Friday, March 12, 2010

பண்டோராவை தாண்டி வருவாயா !!?!

ஹாய் ஹாய் ஹாய் மச்சான்ஸ் !!
கொஞ்ச நாளா (மாசமா ) , நம்ப மாப்பி "சிவன்@தீபன்" தனியா பதிவுகள் போட்டு கலக்கிட்டு இருக்கிறாரு ..கூடவே மொக்கை போட நானும் ரெடி ..

பண்டோரா பார்க்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன தண்டோரா (கவித ..கவித ..ஆஹ் ஆஹ் ) :

தீபன் (சிவன்) மற்றும் அருண் (நான் தாங்க ) ரெண்டு பேரும் ஒரே கல்லூரி யில் பொறியியல் படித்து (?!?!) , ஒன்னாவே கேரளா வில் மென்பொருள் துறை யில் (அட Software engineer பா ) குப்பை கொட்டிட்டு இருந்தோம். ஒரு நாள் காலைல , நைட் சரக்கடிச்ச மப்பு தெளியாம , தீபன் மூளைல (?!?) உதிர்த்த ஒரு முத்தான ஐடியா தான் இந்த "மச்சான்ஸ் பதிவு " !! கொஞ்ச கொஞ்சமா நாங்க அதை செய்ய ஆரம்பிச்சோம் , எங்க அறையில் இருந்த பல நண்பர்கள் உதவியும் உற்சாகமும் கிடைத்தது ..சொல்ல போனா, தீபன் தான் இந்த பதிவின் ஆணி வேர் .மும்பை நண்பர் எட்வின் (ஓவியா ) எப்போதாவது எழுதவது உண்டு ; எங்க வேலை பிரஷர்களுக்கு இடையே (?!?) நினைத்தது விட ரொம்ப மகிழ்ச்சி தந்துட்டு இருக்கிற ஒரு விஷயம் இந்த பதிவும் , உங்க ஆதரவும்.

சில மாதங்கள் ;
73 followers;
66 பதிவுகள் ;
25000 மேற்பட்ட பார்வைகள்;
விகடன் குட் ப்ளாக்ஸ்ல் வந்தது ;
நிறைவான தமிழிஷ் & உலவு ஓட்டுக்கள் ;

இதெல்லாத்தையும் விட
நெகிழ்வான பின்னூட்டங்கள் ; நிறைய நிறைய நண்பர்கள்; (ஆல் மச்சான்ஸ் , ரொம்ப நன்றி (இதை விட சிறப்பான வார்த்தை கிடைக்கலை :( ..)
----------------------------------------------------------
பீல் பண்ணது போதும்....கம்மிங் பேக் டு தி ஸ்டோரி :
ஆனா இயற்கை எங்க நட்பை பிரிக்க நினைத்து , என்னை பிரான்ஸ்ல மேற்படிப்பு படிக்க வச்சிருச்சி இப்போ ..சோ ..உலக தொலை காட்சி ..சீ சீ , உலக பதிவுலக வரலாற்றில் முதன்முறையாக நம்ப "மச்சான்ஸ் பதிவு " , உலகத்தலைமையிடமாக (அடடா World Headquarters பா ) இந்தியாவையும் , ஐரோப்பிய செயலகமாக பிரான்சையும் கொண்டு இயங்கும் !!

(ஹி ஹி.. இந்த மொக்கை கண்டு சினம் கொண்டவர்கள் "அழுகின முட்டை மற்றும் தக்காளிகளுக்கு பப்பு வை அணுகவும்" !! )

---------------------------------------------------------

பண்டோராவை தாண்டி வருவாயா :


சமீப காலத்தில வந்த சிறப்பான ரெண்டு படங்கள் "அவதார்" மற்றும் "விண்ணை தாண்டி வருவாயா " ..
அது ரெண்டையும் நேர்த்தியா சேர்த்து இருக்காங்க SSN (chennai) கல்லூரி மாணவர்கள்..
நல்ல வீடியோ , அவசியம் பார்க்கவும் !!

6 comments:

Chitra said...

Oui! Best wishes!

Congratulations for your blog's success!

அருண். இரா said...

@Chitra

oui ?? -- merci beaucoup :)

ரொம்ப டேங்க்ஸ் மச்சி !!!
உங்களைப் போன்ற சிறப்பான நண்பர்கள் இருக்கிறவரை "மச்சான்ஸ்" எப்பவும் "மாஸ்" தான் !! :)

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள்

seemangani said...

வாழ்த்துக்கள்....மச்சான்ஸ்
வீடியோ...நல்லா இருக்கு...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்துக்கள் மச்சான்.......

cheena (சீனா) said...

அன்பின் அருண்

சிவன் தனியா அருண் தனியா கலக்குங்கப்பா

உலகம் பூரா மச்சானைப் பாக்குறீங்களா

வாழ்க வாழ்க

தமிழ் மணத்துல இணைக்கறது.....

நல்வாழ்த்துகள் அருண்
நட்புடன் சீனா

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...