Saturday, October 31, 2009

மரணத்தின் புனைப்பெயர் !!!


நீ முன்னே செல்ல
யாவரும் அறியாமல்
பின்னால் வந்த என்னை
காதலுடன் பார்த்தாய்,
அன்று தான் - எனக்கு
நிலவை பிடித்தது.

ஓரடி இடைவெளியில்
இருவரும் அமர்ந்திருக்க
உன் சுண்டுவிரலால்,
என் விரலை - பிரியத்துடன்
தொட்டு பார்த்தாய்
அன்று தான் - எனக்கு
பூக்கள் பிடித்தது.

நான் திரும்பிய
திசையெல்லாம் - உன்
முகம் மட்டும்
நிறைந்திருக்க – நீயோ
யாதும் அறியாததுபோல்
கண்ணாலே பேசினாய்
அன்று தான் - எனக்கு
தனிமை பிடித்தது.

முன்னொரு நாள்
வைகறை நிலவைப்போல்
அதிகாலைப் பொழுதில்
உன் தலைமுடி நீரால்
என் துயில் கலைத்தாய்
அன்று தான் - எனக்கு
மழையை பிடித்தது

இன்னும் எவ்வளவோ
ரகசியம் நமக்குள்ளே
இன்று தனியாய்
என்னிடம் புதைந்துள்ளது.....

இதயம் அறுத்து
இறுதி ஊர்வலத்திலும்
உன் பின்னேயே வந்தேன்
நீ கடைசிவரை திரும்பவில்லை...
அன்று தான் - எனக்கு
மரணத்தை பிடித்தது.

------------------------------------------------------------------------


நெஞ்சில் உட்புகுந்து
இதயத்தை புடுங்கி
எடுத்து - நெருப்பில்
வாட்டி, துண்டங்களாக
குதறி , தூர எறிந்தால்
ஒழிய உன்னால்
என்னை - உன்
நினைவை, என்
மனதில் இருந்து
நீக்க இயலா !!!!
துச்சா ,இதயத்திற்கு
அழிவு உண்டு,
நினைவுகளுக்கு ?
உடல் அழிந்தாலும்
உயிர் அழிந்தாலும்
உன் காதலும்
என் காதலும்
இங்கேயேதான்...!!!
உனக்கு பதில் அவள்,
எனக்கு பதில் அவன்,
காதல் அதேதான்.
------------------------------------------------------------------------
நேற்றுவரை நான்
பொய் சொன்னதில்லை
இன்று முதல்
உன்னைப் பற்றி
கவிதை எழுதுகிறேன்.
- இப்படிக்கு சிவன்.
------------------------------------------------------------------------

Thursday, October 29, 2009

"சண்டியர்" ஐயோ ..இல்ல விருமாண்டி "உறுமல்"!!

கொஞ்ச சில வருஷ பழைய வீடியோ தான்,பார்க்காதவங்க பார்க்க வேண்டிய வீடியோ !!

உலக நாயகன் சில உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு அளிக்கும் பதிலடி !! என்னா ஒரு கிண்டலு ?!??..கலாய்க்கிறதுலயும் , கலக்கிறதுலயும் கமல் உலக நாயகன் தான்.
சுருக்கமா சொல்லணும் னா "விருமாண்டியின் நையாண்டி"!!!

