Friday, March 26, 2010

Haute Tension - ஹை டென்ஷன் (2003 பிரான்ஸ்)




இயக்குனர் அலெக்சாண்டர் அஜா (Hills Have Eyes, Mirrors) இயக்கத்தில் 2003-ம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளி வந்த த்ரில்லர் படம் - ஹை டென்ஷன்.

Hills Have Eyes, Mirrors ரெண்டு படமுமே நல்லா இருந்ததால அலெக்சாண்டர்
அஜாவோட மற்ற படங்கள் என்னென்னு தேடும் போது P2-வும், ஹை டென்சனும் கிடைத்தது.



முதல் காட்சி : மேரி உடல் முழுவதும் காயத்துடன் ரத்தக் களறியாக யாரோ ஒருவனால் துரத்தப்படுகிறார். இன்னொருபுறம் யாருமில்லாத காட்டு வழியே அந்த சிகப்பு நிற கார் தனியாக பயணித்துக் கொண்டிருக்கிறது. திடீரென்று மேரி அந்த காரின் முன் பாய, காரை ஓட்டுபவர் ஒரு நொடியில் நிலை தடுமாறி வண்டியை ஓரம் கட்டுகிறார். கீழே விழுந்த மேரி, கார் நின்றவுடன் வேகமாய் அருகில் ஓடி வந்து உதவி கேட்க, அதே நேரத்தில் இன்னொரு உருவம் காரின் மறுபக்கம் ரம்பத்துடன் நெருங்குகிறது....(இதுக்கு மேல என்ன நடந்திருக்கும்னு சொல்ல தேவையில்லை...கருமம் டிரைவரோட "போட்டி" மேல கொலைகாரனுக்கு என்ன ஆசையோ...!!!)

எச்சரிக்கை : ஹார்ட் பேஷண்ட்'ஸ் இதுக்கு மேல இந்த படத்த பாக்கபுடாது. படம் நெடுகிலம் ரத்த வாடை.

[கட், கட், கட்]



ஒரு வார இறுதியை கழிப்பதற்க்காக மேரி தன் தோழி அலெக்சின் வீட்டுக்கு செல்கிறார். யாருமே இல்லாத இடத்தில் விளை நிலங்களின் நடுவில் ஒரு தனி வீடாக வீற்றிருக்கிறது அலெக்சின் வீடு. இவர்கள் பின் இரவு நேரத்தில் வீட்டை சென்று அடைய, அலெக்சின் வீட்டில், அலேக்சுடைய அப்பா இவர்களை வாசலில் வரவேற்கிறார். உணவு அருந்தி விட்டு, அலெக்ஸ் மேரிக்கு விருந்தினர் அறையை காண்பித்து விட்டு தன் படுக்கை அறைக்கு சென்று விடுகிறார். [அலெக்ஸ் மம்மி, அலெக்ஸ் தம்பி உறங்கிவிடுவார்கள்]

மேரி  தூக்கம் வராததால் வெளியே சென்று உலாவிவிட்டு (ஒரு தம் போட்டுட்டு வர்றாங்க) படுக்கை அறைக்கு திரும்புகிறார். காதில் வாக்மேன் மாட்டிக்கொண்டு மேரி படுக்கையில் படுத்திருக்க...

[கட், கட், கட்]



அந்த ஏரியா வழியா ஒரு பழைய டிரக் வண்டில வர்ற "சீரியல் கில்லர் சிங்காரம்", இன்னக்கி ராத்திரி வேட்டையாட அலெக்ஸ் வீட்டுக்கு மார்க் வச்சிடுறார்.
நேரா வீட்டுக்கு வந்து கதவை டம்மு டம்முன்னு தட்டுறார் சீ.கி.சிங்காரம்.

எவன்டா அவன் இந்த நேரத்துல-ன்னு அலெக்ஸ் அப்பா மெர்ஸல் ஆகி கதவை தொரக்க.....

