Monday, November 9, 2009

ஒரு அப்பா.

வானம் லேசாக இருட்ட தொடங்கியுருந்த நேரம். மழை வேறு விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது. வேலூர் போறதுக்காக எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷன்-கு ஒரு மணி நேரம் முன்னாடியே வந்திருந்தேன். ரயில்வே ஸ்டேஷன்ல வேடிக்கை பார்த்திட்டு உக்கார்றதுனா நமக்கு கொஞ்சம் EXTRA இஷ்டம்.
நம்ம நண்பர் கூட்டம் வேற அன்னிக்கு யாரும் ஊருக்கு போகலை, அதனால தனியாதான் வந்திருந்தேன். என்ன, நம்ம நேரம்..வழக்கத்துக்கு மாறா அன்னிக்குன்னு பிளாட்பாரமே வெறிச்சோடி கெடந்துச்சி. உள்ளுக்குள்ள ஒரு சின்ன சோகம், அப்படியே பக்கத்துல காலியா இருந்த பெஞ்சுல உக்கார்ந்தேன்.
அதே பெஞ்சில் வயதானவர் ஒருத்தர் வாயில் வெற்றிலையுடன் என்னை பார்த்துக் கொண்டிருந்தார். ஒமனாக்கள் யாரும் காணாததால், பையில் இருந்து அவனி சுந்தரியை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அந்த பெரியவர் என்னை பார்ப்பதாக தோன்றியது.மெதுவாக தலையை நிமிர்த்தினேன், அவர் என்னையும் புத்தகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.அவருக்காக சாம்பிள்-க்கு ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு திரும்ப அவனி சுந்தரியோட ஐக்கியமாயிருந்தேன்.
ஒரு சில நிமிஷத்துல ஒரு மலையாள குடும்பம் எங்களுக்கு பக்கத்துல இருந்த பெஞ்சுல வந்து உக்கார்ந்தாங்க.அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, பாட்டி என ஐவரும் வெளியூர் போகிறார்கள் போல என்று எண்ணி, நான் படிப்பதை தொடர்ந்தேன். அவ்வப்போது என்னை கடந்து செல்பவர்களையும் பார்த்து கொண்டிருந்தேன். அப்படியே அந்த பெரியவரையும். அவர் கண்கள், அவரின் தூக்கமின்மையை வெளிச்சம் போட்டு காட்டிகொண்டிருந்தது. ஏனோ எனக்கு அவரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் எழவேயில்லை. வழக்கமாய் என் பக்கத்தில் இருப்பவர்களிடமோ, என்னுடன் பயனிப்பவர்களுடனோ நானே வழிய சென்று சில சமயம் பேசுவது உண்டு. இன்று ஏனோ, அவனி சுந்தரியுடனே ஐக்கியமாகி இருந்தேன்.
யாரோ என்னை கூப்பிடுவதாக உணர்ந்து தலை நிமிர்ந்தேன், மலையாள அண்ணன் எதிரே நின்று கொண்டிருந்தார். வந்த சில நிமிடங்களிலேயே அவர்களில் அண்ணன் மட்டும்தான் ஊருக்கு போகிறார் என்றும், மற்றவர்கள் அனைவரும் அவரை வழியனுப்ப வந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் பேசியதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
டிரெயின் சரியான டைமுக்குதான் வருகிறதா என்று மலையாளத்தில் வினவினார், ஆம் என்று சொல்லிவிட்டு அவரையே பார்த்து கொண்டிருந்தேன். கையில் இருந்த புத்தகத்தை பார்த்துவிட்டு நீங்கள் தமிழா என்று கேட்டார், ஆமாம் என்று சொல்லிவிட்டு அவனி சுந்தரியை தொடரும் ஆர்வத்தில் மீண்டும் படிக்க தொடங்கினேன்.
திடீரென்று எதையோ உணர்ந்தது போல் அந்த பெரியவரை பார்த்தேன், அவரும் அதையே எதிர் பார்த்தவர் போல, 'தம்பி தமிழா ?' என்றார். ஆமாங்க என்று சட்டென முடித்துகொண்டேன் பேச்சு தொடர விரும்பாதவனாய்.
மீண்டும் அவர், "எந்த ஊருப்பா நீங்க ?" - என்றார்.
"நான் வேலூர்ங்க, வீட்டுக்கு போறேன்" -என்று சொல்லி முடித்துவிட்டு அவரையே பார்த்து கொண்டிருந்தேன், பேச்சை முடித்துவிட்டு புத்தகத்தை படிக்கலாம் என்று.
"இங்க என்ன படிக்கிறீங்களா தம்பி ?"
"இல்லங்க வேலை செஞ்சிட்டு இருக்கேன், கம்ப்யூட்டர்ல" - புரிந்ததாய் தலை ஆட்டினார்.
இம்முறை நான் கேள்வி கேட்க தொடங்கினேன்.