Wednesday, October 28, 2009

நோ மேன்'ஸ் லேன்ட் (NO MANS LAND) - 2001

NO MANS LAND – 2001-ல் சிறந்த வேற்று மொழி படத்திற்கான ஆஸ்கரை வென்ற திரைப்படம்.போஸ்னியா செர்பியா நாடுகளுக்கு இடையேயான போரை மையமாக கொண்டு புனையப்பட்ட திரைக்கதை.இரு நாடுகளுக்கிடையே யாருக்கும் சொந்தமில்லாமல் அனாமத்தாய் கிடக்கும் நிலத்தை "நோ மேன்'ஸ் லேன்ட்" என்று சொல்லுவார்கள்.நம்ப சென்னை பாசையில இதத்தான் பொறம்போக்கு நிலம் னு சொல்வாங்க.
இந்த நோ மேன்'ஸ் லேன்ட்-ல சிக்கிக்கொள்ளும் மூன்று ராணுவ வீரர்களை (ஒரு செர்பியா மற்றும் இரண்டு போஸ்னியா வீரர்கள்) மையமாகக்கொண்டு 2001-இல், முன்னாள் போஸ்னிய ராணுவ வீரரான டானிஸ் டனோவிக் (Danis Tanovic) இயக்கிய திரைப்படம் தான் "நோ மேன்'ஸ் லேன்ட்".
அடர்ந்த பனி படர்ந்த இரவில் தொடங்கி மறுநாள் அந்தி வரை கதை நீடிக்கிறது.போஸ்னிய மீட்பு வீரர்கள் தங்கள் ராணுவ தளத்திற்கு மீண்டும் திரும்பும் வழியில் பனியின் தாக்கம் அதிகமாய் இருந்ததால் சிறிது நேரம் பணியின் தாக்கம் குறையும்வரை நோ மேன்'ஸ் லேன்ட்டிலேயே காத்திருப்போம் என முடிவு செய்து, பின்னர் அசதியில் அனைவரும் தூங்கிவிடுகிறார்கள்.
மறுநாள் விடிந்ததும் உறங்கிக்கொண்டிருந்த அனைவரையும் நோக்கி செர்பியன் துப்பாக்கிகள் பெரும் சத்தத்தோடு சுட ஆரம்பிக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் எல்லோரும் மடிய, சிகி (ciki) என்ற நபர் மட்டும் காயத்தோடு தப்பி அருகில் இருக்கும் அகழியில்(trench) பதுங்கிக்கொள்கிறார்.
  No Man's Land 2001 X264 Hqdvdrip 299mb-shan
சிறுது நேரம் கழித்து ஆள் நடமாட்டத்தை கண்காணிக்க அந்த அகழிக்கு இரண்டு செர்பிய வீரர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் தான் தயாரித்த கண்ணிவெடியின் பெருமையை விளக்கி காண்பிப்பதற்காக இறந்த போஸ்னிய வீரரின் சடலத்தின் கீழ் புதைக்கிறார்.
அதே குழியில் பதுங்கி இருந்த சிகி, உடனே அந்த இரண்டு செர்பிய வீரர்களையும் நோக்கி சரமாரியாய் சுடுகிறார். அதில் கண்ணிவெடியை புதைத்த செர்பிய வீரன் இறக்க நேரிடுகிறது, நினோ என்ற உடன் வந்த மற்றொரு செர்பிய வீரன் சில குண்டடிகளோடு உயிர் தப்பிக்கிறான்.
இப்ப நினோ மற்றும் சிகி மட்டும் பதுங்கு குழியில் உயிருடன். "உன் நாடுதான் முதலில் போர் தொடங்கியது, இல்லை உன் நாடுதான் முதலில் போர் தொடங்கியது" என இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போக, அதே நேரம் புதைக்கப்பட்ட கண்ணிவெடியின் மேல் கிடந்த ஆசாமி முனக ஆரம்பிக்கிறான்.
[No_Mans_Land_movie2.jpg]
தன சக நாட்டு வீரன் உயிருடன் இருப்பதை காணும் சிகி, அவனை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறான்.
பிறகு சிகியும் நினோவும் அகழியின் மேல்புறம் சென்று அவரவர் நாட்டு எல்லைகளை நோக்கி வெள்ளை கொடிகளை அசைத்து உதவி கேட்கிறார்கள். இதை கவனித்த இரண்டு நாடுகளும் UNPROFORன் (United Nations Protection Force -எல்லாம் ஐ.நா தாங்க) உதவியை நாடுகிறது. முதலில் உதவி செய்ய மறுக்கும் ஐ.நா, ஒரு ஆங்கில செய்தி தொடர்பாளர் ஊடகத்தின் மூலம் கொடுக்கும் அச்சுறுத்தலின் காரணமாக உதவி செய்ய ஒப்புக்கொள்கிறது.
ஒப்புக்கொண்டபடிஐ.நா, அவர்களை (மூவரையும்) காப்பாற்றுகிறதா, கண்ணிவெடி செயலிழக்கப் படுகிறதா, என்பது மீதிக் கதை.என்னதான் முழுக்கதையையும் தெரிந்துகொண்டு நீங்கள்பார்த்தாலும், சில படங்கள் திரையில் காணும்போது வேறு பரிமாணத்தில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்.

இத்திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு காரணம், இதுவரை சொல்லப்படாத கதை (என்னதான் நாம் ஏகப்பட்ட போர்ப்படங்கள் பார்த்திருந்தாலும் இந்த கதை புதிதே), மற்றும் ஆழ்ந்த திரைக்கதை. இதுவரை ஆஸ்கர் உட்பட இப்படம் 42 சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியஸ் ஆன கதையில் அதன் பாரத்தை குறைக்கும் விதமாக இடையிடையே கொஞ்சம் காமெடியை புகுத்தி (இதைத்தான் ப்ளாக் காமெடி BLACK COMEDY என்பார்கள்) நகர்த்தும் டைரெக்டர், இப்படத்தின் மூலமாக போரின் எதிர்ப்பை அப்பட்டமாக வெளியிடுகிறார்.
நகைச்சுவை கலந்த இந்த வரலாற்றுப் படத்தை நிச்சயமாய் ஒருமுறைக்கு மேல் பார்க்கலாம். படத்த பார்த்தவங்க மறக்காம உங்க கருத்துகளையும் இங்க பதிவு செயுங்க.
படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க
படத்தின் டிரைலர் இதோ...

Monday, October 26, 2009

செவென் SE7EN (1995)

