கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்த கால திரைப்படம்.
இரண்டாம் உலகப்போரின் போது நடப்பதாய் கதை. நாஜிக்களின் "யூத வேட்டை" உச்சத்தில் இருந்த காலம். இந்த காலக்கட்டத்தில் தான் ஜெர்மானிய படை வீரர்கள்(?) ஊரில் உள்ள அனைத்து யூத மதத்தினரையும் கூட்டம் கூட்டமாக சிறைப்பிடித்தனர். அவ்வாறு பிடிக்கப்படும் யூதர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் கான்சென்ட்ரேஷன் கேம்புகளில் தங்க வைக்கப்படுவர். அங்கு தினம் தினம் கொடுமை படுத்தப்பட்டு பின்னர் ஒரு சுப யோக தினத்தில் சிறு சிறு கூட்டங்களாக ஆடைகளை களைத்து "கேஸ் சேம்பெருக்குள்" அனுப்பி வைக்கப்படுவர். பின்னர் அந்த சேம்பருக்குள் விஷ வாயுவை பாய்ச்சி அனைவரையும் கொன்று அங்கேயே எரித்தும் விடுவர். இந்த கேம்புகளில் இது போன்று முப்பது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாய் ஒரு குறிப்பு சொல்கிறது.
அப்படிப்பட்ட ஒரு கான்சென்ட்ரேஷன் கேம்பில் இருக்கும் ஒரு சிறுவனுக்கும் ஒரு ஜெர்மானிய நாஜி படை தளபதியின் மகனுக்கும் மலரும் நட்பை பற்றியதுதான் கதை.
ப்ரூனோ நம் படத்தின் ஒன்பது வயது கதா(குட்டி)நாயகன். ப்ரூனோவின் தந்தைக்கு பதவி உயர்வு கிடைப்பதால் தன் நண்பர்களை விட்டு பிரிய மனமில்லாமல் பெர்லினை விட்டு பிரிந்து செல்கிறான் ப்ரூனோ. ஆளில்லாத காட்டுக்குள் தனியாக இருக்கும் ஒரு வீட்டில் குடியேறுகிறது ப்ரூனோவின் குடும்பம். வீட்டை சுற்றி ராணுவப் படைகளின் பாதுகாப்பு. விளையாட யாரும் இல்லாததால் ப்ரூனோவின் பொழுதுகள் அனைத்தும் தனிமையில் கழிய, அப்படித்தான் அவனுக்கு அவன் அறையில் முன்றொரு நாள் ஜன்னலில் பார்த்த "வீடு போன்ற அமைப்புகள்" நினைவுக்கு வருகிறது. அங்கே தன்னுடன் விளையாட யாரேனும் சிறுவர்கள் இருக்க கூடும் என்று நினைத்து தன் வீட்டின் பின் வாசல் வழியாக போக எத்தனிக்கும்போது, அவன் அம்மாவால் தடுக்க படுகிறான்.
பின்னர் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பின் வாசல் வழியாக தப்பிக்கும் ப்ரூனோ அந்த வீடு போன்ற அமைப்புகளின் முள் வேலியை வந்தடைகிறான். மறுபக்கம் அழுக்கு உடைகளுடன் இன்னொரு சிறுவன். இங்குதான் நம் படத்தின் இரண்டாம் நாயகனான ஷ்மூயெல் அறிமுகம். அழுக்கு உடைகளுடன் வித்தியாசமாய் காட்சியளிக்கும் ஷ்மூயெல்லுடன் நட்பு கொள்ளும் பொருட்டு ப்ரூனோ அவுனுடன் பேச ஆரம்பிக்க அவர்களுக்குள் அறிமுகம் ஏற்படுகிறது.
இப்படியே யாருக்கும் தெரியாமல் ப்ரூனோ இங்கு நிதமும் வந்து ஷ்மூயெல்- உடன் பேசி செல்கிறான். அவ்வப்போது ஷ்மூயெல்லின் பசிக்கு உணவும் கொண்டு வந்து கொடுக்கிறான்.இந்த நேரத்தில் ப்ரூனோவின் அம்மாவுக்கு கான்சென்ட்ரேஷன் காம்புகளின் உண்மை நிலவரமும் அங்கு நடக்கும் கொடுமைகளும் தெரியவர தன குழந்தைகள் இது போன்று ஒரு சூழலில் வளர கூடாது என்று தன கணவனுடன் சண்டை கொள்கிறாள். வேறு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்கிறாள். கடமையே கண்ணான நம் கமாண்டர் அதற்க்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார்.
