Friday, April 16, 2010

மாத்ரு பூமி – A Nation Without Women (2003)



விகடன் குட ப்ளாக் லிஸ்ட்டில் வெகு நாள் கழித்து மச்சான்ஸ்- இன்  பதிவு (மாத்ருபூமி). நன்றி மச்சான்ஸ்  :)


முதல் முறை இந்த படத்தை பத்தி கேள்வி பட்ட போது, இப்படியும் ஹிந்தியில் சினிமா எடுக்கிறார்களா என்றுதான் தோன்றியது. அதை விட பெரிய அதிர்ச்சி இந்த படத்தை பார்த்த போது ஏற்ப்படுத்தியது.

இவ்வளவு தைரியமாக இன்னமும் சினிமா எடுக்கிறார்களா ??. ஹிந்தியில் பண்டிட் குயின் படத்திற்கு பிறகு, இந்த படத்தை தான் மிக தைரியமாக எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லலாம்.

இந்த படத்தை பத்தி பார்க்குறதுக்கு முன்னாடி சில தகவல்களை உங்ககிட்ட பகிர்ந்த்துக்கிடணும் மச்சான்ஸ்

கடந்த இருபது வருடங்களில் மட்டும், கருவிலேயே அழிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - பத்து மில்லியனுக்கும் மேல். (சுமார் ஒரு கோடி). அதாவது 7300 நாட்களில் ஒரு கோடி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். கொஞ்சம் கணக்கு செய்தால்,ஒவ்வொரு நாளும் சராசரியாக 1370 கருக்கலைப்பு நடந்துள்ளது.

பதறாதீர்கள், இன்னொரு விஷயம். இவ்வாறாக அழிக்கப்படும் குழந்தைகளில் (1984இல் மட்டும்) பாம்பேயில் கொல்லப்பட்ட 8000 குழந்தைகளில் 7999 பெண் சிசு.
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய ஆய்வின் அறிக்கை படி இந்தியாவில் சுமார் ஐம்பது மில்லியன் பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர்...
ஆயிரம் ஆண்களுக்கு பெண்களின் விகிதம்.

1901 - 972
1911 - 964
1921 - 955
1931 - 950
1941 - 945
1951 - 946
1961 - 941
1971 - 930
1981 - 934
1991 - 927
2001 - 933
(2001 சென்சஸ் கணக்குப்படி....)

இந்த பெண் சிசுக்கொலைகளுக்கு முதல் மற்றும் முக்கிய காரணம் வரதட்சணை.

மேற்க்கூறியுள்ள இந்த விஷயங்கள் அனைத்தையும் மையமாக வைத்து 2001-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஹிந்தி திரைப்படம்தான் இந்த மாத்ருபூமி.


இந்தியாவின் எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணின் பிரசவத்தில் இருந்து தொடங்குகிறது கதை. குழந்தை பிறந்தவுடன் குதூகலிக்கும் குடும்பத்தினர், அது பெண் என்று தெரிந்தவுடன் வருத்தம் கொள்கின்றனர். அடுத்த நாளே ஊரார் முன்னிலையில் அந்த குழந்தை பால் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் முழுக வைத்து தந்தையின் கையாலேயே கொல்ல படுகிறது.



சில வருடங்கள் கழித்து கதை தொடர்கிறது...

ஆண்கள் ...ஆண்கள் ...ஆண்கள்....திடீரென்று எங்குமே பெண்கள் இல்லாமல் போய் விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில். தன் ஐந்து மகன்களுக்கும் பெண் தேடுகிறார் ஒரு தந்தை. அவருக்கு உதவியாக கோவில் பண்டிதர் ஒருத்தர். பண்டிதர் பல ஊர்களை சுற்றி வந்தும் ஒரு பெண்ணும் கிடைத்த பாடில்லை. கல்யாணத்திற்கு பெண் இல்லை என்றவுடன் ஏதோ கல்யாண வயதில் பெண் கிடைக்க வில்லை என்று நினைக்காதீர்கள்.
சிறுமி, குழந்தை , கிழவி என்று யாருமே இல்லாமல் போய் விடுகிறது.