பைபிள் குறிப்பிடும் ஏழு பாவங்களை மையமாக வைத்து ஒரு கிரைம் த்ரில்லர். விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்டு இன்றளவும் நிறைவாய் பேசப்படும் ஒரு திரைப்படம். திரையில் வராத இரண்டு முடிவுகள் பதிவின் இறுதியில். வில்லியம் சோமர்செட் (மார்கன் ப்ரீமேன்), இன்னும் ஏழு நாட்களில் ரிட்டயர் ஆக இருக்கும் ஒரு காவல் துறை டிடக்டிவ். டேவிட் மில்ஸ் (பிராட் பிட்), அவருக்கு பின் அந்த இடத்திற்கு வரவிருப்பவர். இந்த சமயத்தில் இருவரும் சேர்ந்து ஒரு கொலையை விசாரிக்க நேரிடுகிறது. பிரேதத்தை இருவரும் நேரில் பார்வை இடுகின்றனர். கொலை செய்யப்பட்டது ஒரு மெகா சைஸ் ஆசாமி. இறந்தவன் வயிறு வெடித்து இறந்திருக்கிறான், கொன்றவன் இவனை சாப்பிட வைத்தே கொன்றிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றனர் இருவரும். அதோடு பிரேதத்தின் அருகிலே "GLUTTONY" என்று எழுதப்பட்டிருக்கிரத்தையும் கவனிக்கிறார் மார்கன். GLUTTONY என்பது பைபிள் குறிப்பிடும் ஏழு பாவங்களில் ஒன்று என்பதை அறிவிக்கும் மார்கன், தனது மேலதிகாரியிடம் தன்னால் இந்த கேஸை எடுத்து கொள்ள முடியாது (இன்னும் சில தினங்களில் ரிட்டயர் ஆகா இருப்பதால்) என்று மறுக்கிறார். அதே நேரம் பிராட் பிட், இதை எடுத்து நடத்த முழு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். மறு நாளே, அதே ஊரில் உள்ள ஒரு பிரபலமான வழக்கறிஞர் கொலை செய்யப்படுகிறார். இங்கேயும் ஒரு வித்தியாசமான கொலை முறை. பிரேதத்துக்கு அருகில் இங்கும் 'GREED' என்று எழுதப்பட்டு இருக்கிறது. இதை பிராட் பிட் தனியாக விசாரிக்கிறார். அன்றைய இரவு பிராட் பிட்டின் மனைவி மார்கனை இரவு டின்னருக்கு அழைக்கிறார். (பிராட் பிட்டுக்கும் மார்கனுக்குமான உறவை பலப்படுத்தும் பொருட்டு) இரவு டின்னரை முடித்த பிறகு, மார்கன் இந்த புதிய கேஸை பத்தி விசாரிக்க, உடனே பிராட் பிட், இரண்டாவது கொலையையும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மார்கனுக்கு கொடுக்கிறார். 'GREED' என்று எழுதியிருப்பதை காணும் மார்கன், இதுவும் பைபிளில் குறிப்பிடப்படும் ஒரு பாவம் என்றும், எனவே கொலைகாரன் மீதமுள்ள ஐந்து பாவங்களையும் குறிக்கும் வகையில், இன்னும் ஐந்து கொலைகளை செய்யப்படலாம் என்கிறார். இதனால் மார்கனுக்கும் இந்த கேசில் ஆர்வம் வந்துவிட ஏதேனும் தடயம் கிடைக்கலாம் என்று இரண்டாவது கொலை நடந்த இடத்துக்கு விரைகின்றனர், வெகு நேரம் தேடி பின்னர் அங்கே சில கைரேகைகள் கிடைக்கின்றது. இதுக்கு மேல சொன்னா SPOILER மாதிரி ஆகிடும். ஏழு கொலைகளும் நடந்ததா, தடுக்கப்பட்டதா, கொலையாளி யார், ஏன் என்பதுதான் மீதி கதை. அற்புதமான திரைக்கதை, மார்கன் ப்ரீமேனுக்க்காகவே எழுதியது போன்ற சோமர்செட் கதாப்பாத்திரம். மனிதர் காட்சிக்கு காட்சி அசத்துகிறார். பிராட் பிட்டும் சற்றும் குறையில்லை. அவர் கதாப்பாத்திரம் என்ன செய்யுமே அதையே கச்சிதமாக செய்திருக்கிறார். அதுவும் கொலைகாரனை தவறவிட்டு பின்னர் கோபத்தில் வெடிக்கும் காசிகளில் இருவரின் நடிப்பும் பலே...!! படம் பார்க்காதவர்கள் இதற்க்கு மேல் படிக்க வேண்டாம்.... இது படம் பார்த்தவர்களுக்கு மட்டும், இயக்குனர் இந்த முடிவு மட்டுமல்லாமல் இன்னும் ஒரு முடிவையும் படம் பிடித்து உள்ளனர் : இந்த முடிவில், ஜான் டோ (நம்ம வில்லன்தான்) மில்சோட மனைவிய (ட்ரேசி) கொள்ள மாட்டார். ரெண்டு ப்ரேதங்கள காட்டுவதாக சொல்லி ஒரு பழைய தொழிற்சாலைக்கு கூட்டி போகும் ஜான், அங்கிருக்கும் ஒரு பாதாள சாக்கடை வழியாக தப்பிக்கிறார். அவர துரத்திட்டு போற பிராட் பிட்ட, ஒரு சர்ச்சுல வைச்சு சண்ட போட்டு கொன்னுடறார் ஜான். அதுக்கு அப்புறம் அங்க வர்ற சோமர்செட் ஜான சுடுகிறார். இதுக்கப்புறம் மில்சுக்கு போலீஸ் வீர அஞ்சலி செலுத்துது, அவரோட மனைவி திரும்ப பிளாடெல்பியா-வுக்கு போறாங்க, சோமர்செட் மீண்டும் தன வேலைக்கே திரும்புவதாக படம் முடிகிறது. ஏனோ இந்த முடிவு வெளியிடப்படவில்லை. இது மட்டுமின்றி, இன்னொரு முடிவையும் டைரக்டர் பிளான் பண்ணியிருக்கார், அனால் அதுவும் படமாக்கப்படவில்லை. அந்த முடிவுல, ட்ரேசி கொல்லப்படுறாங்க, இதனால ஆத்திரமடயுற பிராட் பிட், ஜான கொள்ள முற்ப்படும் போது, மார்கன் அவரோட துப்பாக்கிய கேக்குறார். பிராட் பிட்கிட்ட பேசிட்டு இருக்கும்போதே மார்கன் ஜான சுட்டு கொள்கிறார், ஏன்னு பிராட் பிறட் கேக்கும்போது, "I'm Retiring " -னு சோமர்செட் பதில் சொல்வதொட முடியுது கதை. இவ்வளவு சொல்லிட்டு டைரக்டரா பத்தி சொல்லனா எப்படி, FIGHT CLUB, CURIOUS CASE OF BENJAMIN BUTTON போன்ற மிக வித்தியாசமான படங்கள குடுத்த DAVID FINCHER தான் இந்த படத்தின் டைரக்டர். படத்த தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க. படத்தோட டிரைலர் இதோ.

