Tuesday, December 29, 2009

அஜீத்துக்கும் விஜய்க்கும் டேஞ்சரஸ் நோய்.



அஜீத்துக்கும் விஜய்க்கும் அப்படி என்ன பெரிய நோய்...? அத கடைசியா பார்ப்போம் மச்சான்ஸ், அதுக்கு முன்னாடி நோய்களுக்கும் சினிமாவுக்கும் இருக்குற தொடர்ப பத்தி ஒரு சின்ன Introduction.

பாலிவுட்ல இப்பெல்லாம் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகணும்ன அதுக்கு ஒரே வழிதான், அந்த படத்தோட ஹீரோவுக்கு ஒரு கொடூரமான நோய் இருக்கணும், இல்ல அவர் கூடவே இருக்குற வேற ஏதாவது கேரக்டருக்கு அந்த நோய் இருக்கணும். 

"நோய் இருந்துச்சுனா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு மச்சி..." - இல்லன்னா கொஞ்சம் டவுட்டுதான்...
இது வரைக்கும் இந்த கான்செப்ட அதிகமா யூஸ் பண்ண ஹீரோக்கள கொஞ்சம் பார்ப்போம்.

அமீர் கான்.
அமீர் கானுக்கு இந்த ஏரியாவுல கொஞ்சம் இஷ்டம் அதிகம்.
இந்த வகையறாவில் அவரோட முதல் படம்(??) தாரே சமீன் பர், இந்த படத்துல பிரதான பாத்திரத்துல வர்ற சிறுவனுக்கு "DYSLEXIA - டிஸ்லக்சியா"-னு ஒரு குறைபாடு. அதை மையமாக வைத்து நகரும் கதை. (ஆளாகப்பட்ட அத்வானியையே அழ வைத்த படம் இது).

படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டு...
போனஸா நேஷனல் அவார்ட் வேற.....

கஜினி 



அமீர் கான் தாரே ஜாமீன் பர் படத்துக்கு பிறகு நடித்த கஜினியும் இதே கான்செப்ட்தான். கஜினி படத்துக்கு நமக்கு அறிமுகமே தேவை இல்ல. இந்த படத்துல நாயகனுக்கு வித்தியாசமான Short Term Memory Loss-ங்கிற மறதி வியாதி.நம்ம கஜினி சூர்யா சூப்பராவே கலக்கி இருப்பார். ஆனாலும் மார்கெடிங் கிங் "ஆமீர்" ஒரு ரீமேக் படத்த வெச்சே பணத்த அள்ளு அள்ளுன்னு அள்ளிட்டார்...இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டு....

அமிதாப் பச்சன். 



அமிதாப் பச்சனோட சமீபத்திய படம் "பா". ப்ரோஜெரியா-ங்கற (PROGERIA) நோயால பாதிக்கப்படுற பதிமூன்று வயது சிறுவனா படத்துல வருவார். இந்த படத்துல ஒரு வித்தியாசம் படத்தோட டைரக்டர் நம்ம ஊர்க்காரர் பால்கி(எ) பாலகிருஷ்ணன். படம் வெளி வந்த பிறகு அமிதாபுக்கு ஏகப்பட்ட பாராட்டு, குறிப்பிட பட வேண்டய இன்னொரு விஷயம் மேக்-அப். 



இதுக்கு முன்னாடி இந்த கான்செப்ட யூஸ் பண்ணி ஹிட்டான இன்னொரு அமிதாப் படம், சஞ்சய் லீலா பன்சாலியோட 'ப்ளாக்'. ப்ளாக் படத்தின் பிரதான பாத்திரமா வரும் மிச்சேல் (ராணி முகர்ஜி) Alzheimer's disease (இத தமிழ்ல எப்படி எழுதுறதுன்னு தெரியலையே...) - ஆல் பாதிக்கப்பட்டவர். இந்த படத்துலயும் நம்ம(தமிழர்) பங்கு கொஞ்சம் இருக்குங்க. கேமரா மேன் ரவி கே சந்திரன் (ரொம்ப அருமையா காட்சிகள அமைத்து இருப்பார்) & சின்ன வயது ராணி முகர்ஜியாக வரும் ஆயிஷா (பாண்டிச்சேரி). இந்த படம் பயங்கரமான ஹிட் ஆகலைன்னாலும் இந்திய அளவுல இந்த படம் வாங்காத அவார்டே இல்லன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா அவார்டையும் வாங்கி குவிச்சிட்டாங்க.
இனி இந்த கான்செப்ட்ட யூஸ் பண்ணி பாலிவுட்ல வரப்போற படங்கள பார்ப்போம்.

