Monday, December 21, 2009

க்யூப் CUBE (1997) - Canada




க்யூப் - 1997 ஆம் ஆண்டு வெளி வந்த கனடா நாட்டு த்ரில்லர் திரைப்படம்.

படத்தின் அறிமுக காட்சி.

க்யூப் வடிவில் ஒரு அறை. அந்த அறையின் ஆறு பக்கங்களிலும் சரியாக மத்தியில் ஆறு கதவுகள். நான்கு சுவர், உத்திரம் மற்றும் தரையில்.
ஒரு நபர், முதல் அறையிலிருந்து கதவை திறந்து இரண்டாவது அறைக்கு செல்கிறார்.
இரண்டாவது அறையில் அவர் இறங்கியவுடன், ஒளிக்கதிர்கள் அவரை ஊடுருவிச் செல்ல, உடல் முழுவதும் சதுர துண்டங்களாக உடைந்து விழுந்து இறக்கிறார்.

முதல் காட்சி.

அதே க்யூப் வடிவ அறைக்குள் இப்போது தொடர்பேயல்லாத ஏழு நபர்கள்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக மயக்கத்தில்/தூக்கத்தில் இருந்து எழுந்து ஒன்று கூடுகின்றனர். யாருக்கும் எப்போது இங்கே வந்தோம், எப்படி இங்கே வந்தோம் என்று நினைவில்லை.
ஒவ்வொருவரும் பேசி பார்த்து ஞாபகப் படுத்தி பார்த்தும் பயன் இல்லை.


சரி, எப்படியாவது வெளியே செல்ல வேண்டும் என்று ஏழு பேரும் ஒவ்வொரு, கதவாக திறந்து பயணிக்க,அப்பத்தான் அங்க ஒரு டுவிஸ்ட்டு வக்கிறாங்க...

எல்லா அறையும் நல்ல அறைகள் அல்ல (FLASHBACK : படத்தின் அறிமுக காட்சி), ஒரு சில அறைகள் மிகவும் ஆபத்தானவை.

ஒரு அறையில் உடலை கூறு போடும் லேசர் கதிர் வீச்சு, இன்னொரு அறையில் மனிதனனின் உடற் சூடை உணர்ந்து அமிலம் அடிக்கும் சென்சார், மற்றோர் அறையில் வெல்டிங் பைப்புகள்....என்று பலப் பல....

ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கிறது. அதோடு ஒவ்வொரு அறையின் கதவிலும் ஒரு ஒன்பது இலக்க எண்ணும் இருக்கிறது. நிறங்களின் கோட்பாடு என்ன, அந்த எண்கள் எதனை குறிக்கிறது என்று அனைத்தையும் கண்டறிந்து அந்த ஏழு பேர் வெளியேறி தப்பிகின்றனரா என்பதுதான் கதை.






படம் படு வித்தியாசமான முயற்சி. தொடக்கம் முதல் இறுதி வரை மொத்த படமும் அந்த க்யூபிர்க்குள்ளேயே தொடங்கி முடிந்து விடுகிறது. பிளாட்டும் நன்றாக இருக்கிறது. தப்பிக்க ஒவ்வொரு வழியாக கண்டுபிடிக்க அதற்க்கு தரும் லாஜிக்கான விளக்கங்களும், ஓகே !!!



ஒரு முறை கண்டிப்பாக பார்க்ககூடிய வித்தியாசமான படம்.
அடுத்து இந்த படத்தின் அடுத்த பகுதி, அதாவது SEQUEL மச்சான்ஸ், அந்த படத்தின் பெயர் ஹைபர்க்யூப் (HYPERCUBE). 



இந்த படத்திலும் கிட்டத்தட்ட அதே கதை. அறிமுகமில்லாத சில நபர்கள், இந்த முறை கொஞ்சம் ஹைட்டெக்கான அதிக வெளிச்சமுள்ள அறைகள்.
முந்தைய படத்தை விட கொஞ்சம் காம்ப்ளெக்சான கதை. PARALLEL UNIVERSE  கான்செப்ட உள்ள புகுத்துறாங்க. நமக்குதான் புரிய கொஞ்சம் கஷ்டம்.
இந்த படமும் ஒரு வித்தியாசமான முயற்சி, ஆனால் க்யூப்- ஐ விட விறுவிறுப்பு மற்றவை எல்லாம் கொஞ்சம் கம்மி.


ஓகே மச்சான்ஸ், க்யூப் படத்த தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.
படத்தின் டிரைலர் இதோ.





12 comments:

  1. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

    உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
    ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  2. எங்கள் நல்ல புரியக்கூடிய விதத்தில் விமர்சனம் அருமை மச்சான்...எழுத்து பிழை திருத்தவும்...''எங்கள்''
    எண்கள் என்று..

    ReplyDelete
  3. இந்த லிங்க ட்ரை பண்ணுங்க மச்சான்...


    http://thepiratebay.org/torrent/3620314/The_Cube_Triology_(The_Cube__HyperCube__Cube_Zero)

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி உலவு மச்சான்..(உங்க பேரையும் அப்படியே சொல்லிடுங்களேன்) ...

    ஓகே மச்சான், மேல இன்னொரு லிங்க் (கமெண்ட்ஸ்-ல) கொடுத்திருக்கிறேன்...
    அதுல மூணு படமும் இருக்கு.... என்ஜாய்...

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி சித்ரா மேடம்....

    ReplyDelete
  6. நன்றி மச்சான்...பிழையை திருத்தியாச்சு..
    ஏதோ நமக்கு புரிஞ்சத அப்படியே எழுதுறோம் மச்சான்.. அவ்வளவுதான்...

    ReplyDelete
  7. கனவுல இப்ப அடிக்கடி கத்துறேனாம். வீட்டுல திட்டுறாங்க. அதுனால, கொஞ்ச நாளைக்கு திகில் படத்துக்கு லீவு வுட்டுட்டேன்.

    ReplyDelete
  8. அப்புறம் டாரண்ட் லிங்க் கொடுத்த பிற்காலத்துல பிரச்சினை. தவிர்த்துவிடுங்க.

    ReplyDelete
  9. //கனவுல இப்ப அடிக்கடி கத்துறேனாம். வீட்டுல திட்டுறாங்க. அதுனால, கொஞ்ச நாளைக்கு திகில் படத்துக்கு லீவு வுட்டுட்டேன்.//

    இந்த படம்...திகில் எல்லாம் இல்லீங்க...கொஞ்சம் SCIENTIFIC FICTION கலந்த த்ரில்லர் அவ்வளவுதான்...

    //அப்புறம் டாரண்ட் லிங்க் கொடுத்த பிற்காலத்துல பிரச்சினை. தவிர்த்துவிடுங்க.//

    லிங்க் கொடுக்கறதில இப்படி ஒரு பிரச்சினை இருக்கா..., சரி மச்சான் இனிமேல் லிங்கை கட் செய்துவிட வேண்டியது தான்...

    //லிங்க் வேண்டும் என்பவர்களுக்கு மச்சான்ஸின் "புதிய மெயில்" சேவை அறிமுகம்.//

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...