Wednesday, October 21, 2009

டெஜா வு Déjà Vu (2006)

2006-ல் டென்சல் வாஷிங்டன் நடித்து வெளி வந்த டெஜா வு க்ரைம் த்ரில்லராக ஆரம்பித்து SCIENTIFIC FICTION-ஆக முடியும் ஒரு திரைப்படம். படம் ஆரம்பத்திலிருந்தே ஒரு விறுவிறுப்பு, டென்சலின் அசாத்திய நடிப்பு (இந்த படத்தில் அண்ணாத்த நடிப்பதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மி - ஆனாலும் பூந்து விளையாடி இருக்கார்) இந்த ரெண்டும் படத்தோட மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
ஒரு விழாவிற்காக கப்பற்படை அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பும் கப்பல்,ஹட்சன் ஆற்றின் நடு வழியிலேயே வெடித்து சிதறுகிறது. முழு கப்பலும் வெடித்து சிதற அதில் இருந்த 543 பேர் இறக்கின்றனர்.இந்த விபத்தை பார்வையிடும் ஒரு அதிகாரியாக வருகிறார் டென்சல். டென்சலின் நண்பரும் (போலீஸ் பார்ட்னர்) இதில் இறந்துவிட, இந்த வெடி விபத்தை விசாரிக்கும் குழுவுடன் இணைகிறார் டென்சல்.
அதே நேரத்தில் ஹட்சன் நதியின் மற்றொரு கரையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் ஒதுங்குகிறது. இதை டென்சலுக்கு மற்றவர்கள் தெரியப்படுத்துகின்றனர். கப்பல் விபத்தில் பலியானவர் என்று முடிவு செய்யும் தருணத்தில் அவர் கப்பல் வெடிக்கும் முன்னரே கரை ஒதுங்கியது தெரிய வருகின்றது. பின் டென்சல் நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டு, இந்த பெண்ணிற்கும் கப்பல் விபத்திற்கும் தொடர்பிருக்கும் என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
விபத்தை விசாரிக்கும் குழு, டென்சலை ஒரு ரகசிய ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே சரியாக நாலு நாட்களுக்கு முன்னர், வெடித்த கப்பலை ஒரு வீடியோ மூலம் கண்காணிக்கின்றனர். அது என்னவென்று டென்சல் விசாரிக்க, செயற்கை கோளின் மூலம் பூமியில் உள்ள அனைத்தையும் படம் பிடிப்பதாகவும் அதை வைத்து தற்போது கப்பலின் நடமாட்டத்தை கவனிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோ படம் நான்கு நாட்கள் தாமதமாகவே கிடைக்கபெறும், அதனால் இன்று நடைபெற்ற விபத்து நான்கு நாட்கள் பிறகே பார்வையிட முடியும் என்றும் அறிகிறார் டென்சல். ஆனாலும் அந்த குழுவினர் அவரிடம் எதையோ மறைப்பதாக உணரும் டென்சல், அதை அவர்களிடமே கேட்க, மற்றவர்கள் ஒன்றுமில்லை என்று மறுக்கின்றனர். சரியென்று அந்த குழுவினரிடம் இறந்த பெண்ணை பற்றியும், அவளை கண்கானித்தால் உண்மையை கண்டுபிடிக்க முடியும் என்று டென்சல் தெரிவிக்க, உடனே அந்த வீடியோ மூலம் இறந்த பெண்ணின் (இவர்தாங்க படத்தோட கதாநாயகி) வீட்டையும் அவரையும் கண்காணிக்க ஆரம்பிக்கின்றனர்.
இதற்கு பிறகு ராக்கட் வேகத்தில் திரைக்கதை பறக்கிறது. நம்ப முடியாத TIME MACHINE கான்சப்டை படத்தில் திணித்து, அந்த விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க நினைக்கின்றனர். இடையே நமக்கு தோன்றும் பல கேள்விகளுக்கு படத்தின் விறுவிறுப்பான இறுதி காட்சிகள் பதில் தருகிறது. படத்தின் முடிவு அதற்க்கு முன் எழுந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் தந்தாலும், முடிவே பல கேள்விகளை எழுப்புகிறது .....!!!
இதையெல்லாம்(சில லாஜிக் மீறல்கள்) ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் டெஜா வூ கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.
படத்த தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க
படத்தின் டிரைலர் இதோ ....

Thursday, October 15, 2009

ஹைக்கூக்கள் - பகுதி 4.

