Wednesday, January 6, 2010

தி பாய் இன் தி ஸ்ட்ரைப்ட் பைஜாமாஸ் The Boy in the Striped Pyjamas (2008)


கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்த கால திரைப்படம். 


இரண்டாம் உலகப்போரின் போது நடப்பதாய் கதை. நாஜிக்களின் "யூத வேட்டை" உச்சத்தில் இருந்த காலம். இந்த காலக்கட்டத்தில் தான் ஜெர்மானிய படை வீரர்கள்(?) ஊரில் உள்ள அனைத்து யூத மதத்தினரையும் கூட்டம் கூட்டமாக சிறைப்பிடித்தனர். அவ்வாறு பிடிக்கப்படும் யூதர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் கான்சென்ட்ரேஷன் கேம்புகளில் தங்க வைக்கப்படுவர். அங்கு தினம் தினம் கொடுமை படுத்தப்பட்டு பின்னர் ஒரு சுப யோக தினத்தில் சிறு சிறு கூட்டங்களாக ஆடைகளை களைத்து "கேஸ் சேம்பெருக்குள்" அனுப்பி வைக்கப்படுவர். பின்னர் அந்த சேம்பருக்குள் விஷ வாயுவை பாய்ச்சி அனைவரையும் கொன்று அங்கேயே எரித்தும் விடுவர். இந்த கேம்புகளில் இது போன்று முப்பது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாய் ஒரு குறிப்பு சொல்கிறது.

அப்படிப்பட்ட ஒரு கான்சென்ட்ரேஷன் கேம்பில் இருக்கும் ஒரு சிறுவனுக்கும் ஒரு ஜெர்மானிய நாஜி படை தளபதியின் மகனுக்கும் மலரும் நட்பை பற்றியதுதான் கதை.



ப்ரூனோ நம் படத்தின் ஒன்பது வயது கதா(குட்டி)நாயகன். ப்ரூனோவின் தந்தைக்கு பதவி உயர்வு கிடைப்பதால் தன் நண்பர்களை விட்டு பிரிய மனமில்லாமல் பெர்லினை விட்டு பிரிந்து செல்கிறான் ப்ரூனோ. ஆளில்லாத காட்டுக்குள் தனியாக இருக்கும் ஒரு வீட்டில் குடியேறுகிறது ப்ரூனோவின் குடும்பம். வீட்டை சுற்றி ராணுவப் படைகளின் பாதுகாப்பு. விளையாட யாரும் இல்லாததால் ப்ரூனோவின் பொழுதுகள் அனைத்தும் தனிமையில் கழிய, அப்படித்தான் அவனுக்கு அவன் அறையில் முன்றொரு நாள் ஜன்னலில் பார்த்த "வீடு போன்ற அமைப்புகள்" நினைவுக்கு வருகிறது. அங்கே தன்னுடன் விளையாட யாரேனும் சிறுவர்கள் இருக்க கூடும் என்று நினைத்து தன் வீட்டின் பின் வாசல் வழியாக போக எத்தனிக்கும்போது, அவன் அம்மாவால் தடுக்க படுகிறான்.

பின்னர் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பின் வாசல் வழியாக தப்பிக்கும் ப்ரூனோ அந்த வீடு போன்ற அமைப்புகளின் முள் வேலியை வந்தடைகிறான். மறுபக்கம் அழுக்கு உடைகளுடன் இன்னொரு சிறுவன். இங்குதான் நம் படத்தின் இரண்டாம் நாயகனான ஷ்மூயெல் அறிமுகம். அழுக்கு உடைகளுடன் வித்தியாசமாய் காட்சியளிக்கும் ஷ்மூயெல்லுடன் நட்பு கொள்ளும் பொருட்டு ப்ரூனோ அவுனுடன் பேச ஆரம்பிக்க அவர்களுக்குள் அறிமுகம் ஏற்படுகிறது. 



