Thursday, March 4, 2010

கிளைமாக்ஸ் கதைகள் - 1

இது ஒரு புது முயற்சி(அத நாங்க சொல்லணும்) மச்சான்ஸ்...

கீழே இருபது வரிகளில் ஒரு கதை(?) இருக்கு..என்ன கதையின் முடிவு மிஸ்ஸிங்....
ப்ளாக் உலகில் கதை எழுதும் எல்லா மச்சான்சுக்கும் , இதுதான் உங்களுக்கான சவால்,
கீழே இருக்கும் கதையை இன்னும் ஐந்து அல்லது அதற்கும் குறைவான வரிகளில் முடிக்க வேண்டும்....ஒரே காட்சிதான் என்றில்லை, இரண்டு மூன்றானாலும் பரவாயில்லை...

பயங்கரமான டுவிஸ்ட் கொடுத்தால் குஜாலிக்கா இருக்கும்.. மென்மையான முடிவு என்றாலும் ஒ.கே. ..
உங்களது முடிவை பின்னூட்டமாக போடவும்,  பின்னர் ஒவ்வொரு முடிவும் உங்களது பெயருடன் பதிவில் இணைக்கப்படும்...
இதில் வெற்றி தோல்வி இல்லை, போட்டி எதுவும் இல்லை, எல்லாரும் பங்கு பெற ஒரு சிறு முயற்சி..
சும்மா ஜாலியா ஒரு ட்ரை பண்ணிட்டு போங்க.... எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டமா ???

உங்களது ஆதரவை எதிர்பார்த்து, இதோ முதல் கதை..
----------------------------------------------------------------------------------

" டே உங்க சித்தப்பா ஊர்ல இருந்து இன்னைக்கி வர்றாரு, சீக்கிரம் எந்திருச்சு அவர போய் கூட்டிட்டு வா..."
"அவருக்கு என்ன நம்ம வீடா தெரியாது, அவரே ஆட்டோ புடுச்சிட்டு வந்திடுவார், கொஞ்ச நேரம் தூங்க விடும்மா..."
-------------------------------------------
" காந்தி நகர் போகணும்,எவ்வளவு ? "
"பதினஞ்சு ரூபா சார்..."
"சரி வாங்க "
-------------------------------------------
"இன்று காலை ஆறு மணிக்கு சென்னை வந்தடைந்த நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் ராஜன் என்ற பயணி
மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதத்தை கைப்பற்றிய ரெயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர் "
-------------------------------------------
ட்ரிங் ட்ரிங்....
"ஹலோ"
"செல்வி, ராஜூ வந்து சேர்ந்துட்டானா ?"
" இல்லங்க இன்னும் காணும்"
"ரவி ஸ்டேஷனுக்கு போனானா ?"
"இல்லங்க அவன் இன்னும் தூங்கிட்டுதான் இருக்கான்"
"சரி ராஜூ வந்தா உடனே எனக்கு போன் பண்ண சொல்லு"
"சரிங்க"
டொக்.
-------------------------------------------
" நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது,
சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்"
" The Subscriber you are calling is currently switched off, please try after sometime"
-------------------------------------------
வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது...

.
.
.
.
இதற்கு மேல் உங்கள் முடிவு...
.
.
.
-------------------------------------------

பின்னூட்டத்தில் வந்த சில சுவாரஸ்யமான முடிவுகள்....

Chitra :

----------------------------------------
" காந்தி நகர் போகணும்,எவ்வளவு ? "
"பதினஞ்சு ரூபா சார்..."
"சரி வாங்க "
-------------------------

.......... வீட்டுக்கு திரும்பி வர, தனக்கும் சித்தப்பாவுக்கும் அவரின் பெட்டிக்கும் சேர்த்து, ஆட்டோவுக்கு இருபது ரூபா ஆகும் என்று இருந்தான்.

ரயில் பெட்டியில் பெட்டி பாம்பாய் உயிர் அடங்கி வந்த சித்தப்பாவை பெட்டியில் வைத்து, அவரின் பெட்டியுடன் போலீஸ் - மார்ச்சுவரி என்று பல இருபது ரூபா நோட்டுக்களை தொலைத்த பின், வாரேன் என்று சொல்லி விட்டு போய் விட்ட சித்தப்பாவின் மர்ம மரணத்தில் - கவலையுடன் வீடு வந்து சேர்ந்தான்  .
.
.
----------------------------------------

முகிலன் :

“டேய் நாயே.. படிச்சு முடிச்சி வேலைக்கிப் போணும்ன்ற நெனப்பே இல்லாம, சேனல மாத்தி மாத்தி டிவி பாத்துக்கிட்டு உக்காந்திருக்கியேடா.. எவ்வளவு நேரம் கூப்புடுறது? செல்போன் ஆஃப் ஆகியிருக்கறதக் கூடவா பாக்க மாட்ட?”