என்னின் சில ஹைக்கூ முயற்சிகள்.
கொஞ்ச கொஞ்சமாய் சுவாசமின்றி, மெலிந்து இறந்தது - சிவப்பு பலூன். ------------------------------------------------------------------------------------------------------------
நடமாடும் மெழுகு சிலைகள் கொண்ட மேடம் டூசாட் மியூசியும் - பெண்கள் கல்லூரி. ------------------------------------------------------------------------------------------------------------
13 ராமன், 11 சீதை. கணக்கு இடிக்கிறதே...? டெலிபோன் டைரக்டரி. ------------------------------------------------------------------------------------------------------------
தூக்கத்திலே சிரித்தது, அழுது கொண்டே தூங்கிய குழந்தை. ------------------------------------------------------------------------------------------------------------
ரோட்டோரத்தில் அனுமார் படத்தை வரைந்து முடித்தான் - ஊனமுற்ற கிழவன். மழை வந்தது. ------------------------------------------------------------------------------------------------------------
கொட்டித் தீர்த்தது பேய்மழை - விட்டும் தொடர்ந்தது மரங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
பின்னே ஒரு கிறுக்கலும்...
உனக்காகவே பயந்து என் இதயத்தை கயிற்றில் கட்டி வைத்திருக்கிறேன். பின்னே, உன்னை பார்த்தாலே இறக்கை முளைத்து பறந்து விடுகிறதே...!!!! இறுக்கி கட்டவும் பயமாயிருக்கிறது, உள்ளிருக்கும் உனக்கு மூச்சடைத்து விடுமே....!!!

- இப்படிக்கு சிவன்.

இதற்கு முன் பதிவிட்ட ஹைக்கூக்களுக்கு இங்க க்ளிக்குங்க.

காதலைப்போலன்றி, பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம். (உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்).

Wednesday, October 14, 2009

தீபாவளி விருந்து !!

என்ன கொடுமை பெருமாள் சார் இது ??


ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ ??!??!

Tuesday, October 13, 2009

ரோபோ பட கிளைமாக்ஸ்.

ரகசியமாய் கசிந்த ரோபோ பட கிளைமாக்ஸ் காட்சி.

மீண்டும் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டாரின் ரோபோ படம் பத்திய ஒரு சூடான பதிவு. இந்த தடவை நம்ம டைரக்டர் ஷங்கரோட செக்யூரிட்டி மன்னர்களின் கட்டுக்கடங்கா காவல்முறையையும் மீறி ரோபோ பட க்ளைமாக்ஸ் மட்டும் கசிந்து விட்டது.

இதுக்கு மேலயும் சஸ்பென்ஸ் வேண்டாம் படிச்சு தெரிஞ்சுக்கங்க......

தலைவரோட கடைசி சீன்ல மொத்தம் ரெண்டு வில்லன்கள் நேரடியா மோதுறாங்க....அந்த ரெண்டு வில்லனையும் சமாளிக்க ஒரு பக்கம் ரோபோ ரஜினி இன்னொரு பக்கம் நம்ம விஞ்ஞானி ரஜினி சண்ட போடுறாங்க....

காட்சியமைப்பின் படி மொதல்ல ரோபோ ரஜினிய காட்டுறாங்க...ஆயுதமெல்லாம் பொருத்தப்படாத நல்லவர் , நம்மவர். வெறும் கையாலேயே இயந்திரத்தனமான சண்டை...இதுல தலைவர் ஸ்டைலுக்கு கேக்கவே வேண்டாம்...அப்படி முதல் வில்லன்கிட்ட ரோபோ ரஜினி சண்டை போட்டுட்டு இருக்கும்போது, ரெண்டு பேரும் இடித்து தள்ளிக்கொண்டு கொஞ்ச தூரம் தள்ளி தள்ளி விழுறாங்க. ரெண்டு பேருக்கும் அவங்கவங்க விழுற எடத்துல ஒரு துப்பாக்கி கிடைக்குது.

டக்குன்னு ரோபோ ரஜினி துப்பாக்கிய வில்லனுக்கு குறி வச்சு சுடுது, ஆனா விதி துப்பாக்கில குண்டு இல்லை....இத பயன்படுத்திக்கிற வில்லன், உடனே தன் கையில இருக்குற துப்பாக்கியால ரோபோ ரஜினிய நோக்கி சுடுறான்.

அப்படியே ஸ்லோ மோஷன்ல 360 டிகிரி காமரா வச்சு TIME SLICE TECHNIQUE-ல புல்லட் ரோபோ ரஜினிய நோக்கி வர்றதா காமிக்கிறாங்க. இதை சற்றும் எதிர்பார்க்காத ரோபோ ரஜினி மின்னல் வேகத்துல யோசிக்கிறார் புல்லட், ரோபோ ரஜினி, புல்லட், ரோபோ ரஜினின்னு மாத்தி மாத்தி காமிக்கிறாங்க...

டக்குனு இப்ப ரோபோ ரஜினி தன் கையில இருக்குற துப்பாக்கிய பாக்குறார். புல்லட் கிட்ட வந்துக்கிட்டே இருக்கு...ரோபோ ரஜினி சற்றும் தாமதிக்காம கையில இருக்கிற துப்பாக்கியோட புல்லட் பேரள (புல்லட் சொருகும் அந்த ஆறு துளைகள்) கலட்டி புல்லட் வர்ற எடத்துக்கு நேரா புடிச்சு லாவகமா புல்லட்ட தன்னோட துப்பாக்கிக்குள்ள போக வைக்கிறார்....இப்ப புல்லட் தலைவர் கையில....(மீதியை சொல்லவே தேவையில்ல....)

