Tuesday, July 13, 2010

லீடர் - Leader - లీడర్ (2010)




நமக்கு தெலுங்கு படம் பார்க்கும் சில நண்பர்கள் உண்டு மச்சான்ஸ், அவ்வப்போது சில நல்ல படங்களை (உலக தரம் எல்லாம் இல்லீங்க, நல்ல காமெடி, ஆக்ஷன், மசாலா மட்டுமே..!!!) நமக்கும் சொல்லி பார்க்க சொல்வார்கள். நமக்கும் தெலுங்கு நல்லாவெல்லாம் தெரியாது, அரை குறை தான், நன்றி சப்டைட்டில் சாமி. இப்படிதான் போக்கிரி(தெ), சை, விக்ரமாற்குடு, ஸ்டாலின் என்று பல நல்ல படங்கள் பார்த்திருக்கிறேன்.

இப்படி சமீபத்தில் பார்த்த படம்தான் லீடர். டைரக்டர் சேகர் கம்முலாவின் படம். ஹாப்பி டேஸ் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர் (ஆந்த்ராவிலும், கேரளாவிலும் கூரையை பிய்த்துக்கொண்டு ஓடிய படம்). வெகு நாட்களாக டவுன்லோட் செய்து வைத்திருந்து சப்டைட்டில் இல்லாததானால் பார்க்கமலேயே வைத்திருந்தேன், நேற்றுதான் முழுப்படமும் யு-ட்யூபிலேயே கிடைத்தது (சப்டைட்டிலுடன் - நல்ல பிரிண்ட்டு !!!!)




நக்சலைட்டுகள் ஆந்திராவின் முதலமைச்சர் சுமனை குண்டு வைத்து கொல்வதில் இருந்து தொடங்குகிறது கதை. அர்ஜுன் பிரசாத், முதலமைச்சர் சுமனின் மகன் - அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்று ஒரு பெரிய கம்பெனியை நடத்துபவர். அப்பாவை மரணப் படுக்கையில் காண இந்தியா விரைகிறார். சுமன் தான் இறக்கும்போது, அர்ஜுனிடம் நீதான் அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தன் கடைசி ஆசையை சொல்லி விட்டு
இறந்து போகிறார்.

ஆட்சியில் உள்ள சாதிக்கட்சியின் தலைவர் பெத்தைனா-வாக கோட்டா சீனிவாசராவ். இவர்தான் ஆந்த்ராவின் கிங் மேக்கர். சுமன் இறந்துவிட்டதால் ஆட்சி கலையாமல் இருக்க, பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சுமனின் மற்றொரு உறவினரான சுப்புராஜ் (இவர்தாங்க வில்லன் ) என்பவரை முதல்வராக்க முடிவெடுக்கிறார். பெத்தைனாவுக்கு சுமனின் கடைசி ஆசை அப்போது தெரியாது.




சுமனின் இறுதி சடங்கில் அர்ஜுனை சந்திக்கும் பல பெரும்புள்ளிகள், முதலமைச்சர் என்னிடம் கொஞ்சம் பணம் கொடுத்து வைத்துள்ளார் என்று பெரிய பெரிய தொகையாக சொல்கின்றனர். சுமனின் டைரிக்குறிப்பு ஒன்றில் ஒரு வீட்டை பற்றி எழுதியிருக்க, அங்கு சென்று பார்க்கும் அர்ஜுனுக்கு பெரும் அதிர்ச்சி, அங்கே கட்டு கட்டாக அறை முழுவதும் பணம் (நம்ம அருணாச்சலம் படத்துல வந்த மொத்த பணத்தையும் இங்க கொண்டு வந்துட்டாங்க).

இதுநாள் வரை நல்லவர் என்று நினைத்திருந்த தன் தந்தையும், ஒரு சராசரி லஞ்ச அரசியல்வாதி என்று தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். இந்த எடத்துல நம்ம ஹீரோவின் மனசை மாத்துறா மாதிரி ஒரு பாட்டு . மக்களின் பல அவலங்களை படம் பிடித்து காட்டுகிறார்கள்.




