Saturday, January 2, 2010

மல்ஹோலாண்ட் டிரைவ் Mulholland Drive (2001)

என் இனிய அன்பு மச்சான்களுக்கு, உங்கள் பாசத்துக்குரிய மச்சான்ஸின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!!!
(ரெண்டு நாள் ஆச்சு, இப்பவாவதும் தெளிஞ்சுதா?)

ஓ.கே ஓ.கே மேட்டருக்கு வருவோம்...


மல்ஹோலாண்ட் டிரைவ்.


வருடம் : 2001
டைரக்டர் : டேவிட் லின்ச்
நடிகர்கள் : நவோமி வாட்ஸ் (கிங் காங் நாயகி), லாரா ஹாரிங்.




நடிகை ரீட்டா(லாரா ஹாரிங்) காரில் பார்ட்டி ஒன்றுக்கு போய்க்கொண்டிருக்கிறார்.
வழக்கத்திற்கு மாறாய் நடுவழியில் நிறுத்தும் அவரது பாதுகாவலர்கள் அவரை மிரட்டி காரில் இருந்து இறங்க சொல்கின்றனர்.


அப்போது அதே ரோட்டில் படு வேகமாக ரேஸ் வைத்து ஒட்டி கொண்டு வரும் இரு கார்களில் ஒன்று ரீட்டாவின் காரில் மோத ஒரு பெரும் விபத்து நேர்கிறது.


அதில் காயங்களுடன் உயிர் பிழைக்கும் ரீட்டா, பாதுகாவலர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து விரைகிறார். மயக்க நிலையிலேயே வீதிகளில் திரியும் ரீட்டா யாருக்கும் அறியாமல் ஒரு வீட்டின் உள்ளே நுழையவும் அந்த வீட்டில் உள்ள வயதான பெண்மணி வெளியூர் கிளம்பவும் சரியாக இருக்கிறது.






பெட்டி(BETTY - கேரக்டர் பேரு மச்சான்ஸ்) இந்த படத்தின் இன்னொரு நாயகி ஹாலிவுட் கனவுடன் அந்த ஊருக்கு வந்து சேர்கிறார்.சில மணி நேரங்கள் கழித்து அதே வீட்டிற்கு பெட்டி வந்து சேர்கிறார். பெட்டி அப்போதுதான் முதல் முதலாக தன் அத்தை வீட்டிற்கு வருகிறார், உள்ளே பெட்டி ரீட்டாவை பார்த்ததும், அவரை தன் அத்தையின் நண்பர் என தவறாக புரிந்து கொள்கிறார். பின்னர் தன அத்தையுடன் தொலைபேசியில் பேசும் போது உண்மை வெளிப்பட, ரீட்டா தான் இங்கு வந்து சேர்ந்ததன் உண்மையை சொல்கிறாள்.


இப்பதான் படத்துல சுவாரஸ்யம்... ரீட்டாவுக்கு விபத்தில் தான் யார் என்பதையே மறந்து விடுகிறார். அவரின் கைப்பையை பார்க்குன்போது கட்டு கட்டாக பணமும் ஒரு சாவியும் கிடைக்கிறது.




 அதே நேரம் நகரின் இன்னொரு மூலையில்...

முதல் காட்சியின் விபத்தில் தப்பித்த மற்றொரு ரேஸ் வண்டியின் ஓட்டுனர் அவர் நண்பருடன் முதல் நாள் விபத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறார். அப்போது எதிர் பாரா வகையில் அவர் நண்பர் ஓட்டுனரை கொன்று விட்டு தப்பிக்க முற்படும் பொது இன்னும் ரெண்டு பேரை கொள்ள நேரிடுகிறது.


ரீட்டாவை காணாததால் அவருக்கு பதில் வேறொரு நாயகியை முடிவு செய்ய திரைப்பட குழுவும் தயாரிப்பாளரும் கூடுகின்றனர். அந்த சந்த்திப்பு கசப்பாக முடிவடைகிறது. படத்தின் டைரக்டர் கோபமாகவெளியேறுகிறார்.




மீண்டும் ரீட்டா & பெட்டி.


ரீட்டாவுக்கு ஏதோ ஒரு நினைவில் டயான் செல்வின் என்ற பெயர் நியாபகத்துக்கு வர அந்த பெண்ணை தேடி இருவரும் செல்கின்றனர். ஆனால் அதே பெண் அவளுடைய அறையிலேயே பிணமாக கிடப்பதை கண்டு இருவரும் திரும்பி விடுகின்றனர்...


