(அல்லது சூஸையிடு சர்க்கிள்).
2002-ல வெளிவந்து ஜப்பான்ல பரவலான தாக்கத்த ஏற்படுத்துன ஒரு திரைப்படம் இது, போன வாரம்தான் இந்த படத்த பாக்குற வாய்ப்பு கெடச்சது. ஜப்பான் நாட்டுல அதிமாகி வரும் தற்கொலைகள பத்தி,கொஞ்சம் வித்தியாசமான முறையில இந்த படத்துல அணுகியிருக்கிறார் இயக்குனர் Sion.
எட்டு நாள்ல நடக்குற சம்பவங்கள கொஞ்சம் திகில் நிறைஞ்ச திரைக்கதை மூலமா காட்டியிருக்காங்க.crime psycho thrillers, homicide போன்ற திரைப்படங்கள் பாக்குறவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்.
முதல் காட்சியே 54 பள்ளி மாணவிகள் ரயில் முன்னாடி விழுந்து தற்கொலை பண்ணிக்குற ஒரு கொடூர நிகழ்ச்சியோட ஆரம்பிக்குது இந்த படம்.ஆரம்பத்துல இது ஏதோ கூட்டு தற்கொலை-னு விசாரிக்கிற போலீஸ்,தொடர்ந்து இதே போல இறப்புகள் நாடெங்கும் பரவ, அதுக்கு பொறவுதான் அந்த நாட்டு போலீஸும் இதுல வேற எங்கயோ ட்விஸ்ட் இருக்குன்னு தேட ஆரம்பிக்கிறாங்க.
படத்தின் காட்சிகள் பல இடங்கள்ல ரொம்பவே மெதுவா போகுற மாறி இருக்கு(அதுவே அந்த காட்சியில உங்களுக்கு ஒரு எதிர்பார்ப்ப எற்படுதும்கிறது வேற விஷயம்).....திகில் படம்னாலே இந்த அமைதியான காட்சி அமைப்புகள கண்டிப்பா வச்சிடுறாங்க. சில காட்சிகள்ல இறப்பை ரொம்ப சாதாரணமா காட்டுற இயக்குனர், பல காட்சிகள்ல ரத்தமும் சதையும்னு ரொம்ப கொடூர முறைய கையாண்டிருக்கிறார்.(சில ஸீன் எல்லாம் கொஞ்சம் ஓவராவே இருக்கு). அதே நேரம் SAW போன்ற படங்கள பாக்குறவங்கள இந்த படம் கொஞ்சம்கூட பாதிக்காது. அந்த படத்த பாத்துட்டா வேற எந்த படம் வேணும்னாலும் பாத்துடலாங்க.
என்ன இந்த படத்தோட முடிவுதான் ஜீரணிக்க முடியல....( இந்த அஜீரணம் எனக்கு மட்டும்தானா இல்ல படத்த பாத்த எல்லாருக்குமான்னு தெரியல!!) மத்தபடி நாங்க
வித்தியாசமான படமெல்லாம் நல்லா பாப்போம்னு சொல்றவங்க எல்லாம் இந்த படத்தை கண்டிப்பா பார்க்கலாம்.
டொரண்ட் லிங்க் எங்க தலைவா!?
ReplyDeleteஇதுதான் எங்களோட முதல் பதிவு (படங்கள்)....
ReplyDeleteஅதனால இதுல Torrent link குடுக்கல...
இப்போ அதை சேர்த்தாச்சு....
நன்றி சென்ஷி !!!
;-))
ReplyDeleteஓக்கேய்! மிக்க நன்றி மச்சான்ஸ் :-)