இறுதியில் ஹீரோ அர்ஜுன் தானே முதலமைச்சர் ஆவது என முடிவு செய்தது தன்னிச்சையாக (பெத்தைனாவுக்கு தெரியாமல்) காரியத்தில் இறங்குகிறார். மற்றொருபுறம் சுப்புராஜை முதலைமச்சர் ஆக்க கட்சி பணிகளும் செய்யப்படுகிறது. அர்ஜுன், சுமன் சம்பாதித்து (கொள்ளையடித்து) சென்ற பல்லாயிரம் கோடி( 1,00,00,00,00,000 தோராயமா இத்தினி ரூபா மச்சான்ஸ்) ரூபாயை வைத்து எப்படி சதி செய்து ஆட்சியில் அமர்கிறார் என்பது தான் முதல் பாதி படத்தின் கதை.

ஆட்சிக்கு வரும் ரானாவிற்கு சுப்புராஜ் குடைச்சல் குடுக்க, அதை எப்படி சமாளிக்கிறார் என்பதும், நாட்டை நல்வழி படுத்த என்னென்ன செய்கிறார் என்பதையும் இந்த கால கட்ட அரசியலுக்கு ஏத்தார் போல் (மனதில் வைத்துக்கொண்டு) விறுவிறுப்பாக ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து வெள்ளித்திரையில் தூள் செய்திருக்கிறார் டைரக்டர் சேகர் கம்முலா. படம் கிட்டத்தட்ட முதல்வன் கொஞ்சம் சிவாஜி கொஞ்சம் என ஷங்கர் ஸ்டைலில் அமைந்திருக்கிறது. இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வருவேண்டும் என்பதே படத்தின் பிரதான மெசேஜ்.




அர்ஜுன் பிரசாத்தாக புதுமுகம் ராணா, கதைக்கு ஏத்தாற்போல் அலட்டிக்கொள்ளாத அமைதியான நடிப்பு. அப்புறம் ரெண்டு ஹீரோயின்ஸ். முதல் பாதியில் வாமணன் பட நாயகி ப்ரியா ஆனந்த். இந்த படத்தில் கலக்கிவிட்டார் ரசிக்கும்படியான குறும்பு நடிப்பு. வாமணன் கேரக்டர்க்கு அப்படியே நேரெதிர், இந்த படத்தில் பேசிக்கொண்டே இருக்கும் CHATTER BOX . இரண்டாம் பாதியில் ரிச்சா (ரிச்சா பல்லோடு இல்லீங்க.. ) , இந்தம்மினி அமெரிக்க இறக்குமதி, செம ஹோம்லி, நடிப்பிலும்(?) கலக்கிட்டாங்க (ஹி ஹி)..


கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ்..

பி.கு : குத்துப்பாட்டு, மஞ்சா, பச்சை, செகப்பு சட்டை டூயட்டுகள் இல்லாத தெலுங்கு படம்.

படம் பார்ப்பதற்கான யு-ட்யூப் லிங்க்....
Part - 1
http://www.youtube.com/watch?v=qvBvJZOldjA

---------------------------------------------------------------------------------
Directed by Sekhar Kammula
Produced by AVM
Written by Sekhar Kammula
Starring Rana Daggubati, Richa Gangopadhyay, Priya Anand, Suhasini Manirathnam
Music by Mickey J Meyer
Cinematography Vijay C. Kumar
Editing by Marthand K Venkatesh
Studio AVM Productions

---------------------------------------------------------------------------------




--------------------------------------------------------------------------------

ஒரு சின்ன ஹைக்கூ....


திரௌபதி தேசம்


உள்ளாடை தெரிய
அணியும் மினி-ஸ்கர்ட்டில் -
"MADE IN INDIA".

-----------------------------------------------------------------------------

13 comments:

  1. படம் உண்மையிலேயே செம சூப்பர் தான்.

    இந்த ஹீரோவை இப்போ ஹிந்தி சினிமாவிலும் கவனிக்க ஆரம்பித்து இருக்காங்க,

    சிகரட் பிடிக்கும் ஒரு சீப் மினிஸ்டரை யாராலும் யோசித்து பார்க்கவே முடியலையாம்.

    ReplyDelete
  2. தெலுங்கில் இதுபோல் படம் வருவது மகிழ்ச்சி மச்சான் இந்த மாற்றம் ஆரோக்கியமானதுதான்....

