Thursday, October 14, 2010

சிட்டி ஆப் காட் - City of God - Cidade de Deus - 2002

வெகு நாள் கழித்து ஒரு பதிவு.. !!!


அதே போல் நான் வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த படத்தை பற்றிதான் இந்த பதிவும். படத்தின் பெயர் - City of God . 2002 இல் வெளி வந்த இந்த பிரேசிலிய நாட்டு க்ரைம் மாபியா திரைப்படத்தை பெர்னாண்டோ மீரல்ஸ் என்பவர் இயக்கியிருக்கிறார்.

பல இடங்களில் "பார்க்க வேண்டிய படங்களின்" வரிசையில் இந்த படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அதனால்தான் மச்சான்ஸ், ரொம்ப நாட்களாக இந்த படத்தை பார்க்க ஆர்வம். நம்முடைய நாட்டில் கொஞ்சமும் எதிர் பார்க்க முடியாத கதை மற்றும் கதைக்களம்.



பிரேசில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது கதை. ரியோ நகரத்தின் புறநகரத்தில் அமைந்திருக்கும் ஒரு புதிய குடியிருப்பு பகுதியின் பெயர்தான் "சிட்டி ஆப் காட்". இந்த சிட்டி ஆப் காட் நகரத்தின் தெருக்களில் ஓடி விளையாடும்(????) சிறுவர்களை பத்திதான் படம். முழுப்படமும் ராக்கெட் என்ற சிறுவனை முதன்மை பாத்திரமாக நிறுத்தி (இவர் இந்த படத்தின் ஹீரோ இல்லை...), அவனின் கண்ணோட்டத்தில் ஆரம்பித்து முடிகிறது.

தடதடக்கும் இசையுடன் தொடங்குகிறது படத்தின் முதல் காட்சி. சமைப்பதற்காக கட்டி வைக்கப்பட்டிருத்த கோழி தப்பித்து ஓட, அதை ஏராளமான சிறுவர்கள் துப்பாக்கியுடன் துரத்துவதாக ஆரம்பிக்கிறது. (கோழியையே துப்பாக்கியுடன் துரத்தும்போதே யோசித்திருக்க வேண்டும் படம் எப்படி இருக்கும் என்று..!!!).

இந்த இடத்தில் தான் கோழியை துரத்தும் கும்பலின் எதிரில் வருகிறான் நம்ம கதை சொல்லி (Narrator) ராக்கெட் . அதே நேரம் ரோட்டின் மறு புறத்தில் இந்த ரவுடி கும்பலை பிடிக்க போலீஸ் வந்து சேர்கிறது, இரண்டு பக்கமும் துப்பாக்கிகளை வைத்திருக்கும் இவர்களுக்கு இடையில் ராக்கெட் மாட்டிக்கொள்ள, ஒரு 180 டிகிரியில் காமெரா அவனை சுழல்கிறது, காமெரா அவன் கண்ணை காண்பிக்க, " நான் எப்படி இந்த இடத்தில் ?? " - என்று கதை சொல்ல தொடங்குகிறான் ராக்கெட்.



அப்படியே படம் பின்னோக்கி பயணித்து 1960 - களில் தொடங்குகிறது, சிட்டி ஆப் காட் நகரம் எப்படி உருவானது, மக்கள் எப்படி உயர் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இங்கு வந்து சேர்கின்றனர், ஏழ்மையை போராட சி.ஆ.கா மக்கள் செய்யும் சின்ன திருட்டு, வழிப்பறி அனைத்தும் ராக்கெட் மூலமாக நமக்கு விவரிக்கப்படுகிறது. இப்படி சிறு திருட்டுகளை செய்யும் "டெண்டெர் ட்ரையோ " என்ற மூவரிடம் இருந்து கதை தொடர்கிறது.

இந்த மூவரையும் ஹீரோ போல் பாவிக்கும் ஒரு பொடிசு லில்-ஸே. ஒரு கட்டத்தில் மூவருக்கும் பணம் தேவைப்பட, லில்-ஸேவின் ஐடியாப்படி ஒரு மோட்டலை(விடுதி) கொள்ளை அடிக்க போகின்றனர் நால்வரும் (லில்-ஸே உட்பட..). அங்கு ஏற்படும் சில எதிர்பாரா சம்பவங்களும், அதனை தொடரும் சில பல கொலைகளும் கால ஓட்டத்தில் லில்-ஸேவை எப்படி ஒரு மாபியா கும்பலுக்கு தலைவன் ஆகிறான் என்பது வரை வந்து நிற்கிறது படத்தின் முதல் அத்தியாயம்.



பின் வரும் அத்தியாங்களில் ராக்கெட் இந்த கறைபட்ட சமூகத்தில் இருந்து விடுபட்டு எப்படி கரையேறுகிறான் என்றும், மறுபுறம் லில்-ஸே போதை பொருள் மார்க்கெட்டை தன் கைக்குள் கொண்டு வருவதையும் விவரிக்கின்றது. இந்த காட்சிகளில் குறிப்பிடப்படவேண்டியது நடுவில் வரும் ஒரு "அப்பார்ட்மென்ட்டின் கதை". ஒரு அப்பார்ட்மென்ட்டை மையமாக வைத்து, அங்கு முதலில் குடி இருந்த பெண்ணிடம் இருந்து எப்படி போதை வியாபாரம் பல கைகளுக்கு மாறி கடைசியில் லில்-ஸே எப்படி அதை கைப்பற்றுகிறான் என்பது வரை, அந்த அப்பார்ட்மென்டின் கண்ணோட்டத்திலேயே அதை விவரிப்பது சுவாரஸ்யம்.