மை நேம் இஸ் கான். 


எல்லாரும் யூஸ் பண்ணிட்டாங்க நம்ம மட்டும் ஏன் விட்டு வைக்கனும்னு நம்ம ஷாருக் காணும் களத்துல எறங்கிட்டார். இந்த படத்துல அவரோட வியாதிக்கு பெயர் ஆஸ்பெர்ஜர் சின்ட்ரோம் (Aspergers Syndrome). ஷாருக் படம்-ங்கிறதால இப்பவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

ஹ்ரிதிக் ரோஷன் மட்டும் இதுக்கு விதி விலக்கா என்ன...அவரோட அடுத்த படமான குஜ்ஜாரிஷ்-ல அவர் பாரப்லேஜியாவால் (Paraplegia) பாதிக்கப்பட்ட நபராக வருகிறார். இந்த படமும் சஞ்சய் லீலா பன்சாலி டைரக்ஷன்.

சரி பாலிவுட்ட விடுங்க...நம்மளோட கோலிவுட்ட பார்ப்போம்...

ஹீரோயிசத்துக்கு அதிக முக்கியத்துவம் குடுக்கிற இந்த கால கட்டத்தில ஹீரோவுக்கு நோய் இருக்குன்னு சொன்னா கண்டிப்பா படம் ஊத்திக்குங்க.... அதையும் மீறி வந்து வெற்றி பெற்ற ஒரே சமீபத்திய படம் கஜினி தான். காரணம் எடுக்கப்பட்ட விதம், நடிப்பு மற்றும் வித்தியாசமான கதையம்சம்.

என்னதான் இதுக்கு முன்னாடி வசந்த மாளிகை, வாழ்வே மாயம் போல சில படங்கள் வெற்றி பெற்றாலும் அதுல அப்போதைக்கு எல்லாருக்கும் பரவலா தெரிஞ்சுருந்த ப்ளட் கான்சர் நோயத்தான் படத்துல காண்பிச்சு இருப்பாங்க. அதனால அந்த படங்கள் ரிஜக்டட். ஆனாலும் படங்கள் சூப்பரோ சூப்பர் ஹிட்டு... 


கேளடி கண்மணி, இந்த படத்துல ஹீரோயினுக்கு ஒரு புது வித நோய் (Bilateral Renal Artery Stenosis) இருப்பது போல் காமிச்சு இருப்பார் டைரக்டர் வசந்த். படம் ஹிட்டு..
இந்த படங்களை தவிர வேற எதுவும் நினைவுக்கு வரலை மச்சான்ஸ். தமிழில் இது போன்ற படங்கள் மிகவும் கம்மி.

சரி இந்த கான்சப்டை நம்ம பெரிய(?) முன்னணி ஹீரோக்கள் செஞ்சா, படங்கள் ஓடுமா?
அஜீத்துக்கும், விஜய்க்கும் இது போன்று வித்தியாசமான நோய்கள் இருப்பது போல் காண்பித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ? படங்கள் ஓடுமா..? (அவர்கள் முதலில் நடிப்பார்களா என்பது வேற விஷயம்).பாலிவுட்டில் போட்டி போட்டு கொண்டு நோயாளியாக நடிக்கின்றார்களே ....?



அஜீத்தும் விஜய்யும் ஒரு வேலை இந்த மாதிரி படங்கள் நடிக்க ஒத்துக்கிட்டா, என்ன கதை தேர்ந்து எடுப்பாங்க, என்ன நோய், என்ன பேர் வைப்பாங்க-னு ஒரு பெரிய தொடர் காமெடி பதிவே போடலாம்....
யாராவது எழுதுனீங்கனா நானும் சேர்ந்து சிரிப்பேன் மச்சான்ஸ்...!!!

வாழ்க சினிமா...
வாழ்க கோலிவுட்...
வாழ்க DISEASES....

18 comments:

  1. அய்யா, இதில் விசேடம் ஏதுமில்லயே. நாங்க சினிமா எடுக்க ஆரம்பிசதுலேர்ந்து, ப்ரெய்ன் ட்யூமர், பிளட் கேன்சர், மற்றும் பல தீராத வியாதிகளை நம்பித்தானே படம் "காட்டிட்டு இருக்கோம்". !!

    ReplyDelete
  2. அதெல்லாம் அந்த காலம் மச்சான்...நம்ம தமிழ் திரை உலகத்துல இப்ப இந்த விஷயம் சாத்தியமா ?? ஆனா பாலிவுட்ல அதே TREND திரும்ப வந்திருச்சு...அதுதான் இந்த பதிவு....