"நீங்க எந்த ஊரு?"
"நான் இங்கன தஞ்சாவூருப்பா, திருச்சி வண்டிக்காக உட்கார்ந்திருக்கேன், நாளக்கி காலைல எறங்கி மாறணும்" - என்றார்.
"எனக்கும் சொந்த ஊரு தஞ்சாவூர்தாங்க" - என்றேன். நானும் தஞ்சாவூர் என்றதில் அவருக்கு ஒரு சந்தோசம்.
"இங்க யாரையும் சொந்தக்காரர்களை பார்க்க வந்தீகளா ?"
"இல்லப்பா, ஒரு வேலை விஷயமா மொதலாளி அனுப்பி வச்சாரு, ஒடம்பு சுகப்படாம போச்சு, அதான் ஊருக்கு திரும்பி போயிட்டு இருக்கேன்"
பதறியவனாய் காட்டிக்கொண்டு என்ன ஆச்சு என்றேன் ?
என்னன்னே தெரியலப்பா நேத்து ராத்தியில இருந்து ஒன்னும் முடியல, காலேல டாக்டருக்கிட்ட காண்பிச்ச உடனேதான் தேவலையா போச்சு"
"இப்ப எப்படி இருக்கு என்றேன் ?"
"இப்ப பரவா இல்லப்பா, காலைலாதான் சுத்தமா தெம்பில்லாம போச்சு...
இருவரும் "லேசாக" நண்பர்கள் ஆகிவிட்டதால் பேச்சை தொடர்ந்தோம்.
அவர் இங்கு வந்து கடந்த பத்து நாட்களாய் பட்ட அல்லல்களையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார்.
அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் அவரை நன்றாய் கவனிக்கலானேன். பழுப்படைந்து போன ஒரு வேட்டி, அதே நிறத்திலொரு சட்டை, சவரம் செய்யாத முகம், வெற்றிலை கரையேறிய பற்கள், ஜிப் அறுந்த நிலையில் ஆனந்தா டெக்ஸ்டைல்ஸின் தோள்பை, அளவுக்கு மீறி உழைத்து கொண்டிருக்கும் கழற்றி விடப்பட்ட காலணிகள், அப்பட்டமாய் விளக்கின அவரின் நிலையை.
பேச்சில் சுவாரஸ்யமான அவர், தன் வேலையை பற்றி கூறத் தொடங்கினார். சுமார் அறுபது வயதை தாண்டியிருந்த அவர் இன்றும் விசேஷங்களுக்கு பந்தக்கால் அமைக்கும் வேலையில் உள்ளதாக சொன்னார். வேலை நாட்களில் மட்டும் கிடைக்கும் கூலியை வைத்து தனது மூன்று மகனையும் பாலிடெக்னிக் வரை படிக்க வைத்ததை சற்று பெருமையுடனே சொன்னார். அவரின் இரண்டாவது மகன் மட்டும் நிரந்த வேலை பெற்றுள்ளதையும், மூத்தவர் அவ்வப்போது மட்டும் வேலைக்கு செல்வதை சொல்லி கடிந்து கொண்டார்.
"சின்னப்பய இந்த வருஷம்தான் படிப்ப முடிக்கிறான்".
"அப்புறம் என்னங்க இந்த வருஷத்தோட நீங்க வேலைய விட்டு நின்னுக்கிடலாம் ?"
"இல்ல தம்பி, ரெண்டாவது பய பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு இருவதுனாயிரம் செலவு செஞ்சிருக்காம்பா"
அவருக்கு ஒரு பொண்ணு இருப்பதையும், அவளுடைய படிப்பை பற்றியும் இவர் ஏன் சொல்லவில்லை என்று ஒரு நிமிடம் தோன்றியது, அவர் பேச்சை தொடர்ந்ததால் அதை கேட்க முடியாமல் கவனிக்கலானேன்.
"அந்த காசை எப்படியாவது ரெண்டு மூணு வருஷத்துல சம்பாரிச்சு அவன்கிட்ட கொடுத்திடணும்பா......." என்றார் எங்கேயோ பார்த்துக்கொண்டே....
அவர் சொன்னதை கேட்டு பேச்சற்றவனாய் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தேன். "போறதுக்குள்ள முடிஞ்ச வரைக்கும் சேத்து ஆளுக்கு கொஞ்சம் கொடித்திட்டு போகணும்பா" என்றார்.
நிச்சப்தம் எங்களிடையே மெல்ல ஊடுருவியிருந்தது. அவர் கண்கள் கசிந்து மெல்லிய ரேகையாய் கண்ணீர் கீழ் இறங்கி கொண்டிருந்தது. இருவரும் சிறிது நேரம் பேசவில்லை.
சொந்த மகன் காசையே கடனாக பார்க்கிறாரே ? இவ்வளவுதானா உலகம் ?
இன்னும் எனக்குள் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து அடங்கின.
எனது வண்டி இன்றும் நேரம் தவறிதான் வந்தது. அவரிடம் சொல்லிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தேன். அந்த பெரியவர் எங்கோ பார்த்துக்கொண்டு எதையோ யோசித்து கொண்டிருந்தார். ...!!!
"எல்லா அப்பாக்களுமே இப்படித்தானோ ??? "