லில்-ஸே தன் நண்பன் பென்னியுடன் சேர்ந்து மொத்த நகரத்தையும் அபகரிக்க முற்ப்படும்போது, கேரட் என்ற இன்னொரு மாபியா தலைவனுடன் மோத நேர்கிறது, அதே நேரம் ராக்கெட்டின் காதல் முயற்சி, மாபியா முயற்சி என அனைத்தும் தோல்வி அடைகிறது. உதாரணம் : ஒரு பேக்கரியை கொள்ளை அடிக்க ராக்கெட்டும் அவன் நண்பனும் துப்பாக்கியுடன் செல்ல, அங்கு இருக்கும் பெண் அழகாக இருப்பதால் கொள்ளை அடிக்க மனம் இன்றி அந்த பெண்ணின் போன் நம்பருடன் திரும்புகிறான் ராக்கெட். பய புள்ள நம்ம இனம்.



லில்-செயின் நண்பன் பென்னி கொல்லப்பட, கேரட் மீதான லில்-ஸேவின் வெறியாட்டம் தொடங்குகிறது. இதற்கிடையில் லில்-ஸேவிற்கு எதிராக நாக்அவுட் - நெட் என்கிறவரும் கேரட்டின் மாபியாவில் சேர்ந்துகொள்ள (இது ஒரு தனி கிளைக்கதை), இரு கும்பலுக்கும் ஒரு பெரிய போரே தொடங்குகிறது. இவர்களுக்கு இடையில் ராக்கெட் வந்து சேர்ந்தது எப்படி, அந்த கோழி பிடிக்கும் முதல் காட்சி என்ன ஆனது என்று பல சுவாரஸ்யங்கள்- உடன் படம் தொடங்கியே இடத்திலேயே படத்தை முடித்திருப்பது டைரக்டர் டச்.
இன்னும் படத்தில் சுவாரஸ்யங்களும் கிளைக்கதைகளும் ஏராளம்..!!!



க்ரைம், போதை, கொக்கைன், மாபியா, லஞ்சம், வறுமை என பிரேசில் நாட்டின் அணைத்து இருண்ட பக்கங்களையும் வெளிச்சத்துக்கு காட்டியிருக்கிறார் இயக்குனர். படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்ப்பரிக்கும் இசை (பல காட்சிகளில் அந்த காட்சியின் டெம்போவிற்கு ஏற்ப நம்மையும் ஆட வைக்கிறது ), காமெரா (அற்புதமான ஒலியமைப்பு, ஒரு டார்க் தீம் படத்திற்கான முன்னோடி ) மற்றும் இதுவரை எங்கும் பார்த்திடாத இந்த படத்தின் நடிகர்கள்..மிக மிக யதார்த்தம்.

நான்கு ஆஸ்கார் நாமினேஷன் உட்பட பல விருதுகளை குவித்த இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ்....!!!!


படத்தின் ட்ரைலர்



-------------------------------------------------------------------------------------------------------------------------------

8 comments:

  1. நான் சென்னையில் உலக சினிமா dvd கடை வைத்துள்ளேன்.
    என்னிடம் உள்ள திரைப்படங்களின் தொகுப்பு .
    dvdworld65.blogspot.com

    ReplyDelete
  2. பாக்க கூடிய படம் தான்.

    ReplyDelete
  3. intha padam ellam enge paakkireenga? engalukkum konjam sollunga antha mukavaria..

    ReplyDelete
  4. பிரேசில் நாட்டுல இருக்கிற ஸ்லம் பத்தி ப்டம் எடுத்ததுக்கு அந்த ஊர்க்காரங்க யாரும் இந்த டைரக்டரைத் திட்டலையா ? :). நல்ல படம்

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல அறிமுகம்! படம் பற்றி கேள்விபட்டுள்ளேன். விமர்சனமும் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  6. முதன்முதலில் சாருவின் ஒரு பதிவில்தான் இந்தப்படம் பற்றி படித்தேன். ரொம்ப நாளாக பார்க்கநினைக்கும் படம்.
    எலே பாண்டி விட்றா வண்டிய டோரண்டுக்கு....

    ReplyDelete
  7. @வார்த்தை - நீங்கள் திரைப்பட ஆர்வலர் ஆக இருந்தால், இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

    @ரங்கராஜன் - எல்லாமே டாரண்ட் மூலமா டவுன்லோட் செய்து பார்ப்பேன் . நான் பயன்படுத்தும் டாரண்ட் தளங்கள்
    piratebay.org
    btjunkie.org

    @பின்னோக்கி - அவரும் பிரேசில் நாட்டுகாரதான், அதனால அவர மன்னிச்சு விட்ருக்கலாம்...

    @எஸ்.கே - ரொம்ப நன்றி சுரேஷ்...வருகைக்கும் கருத்துக்கும்...

    @நாஞ்சில் பிரதாப் - பாருங்க பிரதாப், பார்க்கவேண்டிய ஒரு படம்தான்....

    ReplyDelete
  8. நெறைய தளங்களில் பதிவு செய்யப்பட்ட படம் தான் எனினும் , உங்கள் எழுத்து ஈர்த்தது.. கலக்கல் !

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...