இதற்க்கிடையே கவர்ச்சி நடனத்திற்கும் (பெண் போல் வேடமிட்டு ஆண்கள் ஆடும்), தொலைக்காட்சியில் கேசட் போட்டு காட்டப்படும் ஆபாசப் படத்திற்கும் (அதிலாவது பெண்களை பார்க்கலாம் என்றுதான்..) மக்கள் (சாரி ஆண்கள் ) கூட்டம் கூட்டமாக சென்று பார்ப்பதாக இருக்கிறது ஊர் நிலைமை.
பல குடும்பங்கள் பெண் தேடி அலைந்து கொண்டிருக்க, எவ்வளவு காசு கொடுத்தாவதும் பெண் பிடிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்கின்றனர் மக்கள்.

பண்டிதர் அங்கு இங்கு என்று அலைந்து கடைசியாக பல வருடங்களாக மறைத்து
வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை (கல்கி) கண்டு பிடித்து வருகிறார். தந்தையும் உடனே பணம் எல்லாம் தயார் செய்து கொண்டு பெண்ணின் வீட்டுக்கு புறப்படுகிறார். மகன்கள் யாரும் இல்லாததால், தன் இளைய மகனை(படித்து கொண்டிருப்பவர்) மட்டும் உடன் அழைத்து செல்கிறார்.

பெண்ணின் தந்தையிடம் பேசி ஒரு லட்சத்துக்கு பெண்ணை முடிக்க நினைக்கையில், பெண்ணின் தந்தை இளைய மகனுக்குத்தான் தன் பெண்ணை தருவேன் என்கிறார். கடைசியல் பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு, பெண்ணின் தந்தைக்கு பண ஆசை காட்டி, ஐந்து மகன்களுக்கும் அந்த பெண்ணை பேசி முடிக்கின்றார். (கைமாறியது : ஐந்து லட்சம் பணம், ஐந்து மாடு).

ஐந்து பேருக்கும் சேர்த்து ஒன்றாய் கல்யாணம் நடக்க, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரவாய் ஐந்து இரவை சகோததர்கள் தமக்குள்ளே கல்கியை பங்கிட்டு கொள்கின்றனர். கடைசியில் இரண்டு இரவுகள் மிச்சமிருக்க, இவ்வளவு காசு கொடுத்து வாங்கியவள் இரண்டு இரவுகளை தனியாக கழிப்பதா என்று மூத்தவன் தான் அந்த இரண்டு தினங்களை எடுத்துக்கொள்வதாக சொல்ல, கோபம் கொள்ளும் தந்தை போட்டிக்கு வருகிறார். கடைசியில் தந்தைக்கும் வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கப்படுகிறது.





இப்படியாக நாட்கள் செல்ல, இளைய மகன் மட்டும் கல்க்கிக்கு அவ்வப்போது அவருக்கு உதவி செய்து அவரை புரிந்து கொள்கிறார். மற்றவர்கள் அனைவரும் அவளை ஒரு செக்ஸ் மெஷினாகவே பாவித்து ஒவ்வொரு இரவும் தனது அரிப்பை போக்கி கொள்ளவே பயன்படுத்தி கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் கடைசி மகனுடன் மட்டும் அவள் சந்தோஷமாக இருக்க, மற்ற அனைவருக்கும் அவன் மீது காண்டாகிறது..அவன் தந்தையார் உட்பட...

இந்த கோபத்தில் சகோததர்களே இளையவனை கொலையும் செய்துவிடுகின்றனர். கடும் துக்கத்தில் மூழ்கும் கல்கி தன் தந்தைக்கு யாருக்கும் தெரியாமல் ஒரு கடிதம் எழுதுகின்றார். கடிதத்தில் தன் மாமனாரும் தன்னுடன் உறவு கொள்வதையும் குறிப்பிட்டு எழுதி அனுப்புகிறார். கடிதம் கிடைத்து வரும் தந்தை தன்னை காப்பாற்றுவார் என்று கல்கி நினைக்க, தந்தையோ வேறு கணக்குடன் வீடு வருகிறார். (எக்ஸ்ட்ராவாக ஒரு ஆள் என்பதால் மீண்டும் ஒரு லட்சம் பணம் வாங்கி கொண்டு சென்று விடுகிறார்.)


