Saturday, June 12, 2010

பப்புவின் அட்ராசிட்டி - 4
------------------------------------------------------------------------------------

அப்பா : டேய், ஏன்டா அழுவுற...?
பப்பு : அம்மா அடிச்சுட்டாங்க..உம்ம்ம்....உம்ம்ம்...
அப்பா : இதுக்கு எல்லாமா அழுவாங்க ?
பப்பு : யோவ்..போயா..உன்ன மாதிரியெல்லாம் என்னால அடி தாங்க முடியாது...!!!

------------------------------------------------------------------------------------

பப்பு : தாஜ் மகாலுக்கு பச்சை கலர் பெய்ண்ட்டு அடிச்சா என்ன ஆகும்....?
அப்பா : தெரியலையே...
பப்பு : கொஞ்சம் செலவாகும்.

------------------------------------------------------------------------------------

பப்புவின் தத்துவம் - 1045

காதலிக்கிற பொண்ண காதலின்னு சொல்லலாம்...
கல்யாணம் பண்ண போற பொண்ண கல்யாணி-ன்னு சொல்ல முடியுமா...?
யோசிங்க...யோசிங்க...

------------------------------------------------------------------------------------

பப்பு (தன் குட்டி தோழியிடம்...) - நீதான் எனக்கு WIFE-ஆ வருவேன்னு என்னோட க்ளாஸ் டீச்சருக்கு முன்னாடியே தெரிஞ்சுருக்கு...!!!

தோழி : எப்படி சொல்ற ?

பப்பு : நேத்து கிளாஸ்ல சொன்னாரு, பன்னி மேக்கதான் நீ லாயக்குன்னு..!!!

------------------------------------------------------------------------------------

ப்ளாஷ் நியூஸ் :

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி, மருத்துவமனையில் அனுமதி...

பப்பு : மக்களே எல்லாரும் அவர் சீக்கிரம் குணமாகனும்னு வேண்டிக்கங்க,
ஏன்னா..அவர்கிட்ட இன்னும் நாலு சி.டி இருக்காம்.

------------------------------------------------------------------------------------

டீச்சர் : பசங்களா, நீங்க எல்லாரும் நல்லா படிச்சு நம்ம நாட்டுக்கு நல்ல பேரு வாங்கி தரணும்.

பப்பு : ஏன் இந்தியா-ங்கிற பேரு நல்லாதான இருக்கு ???

------------------------------------------------------------------------------------

பப்பு : அம்மா, என்னோட ப்ரெண்டு வர்றான், சீக்கிரம் இந்த காஸ்ட்லி ஐட்டம்ஸ் எல்லாத்தையும் உள்ள கொண்டு போய் வைங்க...!!!

அம்மா : ஏன்டா, உன் ப்ரெண்டு ரொம்ப திருடுவானா ?

பப்பு : அதில்லமா, இதையெல்லாம் பார்த்தான்னா அவனோடதுன்னு கண்டு பிடிச்சுடுவான்...

------------------------------------------------------------------------------------

பரீட்சை எழுதியவுடன்...

பப்பு : டே நான் ஒண்ணுமே எழுதல...

பப்பு ப்ரெண்டு : நானும் தாண்ட..

இன்னொரு ப்ரெண்டு : டே நானும் தாண்ட ஒண்ணுமே எழுதலை...

பப்பு : அடப்பாவி நாய்களா...போச்சு போ, நாம எல்லாரும் ஒன்னா காப்பி அடிச்சோம்னு மிஸ் கொல்ல போறாங்க...!!!

------------------------------------------------------------------------------------

டீச்சர் : ஒரு பெண் வண்டி ஒட்டிக்கொண்டு போகிறாள்..., பப்பு இத அப்படியே இங்கிலீஷ்ல சொல்லு...

பப்பு : PEN DRIVE

------------------------------------------------------------------------------------

எல்.கே.ஜி வகுப்பில்....

டீச்சர் : இங்க யாருக்கெல்லாம் NUMBERS தெரியும்..
பப்பு மட்டும் கை தூக்குகிறான்..

டீச்சர் : வெரி குட்.
சொல்லு, நாலுக்கு அப்புறம் என்ன வரும்.

பப்பு : ( கை விட்டு எண்ணிக்கொண்டு ) அஞ்சு.

டீச்சர் : வெரி குட்..ஏழுக்கு அப்புறம் என்ன வரும்..?

பப்பு : ( மீண்டும் கை விட்டு எண்ணிக்கொண்டு ) எட்டு.

டீச்சர்: வெரி குட்.உனக்கு யாரு இதெல்லாம் சொல்லி கொடுத்தாங்க..

பப்பு : என்னோட அப்பா மிஸ்.

டீச்சர் : ரொம்ப நல்ல அப்பா....சரி, பத்துக்கு அப்புறம் என்ன வரும் சொல்லு...?

பப்பு : கொஞ்சமும் யோசிக்காமல், JACK மிஸ்.