    அது என்ன மச்சான் ஹைக்கு பயங்கரமா இருக்கு...வாழ்த்துகள்.....

    ReplyDelete
  3. இந்தப்படக்கதை எண்டமூரிவீரேந்திரநாத்தின் நாவலையும்,டாக்டர் ராஜசேகரின் பழைய படம் ஒன்றினையும் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.விமர்சன நடை நல்லாருக்கு

    ReplyDelete
  4. ஷேகர் கம்முலாவோட படங்களை, தெலுங்குல ஒரு New waveன்னு சொல்லலாமா? அவரோட அத்தனை படங்களும் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு நிறைய படிச்சிருக்கேன்.. ஆனா இன்னும் எதுவும் பாக்கல .. பார்த்தே ஆகணும்.. குறிப்பா, கோதாவரி மற்றும் இந்தப் படம்..

    ReplyDelete
  5. ஆனா, இளைஞர்கள், படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்ங்கறது மெஸேஜா சொல்றத, நான் ஒத்துக்க மாட்டேன்.. நம்ம அரசியல்ல இப்ப இருக்குறவங்க நிறைய பேர் படிச்சவங்க தான்.. இளைஞர்களும் கூட.. ஆனால், அவங்கதான் அதிகமா லந்து பண்ணிக்கினு கீறாங்க இல்லையா? ;-) இளைஞர்கள் அரசியலுக்கு வந்து, நாட்டத் திருத்தவே முடியாது பாஸ்..:-)

    ReplyDelete
  6. இந்த சி.எம் சிகரெட் மட்டுமா பிடித்தார்...??? :)
    எனக்கு பல காட்சிகள் வெகு எதார்த்தமாகவே தோன்றியது...
    ரொம்ப நன்றி விஷ்வா வருகைக்கும் கருத்துக்கும்....

    ReplyDelete
  7. வாங்க மாப்பி... அப்பப்ப சில நல்ல தெலுங்கு படங்கள் வரத்தான் செய்கின்றன....
    @ ஹைக்கூ - ஏதோ நமக்கு தோணுனது மாப்பி...

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி செல்வகுமார்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஒரு எக்ஸ்ட்ரா நன்றி.....

    ReplyDelete
  9. @கருந்தேள் - இதுதான் நானும் பார்த்த முதல் படம்...ஹாப்பி டேசும், கோதாவரியையும் அடுத்து பார்க்கணும்...
    //ஆனா, இளைஞர்கள், படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்ங்கறது மெஸேஜா சொல்றத, நான் ஒத்துக்க மாட்டேன்..//
    ஏதோ சொல்லணும்னு ஆசைப்பட்டுட்டாறு, மன்னிச்சு விட்ருங்க... :)

    //அவங்கதான் அதிகமா லந்து பண்ணிக்கினு கீறாங்க இல்லையா? ;-) //
    அது உண்மைதான் மச்சான்...எல்லா ஓட்டைகளையும் தெரிஞ்சு வச்சிக்கிட்டு ஆட்டம் காட்டிடுறாங்க..

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. nalla vimarsanam sivan. telugu padam na rose sattai, exercise dance nu nenaipen. mudiva maathikitten. kadaisiyil haiku thaan 'kurai'ku .

    ReplyDelete
  12. நன்றி கயல், உங்கள் கருத்துக்கு..
    அடுத்த முறை கொஞ்சம் நல்ல ஹைக்கூவுக்கு முயற்சி செய்கிறேன்... :)

    ReplyDelete
  13. குறிப்பு: இந்தப் படத்தில் கோட்டா சீனிவாசா ராவ்-ன் பெயர் மகாதேவ்வையா. அனைவரும் அவரை பெத்தைனா என்றே அழைக்கிறார்கள். பெத்தைனா என்றால் பெரியவர் என்று பொருள் (இங்கே கருணாநிதியை கலைஞர், etc என்பதிலையா). இவருடைய தம்பி கேரக்டர் தான் CM , அவரைக் கொல்வதோ இவரின் மகன்.(அங்கேயும் குடும்ப அரசியல்). படத்தின் பலம் பளிச் வசனங்கள் மற்றும் பின்னணி இசை.---- sriram

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...