நெருப்பாய் விழுந்த வார்த்தைகள் முதுகில் சுட சோபாவில் இருந்து எழுந்த ரவி ஆட்டோவில் இருந்து வந்திறங்கிய அப்பாவைப் பரிதாபமாகப் பார்த்தான்.
 .
.
----------------------------------------
பின்னோக்கி :

செத்துப் போனவன் உயிரோட வந்தது மாதிரி அப்படி ஏன் பார்க்குறீங்க ?. செல்போன் சார்ஜ் போயிடுச்சு. 

----------------------------------------

கடவுள் பாதி மிருகம் பாதி..  :

"அடப்பாவி !!! சித்தப்பாவ கூட்டிகிட்டு வாடான்னு சொன்னா .. யாரோ ஒரு பொண்ண சொல்லாம கொள்ளாம கல்யாணம் கட்டிக்கிட்டு வந்துநிக்கற.. இதுக்கு உன் சித்தப்பா வேற சாட்சியா??.. இதுக்கு தான் காலைல இருந்தே செல்ல ஆப் பண்ணி வச்சிடீங்களா.... அய்யோயோ!!! உங்க அப்பாக்கு என்னடா பதில் சொல்வேன்... "
என்று அலறிக்கொண்டே உள்ளே செல்லும் அம்மாவை பார்த்து ரவியும் அவனது சித்தப்பா ரங்கராஜுவும் உதடு பிரியாமல் மெல்ல சிரித்து கொண்டனர்..

உள்ளே திடீரென்று . பாத்திரம் உருளும் சத்தமும், அம்மா!! என்ற அலறலும் கேட்க.. வெளியே நின்ற மூவரும் அதிர்ந்து உள்ள ஓடி போய் பார்க்க .. ரவியின் அம்மா மயங்கி விழுந்திருந்தாள்..

அவர்கள் வீட்டு காலேண்டர் ஏப்ரல் ஒன்றை காட்டி பல் இளித்து சிரித்து கொண்டு இருந்தது..

----------------------------------------

மழைக் காதலன் அருண். இரா :

கூடவே போலீஸ் ஜீப் சத்தமும் சேர்ந்து கேட்டது ..
ஆட்டோ வில் இருந்து ரவியின் அப்பா இறுக்கமான முகத்துடன் இறங்கினார் , ஜீப்பில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் தீபன், வீட்டுக்குள் சரேல் என நுழைந்து , படுக்கை அறையில் இருந்த ரவியை மெல்ல எழுப்பி " ரவி சாரி , bad Morning" என்றபடி விலங்கை நீட்டினார்.

பேயறைந்து நின்ற செல்வியிடம் , உங்க பையன் ரவி , நீங்க நெனைக்கிற மாதிரி பச்சை புள்ள இல்ல மேடம் . அவன் பின்னாடி ஒரு பெரிய போதை மருந்து கும்பலே இருக்கு . கொஞ்ச நாள் முன்னாடி பேப்பர் ல பார்த்து இருப்பீங்களே , " அருண் IPS , அதிரடி என்கௌண்டர் : வெட்டு கணேசன் ,மாஞ்சா மான்டி , டம்மி ரமேஷ் பலி " , அந்த கும்பல் கூட தொடர்பில் இருக்கிறவன் தான் இந்த ரவி . இது தெரிஞ்சு , அதை உங்க கிட்ட சொல்ல வந்த அவன் சித்தப்பாவை காலைல ரயில்ல கொன்னுட்டு , சத்தமில்லாமல் இங்க தூங்கிட்டு இருக்கான் . எல்லாம் சரி யா செஞ்சுட்டு , அவரோட iphone எடுத்துட்டு வந்தது தான் இவன் தப்பு . செல் ஆப் பண்ணாலும் GPS இவன காட்டி குடுத்துடுச்சி..

"என்ன ரவி ஸ்டேஷன் போலாமா? ரயில்வே ஸ்டேஷன் இல்ல , போலீஸ் ஸ்டேஷன் !! " என்று சொன்ன படி, ஸ்டைல் ஆக தன் கூலிங் க்ளாசை மாட்டி கொண்டு ஜீப்பில் ஏறினார் தீபன்

----------------------------------------

14 comments:

  1. ----------------------------------------
    " காந்தி நகர் போகணும்,எவ்வளவு ? "
    "பதினஞ்சு ரூபா சார்..."
    "சரி வாங்க "
    -------------------------

    .......... வீட்டுக்கு திரும்பி வர, தனக்கும் சித்தப்பாவுக்கும் அவரின் பெட்டிக்கும் சேர்த்து, ஆட்டோவுக்கு இருபது ரூபா ஆகும் என்று இருந்தான்.