இப்ப ரோபோ ரஜினி கிட்ட இருந்து ஒரு பஞ்ச் டயலாக்...

"கண்ணா உனக்கு புல்லட்ட சுட மட்டும்தான் தெரியும்....எனக்கு மட்டும்தான் அதே புல்லட்ல ரிவீட் அடிக்கிறது எப்படின்னு தெரியும்...."சொல்லிக்கொண்டே வில்லனை சுட, அவன் செத்து மடிகிறான்.

ரோபோ ரஜினிக்கே கண் கலங்கிட்டா எப்படி...இருங்க இன்னும் மெய்ன் தலைவர் இருக்கார்....!!!

தலைவர் கைல இப்ப ரெண்டு துப்பாக்கி இருக்கு, வில்லன்கிட்ட ஒண்ணுமே இல்ல.... அதனால அவன் பயந்து ஓடி ஒரு பெரிய செவத்த(WALL) கயிற புடிச்சு ஏறி தாண்டி ஒளிஞ்சிக்குறான்....கயத்தயும் கையோட அறுத்துடுறான் வில்லன்....

அவன துரத்திக்குட்டே வர்ற தலைவர், அவன் தாண்டின உடனே செவத்தை வந்து அடையுறார். செவரோ ரொம்ப உயரம், முடிஞ்ச வர முயற்சி பண்றார்...ஆனாலும் தலைவரால செவத்து மேல ஏற முடியல....

இதை எதிர்பார்த்த வில்லன்....செவத்துக்கு அந்த சைட்ல இருந்து தலைவர கிண்டல் பண்றான்....டக்குனு தலைவருக்கு ஒரு பொறி தட்டுது...அப்படியே இங்க ஒரு க்ளோஸ்-அப் ஷாட்.... தலைவர் முகத்த மட்டும் காமிக்கிறோம்...லேசா சிரிச்சுக்கிட்டே...

"ஆண்டவன் கொடுக்கிறதா யாராலையும் தடுக்க முடியாது" - னு சொல்லிக்கிட்டே தன்னோட ஒரு துப்பாக்கிய அப்படியே மேல தூக்கி போடுறார், அந்த துப்பாக்கி அப்படியே செவத்தோட உச்சிக்கு போனதும் இன்னொரு துப்பாக்கியால மொதல் துப்பாக்கியோட TRIGGER-அ நோக்கி சுடரார்...புல்லட் வேகமா போய் துப்பாக்கியோட TRIGGER-ல பட.....பறக்குற துப்பாக்கி அங்கேயே வெடிக்குது...அதில இருந்து வெளி வர்ற புல்லட் நேரா வில்லன பதம் பாக்குது....ரெண்டாவது வில்லனும் செத்து விழுகிறான்....

அதெப்படி மேல பறக்குற துப்பாக்கில தலைவர் கரெக்டா குறி வெச்சார்-னு உங்க எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வரலாம்....அங்கதான் வேல செய்யுது நம்ம விஞ்ஞானி ரஜினியோட மூளை....

அத படத்த க்ளிக் பண்ணி தெரிஞ்சுக்கங்க...நாள பின்ன தலைவர் படத்துல லாஜிக்கே இல்லன்னு யாரும் சொல்லிட கூடாதில்ல....

என்னடா கிளைமாக்ஸ்ல ஷங்கரோட பிரம்மாண்டமே இல்லையேன்னு நீங்க யோசிக்கலாம்...இங்கதான் ஒரு ட்விஸ்ட்டு...இது எல்லாம் நடக்குறது இங்க இல்ல...செவ்வாய் கிரகத்துல...!!!

மறக்காம உங்க கருத்த பின்னோட்டமா போட்டுடுங்க...திட்டணும்னு நினைக்கிறவங்க எனக்கு தனியா மெயில் அனுப்பிடுங்க...(பப்ளிக்கா மானம் போகக்கூடாது இல்ல...)

தலைவருக்காக இதக்கோட செய்யலைனா எப்புடி.....???