    ReplyDelete
  3. எப்படி மச்சான் உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது... ரூம் போட்டு யோசிப்பிங்க போல..

    வேட்டைகாரன் பார்த்துட்டு நாங்களே டெர்ராயிருகோம்.. இதுல இப்படிலாம் வேற நீங்க ஐடியா குடுக்குறிங்க... அப்புறம் நான் அழுதுறுவேன்... அவ்வ்வ்வ்....

    \\யாராவது எழுதுனீங்கனா நானும் சேர்ந்து சிரிப்பேன் மச்சான்ஸ்...!!!\\

    நானும் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  4. விஜய் - பன்ச்சோடயலாக்மேனியா அப்பிடின்னு ஒரு கொடிய நோய். இந்த நோய் வந்தவங்க எப்பவுமே பன்ச் டயலாக்ல தான் பதில் சொல்வாங்க. (இத வச்சி நெரய பன்ச் டயலாக் தேத்தாலம்ல) இந்த நோய்க்கி ஒரு சைட் எஃபக்ட் இருக்கு - அது பறந்தடிச்சான் சிண்ட்ரோம்.

    அஜித் - பேஸ்மாட்டேன்ஃபோபியா - இந்த நோய் வந்தவங்க எந்த கேள்விக்கும் பேஸ் மாட்டேன் அப்பிடிங்றதத்தான் பதிலா சொல்லிட்டே இருப்பாங்க.

    ReplyDelete
  5. மச்சான் இதுல நான் ஒரே ஒரு படம்தான் பாத்துருக்கேன் அது தாரே ஜமீன் பார் தமிழ்ல்ல சொல்லணும்ன்னா தரையில் சில நட்சத்திரங்கள்

    அதுவும் 12 தடவை பாத்துட்டேன் எத்தனை தடவை பாத்தாலும் போரடிக்காது...


    அப்புறம் ஐடியாக்கு தாங்க்ஸ் தீபன் பதிவு போட்ருவோம் ஆனா அஜீத்துக்குத்தான்...

    விரைவில்...

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு மச்சான் நிறைய தகவல் திரட்டி கொடுதுருகீங்க அதுக்கு பாராட்டுகள்...தமிழ் மறந்தொபோமியானு ஒரு புது வியாதி தமிழ் படத்துல தமிழே பேச முடியாத வியாதி அதுதான் மச்சான் இப்போ சூட் ஆகும்...

    ReplyDelete
  7. இப்ப தமிழ்ல வேற ட்ரண்ட், படத்துல நடிக்கிர ஹீரோவுக்கு பதிலா படம் பார்க்க வர பொது சனத்துக்கு மண்டைய காய வெச்சி அவங்கள மெண்டலா மாத்துரதுதான்...

    ReplyDelete
  8. @Paapu : என்ன பப்பு டக்குன்னு இப்படி சொல்லிட்டிங்க.... வெளில போகும்போது பார்த்து போங்க, சில கண்ணுக்கு புலப்படாத அந்நிய சக்திகள் உங்களை தாக்க நேரிடலாம்... :)
    (அப்படின்னா, அந்த புள்ளி ராஜா காரெக்டர் யாருக்கு மச்சான்? )

    ReplyDelete
  9. @Viccy - கரெக்டா சொன்னிங்க, அந்த படத்த பாத்த பிறகு தான் மச்சான் இந்த மாதிரி கொடுமையான ஐடியாவெல்லாம் வருது....
    இன்னக்கி சிவகாசியும் திருப்பாச்சியும் பாக்கலாம்னு இருக்கேன், என்ன சொல்றிங்க ???

    //நானும் எதிர்பார்க்கிறேன்...//

    நம்ம வசந்த் மச்சான் எழுதுறேன்னு சொல்லிட்டாரு, கூடிய சீக்கிரம் அவருடைய பதிவ எதிர் பார்க்கலாம்....

    ReplyDelete
  10. @ முகிலன் - இந்த நோய்க்கி ஒரு சைட் எஃபக்ட் இருக்கு - அது பறந்தடிச்சான் சிண்ட்ரோம்.

    என்ன முகிலன் இப்படி சொல்லிட்டிங்க...நம்ம ஆளுங்களுக்கு எல்லாமே மெய்ன் சின்ட்ரோம் தான் சைடே கெடையாது...
    பறந்தடிச்சான், நூறுபேரடிச்சான், நடிப்போபோபியா, லிப்கிச்சோ இன்னும் நெறைய இருக்கு மச்சான்.... :)

    //அஜித் - பேஸ்மாட்டேன்ஃபோபியா // - இது அல்டிமேட் காமெடி.....