    ரயில் பெட்டியில் பெட்டி பாம்பாய் உயிர் அடங்கி வந்த சித்தப்பாவை பெட்டியில் வைத்து, அவரின் பெட்டியுடன் போலீஸ் - மார்ச்சுவரி என்று பல இருபது ரூபா நோட்டுக்களை தொலைத்த பின், வாரேன் என்று சொல்லி விட்டு போய் விட்ட சித்தப்பாவின் மர்ம மரணத்தில் - கவலையுடன் வீடு வந்து சேர்ந்தான்.

    ReplyDelete
  2. “டேய் நாயே.. படிச்சு முடிச்சி வேலைக்கிப் போணும்ன்ற நெனப்பே இல்லாம, சேனல மாத்தி மாத்தி டிவி பாத்துக்கிட்டு உக்காந்திருக்கியேடா.. எவ்வளவு நேரம் கூப்புடுறது? செல்போன் ஆஃப் ஆகியிருக்கறதக் கூடவா பாக்க மாட்ட?”

    நெருப்பாய் விழுந்த வார்த்தைகள் முதுகில் சுட சோபாவில் இருந்து எழுந்த ரவி ஆட்டோவில் இருந்து வந்திறங்கிய அப்பாவைப் பரிதாபமாகப் பார்த்தான்.

    ReplyDelete
  3. @சித்ரா... - ரொம்ப நன்றி மேடம்...உங்கள் வருகைக்கும் முடிவுக்கும்...கலக்கீட்டீங்க...
    கொஞ்சம் டெரரான ஆளுதான் நீங்க, டப்புன்னு இப்படி சித்தப்பாவை கொன்னுடீங்களே...?
    அந்த இருவது ரூவாய் மேட்டர் வித்தியாசம்...
    உங்கள் முயர்ச்சிக்கு மச்சான்சின் பெரிய நன்றி... :)
    அடிக்கடி வாங்க...

    ReplyDelete
  4. @முகிலன்...- ரொம்ப நன்றி முகிலன்....உங்கள் வருகைக்கும், கதையின் வித்தியாசமான முடிவுக்கும்...
    வித்தியாசமான கோணத்தில் இருந்தது உங்கள் கதை...என்ன சித்தப்பாவை பத்தி எதுவுமே சொல்லலை... :(
    ரவிய ஒரு வில்லன் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க... :)
    அடிக்கடி வாங்க மச்சான்..

    ReplyDelete
  5. செத்துப் போனவன் உயிரோட வந்தது மாதிரி அப்படி ஏன் பார்க்குறீங்க ?. செல்போன் சார்ஜ் போயிடுச்சு.

    ReplyDelete
  6. @பின்னோக்கி - நல்ல முடிவு மச்சான்...வார்த்தைகள் கச்சிதம்...
    கலக்கீட்டீங்க பின்னோக்கி ....

    ரொம்ப நன்றி உங்கள் முடிவுக்கு :)

    ReplyDelete
  7. "அடப்பாவி !!! சித்தப்பாவ கூட்டிகிட்டு வாடான்னு சொன்னா .. யாரோ ஒரு பொண்ண சொல்லாம கொள்ளாம கல்யாணம் கட்டிக்கிட்டு வந்துநிக்கற.. இதுக்கு உன் சித்தப்பா வேற சாட்சியா??.. இதுக்கு தான் காலைல இருந்தே செல்ல ஆப் பண்ணி வச்சிடீங்களா.... அய்யோயோ!!! உங்க அப்பாக்கு என்னடா பதில் சொல்வேன்... "
    என்று அலறிக்கொண்டே உள்ளே செல்லும் அம்மாவை பார்த்து ரவியும் அவனது சித்தப்பா ரங்கராஜுவும் உதடு பிரியாமல் மெல்ல சிரித்து கொண்டனர்..

    உள்ளே திடீரென்று . பாத்திரம் உருளும் சத்தமும், அம்மா!! என்ற அலறலும் கேட்க.. வெளியே நின்ற மூவரும் அதிர்ந்து உள்ள ஓடி போய் பார்க்க .. ரவியின் அம்மா மயங்கி விழுந்திருந்தாள்..

    அவர்கள் வீட்டு காலேண்டர் ஏப்ரல் ஒன்றை காட்டி பல் இளித்து சிரித்து கொண்டு இருந்தது..

    நண்பரே.. இது தான் எனது முதல் முயற்சி.. சோ.. தப்பு இருந்தா மன்னிச்சிக்கோங்க.. :)

    ReplyDelete
  8. ஹாய் மச்சான்,
    நான் சமீபமா தான் உங்க பதிவுகளை படிச்சுட்டு வரேன்.
    நேத்து "அப்பா" பதிவு படிச்சேன்,நல்லாருந்துச்சு.
    நீங்க எர்ணாகுளத்துல வேலை பாக்கறதா சொல்லிருந்தீக,
    நானும் இங்க தான் இருக்கேன், ஒரு ஐ.டி கம்பெனில குப்பை கொட்டிக்கிட்டு.

    may I know about,If u don't mind?