அரிய புகைப்படங்கள் !!! - வயிறு வலிக்கு "மச்சான்ஸ்" பொறுப்பல்ல !

கொஞ்ச நாட்களா ரொம்ப சீரியஸ் பதிவுகளா இருக்கு.. 
சோ ..மக்களே உங்கள் தீராத வேண்டுகோளுக்கு (??##$$!!@@??) இணங்க...
சில அரிய புகைப்படங்கள்.. என்சாய் ..

1) நான் வெளியில ஜோக்கரு..ஆனா இவரு தான் ரியல் டெர்ரர் ..


2) ஏ ..புள்ள ..இந்திய மண்ணுல மட்டுமில்ல , யுரேநசு கிரகத்துலயும் நம்ம ஆட்சி தான்..


3) என்னங்கணா ..அப்படி பார்க்கிறீங்க..நம்ம எப்படி இந்த லிஸ்ட்ல னு டவுட் ஆ? 
எப்போ பட்டுச் சேலை ல சட்டை தச்சுப் போட்டேனோ, அப்பவே வந்தாச்சு ..
(விஜய்யை மட்டும் பார்க்கவும் ..ராஸ்கல்..சின்ன புள்ளத்தனமா லா இருக்கு ..)


4)ரஷியாவுல என்னப் பார்த்து யாரு னு கேட்ட முதல் ஆளு நீ தான் ...
ஹேய் டண்டணக்கா..!!


5) ண்ணா...கட்சி ஆரம்பிக்கப் போறதா நியூஸ் வந்தது உண்மை தானுங்ண்ணா..
ஆனா இங்க இல்ல அமெரிக்கா வுல ..
அடுத்தப் பொங்கல்ல நாம தாங்க அமெரிக்க ஜனாதிபதி !! 
எவ்ளோவோ பண்ணிட் டோம் ..இதப் பண்ண மாட் டோமா ?


6) லாஸ்ட் படமா வந்தாலும் லேட்டஸ்ட் இவரு தான் ...
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
No comments...
மக்களே நீங்களே உங்க அழகு தமிழ்ல comment எழுதுங்க ..
நான் வரலை இந்த விளையாட்டுக்கு ....

சிங்கமொன்று புறப்பட்டதே ..

Wednesday, November 4, 2009

ஆஸ்திரேலியா Australia - 2008



2008 ஆம் ஆண்டு ஆஸ்த்ரேலிய சரித்திரத்தின் பின்னணியில் காதலை மையாமாக கொண்டு ஹ்யூஜ் ஜாக்மேன், நிகோல் கிட்மேன் நடித்து வெளிவந்து ஆஸ்த்ரேலிய நாட்டில் சக்கை போடு போட்ட படம்தான் ஆஸ்த்ரேலியா !!!

1940களின் ஆரம்பத்தில் நடப்பதாய் தொடங்குகிறது கதை. 1940-களில் இருந்த ஆஸ்திரேலியாவை அப்படியே கண்முன் நிறுத்துகின்றனர் (நமக்கென்ன தெரியும், ஆனா பாக்கும்போது இப்படித்தான் இருந்திருக்குமோன்னு தோணுது).