திடீரென்று ஒரு நாள் ஷ்மூயெல்லை தன் வீட்டில் பார்க்கிறான் ப்ரூனோ. இங்கு உள்ள வைன் கிளாஸ்களை துடைப்பதற்காக ஒரு சிறுவன் வேண்டும் என்றதால் தன்னை அனுப்பி வைத்ததாக கூறுகிறான். ஷ்மூயெல் அங்கு வைக்கப்பட்டு இருந்த கேக்குகளை பார்க்க, அவை உனக்கு வேண்டுமா என்று ப்ரூனோ கேட்கிறான். ஆமாம் என்று ஷ்மூயெல் வேக வேகமாய் தலையை ஆட்ட ஒரு துண்டை ஷ்மூயெலுக்கு கொடுக்கிறான் ப்ரூனோ. அந்த நேரம் பார்த்து ப்ரூனோவின் வீட்டில் பாதுகாப்புக்கு இருக்கும் ஒரு படை வீரன் உள்ளே நுழைய ஷ்மூயெல் கையும் கேக்குமாய் பிடி படுகிறான், கேக்கை திருடினாயா என்று அந்த பாதுகாவலன் கேட்க இல்லை ப்ரூனோ தன் நண்பன் அவன்தான் கொடுத்தான் என்கிறான் ஷ்மூயெல். ஏதோ ஒரு பயத்தில் ப்ரூனோ அதை மறுத்துவிடுகிறான். கோபம் கொள்ளும் பாதுகாவலன் ஷ்மூயெல்லை பின்னர் கவனிப்பதாக சொல்லி சென்றுவிடுகிறான்.
இந்த கோழையான நடப்பால் தான் மீதே கோபம் கொள்ளும் ப்ரூனோ, மறு நாள் ஷ்மூயெல்லை பார்க்க அந்த முள் வெளிக்கு செல்கிறான். ஏனோ ஷ்மூயெல் அன்று வந்திருக்கவில்லை. இப்படியே சில தினங்கள் கழிய ப்ரூனோ தினமும் வந்து செல்கிறான், பின்னர் ஒரு நாள் ஷ்மூயெல் கண்ணில் காயங்களுடன் வந்து சேர்கிறான், ப்ரூனோ அவனிடம் மனிப்பு கோர மீண்டும் நட்பு தொடர்கிறது.ப்ரூனோவின் அம்மா மீண்டும் அந்த விஷயத்தை பூதாகரமாக்க இம்முறை குழந்தைகளுடன் வெளியேற அனுமதிக்க படுகிறாள்.
அன்று ஷ்மூயெல்லை சந்திக்கும் ப்ரூனோ தான் நாளையுடன் கிளம்ப போவதாக சொல்கிறான். அதே நேரம் ஷ்மூயெல் நேற்று முதல் தன் தந்தையை காணவில்லை என்று சொல்ல, ப்ரூனோ தான் உள்ளே வந்தால் உனக்கு உன் தந்தையை தேட உதவி செய்வதாக கூறுகிறான்,
மறுநாள்.
வீட்டை காலி செய்து புறப்பட அம்மா ஆயத்தமாகி கொண்டிருக்கிறாள்.
ஷ்மூயெல்லுக்கு ஒரு சான்டுவிச் தயார் செய்து புறப்படுகிறான் ப்ரூனோ.
அவன் வெளியில் செல்வதை கவனிக்கும் அம்மா எங்கே என்று கேக்க ....
ஊஞ்சல் ஆடிவிட்டு வருவதாக சொல்லி கிளம்புகிறான்.
யாரும் பார்க்காத நேரத்தில் வீட்டில் இருந்து தப்பித்து முள் வேலியை வந்தடைகிறான்.
சொன்னதை போலவே ப்ரூனோ வேலிக்கு கீழே பள்ளம் வெட்டி தானும் கேம்புக்கு உள்ளே நுழைந்து விடுகிறான்.
தான் கொண்டு வந்த அகதிகளின் சட்டையை ஷ்மூயெல் ப்ரூனோவுக்கு தருகிறான்.
ப்ரூனோவை காணாமல் ப்ரூனோவின் அம்மா வீடு முழுவதும் தேடுகிறாள்.
ப்ரூனோ சட்டை மாட்டியவுடன் இருவரும் ஷ்மூயெல்லின் தந்தையை தேடி புறப்படுகின்றனர்.
ப்ரூனோவின் அப்பாவிற்கும் விஷயம் தெயரயவர அவரும் காவலாளிகளுடன் சேர்ந்து தேடுகிறார்.
ஒவ்வொரு இடமாக சென்று ப்ரூனோவும் ஷ்மூயெல்லும் அவனின் தந்தையை தேடுகின்றனர்.
மோப்ப நாய் உதவியுடன் ப்ரூனோ கேம்பிற்குள் சென்றிருப்பது தெரியவர...