மீண்டும் டைரக்டர்.


கோபமாக வெளியேறும் டைரக்டர், அவர் வீட்டுக்கு செல்ல, அங்கே அவரது மனைவி அவரது க.காதலனுடன் சேர்ந்து அவரை அடித்து வெளியே துரத்துகிறார். ரத்த காயங்களுடன் தப்பிக்கும் டைரக்டர் ஒரு லாட்ஜில் வந்து ஒளிந்து கொள்கிறார்.


ஒரு ஹோட்டலில்.
ஒரு நபர் தான் கண்ட கனவை பத்தி தன் நண்பரிடம் விவரித்து கொண்டிருக்கிறார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இதுக்கப்புறம் படத்த பார்த்துக்கங்க மச்சான்ஸ். ரீட்டாவின் நிலை என்ன ? பெட்டி நாயகி ஆனாரா ? அந்த மூணு கொலைகள் ? இன்னும் படத்தில் ஏகப்பட்ட கேள்விகள் டிவிஸ்ட்டுகள். எல்லாத்துக்கும் பதில் பெட்டியதான்(BETTY) கேக்கணும் ????


ஒன்னு உறுதி மச்சான்ஸ்... படம் பார்த்து முடிச்ச உடனே ராவா குவாட்டர் அடிச்ச எபக்ட் கெடைக்கும்...இன்னொரு விஷயம் படத்தின் எல்லா ட்விஸ்ட்டுகளுக்கும் படத்தில் பதில் இல்லை. சில விஷயங்களை நம் கற்பனைக்கே விட்டுவிடுகிறார் டைரக்டர்.


மிக மிக வித்தியாசமான திரைப்படம்....டயலாக் விஷயத்தில டைரக்டர் டேவிட் லின்ச் நம்ம மணிரத்னத்தோட பெரியப்பா மாதிரி, படத்தின் பல சீன்களில் வசனமே கிடையாது...இருக்கும் இடங்களிலும் ரொம்ப கம்மி....




படம் ஒன் அண்ட் ஒன்லி பார் 18+.
படம் பார்த்துட்டு புரியலனா சொல்லுங்க அதுக்கு ஒரு தனி பதிவே போட்டுடலாம். அவ்வளவு விஷயங்கள் படத்துல இருக்கு. படம் பார்க்குறதுக்கு முன்னாடி கீழ குடுத்திருக்குற விஷயங்கள நோட் பண்ணிக்கங்க.


படத்துல நமக்கு புரியாத விஷயங்களை புரிஞ்சுக்குறதுக்காக டைரக்டர் லின்ச் டி.வி.டி.யில் கொடுத்த பத்து கேள்விகள் தான் இவை.


படத்த பார்த்துட்டு தெளிவா இருந்த பின்னூட்டங்கள் போடுங்க மச்சான்ஸ்.


அந்த பத்து மேட்டர்.

1. Pay particular attention in the beginning of the film: At least two clues are revealed before the credits.
2. Notice appearances of the red lampshade.
3. Can you hear the title of the film that Adam Kesher is auditioning actresses for? Is it mentioned again?
4. An accident is a terrible event — notice the location of the accident.
5. Who gives a key, and why?
6. Notice the robe, the ashtray, the coffee cup.
7. What is felt, realized, and gathered at the Club Silencio?
8. Did talent alone help Camilla?
9. Note the occurrences surrounding the man behind Winkie's.
10. Where is Aunt Ruth?


படத்தின் டிரைலர் இதோ...



8 comments:

  1. அந்த பத்துக் கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சீங்களா சிவன்?

    நான் ஒரு 6-7க்கு கண்டுபிடிச்சிருக்கேன். மொத்தமும் கண்டுபிடிக்காமல்.. எழுத வேணாம்னுதான்.. இன்னும் எழுதலை.

    ReplyDelete
  2. முடிஞ்சா ஒரு தனிப்பதிவு எழுதறீங்களா தல...??