இங்கிலாந்து பெண்மணி சாரா ஆஷ்லியாக நிகோல் கிட்மேன். அவரின் கணவர் ஆஸ்த்ரேலிய நாட்டில் FARAWAY DOWNS என்ற இடத்தில் கால்நடை பண்ணை நடத்துபவர். பண்ணை சரியாக போகாததால் அதை விற்க சொல்வதற்காக சாரா ஆஸ்த்ரேலியா வருகிறார். டார்வின் துறைமுகத்திலிருந்து அவரை FARAWAY DOWNS அழைத்து வர ட்ரோவர் (ஹ்யூஜ் ஜாக்மேன்) என்பவரை அனுப்பி வைக்கிறார் சாராவின் கணவர்.


ஜாக்மேனின் அறிமுகமே பாரில் நடக்கும் ஒரு அடிதடி சண்டை காட்சியில்தான் - நம்மூர் ஹீரோக்கள் பாணியில் ஒரு இன்ட்ரொடக்ஷன். நல்ல வேலை ஜாக்மேன் அதுக்குன்னு தாவணியில மூஞ்சிய மூடிட்டு பறந்து வரல.

நெடுதூர பயணத்துக்கு பிறகு டார்வின் துறைமுகத்திலிருந்து இருவரும் FAIRAWAY DOWNS வந்தடைகிறார்கள். சாராவின் துரதிர்ஷ்டம் அதே நேரம் அவளின் கணவர் கொல்லப்படுகிறார். கிங் ஜார்ஜ்(ஒரு பழங்குடியின தலைவர்) தான் தன் கணவரை கொன்றது, என்று மானேஜர் நீல் பிளச்சர் மூலம் தெரிந்துகொள்கிறார். அதே வீட்டில் ஒரு பழங்குடியின பெண்ணும், அவளின் மகன் நல்லாவும் பணியில் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில், நல்லா சாராவிடம் பிளெச்சர் பற்றிய சில உண்மைகளை தெரிவிக்கிறான். அதாவது பிளெச்சர் அந்த பண்ணையை சாராவின் கணவரிடமிருந்து ஏற்கனவே அபகரித்து வந்ததையும், அது தெரிந்ததும் சாராவின் கணவரை கொன்றதும், அந்த பழியை கிங் ஜார்ஜ் மீது சுமத்தியது உட்பட. இதை தெரிந்து கொள்ளும் பிளெச்சர் நல்லாவையும் அவனது தாயையும் அடிக்க, சாரா உடனே மனேஜரை வேலையை விட்டு நீக்குகிறார். பண்ணையையும் தானே கவனிக்க முற்ப்படுகிறார்.

நல்லா பண்ணையில் இருப்பதை மானேஜர் பிளெச்சர் போலீசிடம் போட்டு கொடுத்து விடுகுறார். (ABORIGINES எனப்படும் இச்சிறுவர்களை அன்றைய ஆஸ்த்ரேலிய அரசு தனியாக கூட்டி சென்று ஒரு தீவில் வைக்கின்றனர்.) அன்றைய தினங்களில் ஆஸ்த்ரேலிய பழங்குடியினருக்கு இந்த வெள்ளைக்கார இடியட்ஸ் செஞ்ச கொடுமைகள் எக்கச்சக்கம், அதுல ஒண்ணுதான் சிறுவர்களை பெற்றோரிடமிருந்து பிரிப்பது.


எனவே நல்லாவை தேடிக்கொண்டு வரும் போலீசிடம் இருந்து அவனை காப்பாற்றும் பொருட்டு அவன் தாய் உயிர் இழக்கிறாள்.இந்நிலையில் நல்லா மீது பாசம் கொள்ளும் சாரா, நல்லாவை தன் மகனாக பாவிக்கிறார்.

சாரா ட்ரோவர்கிட்ட அங்கு உள்ள அனைத்து கால்நடைகளையும் (சுமார் 1500) டார்வின் கொண்டு சேர்க்க வேண்டுகிறாள். அனால் அதற்க்கு போதுமான ஆட்கள் இல்லாததால், சாரா, நல்லா, இன்னொரு பழங்குடியினப் பெண் என அவர்களையும் ட்ரோவர் தயார் படுத்துகிறான். இதை தடுக்க பிளெச்சர் போகும் வழியெல்லாம் அவர்களுக்கு தடங்கல் ஏற்படுத்துகிறான். அதோடு இல்லாமல் பிளெச்சர் மீண்டும் நல்லாவை தனி தீவுக்கு அனுப்பவும் ஏற்ப்பாடு செய்கிறான். இடையில் மாடுகளை ஒட்டி செல்லும் வழியில் சாராவுக்கும் ட்ரோவருக்கும் மலரும் காதல். பாலைவனத்தில் ஒரு LOVE STORY (BONUS TRACK).