    ReplyDelete
  9. @ கடவுள் பாதி மிருகம் பாதி.. - மச்சான் படித்ததும் ரசித்தேன்...நல்லா வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க... நல்ல முடிவு,
    முதல் முயற்ச்சியா...? கலக்கல்ஸ் மச்சான்...
    முடிந்தால் சின்ன கதைகள் எழுத முயற்சிக்கவும்...
    மச்சான்ஸோட புல் சப்போர்ட் உங்களுக்கு உண்டு... :)

    ReplyDelete
  10. @ தயாநிதி - மச்சான்ஸ் பதிவை படிச்சதுக்கு மொதல்ல உங்களுக்கு ஒரு பெரிய டாங்க்ஸ் மச்சான்...
    பாராட்டுன உங்க பெரிய மனசுக்கு இன்னொரு எக்ஸ்ட்ரா லார்ஜ் டாங்க்ஸ்...

    நானும் ஐ.டி தான்... இன்போ பார்க்...
    deepanadhi@gmail.com
    முடிந்தால் Chat செய்யலாம்...

    ReplyDelete
  11. டாங்க்ஸ் நானும் தான் சொல்லணும், நீங்க பதிவு போட்ட எல்லா படத்தையும் லிஸ்ட் பண்ணி டவுன்லோட் பண்ண ஆரம்பிச்சுருக்கேன்..
    நல்லா சிம்ப்ளா இருக்கு..good

    கண்டிப்பா சாட் செய்யலாம், இன்வைட் பண்ணிருக்கேன்..
    அதே இன்போ பார்க் தான் என் பிளாட்பார்மும்

    ReplyDelete
  12. கிரைம் ஸ்டைல் மசாலா முயற்சி , பிழை இருந்தால் பொறுத்து கொள்ளவும் :) :

    //
    கூடவே போலீஸ் ஜீப் சத்தமும் சேர்ந்து கேட்டது ..
    ஆட்டோ வில் இருந்து ரவியின் அப்பா இறுக்கமான முகத்துடன் இறங்கினார் , ஜீப்பில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் தீபன், வீட்டுக்குள் சரேல் என நுழைந்து , படுக்கை அறையில் இருந்த ரவியை மெல்ல எழுப்பி " ரவி சாரி , bad Morning" என்றபடி விலங்கை நீட்டினார்.

    பேயறைந்து நின்ற செல்வியிடம் , உங்க பையன் ரவி , நீங்க நெனைக்கிற மாதிரி பச்சை புள்ள இல்ல மேடம் . அவன் பின்னாடி ஒரு பெரிய போதை மருந்து கும்பலே இருக்கு . கொஞ்ச நாள் முன்னாடி பேப்பர் ல பார்த்து இருப்பீங்களே , " அருண் IPS , அதிரடி என்கௌண்டர் : வெட்டு கணேசன் ,மாஞ்சா மான்டி , டம்மி ரமேஷ் பலி " , அந்த கும்பல் கூட தொடர்பில் இருக்கிறவன் தான் இந்த ரவி . இது தெரிஞ்சு , அதை உங்க கிட்ட சொல்ல வந்த அவன் சித்தப்பாவை காலைல ரயில்ல கொன்னுட்டு , சத்தமில்லாமல் இங்க தூங்கிட்டு இருக்கான் . எல்லாம் சரி யா செஞ்சுட்டு , அவரோட iphone எடுத்துட்டு வந்தது தான் இவன் தப்பு . செல் ஆப் பண்ணாலும் GPS இவன காட்டி குடுத்துடுச்சி..

    "என்ன ரவி ஸ்டேஷன் போலாமா? ரயில்வே ஸ்டேஷன் இல்ல , போலீஸ் ஸ்டேஷன் !! " என்று சொன்ன படி, ஸ்டைல் ஆக தன் கூலிங் க்ளாசை மாட்டி கொண்டு ஜீப்பில் ஏறினார் தீபன்.

    ReplyDelete
  13. அருண் IPS ... ஹ ஹ ஹ ஹா ..

    ReplyDelete
  14. மச்சி கதை கலக்கல்...அதுலயும் அந்த கேரக்டர்கள் (வெட்டு கணேசன், மாஞ்சா மாண்டி, டம்மி ரமேஷ்) நிஜ வாழ்கை மனிதர்கள்... அருண் IPS ...ம்ம்...இந்த ஆசை வேறையா...??? தொடர்க உந்தன் கலை பணி....

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...