இப்படியே யாருக்கும் தெரியாமல் ப்ரூனோ இங்கு நிதமும் வந்து ஷ்மூயெல்- உடன் பேசி செல்கிறான். அவ்வப்போது ஷ்மூயெல்லின் பசிக்கு உணவும் கொண்டு வந்து கொடுக்கிறான்.இந்த நேரத்தில் ப்ரூனோவின் அம்மாவுக்கு கான்சென்ட்ரேஷன் காம்புகளின் உண்மை நிலவரமும் அங்கு நடக்கும் கொடுமைகளும் தெரியவர தன குழந்தைகள் இது போன்று ஒரு சூழலில் வளர கூடாது என்று தன கணவனுடன் சண்டை கொள்கிறாள். வேறு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்கிறாள். கடமையே கண்ணான நம் கமாண்டர் அதற்க்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார்.

திடீரென்று ஒரு நாள் ஷ்மூயெல்லை தன் வீட்டில் பார்க்கிறான் ப்ரூனோ. இங்கு உள்ள வைன் கிளாஸ்களை துடைப்பதற்காக ஒரு சிறுவன் வேண்டும் என்றதால் தன்னை அனுப்பி வைத்ததாக கூறுகிறான். ஷ்மூயெல் அங்கு வைக்கப்பட்டு இருந்த கேக்குகளை பார்க்க, அவை உனக்கு வேண்டுமா என்று ப்ரூனோ கேட்கிறான். ஆமாம் என்று ஷ்மூயெல் வேக வேகமாய் தலையை ஆட்ட ஒரு துண்டை ஷ்மூயெலுக்கு கொடுக்கிறான் ப்ரூனோ. அந்த நேரம் பார்த்து ப்ரூனோவின் வீட்டில் பாதுகாப்புக்கு இருக்கும் ஒரு படை வீரன் உள்ளே நுழைய ஷ்மூயெல் கையும் கேக்குமாய் பிடி படுகிறான், கேக்கை திருடினாயா என்று அந்த பாதுகாவலன் கேட்க இல்லை ப்ரூனோ தன் நண்பன் அவன்தான் கொடுத்தான் என்கிறான் ஷ்மூயெல். ஏதோ ஒரு பயத்தில் ப்ரூனோ அதை மறுத்துவிடுகிறான். கோபம் கொள்ளும் பாதுகாவலன் ஷ்மூயெல்லை பின்னர் கவனிப்பதாக சொல்லி சென்றுவிடுகிறான். 




இந்த கோழையான நடப்பால் தான் மீதே கோபம் கொள்ளும் ப்ரூனோ, மறு நாள் ஷ்மூயெல்லை பார்க்க அந்த முள் வெளிக்கு செல்கிறான். ஏனோ ஷ்மூயெல் அன்று வந்திருக்கவில்லை. இப்படியே சில தினங்கள் கழிய ப்ரூனோ தினமும் வந்து செல்கிறான், பின்னர் ஒரு நாள் ஷ்மூயெல் கண்ணில் காயங்களுடன் வந்து சேர்கிறான், ப்ரூனோ அவனிடம் மனிப்பு கோர மீண்டும் நட்பு தொடர்கிறது.ப்ரூனோவின் அம்மா மீண்டும் அந்த விஷயத்தை பூதாகரமாக்க இம்முறை குழந்தைகளுடன் வெளியேற அனுமதிக்க படுகிறாள்.

அன்று ஷ்மூயெல்லை சந்திக்கும் ப்ரூனோ தான் நாளையுடன் கிளம்ப போவதாக சொல்கிறான். அதே நேரம் ஷ்மூயெல் நேற்று முதல் தன் தந்தையை காணவில்லை என்று சொல்ல, ப்ரூனோ தான் உள்ளே வந்தால் உனக்கு உன் தந்தையை தேட உதவி செய்வதாக கூறுகிறான்,

மறுநாள்.