Monday, October 12, 2009

நோயிங் KNOWING 2009 - நிகோலஸ் கேஜ்

நிக்கோலஸ் கேஜுடைய மற்றுமொரு SCIENTIFIC FICTION படம். படத்தோட இயக்குனர் அலெக்ஸ் ப்ரோயஸ், ஐ-ரோபோ- வின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கியிருக்கும் படம்.
இப்ப வெளிவரும் நிறைய ஆங்கில திரைப்படங்கள் போலவே இந்த படமும் ஒரு சின்ன FLASHBACK-ஓட ஆரம்பிக்குது. அதாவது தற்காலத்திலிருந்து ஒரு அம்பது வருடங்களுக்கு முன்னாடி மசாக்குசெட்ஸ் மாகாணத்துல இருக்குற ஒரு எலிமெண்டரி ஸ்கூல்ல இருந்து கதை ஆரம்பிக்குது. அந்த பள்ளியின் ஒரு விழாவை குறிக்கும் வகையில், "TIME CAPSULE"- னு ஒரு விஷயத்தை செயல் படுத்துறாங்க. அதாவது அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் எல்லாரும் அம்பது வருடங்களுக்கு அப்புறம் உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து படமாக வரைய வேண்டும். அந்த படங்கள் எல்லாம் இந்த "TIME CAPSULE"-ல (ஒரு ஸ்டீல் குடுவை) போட்டு மண்ணுல புதைச்சு வச்சிடுவாங்க. இந்த குடுவைய அம்பது வருடங்களுக்கு பிறகு எடுத்து பார்க்க வேண்டும். இதுக்காக எல்லா மாணவர்களும் படம் வரைஞ்சு தர்றாங்க. ஆனால் லூசிண்டா எம்ப்ரி என்ற மாணவி மட்டும் தனக்கு குடுக்கப்பட்ட பேப்பரில் வெறும் எண்களாக (நம்பர்) எழுதுகிறாள். ஆனாள் அவள் அதை எழுதி முடிக்கும் முன்னரே அவளின் ஆசிரியை அதை வாங்கி விடுகிறார். அன்று இரவே அவளை காணாமல் பள்ளி முழுவதும் தேடுகின்றனர். வெகு நேரம் கழித்து ஒரு அலமாரியின் பின்னர் அவள் ஒளிந்து இருப்பதை அவளின் ஆசிரியர் கண்டுபிடித்து விடுகுறார். அவர் அலமாரியின் அருகில் சென்று கதவை திறக்க, சிறுமி லூசிண்டா கைகளில் ரத்தம் மற்றும் மிரட்சியான பார்வையுடன் "அவங்கள பேச வேண்டாம்னு சொல்லுங்க, அவங்கள பேச வேண்டாம்னு சொல்லுங்க " என்று கத்திக்கொண்டே அழுகிறாள்.
அம்பது வருடங்களுக்கு பின்னர். ஒரு விழா எடுக்கப்பட்டு அந்த TIME CAPSULE-ஐ திறக்கிறாங்க. பின்னர் அதில் இருக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாணவருக்கு கொடுக்கப்படுகிறது. லூசிண்டா எம்ப்ரியுடைய பேப்பர் கேலப்-ங்கற சிறுவனிடம் வந்து சேருது. (ஒரு சின்ன INTRO கேலப் வேற யாருமில்ல நம்ம ஹீரோ நிகோலஸ் கேஜின் மகன், நிகோலஸ் எம்.ஐ.டி-ல வான்வெளி ஆராய்ச்சியாளர்). நிகோலஸ் அன்று இரவு கேலப்புடைய பையில் இருக்கும் அந்த பேப்பரை பார்க்க நேரிடுது. அதில் இருக்கும் ஏகப்பட்ட நம்பர்களை பார்த்து ஒரு நிமிடம் குழப்பமடையும் அவர், பின்னர் அதில் ஏதாவது ஒரு பொருள் அடங்கியிருக்க வேண்டும் என்று தீவிரமாக ஆராய்கிறார். பின்னர் ஒரு வழியாக அந்த நம்பர்களை ஆறு ஆறாக பிரிக்கிறார் (இடை இடையிடையே சில நம்பர்கள் விடு பட்டிருக்கவும் செய்கிறது), அவை தேதிகளை குறிக்கின்றன என்றும் கண்டறிகிறார். ஒவ்வொரு தேதிக்கு பின்னரும் மேலும் ஒரு நம்பரும் இருக்கிறது. ஒவ்வொரு தேதியாக ஆராயும் நிகோலஸ், அந்த பேப்பரில் குறிப்பிட பாட்டிருக்கு ஒவ்வொரு தேதியிலும் ஒரு விபத்தோ, பேரழிவோ நடந்திருப்பதை அறிகிறார். அது மட்டுமின்றி ஒவ்வொரு தேதிக்கு பின்னர் இருக்கும் நம்பர்கள் அந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறிக்கிறது. இதை பார்த்து வியப்படையுற நம்ம ஹீரோ அதுல இருக்கும் ஒரு தேதி விடாமல் விடிய விடிய உக்காந்து அனைத்தையும் சரி பார்க்கிறார். அவருக்கு மேலும் ஆச்சரியம். அனைத்துமே சரியாக இருக்கிறது. இதை விட கொடுமையாக வரவிருக்கும் தேதிகளிலும் 3 பெரும் விபத்துகள் நடக்கும் என்று அந்த பேப்பரில் குறிப்பிட பட்டிருக்கிறது. தேதி மற்றும் இறப்பவரின் எண்ணிக்கையை தவிர மேலும் சில எண்கள் அந்த பேப்பரில் இருக்கிறது, ஆனால் நிகோலசால் அவை என்ன என்று அறிய முடியவில்லை.
அதே நேரத்தில் கேலபை சில அறிமுகமில்லாத நபர்கள் தேடி வருகின்றனர். இதை தனது தந்தை நிகொலசிடம் தெரிவிக்கும் கேலப் அவர்கள் அவனை தேடி வருவது மட்டுமின்றி அவனிடம் சில விஷயங்களை (அவனுக்கு மட்டும் கேட்கும்படி) தெரியப்படித்துவதாகவும் சொல்கிறான். கேலபை துரத்தும் அறிமுகமில்லாத மனிதர்கள் யார் , அவர்கள் அவனுக்கு தெரியப்படுத்தும் அந்த விஷயம் என்ன, தேதிக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் இருக்கும் அந்த இன்னொரு நம்பர் எதை குறிக்கிறது, அந்த நடக்கவிருக்கும் மூன்று விபத்துகளை நிகோலஸ் தடுத்தாரா , அந்த சிறுமி லூசிண்டா அதற்கப்புறம் என்ன ஆனாள் , அவள் கடையிசில் பேப்பரில் எழுத முடியாமல் போனது என்ன ? - என்ற பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையுடன் படத்தின் பிற்பாதி பதில் சொல்கிறது.
சில காட்சிகளில் கிராபிக்ஸ் மிரட்டல் என்றே சொல்லலாம். ஹாலிவுட்டுக்கே முரணான ஒரு முடிவு படத்திற்கு. ஒரு தடவை தாராளமாய் பார்க்ககூடிய படம் (மத்தபடி ஆஹா ஓஹோ படமெல்லாம் கிடையாது ITS JUST AN ENTERTAINER ) . மச்சான்ஸ் பார்த்துட்டு சொல்லுங்க. படத்தை பார்த்தவர்கள் உங்கள் கருத்தை பின்னோட்டமா போடுங்க. படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.
படத்தின் டிரைலர் இதோ.

