மணி இப்பவே ஒன்பதரை ஆயிடுச்சு...இன்னக்கின்னு பார்த்து பத்து மணிக்கெல்லாம் ஆபீஸ் வர சொன்னாங்களே, இந்த வீணா போனவன் பஸ்ல போய் சேரவே முக்கா மணி நேரம் ஆகுமே...!!! பத்து மணிக்குள்ள எப்படி போகப் போறேன்னே தெரியலையே..!!! முருகா இன்னக்கி நீதான் என்னை எப்படியாவது காப்பாத்தணும்...!!!
இவ்வளவு பதற்றத்தையும் மனதுக்குள்ளே லோட் செய்துகொண்டு, மடிவாலா செல்லும் பேருந்தில் ஏறி அமரும் போது தான் கவனித்தேன், அங்கு என்னை விட பல மடங்கு பதற்றத்திலும், பயத்திலும் பல பேர் அமர்ந்திருப்பது (வேண்டுதல்களும் தான்). அது ஒன்னுமில்லீங்க எல்லாரும் ஸ்கூல் பசங்க, முழு ஆண்டு பரிட்ச்சைக்காக விழுந்து விழுந்து படிச்சிட்டு இருந்தாங்க. அவர்களின் முகத்தை பார்த்தவுடன் என் பதற்றம் சற்று குறைய இருக்கையில் சென்று அமர்ந்தேன்.
பேருந்தில் கூட்டம் அவ்வளவாக இல்லாததால் என்னால் பேருந்தில் இருந்த அனைவரையும் காண முடிந்தது.ஒவ்வொருவரவாய் பார்த்துக் கொண்டு வரும்போதுதான், ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த அந்த சிறுவனை கவனிக்க நேர்ந்தது.
எல்லாரும் சிரத்தையுடன் படித்துக் கொண்டிருக்க, அவன் மட்டும் ஜன்னலில் வெகு சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். சரி பய எல்லாத்தையும் படிச்சுருப்பான் போல என்று நினைத்துக்கொண்டு திரும்ப நினைக்கையில், அவன் அருகில் அமர்ந்திருத்த ஒருத்தர், அவனை வேகமாய் படிக்க சொல்லி அதட்டி கொண்டிருந்தார். அவனுடைய அப்பா போல இருந்தார் அந்த நபர்.
ஆனாலும் நம்ம பய கொஞ்சம் கூட அசரலையே...வெளில வேடிக்கை பாக்குறதை தொடர்ந்து செஞ்சிட்டு இருந்தான். அவர் அதட்டிய போது, தலையை மட்டும் அசைத்து, "ம்ம்" என்று பதில் வந்ததே தவிர, புத்தகத்தை பார்த்து படித்த பாடில்லை...
பய நம்ம டைப்பு போல, கொஞ்சம் கூட அசரலை...
கொஞ்ச நேரத்தில் அப்பா பையனிடம் சீக்கிரம் படிப்பா என்று கொஞ்சியவாறே கெஞ்சி கொண்டிருந்தார். ..!! என்னடா, இவ்வளவு நேரம் மெரட்டுனார், இப்ப கொஞ்சலா பேசுறாரேன்னு நமக்கு சந்தேகம்.
அவரு அப்படி கெஞ்சியும் நம்ம பய கொஞ்சம் கூட புத்தகத்தை கவனிக்க வேயில்லை, அவன் பாட்டுக்கு வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அப்பா அவனுடைய தோளில் எல்லாம் தட்டி கொடுத்து படிக்க வைக்க முயற்சி செய்தார். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை, அவர் படி என்று சொல்லும்போதெல்லாம் தலையை மட்டும் ஆட்டி "ம்..ம்.." என்று பதில் அளித்தான்.
இவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறானே என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன். அவனை திட்டவும் தோன்றியது.
பேருந்து நான் இறங்க வேண்டிய இடத்தை நெருங்க, என் தோள் பையை எடுத்துக்கொண்டு இறங்க முற்ப்பட்டு அந்த சிறுவனின் இருக்கையை கடக்கும் போது தான் அதை கவனித்தேன். அவன் பார்வை எங்கோ பார்த்து கொண்டிருக்க, அவனது கை விரல்கள் மடியில் இருந்த ப்ரெய்லி புத்தகத்தை(பார்வையற்றவர்கள் படிக்கும் மொழி) ஒவ்வொரு எழுத்தாக படித்துக் கொண்டிருந்தது.
"விழிகளை கொடுத்த அந்த ஆண்டவன் ஏனோ அதில் பார்வையை கொடுக்க மறந்துவிட்டான்.."
கொஞ்ச நேரத்தில் அவனை பற்றி என்னவெல்லாமோ தப்பாக நினைத்து விட்டோமே என்று வருந்தினேன்... அவனை இந்நிலையிலும் படிக்க வைக்கும் அவன் பெற்றோரை நினைக்க
பெருமையாய் இருந்தது...படிக்கும் அவன் ஆர்வமும்தான்...

இறங்கும்போது படியருகில் நின்று கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தேன், அந்த சிறுவன் என்னை பார்த்து சிரிப்பதாகவே தோன்றியது...
நூறு சதவிகித படிப்பறிவு வெகு தொலைவில் இல்லைங்க...!!!
- சிவன்
நான்தான் பஸ்ட்டு..நான்தான் பஸ்ட்டு..
ReplyDeleteரெம்ப டச்சிங் மச்சான்...சின்னதா இருந்தாலும் சிறப்பான பதிவு புது வீடு நல்லா இருக்கு கொஞ்சம் கலர் சேத்தா இன்னும் நல்லா இருக்கும்...வாழ்த்துகள் மச்சான்..
touche!
ReplyDeleteபாஸ்,
ReplyDeleteஇதயத்தை டச் பண்ணீட்ங்க...
நல்லா இருக்கு....
ANYWAY, THANKS FOR VISIT MY PAGE AND YOUR COMMENTS. I REMOVED THE WORD VERIFICATION OPTION.
MANO
Moved
ReplyDeleteசூப்பர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.... தோழா
ReplyDeleteநன்றி தோழரே.. அருமை... நூறு சதவிகிதம் நிச்சயம் பெறுவோம்..
ReplyDelete// seemangani said...
ReplyDeleteநான்தான் பஸ்ட்டு..நான்தான் பஸ்ட்டு..//
மச்சான்...நம்ம ப்ளாக் இன்னும் அந்த அளவுக்கெல்லாம் வளரல..!!!
(பில்டப்புக்கு ரொம்ப நன்றி...!!!)
கலரெல்லாம் இன்னும் சேக்கணும் மச்சான்...வேலை இன்னும் முடியல..
நன்றி பப்பு மச்சான்..
ReplyDeleteநன்றி மனோ...
நன்றி ஸ்ரீராம்...
நன்றி பின்னோக்கி....
நன்றி அனாமளையான்...
நன்றி ராஜா...
Machan Super da
ReplyDeleteBy Machaaaaaaaaaaaaaaaan Da
ReplyDeleteMutta machaan thanks for the commentda...!!!!
ReplyDeletepassword Accepted - da .!!!!!!
:)