இதையடுத்து வீட்டில் வேலை செல்லும் ஒரு தாழ்ந்த சமூக சிறுவனின் உதவியுடன் தப்பிக்க நினைக்கறார் கல்கி, ஆனால் தப்பிக்கும் போது சகோதர்கள் துரத்தி வந்து அந்த சிறுவனை சுட்டு கொன்றுவிட்டு கல்கியை மீண்டும் வீட்டுக்கு இழுத்து செல்கின்றனர். கோபம் கொள்ளும் அவர்கள் கல்கியை ஒரு மாட்டு தொழுவத்தில் வைத்து சித்திரவதை செய்கின்றனர்.

சிறுவன் கொள்ளப்படுவதால் கோபம் கொள்ளும் அந்த சமூகத்தினர் சண்டைக்கு வர, ஒரு சாதி கலவரமே மூள்கிறது...
கலவரம் என்னாகிறது, கல்கி நிலை என்ன...என்று ரத்தமும் சதையும், கோபம், கண்ணீர், போராட்டம் என்று மனதை கனக்கவைத்து முடிகிறது மாத்ரு பூமி.
படத்தின் முடிவு ஒரு பெரிய அதிர்ச்சி...!!!
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் மச்சான்ஸ்..!!!



திரைப்படத்தின் விவரம் :

Length          1 hour 29 minutes
Directed by    Manish Jha
Produced by    Patrick Sobelman, Punkej Kharbanda
Starring    Tulip Joshi, Sudhir Pandey, Sushant Singh, Aditya Srivastava
Music by    Salim Merchant, Sulaiman Merchant
Cinematography    Venu Gopal
Editing by    Ashmith Kunder, Shirish Kunder
Sound Mixing    Resul Pookkutty

குறிப்பு : மேற்கோள் காட்டப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் சான்று :

http://www.gendercide.org/case_infanticide.html
http://www.articlealley.com/article_74633_28.html

15 comments:

  1. nice review for a bold movie theme.

    ReplyDelete
  2. முதலில் நன்றி மச்சான் இதுபோல நல்ல படங்களை விமர்சனம் செய்ததிற்கு நிஜமாவே பார்க்கவேண்டிய படம்தான்.விமர்சனம் வழக்கம் போல சூப்பர்...

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி மச்சான்ஸ்.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகம்...பார்க்க தூண்டுகிறது.

    ReplyDelete
  5. pothuva padam parka matten. but let me c this

    ReplyDelete
  6. உங்கள் இந்த பதிவு..யூத் ஃபுல் விகடனில்..பார்த்தீர்களா? In Good Blogs

    http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

    ReplyDelete
  7. // Chitra said...

    nice review for a bold movie theme.//

    கண்டிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய படம் சித்ரா மேடம்....நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக பார்க்கவும்...

    ReplyDelete
  8. @Seemangani - ரொம்ப நன்றி மச்சான்...கண்டிப்பாக இனிமேல் இது போல் நல்ல திரைப்படங்களின் பதிவுகளை அடிக்கடி பார்க்கலாம்...

    ReplyDelete
  9. ரொம்ப நன்றி ஜெய்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....உங்கள் பதிவுகள் கலக்கல்...நிறைய அறிமுகமில்லாத திரைப்படங்களை பற்றி எழுதவும்...

    ReplyDelete
  10. //ஸ்ரீராம். said...

    உங்கள் இந்த பதிவு..யூத் ஃபுல் விகடனில்..பார்த்தீர்களா? In Good Blogs//

    ஸ்ரீராம் மச்சான் மொதல்ல கைய குடுங்க...நல்ல நியூஸ் குடுத்திருக்கீங்க...ரொம்ப டாங்க்ஸ்...

    ReplyDelete
  11. //LK said...

    pothuva padam parka matten. but let me c this//

    ரொம்ப நன்றி கார்த்திக்...கண்டிப்பா பாருங்க...இது ரொம்ப வித்தியாசமான படம்....

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. மிகவும் வித்தியாசமான படம்.யார் கண்டார்.போகிற போக்கில் இது நிஜமும் ஆகலாம்.ஆனால்,இதில் இருந்த அந்த subtle தீம்...நிலத்தை ஆக்கிரமித்தல்....

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...