Sunday, October 11, 2009

என் மனம் VS உன் புன்னகை!!


நீ
இல்லாத போது, 
“இனி உன்னைக்
காதலிக்கக்கூடாது” 
என்று சத்தியம் 
போடுகிறது 
இந்த மனம்..  
பாவம் அதற்கு 
தெரியாது போலும்..
உன் ஒற்றைப்புன்னகை 
ஒராயிரம் சத்தியங்களை 
தகர்த்து விடும் என்று!!
****************************************

போக்குவரத்துத்
துறையிலிருந்து
உனக்கு அபராதம் 
விதித்தால், என்னை
மன்னித்து விடு.. 
என் இதயத்தை 
மாசுபடுத்தியதாக 
உன் மீது புகார்
கொடுத்து விட்டேன்... 
****************************************
நீர் 
புகாத கடிகாரம்
போல் 
காதல் புகாத இதயம், 
விற்பனைக்குக் 
கிடைத்தால் சொல்.. 
வாங்கிக்கொள்கிறேன்.. 
பழைய இதயத்தை 
முழுவதும் 
ஆக்கிரமித்து விட்டாய் 
நீ!!!
*************************************
வேகமாய் வரும்
தும்மலை அடக்கினால்
இரத்தக்குழாய் 
வெடித்து விடுமாம்.. 
என் 
மேல் வரும் 
காதலை நீ அடக்கினால், 
எனக்கு இதயமே 
வெடித்து விடும்.
*************************************
என் இனியா..! 
மூன்றாம் உலக யுத்தம்
நடக்க வேண்டும்.. 
அதில் நீயும் நானும் 
மட்டும் 
பிழைக்க வேண்டும்.. 
புதிதாய் நாம் 
ஒரு காதல் உலகை
படைக்க வேண்டும்!
ஆமாம்,  
நான் ஒரு காதல் ஹிட்லரடி 
நீதான் எந்தன் ஜெர்மனி!!!
**************************************** 
 
அன்பு மழையுடன்,
அருண் !!

Friday, October 9, 2009

ஹைக்கூக்கள் - பகுதி 3.

என்னின் சில ஹைக்கூ முயற்சிகள்.





இறப்பவனின் அவசரம் தெரியாமல்
சொட்டு சொட்டாய் இறங்கியது ,
பாட்டில் ரத்தம்.
------------------------------------------------------------------------------------------------



கோடை விடுமுறை
காலியாய் இருக்குது,
தாத்தா வீடு.
------------------------------------------------------------------------------------------------



புகைப்படத்திலும் இல்லை
இறந்தே பிறந்த
தங்கச்சி பாப்பா.
------------------------------------------------------------------------------------------------



வீட்டுக்கொரு மரம்
திடீரென முளைத்தது,
கிறிஸ்துமஸ் ட்ரீ.
------------------------------------------------------------------------------------------------



வெகுநேரம் நின்று
இருக்கையில் அமர்ந்தேன் - தம்பி
என்றது ஒரு கிழவியின் குரல்.
------------------------------------------------------------------------------------------------


என்னின் சில கிறுக்கல்கள்.....



பக்கம் பக்கமாய்
எழுதினாள்
அவள் எனக்கனுப்பிய
முதல் கடிதத்தில்.
ஒற்றை வரியில்
முடித்துக்கொண்டாள்
அவள் எனக்கனுப்பிய
கடைசி கடிதத்தில்.
------------------------------------------------------------------------------------------------



அன்று.

நிலம் நோக்கி
கட்டை விரலால்
கோலம் வரைந்து
சிறு புன்னைகையுடன்
சொன்னாள்,
"உன்னை புடிச்சிருக்கு"

இன்று.

தலை குனிந்து
உள்ளங் கையால்
இதயத்தை கிழித்து
துளி கண்ணீருடன்
சொன்னாள்,
"என்னை மறந்துவிடு".
- இப்படிக்கு சிவன்.

இதற்கு முன் பதிவிட்ட ஹைக்கூக்களுக்கு இங்க க்ளிக்குங்க.
காதலைப்போலன்றி,
பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம்.
(உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்).

Related Posts Plugin for WordPress, Blogger...