Tuesday, April 13, 2010

நட்பு கவுஜ..!!!


நீ எனக்கு சொந்தமில்லை, 
நான் உனக்கு உறவுமில்லை. 
உனக்கும் தங்கச்சியில்லை. 
எனக்கும் தங்கச்சியில்லை. 
ஆனாலும் நீயும் நானும் 
மாமன் மச்சான். 


அன்றொரு நாள், 
ராத்திரி மணி ஒன்னரை, 
சில்லென்ற KING FISHER-ஐ 
நா படாமல் நான் குடிக்க 
ஊறுகாய் கேட்டபோது, 
எங்கோ ஓடிப்போய் ஓ.சி 
ஊறுகாயுடன் வந்தாய், 
உள்ளங்கையில் வைத்து நக்கையில் 
நெஞ்சுக்குள் உரைத்த காரம் 
சொல்லியது, நீ ஊறுகாய்க்கு பட்ட கஷ்டத்தை 
(ஸ்ஸப்பா )...இதுதானோ நட்பு ??? 


தம் அடிக்க காசில்லாமல் 
ஒவ்வொரு பையாய் நான் தேட, 
உன் சட்டைப்பையில் இருந்த 
கட்டு காஜா பீடியுடன் 
என்னை கரை சேர்த்தவன் நீ, 
(ஸ்ஸப்பா )...இதுதானோ நட்பு ??? 
மூணு பேப்பரில் 
CUP வாங்கிய அதிர்ச்சியில் 
நான் கவுந்திருக்க, 
எனக்கும் மூணு மச்சான், 
என்றாய் சோகமாய். 
இருவரும் சோகத்தில் மூழ்ந்திருக்க 
கவலையை போக்க 
பேரரசு படத்துக்கு 
நைட்ஷோ டிக்கட் கொடுத்து 
என்னை தேற்றியவன் நீ…!!! 
(ஸ்ஸப்பா )...இதுதானோ நட்பு ??? 
(இந்த சரித்திர கவிதையை எப்படி முடிப்பது என்று தெரியாத காரணத்தினால்......) 
                                                                             - தொடரும்


மு.கு - இதை படிப்பதனால் பழைய கொடூர நினைவுகளெல்லாம் வந்தால், அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது. 


பி.கு – CUP என்றால் அரியர் ARREAR. 
[ கப் - அண்ணா பல்கலையில் படித்தவர்களுக்கு மிகப் பரிட்சயமான நண்பன் ]


-------------------------------------------------------------------------------------


போனஸ் போட்டோ.....ENJAAAAiiiiiiii.....!!!!  (மெயிலில் வந்தது )

15 comments:

seemangani said...

//மச்சான் என்னமா பீல் பண்ணி எழுதி புடிக்க புருவம் தூக்கி பூரித்து விட்டேன் அடடா...எப்பவோ குடிச்ச ''ராச'' பானம் நெஞ்சுல வந்து நிற்குது....//ஆஹா தொடரட்டும்...உங்க நண்பன் ஒருவன் மெயிலில் அனுப்பிய கருத்து மச்சான்...வாழ்க...வளர்க...நட்ட்ப்பு

Chitra said...

தொடரட்டும், உங்கள் அரிய(ர்) நட்பு. :-)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கருந்தேள் கண்ணாயிரம் said...

//உள்ளங்கையில் வைத்து நக்கையில்
நெஞ்சுக்குள் உரைத்த காரம்
சொல்லியது, நீ ஊறுகாய்க்கு பட்ட கஷ்டத்தை//

அப்ப பக்கத்துல இருந்து ஜாலியா எடுத்துக்குடுத்தா நெஞ்சுக்குள்ள இனிக்குமோ . . .;-)

இப்படிக்கி - எந்த மொக்க கவுஜையா இருந்தாலும் தப்பு கண்டுபிடிப்போர் சங்கம் . .

:-) இந்த மேரி பல கவுஜைகளை எதிர்பாக்குறோம் . . :-)

ஸ்ரீராம். said...

என்ன நட்பு...?

சிவன். said...

ரொம்ப நன்றி நண்பா.....

//எப்பவோ குடிச்ச ''ராச'' பானம் நெஞ்சுல வந்து நிற்குது.//

அது என்ன மச்சான் ராச பானம்...மார்கெட்டுக்கு புதுசா...???

சிவன். said...

//Chitra said...

தொடரட்டும், உங்கள் அரிய(ர்) நட்பு. :-)/
நட்பு தொடருதுங்க...அரியரெல்லாம் தூக்கி போட்டாச்சு....

சிவன். said...

// www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//


உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிவன். said...

கருந்தேள் கண்ணாயிரம் said...

// அப்ப பக்கத்துல இருந்து ஜாலியா எடுத்துக்குடுத்தா நெஞ்சுக்குள்ள இனிக்குமோ . . .;-) //

குட் கொஸ்டின்... நெக்ஸ்ட் டைம் அடிக்கும்போது செக் பண்ணிட்டு சொல்றனே...?

எப்பீல்லாம் மப்பா கீதோ, (ஓ.சி குடி குடிக்கசொல்லோ வருமே, அதேதான்..)
அப்பெல்லாம் இந்த மேதிரி
கவுஜை எழுதுறது நம்ம பாலிசி...!!!
அடிக்கடி எழுதிடுவோம்...!!!

சிவன். said...

//ஸ்ரீராம். said...

என்ன நட்பு...?//

இதேதான் மச்சான்...எனக்கும் பீலிங்க்ஸ் ஆயிடிச்சு...என்ன ஒரு நட்பு...!!!

பட்டாபட்டி.. said...

கலக்கல்

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

kayal said...

இவ்வளவு சுவாரஸ்யமா எழுதருவங்க , அதை ரசிக்ரவங்க எல்லாம் ரொம்ப கம்மி. இந்த பதிவில எல்லாரையும் பாக்கும் போது ரொம்ப சந்தோசம் . குடி உடல் நலத்திற்கு கேடு தான் எவ்வளவு ஜோக்கா எழுதினாலும் . சாராயம் அருந்தரத இப்டி கவித்துவமா நெனைக்றது தான், பல பேருக்கு alcohol dependence க்கு ஆளாகரதுக்கு முதல் step. வந்துடாங்கய்யா அட்வைசுக்கு --நு நெனைக்காதீங்க . ( நீங்க தானே படிச்சிட்டு சும்மா போனா சாமி கண்ண குத்திடும்னு போட்ருகீங்க)

சிவன். said...

நன்றி பட்டாப்பட்டி மச்சான்....இதெல்லாம் கலக்கல் இல்லீங்க நீங்களும் உங்க பதிவும்தான் கலக்கல்...!!!!

@கயல் : எதுவா இருந்தாலும் வாங்க ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசலாம்...!!! :)
( கிரேக்க கடவுள் மார்பியஸ் மீது சத்தியமாக நான் மொடா-குடிகாரன் அல்ல..!!!)
நன்றி கயல் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், உங்க கண்ணை சாமி குத்தாது..!!!

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...