Monday, August 31, 2009

ஊமைத்தொலைபேசி..!

மூன்று நாட்களாய்
உன்னிடம் பேசாத
துயரம் தாளாமல்,
ஒரு நள்ளிரவில்
தொலைபேசியில் அழைத்தேன்.
அழகாய் , பயமாய்
போர்வைக்குள் ஒளிந்து
"ஹலோ" என்றாய்..
"ஹலோ காவல் நிலையமா ?" என்றேன் ,
குறும்பாய் ,
நீ , "ஆமாம்" என்றாய் ..
", மகளிர் காவல் நிலையமா?" என்றேன்.
நீ திமிராய்
"மிஸ்டர் , என்ன வேண்டும்?" என்றாய்.
"என் மனைவியை
கண்டுபிடித்துத் தருவீர்களா ?" என்றேன் ,
தோரணை யாய் ,
சிரிப்பை அடக்கிக்கொண்டு
"அடையாளங்கள் என்ன ?",என்றாய்..
நான்,
"அவளுக்கு இரட்டை இதயங்கள் ,
முதுகில் சிறிதாய்
வெள்ளை சிறகுகள்
முளைத்திருக்கும் , தலைக்குப் பின்
ஒளிவட்டம் ஒளிரும்,
அவள் இருக்கும் இடமெங்கும் புன்னகையும் , சந்தோஷமும் நிறைந்திருக்கும் !
மொத்தத்தில் அவள் தேவதை !!" என்றேன்.
உடனே " லவ் யூ டா புருஷா!!!"
என்று கத்தினாய் நீ ..
உலக கோப்பையை
வென்ற மகிழ்ச்சி எனக்கு..
"அச்சச்சோ அப்பா வர்ராரு.."
என்று போனை வைத்து விட்டாய் நீ .
ஊமைத்தொலைபேசியை
உற்றுப்பார்த்தபடியே
உட்கார்ந்திருக்கிறேன்
நான்,
நாட்கணக்கில்..
- அருண். இரா

13 comments:

  1. ஹேய் கவிதை நல்லா வந்துருக்கு மச்சி

    ReplyDelete
  2. ஹேய்...கவிதை செமையா இருக்கு. Feel பண்ண முடியுது. அழகா இருக்கு.

    ReplyDelete
  3. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கவிதையோ....

    ReplyDelete
  4. கவிதை அருமையா இருக்குங்க..

    ReplyDelete
  5. பிரியமுடன்...வசந்த்.. வர்ற அளவுக்கு மச்சான்ஸ் பதிவு, இப்போ பிரபலம் !! மகிச்சி யா கீது மச்சி !

    நன்றி வசந்த் , வந்து வாழ்த்தினதுக்கு..

    ReplyDelete
  6. அன்பு , லோகு -- சின்னதா கருத்து தெரிவித்தாலும் சிறப்பா , சொல்லி இருக்கீங்க !! நன்றி மாமு !

    ReplyDelete
  7. கவிதை காதலன் -- ஆஹ்ஹ் பேரே பட்டை கிளப்புது போங்க ! நீங்க பீல் பண்ணுங்க மச்சி !!
    நன்றி ..அடிக்கடி வாங்க

    ReplyDelete
  8. //RamKumar said...
    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கவிதையோ...//

    @ ராம்குமார் -- மச்சி உண்மை சம்பவமா ?? போங்க தம்பி , போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க ..!! கைப்புள்ள இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது..ஐயோ ஐயோ !!

    ReplyDelete
  9. கலக்கல்...........

    நிறைய காதலர்களுக்கு ஒத்துப்போகும்

    ReplyDelete
  10. @ மகிழ்நன்
    தேங்க்ஸ் மச்சி !! அனுபவம் இருக்கு போல ..! வாழ்க காதல் !!

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...