கால்நடைகள் டார்வினுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதா ? (இதுவரை படத்தின் முதற் பாதி). பிற்பாதியில் இந்த மூவரையும் (சாரா , நல்லா, ட்ரோவர்) சில சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பிரித்து விட இந்த மூவரும் ஒன்று சேர்கிறார்களா என்பது மீதி கதை.
பிற்ப்பாதியில் டார்வினை புரட்டி போடும் ஜப்பானிய குண்டு வீச்சு (இது உண்மையாக நடந்த ஒரு சம்பவம்), சாரா பணிபுரியும் வானொலி மையம் தாக்கப்படுதல் என்று பல அசம்பாவங்களையும் தாண்டி பயணிக்கிறது இந்த சரித்திர படம்.

படத்துல பல இடங்களில் அப்ஒரிஜின்ஸ் (ABORIJINES) எனப்படும் அந்த ஆஸ்த்ரேலிய நாட்டின் பூர்வீக குடி மக்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்துவதை ஆங்காங்கே தெரியப்படுத்துகிறார் டைரக்டர் (Baz Luhrmann - மோலின் ரோக் படத்தின் இயக்குனர்). ட்ரோவரின் கறுப்பின நண்பரை தன் பாரில் (BAR) நுழைய அனுமதி மறுப்பது, ஒரு கறுப்பின பெண்ணை மணந்ததற்காக ட்ரோவேரையும் சில வெள்ளையர்கள் தாழ்வாக கருதுவது, கருப்பர்களை படம் நெடுகிலும் அடிமைகளாய் காட்டியிருப்பது, கறுப்பின பெண்களையும் இச்சைக்கு வெள்ளையர்கள் பயன்படுத்தி இருப்பது (நல்லாவின் பிறப்பும் இப்படியே) - என்று படம் நெடுக ஏராளம்.


இதே அப்ஒரிஜின்ஸ் மக்களுக்கு எதிராக வெள்ளையர்கள் இழைத்த அனைத்து கொடுமையையும் முழு விவரத்தோடு 'ஹாய் மதன்" அவருடைய மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் புத்தகத்தில் எழுதியிருப்பார். அதை படித்துவிட்டு இதை பார்த்தால், படத்தில் காட்டியிருப்பது மிக சொற்பமே.
படத்தில் முக்கியமா குறிப்பிடப்பட வேண்டிய சில விஷயங்கள், படம் நெடுக நம்மை கட்டிபோடும் கேமரா. ஒவ்வொரு ப்ரேமும் சூப்பர். நல்லாவாக வரும் சிறுவன், அதிசய சக்திகள் கொண்ட கிங் ஜார்ஜாக வரும் கிழவர் ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். இறுதியில் வரும் போர் காட்சிகளால் சீர்குலைந்த டார்வின்-ஐ காட்டுவதில் ஆகட்டும், 1500 கால்நடைகளை மேய்ப்பதில் ஆகட்டும் காட்சியமைப்பு கேமரா ஆர்ட் டைரெக்ஷன் அனைத்தும் அருமை.

என்ன படம் கொஞ்சம் நீளம் அதிகம். இரண்டே முக்கால் மணி நேரம். இரு பாதிகளும் இரு தனி கதைகள் போலவே. இன்னொரு விஷயம், இப்படம் எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்தும் என்று கூற இயலாது. படத்தின் நீளம் ஒரு குறையே. படத்தின் பிற்பாதி வேகமாகவே செல்லும்.

படத்த பார்க்கும்போது நமக்கு (எனக்கு) ஏற்ப்படும் ஒரு கஷ்டம், அவுங்க பேசுற இங்க்லிபிசு, இது பேரு தான் ஆஸ்த்ரேலிய இங்கிலீசான்னே ? , மொத கால் மணி நேரம் ஒண்ணுமே புரியல....(அட சப் டைட்டில் வச்சுதாங்க படம் பார்த்தேன்)...அப்புறம் போக போக செட் ஆயிடிச்சு...!!!.வித்தியாசமான படங்களை விரும்புவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்.

படத்த தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.

படத்தோட டிரைலர் இதோ.


Related Posts Plugin for WordPress, Blogger...