ஒரு அறைக்குள் சென்று ஷ்மூயெல்லின் தந்தையை தேடும்போது அந்த அறையில் உள்ளவர்கள் அனைவரையும் ராணுவம் வெளியேற்றுகிறது.
ப்ரூனோவின் தந்தை கேஸ் சேம்பரை நோக்கி ஓடி வர....
ஒவ்வொருவரும் துணி களையப்பட்டு....
..................
அடுத்த பத்து நிமிடம் பர பர....
படத்தில் இந்த மெய்ன் ட்ராக்கை தவிர ஆங்காங்கே சில முக்கிய பதிவுகள் உண்டு. ப்ரூனோவின் அக்கா ஜெர்மானிய வரலாற்றாலும், ஆசிரியரின் அறிவுருத்தலாலும் கவரப்பட்டு ஒரு போர் வீரனை போல் பரிணாம மாற்றம் அடைவது. ப்ரூனோவின் வீட்டில் வேலை செய்யும் யூத அகிதியின் அறிமுகம். வீட்டு பாதுகாவலில் இருக்கும் ஒரு ஜெர்மானிய வீரனின் (கேக்கை சாப்பிட்டதற்காக ஷ்மூயெல்லை தண்டித்தவன்) குடும்பத்தை கேலி செய்யும் டைனிங் டேபிள் காட்சி....
படத்தின் மிகப்பெரிய பலம் ப்ரூனோ மற்றும் ஷ்மூயெல்லாக வரும் இரண்டு சிறுவர்கள். அதுவும் ஷ்மூயெல்லின் நடிப்பு சான்ஸே இல்லை... படத்தின் வசனங்கள் மிக எளிமை ஆனால் பக்கா ஷார்ப். மிக மிக நேர்த்தியான திரைக்கதை. படம் முடியும்போது கண்டிப்பாய் மனம் சலனப்பட்டுவிடும்....
பார்த்துட்டு சொல்லுங்க மச்சான்ஸ்....கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்
தரவிறக்க லிங்க்குக்கு உங்க மெயில் முகவரிய கமெண்ட்ஸ்ல போட்டுடுங்க (இல்லைனா -deepanadhi@gmail.com-க்கு அனுப்பி வச்சாலும் ஒ.கே ) மச்சான்ஸின் மெயில் சேவை உங்களை வந்தடையும்...
dharumi2@gmail.com
ReplyDeleteநல்ல படம்
ReplyDeleteபுத்தகமாக படித்தது!!! மேலும் படத்தை பற்றிய உங்களின் விமர்சனமும் அருமை...
ReplyDeleteமச்சி, லிங்க் அனுப்புங்க,
ReplyDeleteபடத்தை பத்திட்டு வேண்டியதுதான் .
ReplyDeleteஅனுப்பியாச்சு தருமி மச்சான்...
ReplyDelete//பின்னோக்கி said...
ReplyDeleteநல்ல படம்//
படத்த பார்த்துட்டு ஒரே FEELINGS ஆயிடுச்சுங்க....
//உருப்புடாதது_அணிமா said...
ReplyDeleteபுத்தகமாக படித்தது!!//
புத்தகம் கிடைத்தால் படிக்கணும் மச்சான்ஸ்... படத்தை பாருங்க கண்டிப்பா பிடிக்கும்...
உங்கள் அருமையான விமர்சனம்...படம் பார்க்க தூண்டுகிறது... லிங்க் அனுப்புங்க...
ReplyDeleteseemangani@gmail.com
@ Lucky Limat - மச்சி உங்கள் மெயில் ஐடிக்கு அனுப்பியாச்சு...
ReplyDelete// malar said...
ReplyDeleteபடத்தை பத்திட்டு வேண்டியதுதான்//
நல்ல படம்...கண்டிப்பா பாருங்க...
@seemangani - ரொம்ப நன்றி மச்சான்....லிங்க் உங்கள் இன்பாக்ஸ் தேடி வரும்... :)
ReplyDeleteஐய்யோ நண்பா ,மிக அருமையான படம் இது.
ReplyDeleteமாமியார் உடைச்சா மண்குடம் மருமக உடைச்சா பொன்குடமாம்,
தன் புள்ள சாகும் போது தான் அந்த அப்பனுக்கு உயிர்னா என்னன்னு விலங்குது,
-----------
ஓட்டுக்கள் போட்டாச்சு
ரொம்ப அருமையா எழுதி இப்படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.
ReplyDeleteநன்றி.நானும்தான் எழுதுறேன் ஒரே சண்டைப்படமா............:)
mayilravanan@gmail.com
Super mammo rizwmoh@yahoo.com
ReplyDelete