Tuesday, September 1, 2009

ஹேங் ஓவர் Hang Over (2009) - சினிமா


மொத நாள் மூக்கு முட்ட ஓசி குடி குடிச்சிட்டு படுத்து தூங்கி, மறுநாள் மதியம் எந்திரிக்கும் போது தலையில கும்மு கும்மு-னு குத்துமே அதுக்கு பேர்தான் மச்சி " ஹேங் ஓவர் - HANG OVER " - நம்மூர்ல இததான் மப்புனு சொல்வாங்க. இதையே ஒரு கான்செப்ட்-ஆ வச்சி, ஒரு வெள்ளைக்கார குடிமகன் FULL படமா எடுத்துருக்கார்.
ஹேங் ஓவர் 2009ல வெளிவந்த ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் (சும்மா சொல்ல கூடாது படம் நெஜமாலே காமடியாத்தான் கீது). எப்படி நம்மூர்ல கல்யாணத்துக்கு முன்னாடி TREAT- வை TREAT- வைன்னு மாப்பிள்ளையை சாவடிப்பமோ, அதே மாதிரி இந்த படத்துல ஹீரோவுக்கு கல்யாணம் ஆக ரெண்டு நாள் இருக்கும்போது BACHELOR PARTY CELEBRATE பண்ண லாஸ் வேகாஸ் நகரத்துக்கு, ஹீரோ அவர் மூணு நண்பர்களோட போறார். படத்தோட ஹீரோ யாருன்னா National Treasure படத்துல வர்ற JUSTIN BARTHA (படம் முழுக்க நிக்கோலஸ் கேஜ் FRIENDஆ வருவாரே.... அசிஸ்டண்ட்னு சொன்ன BARTHA கோச்சுப்பார்).
பஞ்ச தந்திரம் படத்துல வர்றா மாதிரியே ஹீரோவோட friends எல்லாம் அவங்கவங்க மனைவிகள் கிட்ட வேற வேற போய் சொல்லிட்டு ஒருவழியா எல்லாரும் ஓசி குடு குடிக்க கெளம்புறாங்க. லாஸ் வேகாஸ் போய் சேர்ந்தவுடனே ஒரு பெரிய ஹோட்டல்-ல "VILLA" புக் பண்ணி, ஆளாளுக்கு நல்லா டிரஸ் பண்ணிட்டு, க்ளப்புக்கு போறதுக்கு முன்னாடி அந்த ஹோட்டல் மொட்ட மாடில நின்னு செண்டிமென்டா (அதான் ஹீரோவுக்கு கல்யாணம் ஆகப்போதே) ஒரு ரவுண்டு அடிச்சிட்டு ஜம்முனு கெளம்புறாங்க.

அப்படியே பொழுது விடியுது. ஒவ்வொருத்தரா ஹோட்டல் ரூம்ல எந்திரிக்கிறாங்க.
எந்திரிக்கிற ஒவ்வொருவருக்கும் முன்னாடி நாள் ராத்திரி நடந்த விஷயம் எதுவுமே ஞாபகம் இல்ல (ஹேங் ஓவர் மச்சி ஹேங் ஓவர்). அது மட்டும் இல்லாம ரூமே அலங்கோலமா இருக்கு, TOILET - உள்ள ஒரு புலி படுத்து கெடக்கு, இன்னொரு ரூம்ல ஒரு குழந்தை அழுகுது, ஒரு நண்பரோட பல்லு ஒன்னை காணும், ஒரு நண்பரோட கையில ஆஸ்பத்திரி போயிட்டு வந்ததாக ஒரு HOSPITAL BAND, இது எல்லாத்தையும் விட ஹைலைட்டான விஷயம், கல்யாண மாப்பிள்ளை காணாம போயிடுறார்.
இதற்கிடையில் அந்த ஊர் போலீஸு, நம்ம IVANDER HOLYFIELD-கு ஒன்னு விட்ட மச்சான் MIKE TYSON எல்லாரும் இவங்கள தேடுறாங்க. இந்த மூணு பேரும் ஹீரோவ எப்படி கண்டு பிடிக்கறாங்க, நைட் புல்லா என்ன செஞ்சாங்க, போலீஸு , மைக் டைசன் எல்லாரும் ஏன் தேடுறாங்க அப்படிங்கறதுதான் மீதி கதை.
படத்துல சீனுக்கு சீன் காமெடி, தேவையான எடத்துல ஒரு ட்விஸ்ட்-னு ஜம்முனு போகுது. பக்கத்துல தக்கனூண்டு இருக்க பொடிசு எல்லாம் வச்சு இந்த படத்த பாத்துடாதீங்க....சொல்லிட்டேன்...!!!!
இதுக்கு மேல சொன்ன, படம் பாக்கும்போது இண்டரெஸ்ட் குறைஞ்சிடும்...படத்த பார்த்துட்டு சொல்லுங்க....
படத்த பதிவிறக்கம் பண்ண இங்க கிளிக்குங்க.
மச்சி டிரைலர்-அ இங்க பாருங்க....

3 comments:

பிரியமுடன்...வசந்த் said...

//மொத நாள் மூக்கு முட்ட ஓசி குடி குடிச்சிட்டு படுத்து தூங்கி, மறுநாள் மதியம் எந்திரிக்கும் போது தலையில கும்மு கும்மு-னு குத்துமே அதுக்கு பேர்தான் மச்சி " ஹேங் ஓவர் - HANG OVER " - நம்மூர்ல இததான் மப்புனு சொல்வாங்க.//

நல்லா சொல்றாய்ங்கய்யா டீடெயிலு...

சிவன். said...

@பிரியமுடன்...வசந்த்
வாங்க மச்சி...ஏதோ நமக்கு தெரிஞ்ச டீடைலு...

tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...