Monday, November 16, 2009

தி அதர்ஸ் - The Others (2001)


நாம் வாழும் வீட்டில், நம் கண்ணுக்கு தெரியாமல் அமானுஷ்யமாக மற்றொரு குடும்பமும்வாழ்ந்து வந்தால்,,,,? அதுவும் அவர்கள் அனைவரும் இறந்தவராக இருப்பின்....? பதில் ...? - THE OTHERS.

ரத்தம், கொலை, கொடூரமான மேக்கப், அபத்தமான நியூடிட்டி, துரத்தும் மர்மப்பேய், பெருத்த*** பெண்கள் இது எதுவுமே இல்லாமல் நம்மை மிரட்டும் த்ரில்லர் திரைப்படம் தான், அதர்ஸ்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்குவதாய் கதை. வழக்கமான பேய்ப்படங்கள் போல் அல்லாமல், வெறும் அமைதியை வைத்தே மிரட்டுகிறார் டைரக்டர் Alejandro Amenábar. முழுப்படமும் ஒரே வீட்டுக்குள் நடந்து முடிகிறது. மொத்தமே ஆறு கேரக்டர்ஸ் தான். 
பிரதான கேரக்டர் கிரேசாக, நிகோல் கிட்மேன். போருக்கு சென்று திரும்பாத கணவன் சார்லஸ்.
நிகோலஸ், ஆன்னா என்று இரு குழந்தைகள். இவர்கள் வசிக்க ஐம்பது அறைகள் கொண்ட பெரிய வீடு.





தன் வீட்டில் வேலை செய்து வந்த பணியாட்கள் அனைவரும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போக, புதிதாக வரும் மூன்று பணியாட்களுக்கு வீட்டை சுத்தி காண்பிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது படம். ஒவ்வொரு அறைக்கும் செல்லும் முன் முன்னிருந்த அறையை பூட்டிவிடுகிறார் கிரேஸ். காரணம் அவளின் இரு குழந்தைகள்...!!!

கிரேசின் குழந்தைகளுக்கு ஒளி (வெளிச்சம்) என்றால் அலர்ஜி, எனவே பகல் வேளைகளில் அவர்கள் இருக்கும் அறைகளின் திரைகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். அறைகள் அனைத்தும் பூட்டபட்டே இருக்க வேண்டும்.  இதனாலேயே படம் முழுவதும் விளக்கு வெளிச்சத்திலேயே நகர்கிறது. ஆரம்பம் முதலே கிரேசின் காரக்டர் சற்று வித்தியாசத்துடனே கையாளப்படுகிறது. அதே போல் அந்த மூன்று பணியாட்கள், சற்று மர்மத்துடனே நடமாடும் ஆட்கள்.




முதல் இருவது நிமிடங்கள் படம் வெகு அமைதி. ஆன்னா கிரேஸிடம் இந்த வீட்டில் நம்மை தவிர இன்னும் சிலர் இருப்பதாக கூறும்போதுதான் படம் சற்று விறுவிறுப்புடன் தொடங்குகிறது. விக்டர் என்ற சிறுவனை தான் அடிக்கடி பார்ப்பதாகவும் அவனுடன் பேசுவதாகவும் சொல்லும் ஆன்னாவை நம்ப மறுக்கிறாள் கிரேஸ். (என்ன இந்த காட்சிகள் சிக்ஸ்த் சென்ஸ் படத்தை நினைவூட்டுக்கிறது). பொய் சொல்வதாக தண்டிக்கவும் படுகிறாள் ஆன்னா. விக்டர் அவ்வப்போது ஆன்னாவின் கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கிறான். இது அவனுடைய வீடு, நீங்கள் இந்த வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் தெரியப்படுத்துகிறான்.

முதலில் ஆன்னா சொல்லும் கதைகளை நம்ப மறுக்கிறார் கிரேஸ், ஆனால் அதற்க்கு பிறகு வரும் நிகழ்வுகளால், கிரேசும் ஆன்னா சொல்வது உண்மை தானோ என நம்ப தொடங்குகிறாள். ( குழந்தையின் அழுகுரல், பியானோ வாசிப்பது இந்த இரு காட்சிகளும், அற்புதம்). காமெரா படத்தின் உயிர் நாடி என்றே சொல்லலாம்.

ஆன்னா தான் இவர்களை தினமும் இந்த வீட்டுக்குள் பார்ப்பதாக நான்கு உருவங்களை ஒரு தாளில் வரைந்து காண்பிக்கிறாள். ஒரு அப்பா,அம்மா மற்றும் சிறுவன் விக்டர். இவர்களுடன் சூநியிக்காரி போல் இருக்கும் ஒரு கிழவி. யார் அவர்கள் என்ற ஆராய்ச்சியிலும் சிறிது நேரம் இறங்குகிறார் கிரேஸ்.




யார் இந்த நான்கு பேர் ? மூன்று பணியாகளின் மர்மங்கள் ? கிரசின் வித்தியாசமான கேரக்டரிசம் எதனால்...? - இவைதான் மீதிப் படம்.


படம் நகர நகர, எப்படி முடியுமோ என்று எதிர்பார்ப்பு கடைசி நிமிடங்கள் வரை கூடிக்கொண்டே தான் போகிறது. கடைசியில் படத்தின் முடிவு படு வித்தியாசம். குறிப்பிட பட வேண்டிய விஷயங்கள் அந்த தனி வீடு, அது அமைந்துள்ள பனி மூட்ட லொகேஷன், குட்டி சிறுவன் நிகொலசின் அற்புதமான நடிப்பு etc etc.

அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்...!!!

படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.



படத்தின் டிரைலர் இதோ.


5 comments:

  1. கிட்மேன் இந்த மாதிரி படங்கள் நிறைய பண்ணுவாங்களோ?

    ReplyDelete
  2. கவுத்தி புட்டீங்களே மச்சான்.... நானும் இந்த படத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  3. Pappu - மற்ற படங்கள் எதுவும் பார்த்ததில்லை மச்சான், (கொஞ்சம் லிஸ்ட் இருந்தா கொடுங்க)...ஆனா
    நிகோலுக்கு இந்த படம் நிச்சயமாக ஒரு மைல் கல்தான்...

    ReplyDelete
  4. என் நடை பாதையில்(ராம்) - ஐயையோ...சரி விடுங்க ராம் மச்சான், நம்ம இனி ஒரு டீலு போட்டுக்குவோம்....ஓகே வா...?? : )

    ReplyDelete
  5. சில மாதங்களுக்கு முன் ட்விஸ்ட் பைத்தியம் பிடித்து அந்த மாதிரி படங்களை பார்த்த போது, இந்த படத்தை பார்த்தேன். நல்ல வேளை க்ளைமேக்ஸ் பற்றி சொல்லி விடுவீர்களோ என்று பயந்து கொண்டே படித்தேன். சொல்லவில்லை. நன்றி.

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...