வீட்டை காலி செய்து புறப்பட அம்மா ஆயத்தமாகி கொண்டிருக்கிறாள்.
ஷ்மூயெல்லுக்கு ஒரு சான்டுவிச் தயார் செய்து புறப்படுகிறான் ப்ரூனோ.
அவன் வெளியில் செல்வதை கவனிக்கும் அம்மா எங்கே என்று கேக்க ....
ஊஞ்சல் ஆடிவிட்டு வருவதாக சொல்லி கிளம்புகிறான்.
யாரும் பார்க்காத நேரத்தில் வீட்டில் இருந்து தப்பித்து முள் வேலியை வந்தடைகிறான்.
சொன்னதை போலவே ப்ரூனோ வேலிக்கு கீழே பள்ளம் வெட்டி தானும் கேம்புக்கு உள்ளே நுழைந்து விடுகிறான்.
தான் கொண்டு வந்த அகதிகளின் சட்டையை ஷ்மூயெல் ப்ரூனோவுக்கு தருகிறான்.
ப்ரூனோவை காணாமல் ப்ரூனோவின் அம்மா வீடு முழுவதும் தேடுகிறாள்.
ப்ரூனோ சட்டை மாட்டியவுடன் இருவரும் ஷ்மூயெல்லின் தந்தையை தேடி புறப்படுகின்றனர்.
ப்ரூனோவின் அப்பாவிற்கும் விஷயம் தெயரயவர அவரும் காவலாளிகளுடன் சேர்ந்து தேடுகிறார்.
ஒவ்வொரு இடமாக சென்று ப்ரூனோவும் ஷ்மூயெல்லும் அவனின் தந்தையை தேடுகின்றனர்.
மோப்ப நாய் உதவியுடன் ப்ரூனோ கேம்பிற்குள் சென்றிருப்பது தெரியவர...
ஒரு அறைக்குள் சென்று ஷ்மூயெல்லின் தந்தையை தேடும்போது அந்த அறையில் உள்ளவர்கள் அனைவரையும் ராணுவம் வெளியேற்றுகிறது.
ப்ரூனோவின் தந்தை கேஸ் சேம்பரை நோக்கி ஓடி வர....
ஒவ்வொருவரும் துணி களையப்பட்டு....
..................
அடுத்த பத்து நிமிடம் பர பர....



படத்தில் இந்த மெய்ன் ட்ராக்கை தவிர ஆங்காங்கே சில முக்கிய பதிவுகள் உண்டு. ப்ரூனோவின் அக்கா ஜெர்மானிய வரலாற்றாலும், ஆசிரியரின் அறிவுருத்தலாலும் கவரப்பட்டு ஒரு போர் வீரனை போல் பரிணாம மாற்றம் அடைவது. ப்ரூனோவின் வீட்டில் வேலை செய்யும் யூத அகிதியின் அறிமுகம். வீட்டு பாதுகாவலில் இருக்கும் ஒரு ஜெர்மானிய வீரனின் (கேக்கை சாப்பிட்டதற்காக ஷ்மூயெல்லை தண்டித்தவன்) குடும்பத்தை கேலி செய்யும் டைனிங் டேபிள் காட்சி....

படத்தின் மிகப்பெரிய பலம் ப்ரூனோ மற்றும் ஷ்மூயெல்லாக வரும் இரண்டு சிறுவர்கள். அதுவும் ஷ்மூயெல்லின் நடிப்பு சான்ஸே இல்லை... படத்தின் வசனங்கள் மிக எளிமை ஆனால் பக்கா ஷார்ப். மிக மிக நேர்த்தியான திரைக்கதை. படம் முடியும்போது கண்டிப்பாய் மனம் சலனப்பட்டுவிடும்....
பார்த்துட்டு சொல்லுங்க மச்சான்ஸ்....கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்

தரவிறக்க லிங்க்குக்கு உங்க மெயில் முகவரிய கமெண்ட்ஸ்ல போட்டுடுங்க (இல்லைனா -deepanadhi@gmail.com-க்கு அனுப்பி வச்சாலும் ஒ.கே ) மச்சான்ஸின் மெயில் சேவை உங்களை வந்தடையும்...

Saturday, January 2, 2010

மல்ஹோலாண்ட் டிரைவ் Mulholland Drive (2001)

என் இனிய அன்பு மச்சான்களுக்கு, உங்கள் பாசத்துக்குரிய மச்சான்ஸின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!!!
(ரெண்டு நாள் ஆச்சு, இப்பவாவதும் தெளிஞ்சுதா?)

