Tuesday, March 16, 2010

ஈகிள் ஐ (கழுகு கண்ணு) - 2008

சும்மா கில்லி மாதிரி படம் வேகமா இருக்கணும்னு எதிர் பார்த்தீங்கனா, இந்தாங்க இந்த படம் உங்களுக்குதான்...
என்ன படம் பாக்குறதுக்கு முன்னாடி, ரெண்டு காதையும் கிளீன் பண்ணி வச்சுக்கங்க,
படத்துல அவ்வளவு பூ, எல்லாம் உங்க காதுக்குதான்...!!! சுத்துறாங்க சுத்துறாங்க சுத்திக்கிட்டே இருக்காங்க... யப்பா.... எவ்வளவு...முடியல...

படத்த பாக்க தூண்டுகோளா இருந்தவர் , நம்ம பெரிய அண்ணாத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான், படம் அவரோட ப்ரொடக்ஷன்....!!!
மனுஷன் ஏமாத்தல, நல்லா நம்ம பேரரசு பாணியில ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படம் கொடுத்து இருக்கார். ட்ரான்ஸ்பார்மர் ஹீரோ ஷியாதான் இந்த படத்துக்கும் ஹீரோ.
(சாருக்கு இதுல டபுள் ரோல்...ரெட்ட பிறவி... ஜெர்ரி மற்றும் ஈதான்). 

ஜெர்ரியின் சகோ ஈதான் ஒரு விபத்தில் இறப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது படம்.

திடீரென்று ஜெர்ரியின் வங்கி கணக்கில் ஏகப்பட்ட பணம் ,வீடு தேடி வரும் போர் ஆயுதங்கள் என அவருக்கே புரியாமல் சில விஷயங்கள் அவரை சுற்றி நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் நடந்திட்டு இருக்கும் போதே ஹீரோ ஜெர்ரி ஷாவும்(ஷியா) ஹீரோயின் ராச்சல்- ம்(மிச்சல் மோனகன் - எம்.ஐ3 நாயகி ) சில எதிர் பாராத சம்பவங்களால் ஒன்று சேர்ந்து அவங்கூரு போலீசு மக்களால கர்ண கொடூரமா துரத்த படுறாங்க. ஹீரோயின் ராச்சலுக்கு ஒரு தனி ட்ராக்(முன் கதை) உண்டு.

ஒவ்வொரு இடத்தில் காவல் புஜாக்கிரமர்கள் இவர்களை மடக்கும்போது செல்போனில் (ரேடியோ, டீவீப்போட்டி, குண்டு பல்பு -ன்னு எல்லாத்துலயும் இவங்க வர்றாங்க...) வரும் ஒரு அசரீரி பெண் குரல் இவர்களை ஜகஜ்ஜால வித்தைகள் செய்து தப்பிக்க வைக்கிறது. தப்பிக்க வைப்பதோடு அவர்களின் எதிர்ப்புக்கு சில காரியங்களையும் செய்ய வைக்கிறது. ரெண்டு பெரும் தலையும் புரியாமல் காலும் புரியாமல் கையும் புரியாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றனர் (நமக்கும் ஒன்னும் புரியல...!!!).ஏன் ரெண்டு பெரும் துரத்தப்படுகிறார்கள், அசரீரி பெண் குரல் யார்...? ஈதனுக்கு நடந்தது என்ன (குற்றம் உங்கள் பார்வையில்-னு) ? டைரக்டர் ரவுண்டு கட்டி அடிச்சு படத்த சுபம் போட்டு முடிச்சி வைக்குறார். படத்துல கெஸ்ட் ரோல்-ல அமெரிக்க ஜனாதிபதி வந்துட்டு போறார் (அந்தாளுக்கு இதே வேலையா போச்சு... ஆஹா ஓவரா பேசிட்டோமே நம்மளையும் FBI புடிச்சிடுமா.... ?)

நல்ல டைம் பாஸ் படம் மச்சான்...படம் பாக்குறதுக்கு முன்னாடி சத்தமா(தங்கமணி காதுல விழாத மாதிரி) நான் மசாலா படம் பாக்க போறேன்னு ஒரு தடவை சொல்லிட்டு பாருங்க, சர்வம் சுபம்.என்ஜாய் தி டே !!!
அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்....!!


14 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

seemangani said...

அசத்தலான விமர்சனம் மச்சான்...

Chitra said...

good review

என் நடை பாதையில்(ராம்) said...

ஆனா க்ளைமேக்ஸ் க்கு அவ்வளவு முக்கியதுவம் இல்லை...

pappu said...

இன்னும் எவ்வளவு காலம் தான் இந்தக் கதையை எடுப்பானுங்க!

சென்ஷி said...

செம்ம மொக்க படம் மச்சான் இது.. பாத்தப்பிறகு குருவி தேவலையோன்னு யோசிக்க வைச்சிடுச்சு..

கருந்தேள் கண்ணாயிரம் said...

சென்ஷி கருத்த நானு அமோதிக்குறேன் , . . எனக்கும் அப்புடித் தான் தோணிச்சி . .. ஆனால், நீங்க அருமையா எழுதிருக்குறீங்க . . அது புடிச்சது . . :-)

பின்னோக்கி said...

பூ சுத்துனாலும், கொஞ்சம் நம்பும்படியா ஹைடெக்கா சுத்தியிருப்பாங்க. கண்டிப்பா பார்க்கலாம்.

சிவன். said...

நன்றி....

உலவு மச்சான்.
seemangani மச்சான்.
சித்ரா மேடம்.

சிவன். said...

//ஆனா க்ளைமேக்ஸ் க்கு அவ்வளவு முக்கியதுவம் இல்லை..//

ஆமா ராம் மச்சான்.

நல்லா இன்டரஸ்டிங்கா கொண்டு போயிட்டு கடைசில தொப்புன்னு முடிச்சிடுவாங்க...

சிவன். said...

//pappu said...
இன்னும் எவ்வளவு காலம் தான் இந்தக் கதையை எடுப்பானுங்க//

இதெல்லாம் ஹாலிவுட் மசாலா ஸ்பெஷல்....அப்படிதான் இருக்கும்..

சிவன். said...

//சென்ஷி said...
செம்ம மொக்க படம் மச்சான் இது.. பாத்தப்பிறகு குருவி தேவலையோன்னு யோசிக்க வைச்சிடுச்சு.//என்ன மச்சான் உங்களுக்கு ரொம்ப பாதிப்பு போல...அதுக்குன்னு குருவி-யா நீங்க தப்பா பேசுறதுக்கு கடும் கண்டனம் .

- மசாலா மச்சான்ஸ்,.

சிவன். said...

//கருந்தேள் கண்ணாயிரம் said...
சென்ஷி கருத்த நானு அமோதிக்குறேன் , . . எனக்கும் அப்புடித் தான் தோணிச்சி . .. ஆனால், நீங்க அருமையா எழுதிருக்குறீங்க . . அது புடிச்சது . .//

ஆஹா... இப்படியெல்லாம் டப்புன்னு பாராட்டீடாதீங்க...வெக்கம் வந்திடும்...
ரொம்ப நன்றி ராஜேஷ்.

சிவன். said...

//பூ சுத்துனாலும், கொஞ்சம் நம்பும்படியா ஹைடெக்கா சுத்தியிருப்பாங்க. கண்டிப்பா பார்க்கலாம்//

அதேதாங்க நம்ம கருத்தும்....கண்டிப்பா ஒரு தடவை பார்க்கலாம்...படம் விருவிறுப்பாதான் போகும்...

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...