Thursday, August 13, 2009

ஐடென்டிடி - Identity(2003).

என்னடா படம் இது, எப்படிடா இப்படியெல்லாம் எடுக்குறாங்க-னு உங்கள பொலம்ப வைக்கணுமா...ஒரு அந்நியனையே நம்மளால தாங்க முடியாது.....ஏகப்பட்ட அந்நியன் எபெக்ட் கொடுத்தா ? அப்படிப்பட்ட ஒரு படம்தான் 2003-ல வெளிவந்த ஐடென்டிடி (Identity) திரைப்படம்.படத்தோட கதைய பாக்குறதுக்கு முன்னாடி அந்த படத்துல கையாளபட்டிருக்கும் ஒரு டெக்னிக்க குறிப்பிட்டே ஆகணும். இந்த படத்துல ஒரு வித்தியாசமான எடிட்டிங் முறைய கையாண்டிருக்காங்க....அதாவது flashback உள்ள ஒரு flashback அதுக்குள்ள ஒரு flashback அப்புறம் ஒரு flashback அப்படின்னு போய்ட்டே இருக்கும். உதாரணத்துக்கு.... இப்ப இந்த காட்சிய எடுத்துக்கங்க...ஒரு நாள் ராத்திரி பயங்கர மழை,அப்ப ஒரு மரத்துக்கு பக்கத்துல ஒரு நாய் வேக வேகமா பள்ளம் நோண்டிட்டு இருக்கு. திடீர்னு அந்த நாய்க்கு பள்ளத்துல ஏதோ கெடைக்குது, சந்தேகமே படாதீங்க அது மனுஷ எலும்பேதான்.அந்த எலும்பு ஒரு சிவப்பு கலர் துணில மாட்டிக்கிட்டு இருக்கு. அப்படியே ஸீன கட் பண்ணா, அந்த சிகப்பு கலர் துணிய கட்டிட்டு ஒரு பொண்ணு ரோட்ல நடந்து வந்துட்டிருக்கு, அவள கடத்துற ஒரு மாருதி ஓம்னி வேன் கும்பல், அவள கொன்னு ஒரு மரத்துக்கு கீழ பொதக்குறாங்க.அந்த கொலையெல்லாம் வேன்ல இருந்த படியே ஒரு ஸ்மார்ட்டான வில்லன் பாத்துட்டு இருக்கான்.அப்படியே ஒரு கட் அடுத்த சீன் அவனோட ஆங்கிள்-ல இருந்து ஏன் கொன்னான்னு காண்பிக்கணும்.அத கட் பண்ண நாய் இன்னம் எலும்ப கவ்விட்டு இருக்கும். அதாவது கொஞ்சம் reverse கொஞ்சம் forward-னு காண்பிக்குறாங்க. ( யப்பா சொல்லும் போதே கண்ண கட்டுது, படத்துல பாருங்க இன்னும் சூப்பரா இருக்கும் - இதுதான் படத்தோட மொத இருவது நிமிஷம்.). கிட்டத்தட்ட தசாவதாரம் படத்துல வர்ற "Butterfly Effect' மாதிரி. இப்ப கதைக்கு வருவோம்.படத்தோட ஆரம்பத்திலிருந்து படத்த ஒரே நேரத்துல நடக்குற ரெண்டு track-ஆ காமிக்கிறாங்க. ஒரு சைடுல ஒரு சைக்கோ கொலைகாரனுக்கு தண்டனை குடுக்க நடு ராத்திரில ஒரு கூட்டம் கூடுது. இன்னொரு பக்கம் வெவ்வேற ஊருக்கு போற சில பேர் கடும் புயல் மற்றும் மழை காரணமா எல்லாரும் ஒரு ஹோட்டல்-ல (Motel) தங்க நேரிடுது. அவங்களுக்குள்ள ஒரு கார் டிரைவர், ஒரு நடிகை,ஒரு குற்றவாளியை வேற எடத்துக்கு கூட்டிட்டு போகும் ஒரு போலீஸ்காரர்,ஒரு இளம் ஜோடி மற்றும் ஒரு சிறு குடும்பம் அடக்கம்.அந்த சிறு குடும்பத்தோட அம்மா வரும்போதே ஆக்சிடென்ட் ஆகி ரொம்ப சீரியஸ்-ஆ வர்றாங்க. இப்ப அங்க இருக்க ஒவ்வொருவரா ரொம்ப கொடூரமா கொலை செய்யப்படுறாங்க , முதல்ல காட்சிகள் அந்த motel ஓனர சந்தேகப்பட வைக்குது.அப்படியே படம் நகர நகர அந்த சந்தேகம் பல கேரக்டர் மேல மாறுது. கடைசியிலே ஒரு படு பயங்கரமான ட்விஸ்ட் வச்சு படத்த முடிக்குறாங்க. அதோட இந்த கொலைகளுக்கும் அந்த சைக்கோ கொலைகாரனுக்கும் என்ன தொடர்புன்னும் டைரக்டர் (3:10 TO YUMA புகழ் JAMES MANGOLD) கடைசியில தான் சொல்றார். ஆனா அந்த தொடர்ப ஏற்படுத்துறதுக்கான பல விஷயங்கள டைரக்டர் முதல் சீன்ல இருந்தே மறைமுகமா காமிக்கிறார்.என்ன நம்ம மூள அதெல்லாம் தவரவிட்டுருது... வர வர ட்விஸ்ட் வைக்குறதுக்கு ஒரு எல்ல இல்லாம போச்சு....கொல கொடூரமா படத்து கதைய மாத்திடுறாங்க, என்னடான்னு கேட்டா இதுதான் ட்விஸ்ட் -னு வேற சொல்றது. இதுவும் அந்த வகையறாவா சேர்ந்த படம்தான். முடிவா சொல்லனும்னா ஒரு தடவ இந்த படத்த தாராளமா பாக்கலாம். கொசுறு : இந்த படம் Agatha Christie-யோட And Then There Were None அப்படிங்கற நாவல தழுவி எடுக்கப்பட்டது.

2 comments:

  1. வித்தியாசமான படம் இது. என்ன கிளைமேக்ஸ்ல நம்ம மண்ட காஞ்சுடும். அதுக்கு டைரக்டர குறை சொல்ல முடியாது. :)

    ReplyDelete
  2. @-பின்னோக்கி - //வர வர ட்விஸ்ட் வைக்குறதுக்கு ஒரு எல்ல இல்லாம போச்சு....கொல கொடூரமா படத்து கதைய மாத்திடுறாங்க, என்னடான்னு கேட்டா இதுதான் ட்விஸ்ட் -னு வேற சொல்றது. இதுவும் அந்த வகையறாவா சேர்ந்த படம்தான்// -
    இதுலையே எனக்கு கிளைமாக்ஸ்ல என்ன எபெக்ட் கெடச்சதுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்...

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...