறைந்ததும்
    கருப்பாய் விடிந்தது
    அவளின் விடியல் பொழுது.//

    //சில்லறையா கொடு சார்"
    செய்வதறியாமல் திரும்பினேன்,
    கட்டணக் கழிப்பறை.//

    அருமை மச்சான்.... இந்த இரண்டு ஹைகூக்களும் அல்டிமேட்...

    ReplyDelete
  5. அத்தனையும் கலக்கல் ஹைக்குக்கள்...

    வாழ்த்துக்கள் மச்சான்...

    ReplyDelete
  6. ரொம்ப நன்றி மச்சான்ஸ்.....

    seemangani
    றமேஸ்-Ramesh
    Chitra
    viccy
    பிரியமுடன்...வசந்த்!!!

    ReplyDelete
  7. @seemangani - இவையெல்லாம் ஹைக்கூ- தானா அப்படின்னு ஒரு சந்தேகம் இருக்கு....!!?!!

    அதனால நீங்க நல்ல ஹைக்கூன்னு பாராட்டுனதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ் மச்சான்...

    ReplyDelete
  8. @றமேஸ்-Ramesh -
    //மயங்கிய வரிகள்...
    வாழ்த்துக்கள்// -
    ஆஹா என்னையே வெக்கப்பட வச்சுட்டீங்க மச்சான்.

    ReplyDelete
  9. @Chitra - //ஜனரஞ்சகமான புது கவிஞரே// - புது கவிஞர்னு எல்லாம் சொல்லாதீங்க...நான் ஏதோ "புதுக்கவிதை " எழுதுரவன்னு தப்பா நெனச்சுக்க போறாங்க...
    வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி சித்ரா ...!!

    ReplyDelete
  10. @ Viccy - வாங்க Viccy மச்சான்... இப்பதான் முதல் கமென்ட் போட்டு இருக்கீங்க...அடிக்கடி வாங்க...

    ReplyDelete
  11. @@பிரியமுடன்...வசந்த் - vஉங்க கமெண்டுக்குதான் மச்சான் வெயிட்டிங்....என்ன எழுதினாலும் பாராட்டுற நல்லவரு மச்சான் நீங்க....!!! (நாளைக்கி ஜலதோஷம் புடிச்சா அதுக்கு நான் காரணம் இல்லப்பா..)

    ReplyDelete
  12. ///சூரியன் மறைந்ததும்
    கருப்பாய் விடிந்தது
    அவளின் விடியல் பொழுது.///

    அருமை மச்சான்.
    எல்லா ஹைக்கூ பார்ட்சும், சினிமா விமர்சனம், பப்பு எல்லாமே கலக்கல்.
    தொடரட்டும் உங்கள் பணி. நம்ம ஏரியாக்கும் வாங்க..!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. ///
    மெய்ன் ரோட்டில் விபத்து,
    விரைந்து சென்றது ஆம்புலான்சு,
    சைக்கிள்காரனை இடித்து விட்டு !!!

    ஆதரவற்றோர் இல்லத்தில்
    காக்கா கரைகிறது - பாவம்
    இன்று யார் வருகையோ?

    வெளிநாட்டு கணவர்
    திரும்பி வந்தார் - குழந்தை,
    ஐ......., சிங்கப்பூர் அப்பா...!!!

    இதயத்தில் ஒரு நொடி வேலை நிறுத்தம்.
    பக்கத்தில் நின்ற அழகான பெண்ணின்
    கழுத்தில் மறைவாய் ஒரு தாலி.

    ///
    இவை, மற்றும் ஹைக்கூக்கள் - பகுதி 4 ,3,2 இல் அனைத்தும் மிக அருமை சிவன் மச்சான். பின்னுறீங்க.

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...