------------------------------------------------------------------------------------

பப்பு : ஏண்டா உங்க அப்பாவுக்கு, ஆக்ஸிடன்ட் ஆன விஷயத்தை என்கிட்ட சொல்லலை...?

ப்ரெண்டு : சாரிடா பப்பு, சொல்ல மறந்துட்டேன்...

பப்பு : போடா துரோகி, எங்கப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆனா , உன்கிட்ட சொல்றனா பாரு...

------------------------------------------------------------------------------------

கிராமத்தில் பப்பு :

அந்த கிராமத்துக்கு அன்னைக்கு கலெக்டர் வந்திருந்தார்...

கலெக்டர் எல்லார்கிட்டயும் குறைகளை கேக்கும்போது, நம்ம பப்பு வேக வேகமா கலெக்டர் கொட்ட போனான்...
(பல தமிழ் சினிமாக்களில் வருவது போல...)

பப்பு (சத்தமாக) : கலெக்டர் சார்ர்ர் , மொதல்ல எங்க ஊருக்கு ஒரு பாலம் கொண்டு வாங்க...

கலெக்டர் ( தலையை சொரிந்துவிட்டு) : இந்த ஊருலதான் ஆறே இல்லையேப்பா, அப்புறம் எதுக்கு பாலம்..

இப்ப பப்பு தலையை சொரிந்துகொண்டே.. : அப்படின்னா, மொதல்ல ஒரு ஆற கொண்டு வாங்க...!!!! (எப்பூடீ...)

கலெக்டர் : ???

------------------------------------------------------------------------------------

இது போனஸ் ஜோக் ..என்ஜாய்.......

கணவன் : இன்னைக்கு நைட் என்ன டின்னர் டார்லிங் ?

மனைவி : (வெறுப்புடன் ) ம்ம்....விஷம்..

கணவன் : ஒ.கே எனக்காக வெய்ட் பண்ணவேண்டாம், நீ சாப்பிட்டு தூங்கு... :)

------------------------------------------------------------------------------------

இது பப்புவின் பழைய காமெடி...இருந்தாலும் ரிப்பீட்டு....

தாத்தா : டே பப்பு, உங்க மிஸ் வர்றாங்க...ஓடி போய் ஒளிஞ்சுக்கோ....

பப்பு : அய்யோ தாத்தா..நீ போய் ஒளிஞ்சுக்கோ....நீ செத்துட்டேன்னு சொல்லித்தான் ஒரு வாரமா லீவு போட்டு வீட்டுல இருக்கேன்...

------------------------------------------------------------------------------------

அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்......
- ஜொள்ளன் பப்பு.

14 comments:

பின்னோக்கி said...

வழக்கம் போல பப்பு... பப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூ தான். கலக்கல்.

Jey said...

nice. keep going.

seemangani said...

மச்சான் நிறைய கேட்டதா இருந்தாலும் படிக்கும் பொது சிரிக்காம இருக்க முடியல தூள்...

kayal said...

பப்புவின் ஸ்டைலில் ஒரு sms ஜோக்.
பெயில் ஆன தோழன் : " டேய் எப்டி டா, நாலு ரோ தள்ளி உக்கார்ந்தும் கரெக்டா காப்பி அடிச்சி பாஸ் ஆயிட்ட ?
பப்பு : "தாங்க்ஸ் டு வாசன் ஐ கேர் "

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைத்தும் அருமையான ஜோக்ஸ் அதிலும் மேலே இருக்கும் புகைப்படம் மிகவும் அருமை .

ப்ரியமுடன்...வசந்த் said...

JACK புரியலியே தீபன்?

மற்ற அனைத்தும் பப்பு வளர்ந்துட்டதை சொல்லுது...

ஜெய் said...

அதென்ன ஜாக்? :-)
மத்ததெல்லாம் சூப்பர்...

வால்பையன் said...

பத்துக்கு அப்புறம் என்ன வரும் சொல்லு...?

பப்பு : கொஞ்சமும் யோசிக்காமல், JACK மிஸ்.//

புரியல!

சிவன். said...

யே...யப்பா....டகால்டிகளா....உங்களுக்கெல்லாம் இந்த ஜோக் புரியல, நான் அதை நம்பணும்...நம்பிட்டேன்.... நம்பிட்டேன்...எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்...
சீட்டுக்கட்டுல பத்துக்கு அப்புறம் JACK QUEEN KING வரும்.

சிவன். said...

நன்றி பின்னோக்கி...
நன்றி கனி மச்சான்...இந்த மேட்டரை பப்புகிட்ட சொல்லிடுறேன்..
நன்றி கயல்...நல்லாயிருக்கு...பப்பு நல்ல பையங்க...காப்பி எல்லாம் அடிக்க மாட்டான்.. :)
நன்றி பனித்துளி சங்கர்...
@ஜெய், @வசந்த் மச்சான் @ வால் அண்ணன் - நன்றி ...

சிவன். said...

Thanks Jey :)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்குற மச்சி

சிவன். said...

நன்றி சதீஷ் மச்சி...

சிவன். said...
This comment has been removed by the author.

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...