ஓ.கே ஓ.கே மேட்டருக்கு வருவோம்...


மல்ஹோலாண்ட் டிரைவ்.


வருடம் : 2001
டைரக்டர் : டேவிட் லின்ச்
நடிகர்கள் : நவோமி வாட்ஸ் (கிங் காங் நாயகி), லாரா ஹாரிங்.




நடிகை ரீட்டா(லாரா ஹாரிங்) காரில் பார்ட்டி ஒன்றுக்கு போய்க்கொண்டிருக்கிறார்.
வழக்கத்திற்கு மாறாய் நடுவழியில் நிறுத்தும் அவரது பாதுகாவலர்கள் அவரை மிரட்டி காரில் இருந்து இறங்க சொல்கின்றனர்.


அப்போது அதே ரோட்டில் படு வேகமாக ரேஸ் வைத்து ஒட்டி கொண்டு வரும் இரு கார்களில் ஒன்று ரீட்டாவின் காரில் மோத ஒரு பெரும் விபத்து நேர்கிறது.


அதில் காயங்களுடன் உயிர் பிழைக்கும் ரீட்டா, பாதுகாவலர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து விரைகிறார். மயக்க நிலையிலேயே வீதிகளில் திரியும் ரீட்டா யாருக்கும் அறியாமல் ஒரு வீட்டின் உள்ளே நுழையவும் அந்த வீட்டில் உள்ள வயதான பெண்மணி வெளியூர் கிளம்பவும் சரியாக இருக்கிறது.






பெட்டி(BETTY - கேரக்டர் பேரு மச்சான்ஸ்) இந்த படத்தின் இன்னொரு நாயகி ஹாலிவுட் கனவுடன் அந்த ஊருக்கு வந்து சேர்கிறார்.சில மணி நேரங்கள் கழித்து அதே வீட்டிற்கு பெட்டி வந்து சேர்கிறார். பெட்டி அப்போதுதான் முதல் முதலாக தன் அத்தை வீட்டிற்கு வருகிறார், உள்ளே பெட்டி ரீட்டாவை பார்த்ததும், அவரை தன் அத்தையின் நண்பர் என தவறாக புரிந்து கொள்கிறார். பின்னர் தன அத்தையுடன் தொலைபேசியில் பேசும் போது உண்மை வெளிப்பட, ரீட்டா தான் இங்கு வந்து சேர்ந்ததன் உண்மையை சொல்கிறாள்.


இப்பதான் படத்துல சுவாரஸ்யம்... ரீட்டாவுக்கு விபத்தில் தான் யார் என்பதையே மறந்து விடுகிறார். அவரின் கைப்பையை பார்க்குன்போது கட்டு கட்டாக பணமும் ஒரு சாவியும் கிடைக்கிறது.




 அதே நேரம் நகரின் இன்னொரு மூலையில்...

முதல் காட்சியின் விபத்தில் தப்பித்த மற்றொரு ரேஸ் வண்டியின் ஓட்டுனர் அவர் நண்பருடன் முதல் நாள் விபத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறார். அப்போது எதிர் பாரா வகையில் அவர் நண்பர் ஓட்டுனரை கொன்று விட்டு தப்பிக்க முற்படும் பொது இன்னும் ரெண்டு பேரை கொள்ள நேரிடுகிறது.


ரீட்டாவை காணாததால் அவருக்கு பதில் வேறொரு நாயகியை முடிவு செய்ய திரைப்பட குழுவும் தயாரிப்பாளரும் கூடுகின்றனர். அந்த சந்த்திப்பு கசப்பாக முடிவடைகிறது. படத்தின் டைரக்டர் கோபமாகவெளியேறுகிறார்.




மீண்டும் ரீட்டா & பெட்டி.


ரீட்டாவுக்கு ஏதோ ஒரு நினைவில் டயான் செல்வின் என்ற பெயர் நியாபகத்துக்கு வர அந்த பெண்ணை தேடி இருவரும் செல்கின்றனர். ஆனால் அதே பெண் அவளுடைய அறையிலேயே பிணமாக கிடப்பதை கண்டு இருவரும் திரும்பி விடுகின்றனர்...


