(பப்பு வீட்டில் கரண்ட் கட்)
பப்பு : அப்பா உங்களுக்கு இருட்டுல கண்ணு தெரியுமா..
அப்பா : நல்ல தெரியுமே...
பப்பு : அப்படின்னா, இந்த ரிப்போர்ட் கார்டுல கையெழுத்து போட்டு தாங்க...
அப்பா : ???
--------------------------------------------------------------------------------------
வீட்டுக்குள் திருடன் இருப்பதை பப்பு பார்த்துவிடுகிறான்...
பப்பு : ஒழுங்கா...என் ஸ்லேட்டு, பல்பம், நோட்டை- யும் சேர்த்து எடுத்துட்டு போ,
இல்லாட்டி சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பிடுவேன்...
திருடன் - ???
--------------------------------------------------------------------------------------
பப்பு : அப்பா...உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...
அப்பா : சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..
(சிறிது நேரம் கழித்து)
அப்பா : இப்ப சொல்லு...
பப்பு : உங்க தட்டுல ஒரு பல்லி செத்து கெடந்துச்சு...அதத்தான் சொல்ல வந்தேன்...
அப்பா : ???
--------------------------------------------------------------------------------------
பப்பு, பப்பு அப்பா, அப்பா நண்பர் மூணு பெரும் ஹோட்டலுக்கு போறாங்க.
அப்பா : (சர்வரிடம்) ரெண்டு பீர், ஒரு ஐஸ் க்ரீம்.
பப்பு : ஏம்பா, உங்க FRIEND பீர் சாப்பிட மாட்டாரா ?
அப்பா : ???
--------------------------------------------------------------------------------------
அம்மா : என்னடா இன்னக்கி ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே...?
பப்பு : எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க...நான் மட்டும்தான் பதில் சொன்னேன்..
அம்மா : (சந்தோசத்துடன்) என்ன கேள்வி கேட்டாங்க...?
பப்பு : "யார்றா அது மிஸ் மேல சாக் பீஸ் அடிச்சது...?" - ன்னு கேட்டாங்க..
--------------------------------------------------------------------------------------
பப்பு : அம்மா....டீச்சர்க்கு ஞாபக மறதி ரொம்ப அதிகம் ஆயிடுச்சு...
அம்மா : ஏன்டா...?
பப்பு : டீச்சர் போர்ட்ல மகாபாரதம்னு எழுதிட்டு, எங்கள பார்த்து "யார் மகாபாரதத்த எழுதினதுன்னு கேக்குறாங்க...."
--------------------------------------------------------------------------------------
பப்பு : அப்பா....உங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்...
அப்பா : என்னடா ?
பப்பு : நான் பரிட்சையில பாஸ் ஆனா கம்ப்யூட்டர் வாங்கி தர்றேன்னு சொன்னிங்கள்ள...
அப்பா : ஆமா....
பப்பு : உங்களுக்கு கம்ப்யூட்டர் செலவு மிச்சம்....
--------------------------------------------------------------------------------------
பப்பு (எல்.கே.ஜி) : புஜ்ஜி...ஐ லவ் யூ....!!!
புஜ்ஜி (யூ.கே.ஜி) : போடா லூசு...
பப்பு : அக்கா அக்கா ப்ளீஸ்க்கா லவ் பண்ணுங்க .....ப்ளீஸ்..ப்ளீஸ்
--------------------------------------------------------------------------------------
ஹிஸ்டரி வகுப்பில் பப்பு ப்ரெயர்(PRAYER) செய்வதை பார்த்த டீச்சர்...
டீச்சர் : ப்ரெயர் செய்யுறது ரொம்ப நல்ல பழக்கம்., பப்பு நீ எதுக்கு ப்ரே செஞ்ச...
பப்பு : எங்க அம்மாதான் தூங்குறதுக்கு முன்னாடி ப்ரெயர் பண்ண சொன்னங்க.
டீச்சர் : ???
--------------------------------------------------------------------------------------
அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்......
- ஜொள்ளன் பப்பு.
செம கலக்கல் மச்சான். எங்க நம்ம அருண் மச்சான காணம் யூகே போயிட்டானா
ReplyDeleteஅம்மா : என்னடா இன்னக்கி ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே...?
ReplyDeleteபப்பு : எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க...நான் மட்டும்தான் பதில் சொன்னேன்..
அம்மா : (சந்தோசத்துடன்) என்ன கேள்வி கேட்டாங்க...?
பப்பு : "யார்றா அது மிஸ் மேல சாக் பீஸ் அடிச்சது...?" - ன்னு கேட்டாங்க..
//
மச்சான் முடியல இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் பப்பு சூப்பர்....
ரிப்போர்ட் கார்ட்
பல்லி ஜோக்ஸ் வெரி ஃபன்னி
பப்பு அடிக்கடி வந்து சிரிக்கவைங்கப்பு...
எனக்கு உலக சினிமா பார்த்து பழக்கமில்லைன்றதால அது படிச்சுட்டு கருத்து சொல்றதுக்கும் முடியாதே... இதையும் நம்ம மச்சான் திலீப்கிட்ட சொல்லிடு பப்பு
மச்சான் கோச்சுக்கப்போறார் அடிக்கடி நான் வரலைன்னு..
வர்ட்டா பப்பு....
இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் !!!!!!
ReplyDeletePRAYER super...