    நீங்க கலக்குங்க முகிலன்...

    ReplyDelete
  11. @பிரியமுடன்...வசந்த் - தாரே ஜாமீன் பர் - சான்ஸே இல்ல மச்சான் சூப்பர் படம்.., படம் வெளியானபோது டிரைலற பார்த்துட்டு எனக்கு பார்க்கணும்ங்கிற எண்ணமே இல்ல... அப்புறமா நெறைய பேர் சொல்லித்தான் பார்த்தேன்...

    மச்சான் முடிஞ்சா BLACK பாருங்க.. அமிதாபும் ராணி முகர்ஜியும் போட்டி போட்டு நடிச்சு இருப்பாங்க.. பார்க்கவேண்டிய ஒரு படம்...

    //அப்புறம் ஐடியாக்கு தாங்க்ஸ் தீபன் பதிவு போட்ருவோம் ஆனா அஜீத்துக்குத்தான்...//

    அந்த பதிவ நானும் ரொம்ப எதிர் பார்க்கிறேன் மச்சான்... போடறது தான் போடறீங்க நம்ம தளபதி விஜய்க்கும் ஒன்னு போட்ருங்க... ஓரவஞ்சனை செஞ்சுடாதீங்க.. : )

    ReplyDelete
  12. @Seemangani - // தமிழ் மறந்தொபோமியானு ஒரு புது வியாதி தமிழ் படத்துல தமிழே பேச முடியாத வியாதி அதுதான் மச்சான் இப்போ சூட் ஆகும்...//

    அது இப்ப ஹீரோயின்சுக்குதாங்க மச்சான் பொருந்தும் , அதுவும் அந்த டப்பிங் பேசுற சவிதா- ங்கிறவங்க அருமையா பேசிடுறாங்க, அதனால இப்ப அதுக்கும் வழி இல்லாம போச்சு...

    அத விடுங்க இப்ப சினிமாவுல சுத்த தமிழ்தான் பேசுவோம்னு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு....
    சில வசனங்கள பேச்சு தமிழோட நிறுத்திக்குறது நல்லது....சுத்த தமிழ் தேவையா..?

    நீங்க போபியான்னு சொன்ன உடனே தான் தெனாலி படம் ஞாபகத்துக்கு வருது....அந்த படத்தையும் லிஸ்ட்டுல சேர்த்து இருக்கலாம்..
    பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றி மச்சான்..

    ReplyDelete
  13. //இப்ப தமிழ்ல வேற ட்ரண்ட், படத்துல நடிக்கிர ஹீரோவுக்கு பதிலா படம் பார்க்க வர பொது சனத்துக்கு மண்டைய காய வெச்சி அவங்கள மெண்டலா மாத்துரதுதான்...//

    கரெக்டா சொன்னிங்க மச்சான்...பலத்த எதிர் பார்ப்போட மொத நாள் அடிச்சு புடிச்சு டிக்கட் வாங்கிட்டு போய் உள்ள உக்காந்தா...இவனுங்க நம்ம தலைக்கு மொட்ட அடிச்சு, காத்து குத்தி, பூ வச்சு... போனஸா வெளில வரும்போது எரிச்சலுக்கு எதமா தலைல சந்தனம் வேற தடவி விடுறாங்க...என்னத்த சொல்றது... (எல்லாம் நம்மள சொல்லணும்...உனக்கு இந்த படம் தேவையா.... ?)

    ReplyDelete
  14. Ajith already acted for this type of film. I dont know the film name.

    ReplyDelete
  15. அஜீத் 'உயிரோடு உயிராக' (அப்படின்னு நினைக்கிறேன்) ஏதோ நோய்னால படுத்துருப்பாரே...

    அப்பால 'பவித்ரா' படத்துலயும்...

    ரெட்டை ஜடைன்னு ஒரு படத்துல ஒன்ஸ் கிட்னியோட அலைவாரு...

    வேற தெரியல மச்சான்...

    ReplyDelete
  16. @Anonymous - நன்றி அனானி...அந்த படம் பேர அகல்விளக்கு மச்சான் சொல்லிட்டாரு...

    ReplyDelete
  17. அகல்விளக்கு :
    என்ன மச்சான்....நீங்க தீவிர தல ரசிகர் போல...? இவ்வளவு விஷயங்கள சொல்றிங்க....

    அதுவும் அந்த ஒன்ஸ் கிட்னி மேட்டரு சூப்பருப்பு...

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...