மீண்டும் டைரக்டர்.


கோபமாக வெளியேறும் டைரக்டர், அவர் வீட்டுக்கு செல்ல, அங்கே அவரது மனைவி அவரது க.காதலனுடன் சேர்ந்து அவரை அடித்து வெளியே துரத்துகிறார். ரத்த காயங்களுடன் தப்பிக்கும் டைரக்டர் ஒரு லாட்ஜில் வந்து ஒளிந்து கொள்கிறார்.


ஒரு ஹோட்டலில்.
ஒரு நபர் தான் கண்ட கனவை பத்தி தன் நண்பரிடம் விவரித்து கொண்டிருக்கிறார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இதுக்கப்புறம் படத்த பார்த்துக்கங்க மச்சான்ஸ். ரீட்டாவின் நிலை என்ன ? பெட்டி நாயகி ஆனாரா ? அந்த மூணு கொலைகள் ? இன்னும் படத்தில் ஏகப்பட்ட கேள்விகள் டிவிஸ்ட்டுகள். எல்லாத்துக்கும் பதில் பெட்டியதான்(BETTY) கேக்கணும் ????


ஒன்னு உறுதி மச்சான்ஸ்... படம் பார்த்து முடிச்ச உடனே ராவா குவாட்டர் அடிச்ச எபக்ட் கெடைக்கும்...இன்னொரு விஷயம் படத்தின் எல்லா ட்விஸ்ட்டுகளுக்கும் படத்தில் பதில் இல்லை. சில விஷயங்களை நம் கற்பனைக்கே விட்டுவிடுகிறார் டைரக்டர்.


மிக மிக வித்தியாசமான திரைப்படம்....டயலாக் விஷயத்தில டைரக்டர் டேவிட் லின்ச் நம்ம மணிரத்னத்தோட பெரியப்பா மாதிரி, படத்தின் பல சீன்களில் வசனமே கிடையாது...இருக்கும் இடங்களிலும் ரொம்ப கம்மி....




படம் ஒன் அண்ட் ஒன்லி பார் 18+.
படம் பார்த்துட்டு புரியலனா சொல்லுங்க அதுக்கு ஒரு தனி பதிவே போட்டுடலாம். அவ்வளவு விஷயங்கள் படத்துல இருக்கு. படம் பார்க்குறதுக்கு முன்னாடி கீழ குடுத்திருக்குற விஷயங்கள நோட் பண்ணிக்கங்க.


படத்துல நமக்கு புரியாத விஷயங்களை புரிஞ்சுக்குறதுக்காக டைரக்டர் லின்ச் டி.வி.டி.யில் கொடுத்த பத்து கேள்விகள் தான் இவை.


படத்த பார்த்துட்டு தெளிவா இருந்த பின்னூட்டங்கள் போடுங்க மச்சான்ஸ்.


அந்த பத்து மேட்டர்.

1. Pay particular attention in the beginning of the film: At least two clues are revealed before the credits.
2. Notice appearances of the red lampshade.
3. Can you hear the title of the film that Adam Kesher is auditioning actresses for? Is it mentioned again?
4. An accident is a terrible event — notice the location of the accident.
5. Who gives a key, and why?
6. Notice the robe, the ashtray, the coffee cup.
7. What is felt, realized, and gathered at the Club Silencio?
8. Did talent alone help Camilla?
9. Note the occurrences surrounding the man behind Winkie's.
10. Where is Aunt Ruth?


படத்தின் டிரைலர் இதோ...



Tuesday, December 29, 2009

அஜீத்துக்கும் விஜய்க்கும் டேஞ்சரஸ் நோய்.



அஜீத்துக்கும் விஜய்க்கும் அப்படி என்ன பெரிய நோய்...? அத கடைசியா பார்ப்போம் மச்சான்ஸ், அதுக்கு முன்னாடி நோய்களுக்கும் சினிமாவுக்கும் இருக்குற தொடர்ப பத்தி ஒரு சின்ன Introduction.