ReplyDeleteகம்ப்யூட்டர் ...நல்ல இருக்கு..
அம்மா : என்னடா இன்னக்கி ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே...?
பப்பு : எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க...நான் மட்டும்தான் பதில் சொன்னேன்..
அம்மா : (சந்தோசத்துடன்) என்ன கேள்வி கேட்டாங்க...?
பப்பு : "யார்றா அது மிஸ் மேல சாக் பீஸ் அடிச்சது...?" - ன்னு கேட்டாங்க..
இது தூள் ...
பப்பு (எல்.கே.ஜி) : புஜ்ஜி...ஐ லவ் யூ....!!!
புஜ்ஜி (யூ.கே.ஜி) : போடா லூசு...
பப்பு : அக்கா அக்கா ப்ளீஸ்க்கா லவ் பண்ணுங்க .....ப்ளீஸ்..ப்ளீஸ்
இது கொஞ்சம் இடிக்குது மச்சான்...
பப்பு தி கிரேட். சிரிக்க வைக்கிறது. பல புதிய ஜோக்குகள். சாக்பீஸ் அருமை
ReplyDeleteபீர் ஜோக் சூப்பர் !
ReplyDeleteGood clean jokes. நல்லா இருக்குங்க.
ReplyDeleteஉக்காந்து யோசிபீங்களோ?
ReplyDelete@றமேஸ்-Ramesh -
ReplyDeleteநன்றி றமேஸ் மச்சான்... அருண் அடுத்த வாரம் போயிடுவார்...(பிரான்ஸ்)...அந்த வேலைலதான் மச்சான் கொஞ்சம் பிஸி...
பிரியமுடன்...வசந்த் said//மச்சான் முடியல இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் பப்பு சூப்பர்....//
ReplyDeleteரொம்ப நன்றி வசந்த் மச்சான்...
//எனக்கு உலக சினிமா பார்த்து பழக்கமில்லைன்றதால அது படிச்சுட்டு கருத்து சொல்றதுக்கும் முடியாதே..//
அட நீங்க வேற மச்சான்... நானே ப்ளாக்-அ நேரப்புரதுக்கு அப்பப்ப ஒரு படத்த போட்டு விடுறேன்...உலக சினிமா எல்லாம் இல்ல மச்சான்...நமக்கு லோக்கல் மசாலா படந்தான்.....
//பப்பு அடிக்கடி வந்து சிரிக்கவைங்கப்பு...//
எனக்கும் அடிக்கடி போடா ஆசைதான்...நல்ல ஜோக்ஸ் நெறையா கெடக்கிறதில்லை ... ஹி ஹி ..
//malarvizhi said...
ReplyDeleteஇன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் !!!!!!//
இந்த ஜோக்ஸ்க்கே இப்படி சொல்லிட்டா எப்படி...பப்புவோட பழைய லூட்டி எல்லாம் படிச்சு பாருங்க...
மச்சான்ஸ் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க..
// seemangani said...
ReplyDeletePRAYER super...
கம்ப்யூட்டர் ...நல்ல இருக்கு..
//
ரொம்ப நன்றி மச்சான்... உங்க கதைகள் பட்டைய கெளப்புது..
//இது கொஞ்சம் இடிக்குது மச்சான்..//
அட விடுங்க மச்சான்...சின்ன பய ஆசைப்பட்டுட்டான்....
// பின்னோக்கி said...
ReplyDeleteபப்பு தி கிரேட். சிரிக்க வைக்கிறது. பல புதிய ஜோக்குகள். சாக்பீஸ் அருமை//
ரொம்ப நன்றி மச்சான்...
ஒரு ரெக்கமண்டேசன்...உங்க துப்பறியலாம் வாங்க தொடர்ல, பப்புவுக்கு ஒரு ரோல் குட்டிப்பிங்கலாம்...என்னை கேக்க சொல்லி ஒரே இம்சை ...(ஹி ஹி )
// sarvan said...
ReplyDeleteபீர் ஜோக் சூப்பர் //
ரொம்ப நன்றி சரவணன் மச்சான்.... உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்... எல்லா புகழும் பப்புவுக்கே...
// Chitra said...
ReplyDeleteGood clean jokes. நல்லா இருக்குங்க.//
ரொம்ப நன்றி சித்ரா மேடம்...
// கோடங்கி said...
ReplyDeleteஉக்காந்து யோசிபீங்களோ??//
அப்படி எல்லாம் இல்ல மச்சான்ஸ்...நான் குப்புற படுத்துதான் யோசிப்பேன்.... :)
//பப்பு, பப்பு அப்பா, அப்பா நண்பர் மூணு பெரும் ஹோட்டலுக்கு போறாங்க.
ReplyDeleteஅப்பா : (சர்வரிடம்) ரெண்டு பீர், ஒரு ஐஸ் க்ரீம்.
பப்பு : ஏம்பா, உங்க FRIEND பீர் சாப்பிட மாட்டாரா ?
அப்பா : ??? //
பப்பு என் சாதி!
// வால்பையன் said...
ReplyDeleteபப்பு என் சாதி!
//
இப்படியெல்லாம் பிரிச்சு பேசப்புடாது....
பப்பு நம்ம சாதி-ன்னு சொல்லுங்க...
:)
பப்பு வச்சி இத்தன தமாசா, ஹா ஹா சிரிப்பு சிரிப்பு தாங்க முடியல..
ReplyDeletevery funny
ReplyDelete