    ReplyDelete
  3. படங்களின் தொகுப்பும் விமர்சனமும் அருமை மச்சான்...டவுன்லோட் லிங்க் இருந்த வசதியா இருக்கும் மச்சான்...இருந்த குடுங்க...வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. ////முதல் காட்சியின் விபத்தில் தப்பித்த மற்றொரு ரேஸ் வண்டியின் ஓட்டுனர் அவர் நண்பருடன் முதல் நாள் விபத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறார். ////

    /////ரீட்டாவை காணாததால் அவருக்கு பதில் வேறொரு நாயகியை முடிவு செய்ய திரைப்பட குழுவும் தயாரிப்பாளரும் கூடுகின்றனர்.///

    இந்த ரெண்டு மேட்டரும் கொஞ்சம் பிரச்சனை. அட்லீஸ்ட் இரண்டாவது.

    முதலாவதில்.. ரெண்டு பேரும் ‘ஆக்ஸிடண்ட்’ பத்திப் பேசுவாங்க. அப்புறம் கொல்லப்படும் நபர்.. ஓட்டுனரான்னு தெரியலை. ஆனா.. காரின் வெளியில் தெரியும் ரெண்டு முகங்களில் ஒன்னு “அவர் மாதிரி” இருக்கும்.

    அவங்க இந்த ஆக்ஸிடண்டைப் பத்திதான் பேசுறாங்களான்னும் தெரியலை.

    ==

    இரண்டாவது... ரீட்டாவை காணலைன்னு அந்த ஆடிஷன் நடக்காதுன்னு நினைக்கிறேன்.

    அந்த ஆடிஷன் அப்பத்தான் நடக்கவே ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடியே.. அந்த டைரக்டர் மிரட்டப் படுவார் (அதுக்கு முன்னாடி... the girl missing -ன்னு பேசிக்குவாங்க).

    ஒரே குழப்பம் போங்க. இப்ப எனக்கு அந்த 6 கேள்விகளுக்கும் சரியான விடை வச்சிருக்கேனான்னு டவுட் வந்துடுச்சி. எத்தனை முறைதான் பார்க்கறது போங்க...!! :( :(

    டயர்ட்!! :)

    ReplyDelete
  5. @ - ஹாலிவுட் பாலா said...
    //அந்த பத்துக் கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சீங்களா சிவன்?//

    பத்து கேள்விக்கும் பதில் கிடைக்கல தல... நமக்கு ஒரு 5-6 தான் தெரிஞ்சது...அதுவும் யூகங்கள்தான்...

    //முடிஞ்சா ஒரு தனிப்பதிவு எழுதறீங்களா தல...??//

    கண்டிப்பா முயற்ச்சி செய்றேங்க...அதுக்கு முன்னாடி இன்னும் ஒரு ரெண்டு தடவையாவது படத்த திரும்ப பார்க்கணும்...

    ReplyDelete
  6. @ seemangani -
    //டவுன்லோட் லிங்க் இருந்த வசதியா இருக்கும் மச்சான்//

    டாரண்ட் லிங்க் கொடுத்தா பிரச்சனை வரும்னு சொன்னதாலதான் மச்சான் லிங்க் கொடுக்கல...உங்கள் மெயில் ஐடி சொல்லுங்க...அனுப்பி வச்சுடுவோம்... - deepanadhi@gmail.com (இது நம்மளோடது)....

    ReplyDelete
  7. @ஹாலிவுட் பாலா -
    //இந்த ரெண்டு மேட்டரும் கொஞ்சம் பிரச்சனை. அட்லீஸ்ட் இரண்டாவது.//

    முதலிலே சொன்னதுதான் தல....இதெல்லாம் படம் பார்க்கும்போது எழுந்த யூகங்கள்தான்...

    THE GIRL IS MISSING- னு அந்த மீட்டிங்க்ல சொன்னது தான் எனக்கு இந்த யூகத்தை கிளப்பியது....
    (இப்ப நீங்க சொன்ன உடன் எனக்கும் சந்தேகமா இருக்கு...)

    //அவங்க இந்த ஆக்ஸிடண்டைப் பத்திதான் பேசுறாங்களான்னும் தெரியலை.
    //

    ஆனால் இந்த விஷயம் இப்படி தான் இருக்கும்னு நெனக்கிறேன் தல...எதுக்கும் திரும்ப படத்த பாக்குறேன்...

    //எத்தனை முறைதான் பார்க்கறது போங்க...!! :( :(

    டயர்ட்!! :) //

    நான் இப்பதான் ஆரம்பிச்சு இருக்கேன்...ஒரு நாலு தடவ பார்த்துட்டு சொல்றேன் :)

    ReplyDelete
  8. I hope this helps with the explanation of the movie - http://www.franksreelreviews.com/reviews/mdexplain.htm

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...