பாலிவுட்ல இப்பெல்லாம் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகணும்ன அதுக்கு ஒரே வழிதான், அந்த படத்தோட ஹீரோவுக்கு ஒரு கொடூரமான நோய் இருக்கணும், இல்ல அவர் கூடவே இருக்குற வேற ஏதாவது கேரக்டருக்கு அந்த நோய் இருக்கணும். 

"நோய் இருந்துச்சுனா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு மச்சி..." - இல்லன்னா கொஞ்சம் டவுட்டுதான்...
இது வரைக்கும் இந்த கான்செப்ட அதிகமா யூஸ் பண்ண ஹீரோக்கள கொஞ்சம் பார்ப்போம்.

அமீர் கான்.
அமீர் கானுக்கு இந்த ஏரியாவுல கொஞ்சம் இஷ்டம் அதிகம்.
இந்த வகையறாவில் அவரோட முதல் படம்(??) தாரே சமீன் பர், இந்த படத்துல பிரதான பாத்திரத்துல வர்ற சிறுவனுக்கு "DYSLEXIA - டிஸ்லக்சியா"-னு ஒரு குறைபாடு. அதை மையமாக வைத்து நகரும் கதை. (ஆளாகப்பட்ட அத்வானியையே அழ வைத்த படம் இது).

படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டு...
போனஸா நேஷனல் அவார்ட் வேற.....

கஜினி 



அமீர் கான் தாரே ஜாமீன் பர் படத்துக்கு பிறகு நடித்த கஜினியும் இதே கான்செப்ட்தான். கஜினி படத்துக்கு நமக்கு அறிமுகமே தேவை இல்ல. இந்த படத்துல நாயகனுக்கு வித்தியாசமான Short Term Memory Loss-ங்கிற மறதி வியாதி.நம்ம கஜினி சூர்யா சூப்பராவே கலக்கி இருப்பார். ஆனாலும் மார்கெடிங் கிங் "ஆமீர்" ஒரு ரீமேக் படத்த வெச்சே பணத்த அள்ளு அள்ளுன்னு அள்ளிட்டார்...இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டு....

அமிதாப் பச்சன். 



அமிதாப் பச்சனோட சமீபத்திய படம் "பா". ப்ரோஜெரியா-ங்கற (PROGERIA) நோயால பாதிக்கப்படுற பதிமூன்று வயது சிறுவனா படத்துல வருவார். இந்த படத்துல ஒரு வித்தியாசம் படத்தோட டைரக்டர் நம்ம ஊர்க்காரர் பால்கி(எ) பாலகிருஷ்ணன். படம் வெளி வந்த பிறகு அமிதாபுக்கு ஏகப்பட்ட பாராட்டு, குறிப்பிட பட வேண்டய இன்னொரு விஷயம் மேக்-அப். 



இதுக்கு முன்னாடி இந்த கான்செப்ட யூஸ் பண்ணி ஹிட்டான இன்னொரு அமிதாப் படம், சஞ்சய் லீலா பன்சாலியோட 'ப்ளாக்'. ப்ளாக் படத்தின் பிரதான பாத்திரமா வரும் மிச்சேல் (ராணி முகர்ஜி) Alzheimer's disease (இத தமிழ்ல எப்படி எழுதுறதுன்னு தெரியலையே...) - ஆல் பாதிக்கப்பட்டவர். இந்த படத்துலயும் நம்ம(தமிழர்) பங்கு கொஞ்சம் இருக்குங்க. கேமரா மேன் ரவி கே சந்திரன் (ரொம்ப அருமையா காட்சிகள அமைத்து இருப்பார்) & சின்ன வயது ராணி முகர்ஜியாக வரும் ஆயிஷா (பாண்டிச்சேரி). இந்த படம் பயங்கரமான ஹிட் ஆகலைன்னாலும் இந்திய அளவுல இந்த படம் வாங்காத அவார்டே இல்லன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா அவார்டையும் வாங்கி குவிச்சிட்டாங்க.
இனி இந்த கான்செப்ட்ட யூஸ் பண்ணி பாலிவுட்ல வரப்போற படங்கள பார்ப்போம்.

