மார்ச் 19 -2010 அதிகாலை 6.00 மணி.
தங்க நாற்கர சாலையில் 50 கி.மீ வேகத்தில் தர்மபுரியை நோக்கி பயணித்து கொண்டிருந்தது அந்த அரசு விரைவு பேருந்து வண்டி..
வலப்பக்கம் நாலாவது சீட்டில் மாதவன், நம்ம கதையின் நாயகன். மனைவி மற்றும் பையனுடன் வெகு நாள் கழித்து தன் சொந்த ஊருக்கு பயணித்து கொண்டிருக்கிறான்..
மாதவனின் பாக்கட்டிலிருந்த செல் போன் சிணுங்க, அதை எடுத்து காதில் பொருத்தியவாறே.....
"ஹலோ "
"ஹல்லோ மாப்பிள்ள நான் தாண்டா பேசுறேன்...எங்க வர்றீங்க..."
“கிட்ட வந்துட்டோம் மாமா இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுல இருப்போம்...”
“சரி நான் மணி-ய உங்க வீட்டுக்கு அனுப்பி வக்கிறேன், வீட்ட சுத்தம் பண்ண உதவுவான்...”
“ரொம்ப தேங்க்ஸ் மாமா, நானே உங்ககிட்ட ஒரு ஆள் வேணும்னு சொல்லலாம்னு இருந்தேன்...”
“என்னடா இதுக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு...முன்ன மாதிரி அடிக்கடி ஊருக்கு வந்தா பரவா இல்லை, சென்னை போய் செட்டில் ஆனதில் இருந்து எப்பவோ ஒரு தடவை தான வீட்டுக்கு வர்றே...அதான் அந்நியமா பேசுறே...”
“என்ன மாமா இப்படி சொல்றீங்க, முன்னாடி அம்மா இருந்தாங்க, வருசத்துக்கு ஒரு முறை வந்தோம், இப்ப அவங்களும் போய் சேர்ந்துட்டாங்க...அதான் வர முடியுறது இல்ல மாமா..”
“சரி அத விடு, இப்ப கரெக்டான நேரத்துக்கு தான் வந்திருக்க...”
“ஹ்ம்ம்...தெரியும் மாமா தெரிஞ்சுதான வர்றேன்..
நமக்கே எப்பவாவது ஒரு முறை தான் இந்த மாதிரி லக் அடிக்குது...இதப்போய் மிஸ் பண்ணிடுவனா....”
“நேத்துதான் இங்க ஆரமிச்சாங்க..உனக்கும் எல்லார்க்கிட்டயும் சொல்லி வச்சிருக்கேன்டா...”
" ரொம்ப தேங்க்ஸ் மாமா..."
பார்றா திருப்பியும் தேங்க்ஸ் சொல்றான்... சரி சரி சீக்கிரம் வந்து சேரு...
இதோ ஊரு கிட்ட வந்திடுச்சு மாமா...இன்னும் கொஞ்ச நேரம்தாம்.. சரி போன வக்கிறேன் நேர்ல பேசுவோம்...
ஊரின் வரவேற்ப்பு பலகையை பார்த்து சிரித்துக்கொண்டே செல் போனை பாக்கெட்டுக்குள் தள்ளினான் மாதவன்...
பென்னாகரம்(இடைத்தேர்தல்) ஊராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது...!!!
- சிவன்
முன்ன மாதிரி அடிக்கடி ஊருக்கு வந்தா பரவா இல்லை, சென்னை போய் செட்டில் ஆனதில் இருந்து எப்பவோ ஒரு தடவை தான வீட்டுக்கு வர்றே...அதான் அந்நியமா பேசுறே...”
ReplyDelete.......... :-)
அட பார்ரா...இது எப்போ இருந்து???நல்ல குடிமகன்...
ReplyDeleteஹலோ பாஸ் நல்ல கதை.. அந்த கடைசி வரில அடைப்புக்குறிக்குள்ள இருக்குறத நீக்கிருங்க.. அதுதான் சிறுகதையோட சிறப்பா இருக்கும். நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்டா சுவாரசியம் இருக்காது.
ReplyDeleteஇது நடந்தாலும் ஆச்சர்யம் இல்லை.
ReplyDeleteரொம்ப நன்றி சித்ரா மேடம்...உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்....
ReplyDeleteகுடிமகனா...? யாருப்பா அது..? -
ReplyDeleteயாரு மச்சான் ஒட்டு போட ஊருக்க போறாங்க...?? எல்லாம் டப்பு தான்...!!! :)
@முகிலன் - ரொம்ப நன்றி மச்சான்..நீங்கள் சொன்னதை நீக்கியாச்சு...!!! எல்லாருக்கும் புரியுமான்னு ஒரு சந்தேகம்தான்...!!
ReplyDelete@பின்னோக்கி - கண்டிப்பா நடக்கும்ங்க.... இன்னும் கொஞ்ச நாள்ல அமௌன்ட் எல்லாம் ரொம்ப வெயிட் ஆயிடும்...
ReplyDelete