Tuesday, September 15, 2009

ஹாலிவுட் - 2010

மச்சான்ஸ், 2010-ல வெளிவரப்போகிற ஹாலிவுட் படங்கள் ஒரு பார்வை தான் இந்த பதிவு.
அடுத்த வருஷம், ஏற்கனவே வெளிவந்து ஹிட்டான பல படங்களோட அடுத்த பகுதி (அதான் மச்சான்ஸ் SEQUEL-னு சொல்வாங்களே) வெளிவருது....முக்கியமா சொல்லணும்னா ஹாரி பாட்டர் & டெத்லி ஹாலோஸ் ( இவர்தான்யா வருஷத்துக்கு ஒரு தடவ தவறாம வந்துடுறார்), இரும்பு மனிதன் 2 (IRON MAN 2), தி ட்விலைட் சாகா : எக்லிப்ஸ் (THE TWILIGHT SAGA : ECLIPSE) மற்றும் தி க்ரானிகல்ஸ் ஆப் நார்னியா - தி வாயேஜ் ஆப் தி டான் ( THE CHRONICLES OF NARNIA - THE VOYAGE OF THE DAWN). பாவம், மேல சொன்ன படத்த எல்லாம் தமிழ்ல டப்பிங் பண்ணும்போது என்ன பேர் வைக்கப்போராங்கன்னு தெரியல.....!!! THE EXPENDABLES – ஆகஸ்ட் 2010.
ராம்போ-4 படத்துக்கு அப்புறம் Sylvester Stallone நடிக்கிற ( இயக்கமும் கதையும் கூட அவரேதான்) படம். இது கண்டிப்பா முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாத்தான் இருக்கும். தென் அமெரிக்க நாட்டுல இருக்க சர்வாதிகாரியை ஒழிக்க புறப்படும் ஒரு குழு. இதுதான் படத்தோட ஒரு வரிக்கதை. அந்த குழுவுல ஏகப்பட்ட அடிதடி மன்னர்கள் இருக்காங்க. ஜெட் லீ, ஜேசன் ஸ்டாதம்(TRANSPORTER அண்ணாச்சி), மிக்கி (WRESTLER படத்துக்காக 2009-ல் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டவர் ), ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் (WWF) மற்றும் அர்னால்ட், ப்ரூஸ் வில்லிஸ் இருவரும் கெஸ்ட் ரோல்ல வர்றாங்க (அதான் கௌரவ தோற்றம்). முதல் படமே பட்டய கெளப்புதுல ? THE LAST AIRBENDER
நம்மூர் மனோஜ் ஷ்யாமளனோட அடுத்த படம். தொடர் தோல்விகளால துவண்டிருக்கும் மனோஜுக்கு இந்த படமாவது கைகுடுக்கும்னு நம்புவோம். படத்தோட இன்னொரு ஹைலைட் ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் DEV PATEL. அவதார் அப்படிங்கற ஒரு அனிமேஷன் தொடர மையமா வச்சு எடுத்திருக்கும் படம் இது. மனோஜ் தன்னோட வழக்கமான த்ரில்லர் படங்களிலிருந்து விடுபட்டு FANTASY FILM-கு மாறியிருக்கார்(முதல் முறையாக வேறொருவர் கதைக்கு மனோஜ் இயக்குகிறார்). THE BOOK OF ELI
மற்றொரு பெரிய நடிகர் டென்சல் வாஷிங்டன் நடிக்கும் ஹீரோயிச திரைப்படம். ஒற்றையாளாக தீய சக்திகளிடமிருந்து அமெரிக்காவையே காப்பாற்றும் நாயகன்.(என்னதான் நம்ம கிண்டல் செஞ்சாலும் படம் BOX OFFICE ஹிட் ஆயிடும்). படத்தின் நாயகி மேக்ஸ் பெய்ன் புகழ் :) மீலா கூனிஸ் (MILA KUNIS). டென்சலின் நடிப்புதான் இந்த படத்திற்கான முக்கிய எதிர்பார்ப்பு. INCEPTION. படத்தோட நாயகன் நம்ம லெனார்டோ டிகாப்ரியோ (டைட்டானிக்). இன்னொரு முக்கியாம்சம் இயக்குனர் க்ரிஸ்டோபர் நோலன் (மெமெண்டோ, டார்க் நைட் படங்களை இயக்கியவர்).இது ஒரு ஆக்சன் கலந்த ஸைன்டிபிக் பிக்ஷன் வகையறா. ROBIN HOOD. இது இன்னொரு மிகவும் எதிர் பார்க்கப்படும் ஒரு படம். ஏன்னா இந்த படத்துலதான் க்ளேடியேட்டர் கூட்டணி மீண்டும் இணைஞ்சிருக்காங்க(Director Ridley Scott and Russell Crowe ). மீண்டும் ஒரு சரித்திர கால திரைப்படம். பிரமிக்கும் போர் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். நம்மூரு ராபின் ஹுட் கந்தசாமிய பாத்தாச்சு, அவங்களோட ராபின் ஹுட் எப்படி இருக்கார்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சுடும்.
மற்ற குறிப்பிட படவேண்டிய திரைப்படங்கள்னு பாத்தீங்கனா, நார்நியாவோட மூன்றாம் பகுதி. தி க்ரானிகல்ஸ் ஆப் நார்னியா - தி வாயேஜ் ஆப் தி டான் ( THE CHRONICLES OF NARNIA - THE VOYAGE OF THE DAWN). ட்விலைட் நாவலின் அடுத்த பகுதி (வேம்பயர் மற்றும் காதல் மையமாக கொண்ட கதை) - ), தி ட்விலைட் சாகா : எக்லிப்ஸ் (THE TWILIGHT SAGA : ECLIPSE) ரோபோ காப் ( அவங்க ஊர்லயும் ரீமேக் நெறைய செய்ய ஆரம்பசுட்டங்க) டிஸ்னி தயாரிப்பில் ஜானி டெப் நடிக்கும் அலைஸ் இன் வொண்டெர்லாண்ட். ப்ரூஸ் வில்லீசின் "COUPLE OF DICKS" - "சிரிப்பு போலீஸ்" கதை. இரும்பு மனிதன் இரண்டாம் பகுதி (IRON MAN 2) மற்றும் ஹாரி பாட்டர் & டெத்லி ஹாலோஸ்.
இந்த எல்லா படத்தையும் பத்தி சொல்லிட்டு இந்த படத்த நான் சொல்லாம போன தெய்வ குத்தமாகிபோயிடும்....
இந்த எல்லா ஹாலிவுட் படத்துக்கும் போட்டியா வருது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்.பாத்துடுவோம் நம்ம தலையா ஹாலிவுட்டானு !!!