மை நேம் இஸ் கான். 


எல்லாரும் யூஸ் பண்ணிட்டாங்க நம்ம மட்டும் ஏன் விட்டு வைக்கனும்னு நம்ம ஷாருக் காணும் களத்துல எறங்கிட்டார். இந்த படத்துல அவரோட வியாதிக்கு பெயர் ஆஸ்பெர்ஜர் சின்ட்ரோம் (Aspergers Syndrome). ஷாருக் படம்-ங்கிறதால இப்பவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

ஹ்ரிதிக் ரோஷன் மட்டும் இதுக்கு விதி விலக்கா என்ன...அவரோட அடுத்த படமான குஜ்ஜாரிஷ்-ல அவர் பாரப்லேஜியாவால் (Paraplegia) பாதிக்கப்பட்ட நபராக வருகிறார். இந்த படமும் சஞ்சய் லீலா பன்சாலி டைரக்ஷன்.

சரி பாலிவுட்ட விடுங்க...நம்மளோட கோலிவுட்ட பார்ப்போம்...

ஹீரோயிசத்துக்கு அதிக முக்கியத்துவம் குடுக்கிற இந்த கால கட்டத்தில ஹீரோவுக்கு நோய் இருக்குன்னு சொன்னா கண்டிப்பா படம் ஊத்திக்குங்க.... அதையும் மீறி வந்து வெற்றி பெற்ற ஒரே சமீபத்திய படம் கஜினி தான். காரணம் எடுக்கப்பட்ட விதம், நடிப்பு மற்றும் வித்தியாசமான கதையம்சம்.

என்னதான் இதுக்கு முன்னாடி வசந்த மாளிகை, வாழ்வே மாயம் போல சில படங்கள் வெற்றி பெற்றாலும் அதுல அப்போதைக்கு எல்லாருக்கும் பரவலா தெரிஞ்சுருந்த ப்ளட் கான்சர் நோயத்தான் படத்துல காண்பிச்சு இருப்பாங்க. அதனால அந்த படங்கள் ரிஜக்டட். ஆனாலும் படங்கள் சூப்பரோ சூப்பர் ஹிட்டு... 


கேளடி கண்மணி, இந்த படத்துல ஹீரோயினுக்கு ஒரு புது வித நோய் (Bilateral Renal Artery Stenosis) இருப்பது போல் காமிச்சு இருப்பார் டைரக்டர் வசந்த். படம் ஹிட்டு..
இந்த படங்களை தவிர வேற எதுவும் நினைவுக்கு வரலை மச்சான்ஸ். தமிழில் இது போன்ற படங்கள் மிகவும் கம்மி.

சரி இந்த கான்சப்டை நம்ம பெரிய(?) முன்னணி ஹீரோக்கள் செஞ்சா, படங்கள் ஓடுமா?
அஜீத்துக்கும், விஜய்க்கும் இது போன்று வித்தியாசமான நோய்கள் இருப்பது போல் காண்பித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ? படங்கள் ஓடுமா..? (அவர்கள் முதலில் நடிப்பார்களா என்பது வேற விஷயம்).பாலிவுட்டில் போட்டி போட்டு கொண்டு நோயாளியாக நடிக்கின்றார்களே ....?



அஜீத்தும் விஜய்யும் ஒரு வேலை இந்த மாதிரி படங்கள் நடிக்க ஒத்துக்கிட்டா, என்ன கதை தேர்ந்து எடுப்பாங்க, என்ன நோய், என்ன பேர் வைப்பாங்க-னு ஒரு பெரிய தொடர் காமெடி பதிவே போடலாம்....
யாராவது எழுதுனீங்கனா நானும் சேர்ந்து சிரிப்பேன் மச்சான்ஸ்...!!!

வாழ்க சினிமா...
வாழ்க கோலிவுட்...
வாழ்க DISEASES....
Related Posts Plugin for WordPress, Blogger...