கதவை தொறந்த உடனே சீ.கி.சிங்காரம் அலெக்ஸ் அப்பாவை குடல் பகுதியில் கத்தியை குத்த்த்த்த்தி போட்டு தள்ள, சத்தமே இல்லாமல் சாய்ந்து விடுகிறார் அப்பா.
(அதோட விட்டுட்டா சாதா கில்லர் ஆயிடுவாரே, அதனால இவரு அப்பாவை வச்சு ஒன்னு செய்யுறார் பாருங்க...நீங்களே படத்துல பாருங்க).

அதுக்கப்புறம் ஒவ்வொரு ரூமா போய் ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு ஸ்டையிலில் போட்டு தள்ளுகிறார்.

பி.கு : அப்பாவை போட்டு தள்ளுவதில் இருந்து நம்ம மேரி எல்லாத்தையும் ஒளிஞ்சு இருந்து பாக்குறா....!!! சீ.கி.சிங்காரம் அந்த அறைக்கு வரும் போது சாமர்த்தியமாக தப்பியும் விடுகிறார்.



அலெக்ஸ் தம்பி சீ.கி.சி-யிடமிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியே தோட்டத்துக்குள் ஓட, அந்த சந்து கேப்பில் மேரி, அலெக்சை தேடி செல்கிறார்.

அலெக்சை மட்டும் கொல்லாமல், வீட்டுக்கு போகும் போது பார்சல் கட்டி கொண்டு போகலாம் என சீ.கி.சிங்காரம் பிளான் பண்ணி அவரை வண்டியில் கட்டி வைத்திருக்க, மேரி அவரை விடுவிக்க முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் திடீரென்று சிங்காரம் திரும்பி வந்துவிடுவதால் வண்டிக்குள்ளே மேரியும் மாட்டிக்கொள்கிறார்.

பின் கதவை பூட்டி விட்டு, வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி விடுகிறார் சிங்காரம். அலெக்ஸ் மேரி இருவரும் வண்டியின் உள்ளே மாட்டி கொள்கின்றனர்.

[கட், கட், கட்]



இருவரும் தப்பித்தார்களா என்பதே மீதிக்கதை.
படத்தின் மொத்த டிவிஸ்ட்டும் நம்ம சீ.கி.சிங்காரம்தான். கலக்கி விடுகிறார் இறுதியில்.

உச்சக்கட்ட ட்விஸ்ட்டு மச்சான்ஸ். [பார்த்துட்டு நான் ஒரு நிமிஷம் பேஜார் ஆயிட்டேன்பா...]

கொஞ்சம் கொடூர த்ரில்லர் படம் பார்ப்பவர்கள் இந்த படத்தை தாரளமாக பார்க்கலாம்

11 comments:

  1. என் ரேஸ்டுக்கு இது சரிவராது போலிருக்கிறது.
    ஆனால் உங்கள் விமர்சனத்தை ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  2. ஆஹா..படம் பயங்கர திரிலிங்கா இருக்கு மச்சான் விமர்சனமும் அருமை...

    ReplyDelete
  3. நன்றாக எழுதிட்டீங்க...நானு பாத்துட்டு ரெண்டு நாளா ஒரு மாதிரி பயத்தோடயே திரிஞ்சேன்...

    ReplyDelete
  4. ஏங்க இப்படி பீதிய கிளப்புறீங்க..

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி டாக்டர்...
    படம் கொஞ்சம் கொடூரம்தான்...!!!

    ReplyDelete
  6. @seemangani - ரொம்ப நன்றி மாப்பி...

    ReplyDelete
  7. ரொம்ப நன்றி மயில்ராவணன்... நமக்கும் பாக்கும்போது மட்டும்தான் கொஞ்சம் திகில்..

    ReplyDelete
  8. @பகிர்வுக்கு நன்றி..உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி மச்சான்...!!!

    ReplyDelete
  9. //@- கடவுள் பாதி மிருகம் பாதி.. said...

    sooper.. saturday nightukku nalla padam.. paaka vendiyathu thaan..//

    பாருங்க பாருங்க, சண்டே புல்லா ரெஸ்ட் எடுக்கலாம்...!!!!
    :)

    ReplyDelete
  10. //பின்னோக்கி said...

    ஏங்க இப்படி பீதிய கிளப்புறீங்க..// -
    என்னங்க நீங்களும் அப்பப்ப நம்மள மாதிரி காணாம போயிடுறீங்க ?

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...