5 comments:

  1. இந்த படங்கள தமிழ்ல வெளியிடும்போது இப்படிதான் பேர் வப்பாங்களோ ?

    THE EXPENDABLES - ஊர்க்காவலர்கள்.
    BOOK OF ELI - எலியின் மந்திர புத்தகம்.
    ROBIN HOOD - அமெரிக்க கந்தசாமி.
    ROBO COP - இதுதாண்டா எந்திர போலீஸ்.
    ALICE IN WONDERLAND - ஆலீஸின் மந்திர உலகம்.
    :)

    ReplyDelete
  2. எலியின் மந்திர புத்தகம் -- சூப்பர்
    ஆந்த ரோபொ பிக்சர் புதுச இருக்கு...

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி கர்ணா....அடிக்கடி வந்துட்டு போங்க..அதே மாதிரி ரோபோ ஸ்டில் இன்னும் ரெண்டு இருக்கு...கூகிளிலேயே கிடைக்கும்...!!!

    ReplyDelete
  4. சற்று வித்யாசமான வலையமைப்பு :-)

    நன்றி

    ReplyDelete
  5. ரெம்ப நாளாக ஹாலிவுட் படங்களை பார்க்கும் பழக்கம் உண்டு, அதையும் மீறி விட்டுப்போன பழைய படங்களான DUEL போன்ற படங்களை அறிமுகப்படுத்தியதற்கு மகவும் நன்றி, காமெரா கோணங்களை ரசித்து பார்த்தேன் தமிழ் படங்களின் போட்டோகிராபர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் இந்த படத்தில் ஏராளமாய் உள்ளன.

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...